Friday, September 12, 2014


gmail hacking

5 மில்லியன் கூகுல் இமெயில் அக்கவுண்டும் பாஸ்வோர்டும் களவாடப்பட்டு இருக்கிறது அதில் உங்கள் அக்கவுண்டும் ஒன்றாக இருக்கலாம்( ஜாக்கிரதை) gmail-user-name-password-leak





கடந்த சில தினங்களில் நமது வலைத்தளபதிவர்களின் கூகுல் ஐடியும் பாஸ்வோர்ட்டும் களவாடப்பட்டுள்ளது என்று பலரும் அறிவோம். அதனால் பல பதிவர்கள் தங்களதுகூகுல் ஐடியும் பாஸ்வோர்ட்டையும் இழந்ததுமட்டுமல்லாமல் அனைத்து பதிவுகளையும் இழந்ததுவிட்டனர்.( ஆரூர்மூனா என்ற வலைப்பதிவரும் தனது தளத்தை இழந்துள்ளார்) இதற்கு எல்லாம் காரணம் இதுதான்



கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 5 மில்லியன் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது. பிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.


கூகுள் சேவைகளான ஜி-மெயில், ப்ளாக்கஸ் (வலைதளம் )யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


மேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், " 5 மில்லியன் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.


இவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.


கூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.


ஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் " என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள https://isleaked.com/en.php என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.


Here’s how to find out — and what to do if your Google username and password were exposed in the breach.

First and foremost, visit the following website: https://isleaked.com


Enter your Gmail email address in the field near the top of the screen and you will be notified immediately if your account was exposed in this latest breach. And just to prove to affected users that this is a legitimate issue, the site will display the first two characters of your password if your credentials were leaked.


So, what should you do if your account is now exposed?


Immediately visit the following link: https://www.google.com/settings/personalinfo


Clicking on the Security tab on this page will allow you to change your password, and you should do so immediately.


Now, whether or not your login was leaked in this most recent hack, you should take this opportunity to enable 2-step authentication on your Google account.


On the same page linked above, the Security tab shows a "2-Step Verification" listing. Click the settings link next to it and you’ll be walked through the setup process. For those who are unaware, 2-step authentication will text a unique temporary security code to a phone number you provide during the setup. Then, that code must be entered each time you log into your Google account from a new device or with a new service.



அன்புடன்
மதுரைத்தமிழன்.
ஜி-மெயில், ஹாக்கிங், இணையம், தொழில்நுட்ப திருட்டு,

11 comments:

  1. அப்படியா, நான் உடனே செக் பண்ணி பாக்குறேன்...

    ReplyDelete
  2. இப்படி பீதிய கிளப்பிட்டீங்களே! மிக் பயனுள்ள தகவல் தமிழா....செக் செய்து கொண்டோம்.

    ReplyDelete
  3. தொழில் நுட்பம் வளர வளர....இது போன்ற திருட்டுத்தனமும் வளரத்தான் செய்யுமோ...

    ReplyDelete
  4. அதிர்ச்சியான விஷயமாத்தான் இருக்கு! விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  5. சிறந்த விழிப்புணர்வு பதிவு.

    ஆமாம்..... இதையெல்லாம் திருடி அவர்கள் என்ன செய்வார்கள்?

    ReplyDelete
  6. சூப்பர்! இதோ போறேன்:))

    ReplyDelete
  7. நல்ல விழிப்புணர்வு பதிவு.

    இப்போதே சோதித்துப் பார்க்கிறேன்.... கடவுச் சொல்லையும் மாற்றி விடுகிறேன்.

    ReplyDelete
  8. சகா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
    http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
    இதோ என் மின்னஞ்சலை பரிசோதித்துப் பார்க்கிறேன்
    நன்றி நண்பரே
    தம4

    ReplyDelete
  10. சிறந்த பகிர்வு
    இனிதே தொடருங்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.