Wednesday, September 3, 2014



பெண் பதிவரால் மதுரைத்தமிழனுக்கு வந்த பிரச்சனை. ( எச்சரிக்கை பதிவு)




எந்த பதிவர் எழுதும் பதிவையும் படிச்சோமா பேசாமா போனாமா என்று இருக்கனும் அதிலும் பெண்பதிவர் போட்ட பதிவுகள் என்றால் மிக ஜாக்கிரதையாக இருக்கனும்.




நேற்று ஒரு பெண் பதிவர் ஒரு பதிவு போட்டு இருந்தாருங்க. அதில் ஒரு நல்ல கருத்தை சொல்லி சிவப்பு ரோஜா போட்டோவை அதில் போட்டு இருந்தாருங்க.. நானும் அந்த பதிவை படித்துவிட்டு அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்த போது என் மனைவி என்னை வாக்கிங்க் போக கூப்பிட்டார்கள். மனைவி சொன்ன பேச்சை அப்படியே கேட்கிற ஆள் ஆச்சே நாம். அதனால் நாய்குட்டிப் போல அவள் பக்கதிலே கூடப் போனேன்.அப்ப அந்த பதிவில் போட்ட போட்டோவில் உள்ள கருத்தை (The smile is the beginning of love)பற்றி சொல்லிக் கொண்டு போனேன்



அப்படி போகயில எதிர்த்தாப்பல ஒரு அழகிய பெண் ஒருத்தி வந்தாங்க. எப்பவுமே என் எதிரில் பெண்கள் வந்தால் நான் தலை குனிந்து போயிடுவேன். ஆனா இன்று நம்ம பதிவர் எழுதிய பதிவை படித்ததினால் அதன் படி எதிரில் வந்த பெண்னை நோக்கி நான் ஸ்மைல் மட்டும் செய்தேனுங்க..



அதுமட்டும்தான் எனக்கு தெரியும் அதுக்கு அப்புறம் கண் முழிச்சு பார்த்தப்பதான் எனக்கு தெரிஞ்சது நான் படுத்து கிடைப்பது ஹாஸ்பிட்டலில் என்று



இப்ப சொல்லுங்க அந்த பதிவர் மட்டும் அப்படி பதிவு போடலைன்னா எனக்கு இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுல...



இதுனால சொல்ல வரது என்னன்னா பெண் பதிவர் எழுதும் பதிவுகளை படித்தால் அதை வாழ்க்கையில் பயன்படுத்தி பார்க்காதீர்கள் என்பதுதான்



வந்தததே வந்தீங்க இந்த படத்தையும் பார்த்திட்டு போங்க.. கான்வெண்ட் ஸ்கூலில் படிச்சவங்க தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் கார்பரேஷன் ஸ்கூலில் படித்த நாம் ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்ப்போம்ல.. எப்படி நம்ம மொழி பெயர்ப்பு:

@avargal unmaigal






அன்புடன்

மதுரைத்தமிழன்

13 comments:

  1. சரிதான்... மைதிலி தங்கச்சி சொன்ன ஸ்மைல் உதடுகளை லேசாய்த் திறந்து நட்பு தெரியும்படி சிரிப்பது. நீங்க ஈஈஈஈஈஈன்னு ராஜாராணி படத்து ஆர்யா மாதிரி உதடுகளை ஒண்ணரை கிலோமீட்டர் தொறந்திருப்பீங்கன்னு நெனக்கறேன்.... பாத்துய்யா... பாத்து....

    ReplyDelete
    Replies
    1. ஒரு நல்ல அண்ணனால் தான் இவ்ளோ நல்ல தங்கையை புரிஞ்சுக்க முடியும்னு ப்ரூவ் பண்ணிடீங்க அண்ணா! thanks:))

      Delete
  2. ஹாஹா.....இப்படி எல்லாம் போட்டா பின்ன ஹாஸ்பிட்டல் இல்லாம எகங்கேயாம்......!!!!? மைதிலி சகோதரி ரொம்ப நல்ல தனமாத்தானே எழுதிருந்தாங்க....அதுவும் மதர் தெரஸா வேர்ட்ஸோட.....அத இப்படி குண்டக்க மண்டக்கனு ......ஹாஹாஹஹா....தமிழா உம் குசும்புக்கு எல்லையே இல்லப்பா...

    ReplyDelete
    Replies
    1. பாலா அண்ணா மாதிரியே நீங்களும் நல்ல அண்ணா அண்ட் தோழி(கீதா அவர்களுக்கும் சேர்த்து)

      Delete

  3. மொழிப்பெயர்ப்பில் உங்களுக்கு கலைமாமணி விருதே தரலாம் போல, அருமையான பொருள் மாறாத ??? மொழிப்பெயர்ப்பு, ஹா ஹா...

    ReplyDelete
  4. என்னடா, நம்ம மதுரைத்தமிழன் ரொம்ப நல்ல பிள்ளையாகிவிட்டாரா? பூரிக்கட்டை அடி வாங்கிகிற மாதிரி தெரியலையேன்னு நினைச்சேன்.
    அதானே, நீங்களாவது, நல்ல பிள்ளையாக மாறுவதாவது?

    மொழிப் பெயர்ப்பு -ரசித்து படித்து சிரித்தேன்.

    ReplyDelete
  5. Ferrero Rocher சாக்லட் வாங்கி வைத்து காத்திருக்கிறேன், மாமிக்கு கொடுக்க:))
    இப்படி ஒரு தோழி கிடைக்க புண்ணியம் தான் பண்ணிருக்கணும்.
    (நன்றி பதிவில் வம்பிழுத்தோமே ஒரு ரியாக்ஷன் னையும் காணோமேனு பார்த்தேன். இப்போ சந்தோசம் தானே:))

    ReplyDelete
  6. ஒரு விஷயம் சொல்லவா, நான் இந்த படத்தை போடும் போதே இதை நீங்க கலாய்க்க போறீங்கன்னு நினைச்சேன்.:)) தேங்க்ஸ்!!

    ReplyDelete
    Replies
    1. என்ன அம்மு இது. இப்படி யெல்லாம் என் அம்முவை கலாய்க்கிறாரே மதுரை வீரர் என்று நான் ரொம்ப கோபத்தில் .....நெக்ஸ்ட் வீக் U.S.A போகும் போது பூரிக்கட்டை எடுத்து போகலாம் என்று பார்த்தால். இப்படி thanks சொல்லி சொதப்பிட்டிங்களேம்மா. அட just டு மிஸ்ஸு இல்லஅம்மு.

      Delete
    2. அருமையாக மொழி பெயர்க்கிறீங்க சகோ! ஆமா நீங்க சின்ன வயசில ஆங்கில டீச்சருக்கு அல்லவா குடுத்தீங்க தானே அப்புறம் எப்படி இப்படி.

      Delete
  7. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. தல: உங்கள் பொய்கள் எல்லாம் நன்றாக ஜோடிக்கப்பட்டு ஒரு தனி அழகாக இருக்கின்றன! :-) தயவு செய்து நீங்க உண்மை எதுவும் சொல்லாமல் "இதையே" தொடரவும்! :)

    ReplyDelete
  9. உங்கள் மொழி பெயர்ப்பு திறனைக் கண்டு வியக்கிறேன் மதுரைத் தமிழா.... :))))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.