Friday, September 5, 2014


avargal unmaigal



மோடி அரசாங்கத்தின் 100 நாள் சாதனை




முந்தைய பிரதமர் பேசாமல் இருந்தார் ஆனால் மோடி மிக நன்றாக பேசுகிறார். அதைத்தான் நான் 100 நாள் மோடி அரசாங்கம் செய்த சாதனையாக கருதுகிறேன்



முந்தைய அரசாங்கம் பல ஊழல்களை செய்த போதிலும் அவர்கள் மீது வழக்குகள் ஏதும் போடாமல் அவர்களை கண்டுக் கொள்ளாமல் விட்டதும் அவர் செய்த சாதனையே



அதிகப் பிரசங்கிதனமாக பேசி வரும் சுப்புரமணிய சுவாமியை இன்னும் கட்சியை விட்டு நீக்காமல் இருப்பதும் அவர் செய்த சாதனையே



ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகியும் இன்னும் அமெரிக்கா பக்கம் வராமல் இருந்ததும் அவர் செய்த சாதனைதான்



யாருக்கும் தெரியாமல் தான் வளர்த்த அநாதை பையனை நேபாளம் சென்ற போது அவர் பெற்றோரிடம் ஒப்படைப்பதாக போட்ட நாடகத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பையும் மிஞ்சி நடித்து சூப்பர் ஸ்டாரக முயற்சிதது அவர் செய்த சாதனையே



எல்லைப் புறப் பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் வாலை ஆட்டியதை பார்த்தும்  மகாத்மா காந்தி போல அமைதி காத்து வருவதும் அவர் செய்த சாதனையே




மோடியின் நிலையான ஆட்சியை கண்டு வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்து தங்கள் கம்பெனிகளை விரிவாக்க விருப்பம் தெரிவித்திருப்பது போல Al Qaeda அல் கொய்டாவும் இந்தியாவில் தங்கள் இயக்கத்தை விரிவாக்க போவதாக அறிவித்து இருப்பதும் மோடி அரசின் சாதனையே




ஜெயலலிதாவை தலை வணங்க செய்த ஒரே தலைவர் மோடிதான்.  அது மிகப் பெரிய சாதனைதான். இதுக்காக அவருக்கு விஜய் அவார்ட்ஸ் கண்டிப்பாக கொடுக்கனும்

டிஸ்கி : 100 நாளில் யாராலும் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியாது.. குறைந்தது ஒரு வருடமாவது தேவை. நம்பி வாக்களித்த மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்துதான் பார்க்க வேண்டும்.. எப்படி ஒரு பெண் கருவுற்று இருக்கிறாளோ அது போலத்தான் மோடியும் ஆட்சி என்ற கருவை சுமந்து நிற்கிறார். அவர் தரப் போவது நல்ல ஆரோக்கியமான குழந்தையையா அல்லது அரைகுறை குழந்தையா பொறுத்துதான் பார்க்க வேண்டும் . அது வரை எனது காமெடிகளை ரசித்து படித்து மகிழுங்கள் 

மோடியின் 100 நாட்கள் ஆட்சியைப்பற்றி பதிவுகள் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன் அந்த நேரத்தில் நண்பர்  விசு, விசுAwesomeமின்துணிக்கைகள் என்ற அவரது  வலைப்பதிவில் பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் எனக்கு மிகவும் பிடித்தது.. http://vishcornelius.blogspot.com/2014/09/100.html என்று ஒரு பதிவிட்டு மற்றவர்களின் கருத்தை அறிய இதை தொடர்பதிவாக தொடர 5 பேர்களை அழைத்து இருந்தார். அவரது வேண்டுக் கோளுக்கிணங்க இந்த பதிவை எனது பாணியில் வெளியிடுகிறேன் அதுமட்டுமல்லாமல் மேலும் 5 பேருக்கு அழைப்பு விடுவிக்க சொன்னார். போதுவாக அரசியல் பதிவுகளுக்கு கருத்து சொல்ல பலரும் தயங்குவதால் நான் யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை ஆனால் இந்த பதிவை படிக்கும் யாருக்கும் தொடர் பதிவு எழுத ஆர்வம் இருந்தால் தொடரவும்




அன்புடன்

மதுரைத்தமிழன்

6 comments:

  1. நண்பா... நான் கேட்டது சாதனையை... நீ சொல்வது...வேதனை, சோதனை ...

    ReplyDelete
    Replies
    1. அவர் ஏதாவது பண்ணினால்தான் போட முடியும் சரி உங்க ஆசைக்கு ஒன்று போடுறேன்

      ஜப்பான் அதிபரையே தம் இசையால் மயக்கி பல கோடி மூதலீட்டை இந்தியாவிற்கு பெற்று வந்து இருக்கிறார்.. போதுமா விசு சார்

      Delete
  2. சாதனை விவரங்கள் இப்போதே இவ்வளவு என்றால் இன்னும் 5 வருடங்களில்.... பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் செய்யப் போகிறார் நம்முடைய நம்பிக்கை நாயகன், சாரி இந்தியாவின் ....

    ReplyDelete
  3. 100 நாட்களை கடந்து விட்டோமா ? அப்பாடா இனி என்ன 1725 நாள் தானே கண்மூடி கண் திறக்குறதுக்குள்ளே போயிடும் விடுங்க பாஸு கவலையை..

    நண்பா ஒரு சினிமா ரிலீஸானால் அந்தப் படத்தோட கசாநாயாகனும், கசாநாயகியும் 100 வது நாளைத்தான் பார்த்துக்கிட்டே இருப்பாங்க... அப்புறமா ரிலாக்சாயிடுவாங்க அது போலத்தான் இதுவும் இனி இதை மக்கள் மறந்துவாங்க பாருங்களேன் ஏன்னா அவங்களுக்கு நிறைய வேலையிருக்கு ரேசன் கடைக்கு போகணும், பையனுக்கு ஸ்கூல் சீட் வாங்கணும், வார்டு கவுண்சிலர் தேர்தல் வரும் அந்த வேலை செய்யணும் இப்படி நெறைய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கு பாஸூ அரசியல்ல இதெல்லாம் சகஜம் பாஸூ.......
    நம்மலோட புதிய பதிவுக்கு வாங்க நண்பா.

    ReplyDelete
  4. 100 நாட்கள் - பொறுத்திருந்து பார்ப்போம்! நீங்கள் சொல்வது போல ஒரு வருடமாவது!

    ReplyDelete
  5. போட்டோ டூன் கலக்கல் சகா!
    சூப்பர் சிங்கர் ஆனந்த் சார் க்கு போட்டியா கலர்கலரா ஜிப்பா போடுறாரே அதை விட்டுடீங்களே!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.