Thursday, September 25, 2014


மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா?


avargal unmaigal
நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை மிஞ்சும் நமது இந்திய தலைவர்கள் செய்த சாதனை



மங்கள்யான் வெற்றி இந்தியர்கள் ஒவ்வொருவரையும் மிகப் பெருமை பட வைத்திருக்கிறது. அதில் எல்லோருக்கும் சந்தோஷம் எனக்கும் சந்தோஷம்தான் இந்திய தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்ற நாட்டு வல்லுனர்களுக்கு கொஞ்சம் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இப்படி நாம் பெருமை பட நமது திறமையை நிருபிக்க இந்தியா செலவிட்ட தொகை என்ன தெரியுமா?



450 கோடி ரூபாய் அதாவது அமெரிக்க டாலரின் மதிப்பில் 71 மில்லியன்


இது தேவையா என்றால் அதற்கு


சிலர் இப்படி நாம் பணத்தை செலவிட்டதற்கு பதில் ஏழைகளின் வளர்ச்சிக்கு, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, கல்வி வளர்ச்சிக்கு செலவிட்டு இருந்தால் மிகவும் பயன் அளித்திருக்கும் என்று சொல்லுகிறார்கள்.


மற்றும் சிலர் இது நீண்ட காலத்திற்கு அப்புறம் பலன் தரும் ஒரு திட்டம் ஆனால் நமக்கு இப்போதைய தேவை குறுகியகாலத்தில் பலன் தரும் திட்டம் என்றும் சொல்லுகிறார்கள்


வேறு சிலரோ தொழில் நுட்பத்தில் நாம் அடைந்த வளர்ச்சியை உலகிற்கு அறிவிக்க பெருமை பட இது நமக்கு தேவை என்கிறார்கள்


நல்லா யோசிங்க மக்களே 450 கோடி ரூபாய் செலவிட்டு மீத்தேன் அல்லது சதுப்பு நில வாயு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சென்சார் கருவி, உயிர் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும் கருவி, அந்த கிரகத்தின் உஷ்ண நிலையை கண்டறியும், 'ஸ்பெக்ட்ரோ மீட்டர்' கருவி, வண்ண கேமரா, அதன் இயற்கை வளங்கள் பற்றி ஆராயும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டு அனுப்பபட்டுள்ளது இந்த மங்கள்யான்.



இதை அறியதான் பல மேலைநாடுகள் ராக்கெட் அனுப்பி உள்ளனவே அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சில காலங்களுக்கு அப்புறம் வெளியுலகுக்கு தெரியத்தான் போகின்றனவே. அப்படி நமக்கு தெரிகின்ற போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நம் விஞ்ஞானிகள் செயல்பட்டு நமது உபயோகத்திற்கு ஏற்ப பயன் படுத்தலாமே


நமக்கு இப்போது மிக அவசியமானது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி . ஏழைகளின் வளர்ச்சி இதற்கு மிக முக்கியம் நதி நீர் இணைப்பு இதை செய்வதால் நாட்டில் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் அழிவு தடுக்கப்படும் வறட்சி நீங்கும். விவசாயம் செழிக்கும் பொருளாதாரம் மேம்படும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது உலகம் அறிந்த உண்மைதானே இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காதுதானே.


ஆனால் மங்கள்யானால் நாம் அடைந்த தற்போதைய நன்மை "பெருமை" என்பதை தவிர வேற ஏதும் இல்லையே


சிலர் இன்னும் ஒரு படி மேல் சென்று .இது தான், உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட, செவ்வாய் கிரக ஆராய்ச்சி செயற்கைக்கோள். மேலை நாட்டினர் இப்படி ராக்கெட் ஏவ 200 மில்லியனுக்கும் மேலே செலவிட்டு இருக்கின்றனர் ஆனால் நாம் அதை 71 மில்லியன் பட்ஜெட்டில் முடித்துவிட்டோம் என்று பெருமைபடுகின்றனர். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இங்கு லேபரிலிருந்து மூலப் பொருள் வரை எல்லாம் 2 அல்லது 3 மடங்கு அதிகம். அதனால் இங்கு உற்ற்பத்தி செலவு மிக அதிகம்.உதாரணமாக இங்கு 2 அல்லது 3 பெட் ரூம் உள்ள வீட்டை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்தால் குறைந்தது 100 டாலர் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் அதே தொகையில் இந்தியாவில் ஆட்களை வைத்து மாதம் முழுவது சுத்தம் செய்யலாமே


உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது மங்கள்யான் என்றாலும் அது இப்போதைக்கு தேவையா என்ன?


இதற்கு நமது பதிலை நான் சொல்ல நினைத்தை மிக எளிமையாக நமது பேஸ்புக் பிரபலம் நண்பர் சூர்யஜீவா  பகிர்ந்ததை உங்களுக்கு அப்படியே தருகிறேன்.



ஒரு கூட்டு குடும்பத்தில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்தது.. அந்த குடும்பத்தினருக்கு பல அத்தியாவசிய தேவைகள் இருந்தன... அனைத்தையும் பட்டியல் போட்டனர்.. ஒழுகும் கூரை சரி செய்தல், கழிப்பிடம் கட்டுதல், மின்சார தேவையை சரி செய்தல், உடை, உணவு போன்றவை அந்த பட்டியலில் இருந்தன... குடும்ப தலைவர் பல்வேறு மூலப் பொருட்களை வாங்கி வந்து அவரே ஒரு ஸ்மார்ட் போன் தயார் செய்தார்... அதுவும் வெற்றிகரமாக ஓடியது... இதில் என்ன பெருமை என்றால் 80000 ரூபாய்க்கு விற்கப்படும் போன் போலவே அவர் 50000 த்தில் முடித்திருந்தார்...



இப்போது சொல்லுங்கள் மங்கள்யான் வெற்றி! இந்தியா பெருமை பேசுவதற்காக விடப்பட்டதா இல்லையா?


கொசுறு செய்தி மங்கள்யான் வெற்றியை தூக்கி சாப்பிடும் நமது தலைவர்கள் சாதனை
டிஸ்கி : நம் அரசியல் தலைவர்கள் ஊழலில் கொள்ளை அடிக்கும் பணத்திற்கு ஒப்பிட்டால் மங்கள்யானுக்கு நாம் செலவிட்ட தொகை மலைக்கும் மடுவுக்குக்கும் உள்ள வேறுபாடுதான். நம்மால் முடிந்தால் நம் தலைவர்கள் அடிக்கும் கொள்ளையை தடுத்தால் ஒரு மங்கள்யான் என்ன பல மங்கள்யானை நாம் தொடர்ந்து விண்ணுக்கு அனுப்ப முடியம். அப்படி செய்ய நம்மால் முடியுமா?

MORE THAN 800 SCAMS IN LAST 9 YEARS


1. coal scam - INR 1855913.4 million (US$34 billion) coal minister , PM , PMO involved
2. Karnataka Wakf Board Land Scam - INR2000 billion (US$37 billion) 38 Congress leaders involved
3.Uttar Pradesh NRHM scam - INR100 billion (US$1.8 billion) people involved Mayawati and gulam nabi azad
4. 2G spectrum scam - INR1760 billion (US$32 billion) people involved Nira Radia, A. Raja, M. K. Kanimozhi, many telecommunications companies.
5.- Uttar Pradesh food grain scam - INR350 billion (US$6.4 billion) , people involved Kapil Sibal, Mulayam Singh Yadav, Mayawati
6. DIAL Scam – Central government lost INR1669723.5 million (US$31 billion) by undue favours to GMR-led DIAL. DIAL (Delhi International Airport Limited)
7. Granite scam in Tamil Nadu - The initial estimated report indicated illegal quarrying up to 16,000 cr people involved Several congress leaders , including Dayanidhi Azhagiri, son of Union Minister M. K. Alagiri, have been booked for alleged illegal sand and granite mining by companies owned by them.
8. Highway scam – scam to tune of INR 70 crore reported y World bank (US$13 million) involving surface trnsport minister , finance minister and NHAI .
9. ISRO's S-band scam (also known as ISRO-Devas deal, the deal was later called off) – INR2000 billion (US$37 billion)
10. Arunachal Pradesh PDS scam – INR10 billion (US$180 million) congress leader and CM arrested .
11. Cash-for-votes scandal Rs. 500 million ($13 million) to Rs. 600 million ($15 million) congress leader satish sharma involved .
12. Scorpene Deal scam Rs. 500 crore (about USD 10 mn) person involved congress leader and now president of India Pranab Mukherjee
13. Commonwealth Games scam – INR700 billion (US$13 billion) congress minister suresh kalmadi and delhi CM shela Dixit involved
14. Vodafone tax Scandal - involves Rs 11,000-crore tax dispute settled out of court when case was going on in Supreme Court , kapil sibal involved .
15. Railway promotion scam CBI booked Union railway minister Pawan Kumar Bansal's nephew for allegedly accepting a bribe of Rs 90 lakh from a Railway Board member total bribe involved 12 crore - no action against minister .
16. Maharashtra Irrigation Scam – Loss of about INR720 billion (US$13 billion) people involved shard pawar , ajit pawar .
17. Andhra Pradesh land scam – INR1000 billion (US$18 billion) people involved congress CM YSR Reddy
18. Forex derivates scam – INR320 billion (US$5.9 billion) people involved RBI and finance ministry .
19. Service tax and Central Excise Duty fraud – INR191.59 billion (US$3.5 billion) crore) people involved finance ministry .
20 . Maharashtra stamp duty scam – INR6.4 billion (US$120 million) people involved congress leader kripa shankar singh and ex congress CM
21. Maharashtra land scam - INR 2800 crore , people involved congress leader and CM vils rao deshmukh and NCP leader chagan bujbal
22. MHADA repair scam – INR1 billion (US$18 million) people involved NCP leader chagan bujbal and congress CM .
23. Ministry of External Affairs gift scam 28 lakh , people involved congress leader S.M Krishna
24 . Jammu and Kashmir Cricket Association scam – Approximately INR500 million (US$9.2 million) people involved UPA minister and NC leader Dr. Farooq Abdhulla
25. Jammu and Kashmir PHE scam 18 crore , people involved Congress minister Taj Mohi-ud-Din.
26. Haryana forest scam INR 200 crore , people involved haryana CM and congress leader Bhupinder Hooda


இன்னும் அதிக ஊழல்களை வருட வாரியாக பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

25 comments:

  1. இதை நாம் பேசி என்ன நடக்கப் போகிறது...வெறும் ஆதங்கப் பேச்சுதான்....யோசிக்க வேண்டிய அரசுக்கு யார் மணி கட்டுவது?

    ReplyDelete
    Replies
    1. பூனை என்றாலாவது மணி கட்டிவிடலாம்.. இது புலி ஆச்சே.. அதுவும் பசு தோல் போர்த்திய புலி.....என்னத்த சொல்றது. கேட்டா.. அமெரிக்கா பண்ணிச்சி, ஆடுக்குட்டி பண்ணிச்சி என்ற ஒரே பதில்.

      Delete
    2. உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. கேள்விகள் நல்லாத்தான் இருக்கு....!!! இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏதோ ஒரு யாணைச் செலுத்தத்தான் போகின்றார்கள்! அதற்குள் ஊழல் தொகையும் இன்னும் பெருகும்! இன்னும் 10 வருடங்கள் கழித்து நீங்களும் இதே போன்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரை எழுதத்தான் போகின்றீர்கள் அப்போதும் ஊழல் தொகையை விட யாணின் செலவு குறைவு என்றும்.....இந்தியாவின் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கின்றதா என்று......இப்போது பெண்களின் கழுத்தில் தொங்கும் மங்கள்யாணின் சின்னம், ஒருவேளை அப்படி ஒன்று இருந்தால் அப்போது, இந்த "மங்கள்யாணின்" சின்னமாகக் கூட மாறலாம்....ஆனால் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிராமம் இருக்கின்றதா? வயல்கள் இருக்கின்றதா? இருந்தாலும் எப்படி இருக்கின்றது? இன்னும் ஏழ்மையிலேயா? .....

    இதெல்லாம் யாருகாதுல விழுந்து யாரு யோசிக்கணுமோ அவங்க யோசிக்கறதில்லையே தமிழா! நாம் யோசிச்சு என்ன பிரயோஜனம்? சொல்லுங்க...

    ReplyDelete
  3. யோசிக்க வேண்டிய விஷயம்..!

    ReplyDelete
  4. மங்கள்யான் ஒரு சாதனை என்றாலும் நீங்கள் குறிப்பிடுபவையையும் யோசிக்க வேண்டியுள்ளது! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. அய்யோ இப்படி ஆளாளுக்கு குழப்பினா எப்படி??? நானும் உங்களை மாதிரி தான் நினைச்சேன். ஆன புதுகை சீலன் சகோ வேற மாதிரி எழுதிருக்கார். ஒன்னு மட்டும் புரியுது , இந்திய சூழலில் தினமும் கவலைகள் கூடிகிட்டே இருக்கு:((((((

    ReplyDelete
    Replies
    1. தலைவர்களுக்கு பெருமை முக்கியம் ஆனால் நமக்கோ ஏழைகளின் வருமைதான் முக்கியமாக தெரிகிறது அதனால்தான் நம்முள் குழப்பம் ஏற்படுகிறது

      Delete
  6. மாற்றுக்கருத்து உள்ள வித்தியாசமான சிந்தனை.
    இம்மாதிரியான கேள்விகள் இருந்தால் தான் பல்வேறு கோணங்களிலிருந்து நாம் பார்க்க கற்றுக்கொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை சரியாக புரிந்து கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  7. உங்களுக்கு தெரிஞ்ச லாஜிக்படி பார்த்தா சீக்கிரமா அமெரிக்க சனாதிபதி ஆயிடுவீங்க போலிருக்கே!!! அமெரிக்காவில் 4.6 கோடிப்பேர் வறுமையில் வாடும் போது, 1/7 அமெரிக்க குடும்பம் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்கும் போது உங்க அமெரிக்க அரசு 120,000 கோடி பணத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டும் நாசாவிடம் கொடுக்கிறது. இதோடு ஒப்பிட்டால் இந்தியா இஸ்ரோவுக்காக செலவழிக்கும் சுமார் 7000 கோடி மட்டும்தான், போன வருடம் 5000 கோடி.

    கார் கம்பனிகாரனுக விளம்பரத்தில் 2 வீலில் ஓட்டுவது, தாண்டுவது என சாகசம் காட்டுவார்கள். கார் வாங்கும் எவனும் 2 இரண்டு வீலில் ஒட்டப்போவது இல்ல. அது சும்மா சீன் போட்டு எங்க கார் எம்புட்டு சூப்பர் என காட்டுவது, அவ்வளவுதான். அதே போலத்தான் அமெரிக்க, ஐரோப்பா சீனாவோடு ஒப்பிட்டால் சுமாரான ராக்கெட்டுகளை வைத்திருக்கும் இந்தியா இப்படியெல்லாம் சீன் போட்டு திறமையா காட்டுகிறது. ஏனெனில் விண்வெளித்துறை 600,000 கோடி பணம் புழங்கும் துறை. அதுல துண்டைப் போட்டு எங்களாலும் முடியும் என காட்டி பணம் பண்ணுவதற்காகத்தான் இந்த சீன்! இஸ்ரோவின் வியாபார பிரிவான Antrix வருடத்திற்கு 1300 கோடி சம்பாதிக்கிறது, இதை அதிகரிக்க வேணாமோ???

    NASA needs an Indian tutorial: http://www.bloombergview.com/articles/2014-07-03/nasa-needs-an-indian-tutorial

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு ஊழல்கள் இருந்தும் ஒரு குறைந்த செலவில் செய்தது ஒரு மகத்தான சாதனையே. 2013ல் Total expenditure of INR1658000 crore (US$270 billion). இதில் 450 கோடி செலவு செய்தது உங்கள் கண்ணை உறுத்துகிறதா? ஒரு நாடு எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும். வறுமையை மட்டும் கருத்தில் கொண்டால் பின்னாளில் மேலதிக செலவு செய்ய நேரும்.

      Delete
    2. உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    3. கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த எங்களுக்கு கண்ணை உறுத்தவில்லை ஆனால் கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு இந்த தொகை நம் கஷ்டங்களை நீக்க செலவிடக் கூடாதா என்று தோன்றுவது இயல்புதானே

      Delete
  8. விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. விஞ்ஞானிகளை வாழ்த்தி பாராட்டுவோம்

      Delete
  9. பெருமை பேசுவதற்காக மட்டுமாக இல்லாமல் நம் விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. நமது விஞ்ஞானிகளின் திறமை நமக்கு பெருமைதான் அதனால் அவர்களை வாழ்த்தி பாராட்டுவோம்

      Delete
  10. அலசித் தீர்துடீங்க...
    படிசுக் களைச்சுட்டேன்..

    நல்ல அலசல்
    சூர்யஜீவாவைப் பிடிக்கிறேன் முக்நூலில்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பேஸ்புக்கில் இருப்பது எனக்கு தெரியாது உங்களின் அழைப்பால்தான் தெரிந்து கொண்ட்டேன். நீங்கள் பகிர்வது & ஷேர் செய்வது எல்லாம் மிக அருமையாக இருக்கிறது

      Delete
  11. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. //இதை அறியதான் பல மேலைநாடுகள் ராக்கெட் அனுப்பி உள்ளனவே அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சில காலங்களுக்கு அப்புறம் வெளியுலகுக்கு தெரியத்தான் போகின்றனவே. அப்படி நமக்கு தெரிகின்ற போது அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நம் விஞ்ஞானிகள் செயல்பட்டு நமது உபயோகத்திற்கு ஏற்ப பயன் படுத்தலாமே
    //
    பிற்போக்கு சிந்தனை அல்லவா இது? முடிவை சொல்வார்கள். ஆனால் எப்படி சாதித்தார்கள் என்று மற்ற நாடுகளுக்குக் கற்றுக்கொடுப்பார்களா? இல்லையே.

    ஒப்பீட்டில்:
    இப்போது, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரோபாட் நுட்பியல் கற்றுத்தரும் முயற்சியில் உள்ளேன். ”இதில் கலிஃபோர்னியா மாணவர்கள் முன்னிலையில் உள்ளார்கள். இவர்களும் அதையே செய்வானேன், வீண் செலவு, கால விரயம், ஒழுங்காக இருக்கும் பாடங்களைப் படித்தால் போதாதா?” என்று கேட்கலாம்தான். ஆனால், போட்டியில் முன்னணியில் இல்லை என்றாலும், கணிதம், இயற்பியல், கணினி, மின்னியல் துறைகளில் மதிப்பிலடங்கா பயிற்சி கிடைக்கிறதே.

    ReplyDelete
  13. விஞ்ஞானிகளை வாழ்த்துவோம் நண்பரே......

    ReplyDelete
  14. NPR ல இதைப் பத்தி பெருசா சொன்னாங்க. காரணம் என்னவென்றால் ரொம்ப கம்மியான செலவில் செய்து இருக்கார்களாம் இச்சாதனையை! ஆனால் இவர்கள் வெளியே சொல்லும் தொகையும் உண்மையிலேயே ஆன செலவும் நிச்சயம் ஒரே தொகையாக இருக்காது. ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் என்பது தெரியவில்லை!

    -----------------------

    India becomes first Asian nation to reach Mars orbit, joins elite global space club, Washington Post

    "By comparison, India's $72 million Mars orbiter is the cheapest interplanetary mission ever. [Indian Prime Minister] Modi said that India's Mars mission cost less than what it took to make the famous Hollywood space movie "Gravity." "We kept it low cost, high technology. That is the Indian way of working," Sandip Bhattacharya, assistant director of B.M. Birla Planetarium in the northern city of Jaipur, said in a telephone interview. "

    -------------------------------------

    First U.S. Stealth Jet Attack on Syria Cost More Than Indian Mission to Mars
    F-22 Raptor stealth fighters were needed in case the Syrians used their sophisticated air defenses. But Raptors don't come cheap.

    Fears of a potent Syrian air defense system drove the U.S. Air Force to send its silver bullet force of F-22 Raptor stealth fighters into battle for the first time ever. The Pentagon confirmed on Sept. 23 that the $150 million jets had struck an ISIS command and control facility in Raqqah, Syria with a satellite-guided bomb. That was right after an initial wave of U.S. Navy Tomahawk cruise missiles hit their targets around Aleppo and Raqqah.

    But the Raptors’ first mission wasn’t cheap. Together, the missiles and airstrikes cost at least $79 million to pull off, according to a Daily Beast tally.

    That's more expensive than India's mission to Mars, which was successfully completed Wednesday at a cost of just $74 millio---------------------

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.