Wednesday, September 10, 2014




பேஸ்புக்கில் பிரபலமாக பேஸ்புக் பிரபலங்கள் இப்படிதான் செய்கிறார்களா? famous-on-facebook-



என்னங்க நாம இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வோமுங்க?
ஏன் நமக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கிறதே அது போதுமே
போங்க அந்த குழந்தைகள் போட்டோவையே எத்தனை நாள் பேஸ்புக்கில் போடுவது.
புதுசு புதுசா போடணுமுங்க அப்பாதான் நாம் பிரபலமா தொடர்ந்து இருக்க முடியும்




என்னங்க நாம் இன்று இரவு ஹோட்டலில் போய் சாப்பிடுவோமுங்க?
எதுக்குடி அநாவசிய செலவு அடிக்கடி சாப்பிட்டா உடம்புக்கு கெடுதலம்மா?
என்னங்க நீங்க அந்த காலத்து ஆளா இருப்பிங்க போல இருக்கு இப்ப எல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவது பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதற்காக என்பது உங்களுக்கு தெரியாதா என்ன



என்னடி குழந்தை உடம்பு அனலாக கொதிக்குதே அதுக்கு மாத்திரை ஏதும் கொடுத்தாயா அல்லது டாக்டரிடம் அழைத்து போனாயா?
இல்லைங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டிருக்கேனுங்க. அதைப் பார்த்துட்டு நண்பர்கள் எல்லாம் கூடிய சிக்கிரம் உடம்பு நலமாக பிரார்த்திக்கிறேன் என்று கருத்து போட்டு இருக்காங்க . அதனால காய்ச்சல் ஈவினிங்குள்ள குணமாகிடும்ங்க




என்னடி அம்மா பாத்ரும்ல வழுக்கி விழுந்துட்டாங்க அதனால ப்ர்ஸ்ட் எய்டு பாக்ஸை சீக்கிரமா எடுத்துட்டு வான்னா நீ என்னென்ன கேமிராவை தூக்கிட்டு வந்துருக்கே நான் சொன்னது உன் காதில் சரியா விளவில்லையா என்ன?
எல்லாம் சரியா காதுலை விழுந்துச்சுங்க ஆனா அவங்க் கிழே விழுந்ததை முதலில் நான் போட்டோ எடுத்டு போட்டேன்னா லைக்ஸ் சும்மா நூற்றுகணக்குல விழுமுங்க..அதனாலதான் கேமிராவை எடுத்துட்டு வந்தேங்க.




என்னங்க நான் அமெரிக்கா போக ஏற்பாடு பண்ணுங்க்?
என்னடி என்னமோ பக்கத்து ஊருக்கு போக ஏற்பாடு பண்ணுவது போல சொல்லுற. ஆமாம் நீ எதுக்கு அமெரிக்க போகணும்.
என்னங்க புரியாம பேசுறீங்க. ஒரு பேஸ்புக் பிரபலம் அமெரிக்கா போய் அங்கிருந்து தினமும் நான் அதை பார்த்தே இதை பார்த்தேன் என்று போட்டோ எடுத்து ஸ்டேடஸ் போடுறாங்க. அப்படி நானும் போடலன்னா நான் பின் தங்கிடுவேணுங்க...




அன்புடன்
மதுரைத்தமிழன்


11 comments:

  1. மிகச் சரியே! அவர்கள் உண்மைகள் சரிதானுங்க! குழந்தைக்கு ஜுரம் என்று ஸ்டேட்டஸ் போட்டா லைக் போடறதும் நடக்கும்பா....

    ReplyDelete
  2. கரெக்ட்!சீக்கிரம் அமேரிக்கா போறதுக்கு(மாதிரி) டிக்கட் போட்டுடுங்க,லைக் பிச்சுக்கும்!

    ReplyDelete
  3. இதையெல்லாம் ஆண்கள் தானே அதிகம் செய்கிறார்கள்......

    ReplyDelete
  4. கரெக்ட்டா தான் சொல்லிருன்க்கீங்க, இத விட கொடுமை ஒரு சோக ஸ்டேட்டசுக்கு கூட லைக்க போடுறது... யாராவது தலவலின்னு ஸ்டேட்டஸ் போட்டா கூட 100 பேர் லைக் போட்றது. அதிலும் பொண்ணுங்க போட்டா அவ்ளோதான்... சரியான பதிவு

    ReplyDelete
  5. உண்மையை புட்டு புட்டு வெச்சிருக்கீங்க!

    ReplyDelete
  6. நல்ல பதிவு ரசித்தேன் காரணங்களை கச்சிதமாக வெளியிட்டுள்ளீர்கள் சகோ ! வாழ்த்துக்கள் ...!
    புதிய பதிவு போட்டுள்ளேன் முடிந்தால் பாருங்கள் ...

    ReplyDelete
  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அது என்ன எல்லாமே பொண்ணுங்க சொல்ற மாதிரியே இருக்கு?? ஆண்கள் எப்.பி பக்கம் போறதே இல்லையா?? ஓ! இது பூரிகட்டையோட மாடர்ன் வெர்சன்னா:))))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.