உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, September 25, 2014

மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா?


மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா?


avargal unmaigal
நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை மிஞ்சும் நமது இந்திய தலைவர்கள் செய்த சாதனைமங்கள்யான் வெற்றி இந்தியர்கள் ஒவ்வொருவரையும் மிகப் பெருமை பட வைத்திருக்கிறது. அதில் எல்லோருக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம்தான் இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்ற நாட்டு வல்லுனர்களுக்கு கொஞ்சம் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இப்படி நாம் பெருமை பட நமது திறமையை நிருபிக்க இந்தியா செலவிட்ட தொகை என்ன தெரியுமா?450 கோடி ரூபாய் அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பில் 71 மில்லியன்


இது தேவையா என்றால் அதற்கு


சிலர் இப்படி நாம் பணத்தை செலவிட்டதற்கு பதில் ஏழைகளின் வளர்ச்சிக்கு, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, கல்வி வளர்ச்சிக்கு செலவிட்டு இருந்தால் மிகவும் பயன் அளித்திருக்கும் என்று சொல்லுகிறார்கள்.


மற்றும் சிலர் இது நீண்ட காலத்திற்கு அப்புறம் பலன் தரும் ஒரு திட்டம் ஆனால் நமக்கு இப்போதைய தேவை குறுகியகாலத்தில் பலன் தரும் திட்டம் என்றும் சொல்லுகிறார்கள்


வேறு சிலரோ தொழில் நுட்பத்தில் நாம் அடைந்த வளர்ச்சியை உலகிற்கு அறிவிக்க பெருமை பட இது நமக்கு தேவை என்கிறார்கள்


நல்லா யோசிங்க மக்களே 450 கோடி ரூபாய் செலவிட்டு மீத்தேன் அல்லது சதுப்பு நில வாயு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சென்சார் கருவி, உயிர் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும் கருவி, அந்த கிரகத்தின் உஷ்ண நிலையை கண்டறியும், 'ஸ்பெக்ட்ரோ மீட்டர்' கருவி, வண்ண கேமரா, அதன் இயற்கை வளங்கள் பற்றி ஆராயும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு அனுப்பபட்டுள்ளது இந்த மங்கள்யான்.இதை அறியதான் பல மேலைநாடுகள் ராக்கெட் அனுப்பி உள்ளனவே அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சில காலங்களுக்கு அப்புறம் வெளியுலகுக்கு தெரியத்தான் போகின்றனவே. அப்படி நமக்கு தெரிகின்ற போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நம் விஞ்ஞானிகள் செயல்பட்டு நமது உபயோகத்திற்கு ஏற்ப பயன் படுத்தலாமே


நமக்கு இப்போது மிக அவசியமானது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி . ஏழைகளின் வளர்ச்சி இதற்கு மிக முக்கியம் நதி நீர் இணைப்பு இதை செய்வதால் நாட்டில் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் அழிவு தடுக்கப்படும் வறட்சி நீங்கும். விவசாயம் செழிக்கும் பொருளாதாரம் மேம்படும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது உலகம் அறிந்த உண்மைதானே இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காதுதானே.


ஆனால் மங்கள்யானால் நாம் அடைந்த தற்போதைய நன்மை "பெருமை" என்பதை தவிர வேற ஏதும் இல்லையே


சிலர் இன்னும் ஒரு படி மேல் சென்று .இது தான், உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட, செவ்வாய் கிரக ஆராய்ச்சி செயற்கைக்கோள். மேலை நாட்டினர் இப்படி ராக்கெட் ஏவ 200 மில்லியனுக்கும் மேலே செலவிட்டு இருக்கின்றனர் ஆனால் நாம் அதை 71 மில்லியன் பட்ஜெட்டில் முடித்துவிட்டோம் என்று பெருமைபடுகின்றனர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இங்கு லேபரிலிருந்து மூலப் பொருள் வரை எல்லாம் 2 அல்லது 3 மடங்கு அதிகம். அதனால் இங்கு உற்ற்பத்தி செலவு மிக அதிகம்.உதாரணமாக இங்கு 2 அல்லது 3 பெட் ரூம் உள்ள வீட்டை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்தால் குறைந்தது 100 டாலர் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் அதே தொகையில் இந்தியாவில் ஆட்களை வைத்து மாதம் முழுவது சுத்தம் செய்யலாமே


உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது மங்கள்யான் என்றாலும் அது இப்போதைக்கு தேவையா என்ன?


இதற்கு நமது பதிலை நான் சொல்ல நினைத்தை மிக எளிமையாக நமது பேஸ்புக் பிரபலம் நண்பர் சூர்யஜீவா  பகிர்ந்ததை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.ஒரு கூட்டு குடும்பத்தில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்தது.. அந்த குடும்பத்தினருக்கு பல அத்தியாவசிய தேவைகள் இருந்தன... அனைத்தையும் பட்டியல் போட்டனர்.. ஒழுகும் கூரை சரி செய்தல், கழிப்பிடம் கட்டுதல், மின்சார தேவையை சரி செய்தல், உடை, உணவு போன்றவை அந்த பட்டியலில் இருந்தன... குடும்ப தலைவர் பல்வேறு மூலப் பொருட்களை வாங்கி வந்து அவரே ஒரு ஸ்மார்ட் போன் தயார் செய்தார்... அதுவும் வெற்றிகரமாக ஓடியது... இதில் என்ன பெருமை என்றால் 80000 ரூபாய்க்கு விற்கப்படும் போன் போலவே அவர் 50000 த்தில் முடித்திருந்தார்...இப்போது சொல்லுங்கள் மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா இல்லையா?


கொசுறு செய்தி மங்கள்யான் வெற்றியை தூக்கி சாப்பிடும் நமது தலைவர்கள் சாதனை
டிஸ்கி : நம் அரசியல் தலைவர்கள் ஊழலில் கொள்ளை அடிக்கும் பணத்திற்கு ஒப்பிட்டால் மங்கள்யானுக்கு நாம் செலவிட்ட தொகை மலைக்கும் மடுவுக்குக்கும் உள்ள வேறுபாடுதான். நம்மால் முடிந்தால் நம் தலைவர்கள் அடிக்கும் கொள்ளையை தடுத்தால் ஒரு மங்கள்யான் என்ன பல மங்கள்யானை நாம் தொடர்ந்து விண்ணுக்கு அனுப்ப முடியம். அப்படி செய்ய நம்மால் முடியுமா?

MORE THAN 800 SCAMS IN LAST 9 YEARS


1. coal scam - INR 1855913.4 million (US$34 billion) coal minister , PM , PMO involved
2. Karnataka Wakf Board Land Scam - INR2000 billion (US$37 billion) 38 Congress leaders involved
3.Uttar Pradesh NRHM scam - INR100 billion (US$1.8 billion) people involved Mayawati and gulam nabi azad
4. 2G spectrum scam - INR1760 billion (US$32 billion) people involved Nira Radia, A. Raja, M. K. Kanimozhi, many telecommunications companies.
5.- Uttar Pradesh food grain scam - INR350 billion (US$6.4 billion) , people involved Kapil Sibal, Mulayam Singh Yadav, Mayawati
6. DIAL Scam – Central government lost INR1669723.5 million (US$31 billion) by undue favours to GMR-led DIAL. DIAL (Delhi International Airport Limited)
7. Granite scam in Tamil Nadu - The initial estimated report indicated illegal quarrying up to 16,000 cr people involved Several congress leaders , including Dayanidhi Azhagiri, son of Union Minister M. K. Alagiri, have been booked for alleged illegal sand and granite mining by companies owned by them.
8. Highway scam – scam to tune of INR 70 crore reported y World bank (US$13 million) involving surface trnsport minister , finance minister and NHAI .
9. ISRO's S-band scam (also known as ISRO-Devas deal, the deal was later called off) – INR2000 billion (US$37 billion)
10. Arunachal Pradesh PDS scam – INR10 billion (US$180 million) congress leader and CM arrested .
11. Cash-for-votes scandal Rs. 500 million ($13 million) to Rs. 600 million ($15 million) congress leader satish sharma involved .
12. Scorpene Deal scam Rs. 500 crore (about USD 10 mn) person involved congress leader and now president of India Pranab Mukherjee
13. Commonwealth Games scam – INR700 billion (US$13 billion) congress minister suresh kalmadi and delhi CM shela Dixit involved
14. Vodafone tax Scandal - involves Rs 11,000-crore tax dispute settled out of court when case was going on in Supreme Court , kapil sibal involved .
15. Railway promotion scam CBI booked Union railway minister Pawan Kumar Bansal's nephew for allegedly accepting a bribe of Rs 90 lakh from a Railway Board member total bribe involved 12 crore - no action against minister .
16. Maharashtra Irrigation Scam – Loss of about INR720 billion (US$13 billion) people involved shard pawar , ajit pawar .
17. Andhra Pradesh land scam – INR1000 billion (US$18 billion) people involved congress CM YSR Reddy
18. Forex derivates scam – INR320 billion (US$5.9 billion) people involved RBI and finance ministry .
19. Service tax and Central Excise Duty fraud – INR191.59 billion (US$3.5 billion) crore) people involved finance ministry .
20 . Maharashtra stamp duty scam – INR6.4 billion (US$120 million) people involved congress leader kripa shankar singh and ex congress CM
21. Maharashtra land scam - INR 2800 crore , people involved congress leader and CM vils rao deshmukh and NCP leader chagan bujbal
22. MHADA repair scam – INR1 billion (US$18 million) people involved NCP leader chagan bujbal and congress CM .
23. Ministry of External Affairs gift scam 28 lakh , people involved congress leader S.M Krishna
24 . Jammu and Kashmir Cricket Association scam – Approximately INR500 million (US$9.2 million) people involved UPA minister and NC leader Dr. Farooq Abdhulla
25. Jammu and Kashmir PHE scam 18 crore , people involved Congress minister Taj Mohi-ud-Din.
26. Haryana forest scam INR 200 crore , people involved haryana CM and congress leader Bhupinder Hooda


இன்னும் அதிக ஊழல்களை வருட வாரியாக பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

27 comments :

 1. இதை நாம் பேசி என்ன நடக்கப் போகிறது...வெறும் ஆதங்கப் பேச்சுதான்....யோசிக்க வேண்டிய அரசுக்கு யார் மணி கட்டுவது?

  ReplyDelete
  Replies
  1. பூனை என்றாலாவது மணி கட்டிவிடலாம்.. இது புலி ஆச்சே.. அதுவும் பசு தோல் போர்த்திய புலி.....என்னத்த சொல்றது. கேட்டா.. அமெரிக்கா பண்ணிச்சி, ஆடுக்குட்டி பண்ணிச்சி என்ற ஒரே பதில்.

   Delete
  2. உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. கேள்விகள் நல்லாத்தான் இருக்கு....!!! இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏதோ ஒரு யாணைச் செலுத்தத்தான் போகின்றார்கள்! அதற்குள் ஊழல் தொகையும் இன்னும் பெருகும்! இன்னும் 10 வருடங்கள் கழித்து நீங்களும் இதே போன்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரை எழுதத்தான் போகின்றீர்கள் அப்போதும் ஊழல் தொகையை விட யாணின் செலவு குறைவு என்றும்.....இந்தியாவின் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கின்றதா என்று......இப்போது பெண்களின் கழுத்தில் தொங்கும் மங்கள்யாணின் சின்னம், ஒருவேளை அப்படி ஒன்று இருந்தால் அப்போது, இந்த "மங்கள்யாணின்" சின்னமாகக் கூட மாறலாம்....ஆனால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிராமம் இருக்கின்றதா? வயல்கள் இருக்கின்றதா? இருந்தாலும் எப்படி இருக்கின்றது? இன்னும் ஏழ்மையிலேயா? .....

  இதெல்லாம் யாருகாதுல விழுந்து யாரு யோசிக்கணுமோ அவங்க யோசிக்கறதில்லையே தமிழா! நாம் யோசிச்சு என்ன பிரயோஜனம்? சொல்லுங்க...

  ReplyDelete
 3. யோசிக்க வேண்டிய விஷயம்..!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. மங்கள்யான் ஒரு சாதனை என்றாலும் நீங்கள் குறிப்பிடுபவையையும் யோசிக்க வேண்டியுள்ளது! நல்லதொரு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. அய்யோ இப்படி ஆளாளுக்கு குழப்பினா எப்படி??? நானும் உங்களை மாதிரி தான் நினைச்சேன். ஆன புதுகை சீலன் சகோ வேற மாதிரி எழுதிருக்கார். ஒன்னு மட்டும் புரியுது , இந்திய சூழலில் தினமும் கவலைகள் கூடிகிட்டே இருக்கு:((((((

  ReplyDelete
  Replies
  1. தலைவர்களுக்கு பெருமை முக்கியம் ஆனால் நமக்கோ ஏழைகளின் வருமைதான் முக்கியமாக தெரிகிறது அதனால்தான் நம்முள் குழப்பம் ஏற்படுகிறது

   Delete
 6. மாற்றுக்கருத்து உள்ள வித்தியாசமான சிந்தனை.
  இம்மாதிரியான கேள்விகள் இருந்தால் தான் பல்வேறு கோணங்களிலிருந்து நாம் பார்க்க கற்றுக்கொள்ள முடியும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவை சரியாக புரிந்து கருத்து சொன்னதற்கு நன்றி

   Delete
 7. உங்களுக்கு தெரிஞ்ச லாஜிக்படி பார்த்தா சீக்கிரமா அமெரிக்க சனாதிபதி ஆயிடுவீங்க போலிருக்கே!!! அமெரிக்காவில் 4.6 கோடிப்பேர் வறுமையில் வாடும் போது, 1/7 அமெரிக்க குடும்பம் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கும் போது உங்க அமெரிக்க அரசு 120,000 கோடி பணத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டும் நாசாவிடம் கொடுக்கிறது. இதோடு ஒப்பிட்டால் இந்தியா இஸ்ரோவுக்காக செலவழிக்கும் சுமார் 7000 கோடி மட்டும்தான், போன வருடம் 5000 கோடி.

  கார் கம்பனிகாரனுக விளம்பரத்தில் 2 வீலில் ஓட்டுவது, தாண்டுவது என சாகசம் காட்டுவார்கள். கார் வாங்கும் எவனும் 2 இரண்டு வீலில் ஒட்டப்போவது இல்ல. அது சும்மா சீன் போட்டு எங்க கார் எம்புட்டு சூப்பர் என காட்டுவது, அவ்வளவுதான். அதே போலத்தான் அமெரிக்க, ஐரோப்பா சீனாவோடு ஒப்பிட்டால் சுமாரான ராக்கெட்டுகளை வைத்திருக்கும் இந்தியா இப்படியெல்லாம் சீன் போட்டு திறமையா காட்டுகிறது. ஏனெனில் விண்வெளித்துறை 600,000 கோடி பணம் புழங்கும் துறை. அதுல துண்டைப் போட்டு எங்களாலும் முடியும் என காட்டி பணம் பண்ணுவதற்காகத்தான் இந்த சீன்! இஸ்ரோவின் வியாபார பிரிவான Antrix வருடத்திற்கு 1300 கோடி சம்பாதிக்கிறது, இதை அதிகரிக்க வேணாமோ???

  NASA needs an Indian tutorial: http://www.bloombergview.com/articles/2014-07-03/nasa-needs-an-indian-tutorial

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு ஊழல்கள் இருந்தும் ஒரு குறைந்த செலவில் செய்தது ஒரு மகத்தான சாதனையே. 2013ல் Total expenditure of INR1658000 crore (US$270 billion). இதில் 450 கோடி செலவு செய்தது உங்கள் கண்ணை உறுத்துகிறதா? ஒரு நாடு எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும். வறுமையை மட்டும் கருத்தில் கொண்டால் பின்னாளில் மேலதிக செலவு செய்ய நேரும்.

   Delete
  2. உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
  3. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த எங்களுக்கு கண்ணை உறுத்தவில்லை ஆனால் கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு இந்த தொகை நம் கஷ்டங்களை நீக்க செலவிடக் கூடாதா என்று தோன்றுவது இயல்புதானே

   Delete
 8. விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்

  ReplyDelete
  Replies
  1. விஞ்ஞானிகளை வாழ்த்தி பாராட்டுவோம்

   Delete
 9. பெருமை பேசுவதற்காக மட்டுமாக இல்லாமல் நம் விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்...

  ReplyDelete
  Replies
  1. நமது விஞ்ஞானிகளின் திறமை நமக்கு பெருமைதான் அதனால் அவர்களை வாழ்த்தி பாராட்டுவோம்

   Delete
 10. அலசித் தீர்துடீங்க...
  படிசுக் களைச்சுட்டேன்..

  நல்ல அலசல்
  சூர்யஜீவாவைப் பிடிக்கிறேன் முக்நூலில்..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பேஸ்புக்கில் இருப்பது எனக்கு தெரியாது உங்களின் அழைப்பால்தான் தெரிந்து கொண்ட்டேன். நீங்கள் பகிர்வது & ஷேர் செய்வது எல்லாம் மிக அருமையாக இருக்கிறது

   Delete
 11. அருமையான பதிவு
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. //இதை அறியதான் பல மேலைநாடுகள் ராக்கெட் அனுப்பி உள்ளனவே அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சில காலங்களுக்கு அப்புறம் வெளியுலகுக்கு தெரியத்தான் போகின்றனவே. அப்படி நமக்கு தெரிகின்ற போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நம் விஞ்ஞானிகள் செயல்பட்டு நமது உபயோகத்திற்கு ஏற்ப பயன் படுத்தலாமே
  //
  பிற்போக்கு சிந்தனை அல்லவா இது? முடிவை சொல்வார்கள். ஆனால் எப்படி சாதித்தார்கள் என்று மற்ற நாடுகளுக்குக் கற்றுக்கொடுப்பார்களா? இல்லையே.

  ஒப்பீட்டில்:
  இப்போது, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரோபாட் நுட்பியல் கற்றுத்தரும் முயற்சியில் உள்ளேன். ”இதில் கலிஃபோர்னியா மாணவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். இவர்களும் அதையே செய்வானேன், வீண் செலவு, கால விரயம், ஒழுங்காக இருக்கும் பாடங்களைப் படித்தால் போதாதா?” என்று கேட்கலாம்தான். ஆனால், போட்டியில் முன்னணியில் இல்லை என்றாலும், கணிதம், இயற்பியல், கணினி, மின்னியல் துறைகளில் மதிப்பிலடங்கா பயிற்சி கிடைக்கிறதே.

  ReplyDelete
 13. விஞ்ஞானிகளை வாழ்த்துவோம் நண்பரே......

  ReplyDelete
 14. NPR ல இதைப் பத்தி பெருசா சொன்னாங்க. காரணம் என்னவென்றால் ரொம்ப கம்மியான செலவில் செய்து இருக்கார்களாம் இச்சாதனையை! ஆனால் இவர்கள் வெளியே சொல்லும் தொகையும் உண்மையிலேயே ஆன செலவும் நிச்சயம் ஒரே தொகையாக இருக்காது. ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் என்பது தெரியவில்லை!

  -----------------------

  India becomes first Asian nation to reach Mars orbit, joins elite global space club, Washington Post

  "By comparison, India's $72 million Mars orbiter is the cheapest interplanetary mission ever. [Indian Prime Minister] Modi said that India's Mars mission cost less than what it took to make the famous Hollywood space movie "Gravity." "We kept it low cost, high technology. That is the Indian way of working," Sandip Bhattacharya, assistant director of B.M. Birla Planetarium in the northern city of Jaipur, said in a telephone interview. "

  -------------------------------------

  First U.S. Stealth Jet Attack on Syria Cost More Than Indian Mission to Mars
  F-22 Raptor stealth fighters were needed in case the Syrians used their sophisticated air defenses. But Raptors don't come cheap.

  Fears of a potent Syrian air defense system drove the U.S. Air Force to send its silver bullet force of F-22 Raptor stealth fighters into battle for the first time ever. The Pentagon confirmed on Sept. 23 that the $150 million jets had struck an ISIS command and control facility in Raqqah, Syria with a satellite-guided bomb. That was right after an initial wave of U.S. Navy Tomahawk cruise missiles hit their targets around Aleppo and Raqqah.

  But the Raptors’ first mission wasn’t cheap. Together, the missiles and airstrikes cost at least $79 million to pull off, according to a Daily Beast tally.

  That's more expensive than India's mission to Mars, which was successfully completed Wednesday at a cost of just $74 millio---------------------

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 409 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 92 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 48 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 33 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) #modi #india #political #satire ( 7 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அன்பு ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) oh..america ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) corona ( 4 ) india ( 4 ) tamil joke ( 4 ) thoughts ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) Today America ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) humour ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சமுகப் பிரச்சனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) facebook ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) wife ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Reading ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) World Leaders ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rajinikanth ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) satirical news ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) social issue ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) tamil memes ( 1 ) tamil nadu ( 1 ) telegram ( 1 ) thatha patti stories ( 1 ) tips ( 1 ) tn state ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிக்க சிந்திக்க ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog