உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, June 17, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நேற்று ஒரு பெண்பதிவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.அந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே உங்களுக்காக தந்து இருக்கிறேன்.. அவர் கேட்டது நேரிலோ போனிலோ மெயிலிலோ அல்ல அவர் வந்து கேட்டது கனவில்தான். அந்த பதிவர் வேறு யாருமல்ல சகோ ராஜிதான். அவர் கனவில் வந்தது நல்லதா போச்சு இல்லை என்றால் என் பதில்களை கேட்ட அவர் என்னை எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்திருப்பார். அப்படி முடியாததால்தான் அவர் இரத்தப் பொறியல் http://rajiyinkanavugal.blogspot.com/2014/06/blog-post_17.htmlநேற்று பண்ணி இருப்பரோ என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி அவர் என்ன கேள்விகள் கேட்டார் என்பதை கிழே பார்ப் போம்.


1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
குட்டியோடவும் புட்டியோடவும்தான். (குட்டி என்றதும் பெண் குட்டிகள் என்று நினைத்து விட வேண்டாம் அந்த வயசுல அவங்களுக்கு யாரு சமைச்சு போடுவா... நான் சொன்னது நாய்க்குட்டியைதான் புட்டி ரம்தான்

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புறீங்க?
பெண்ணின் மனசைதான் ஆனா அதை கற்றுக் கொள்ள ஒருத்தர் கூட நல்ல புத்தகம் எழுதவில்லை


3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது & எதற்காக?
கல்யாணத்திற்கு முன்பு... & நமக்கு ஒரு இளிச்சவாய் பொண்டாடி கிடைச்சிட்டாள்னு நினைச்சு சிரிச்சேன். அப்ப என் மனைவியும் சிரித்தாள் கல்யாணத்திற்கு அப்புறம்தான் அவள் சிரித்ததின் அர்த்தம் எனக்கு புரிந்தது

4. 24 மணி நேரம் பவர் கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

அப்படின்னா என்ன? அல்லது கல்யாணம் ஆனவுடனே என்னுடைய பவர் கட் ஆயிடுச்சு இருந்த போதிலும் என் மனைவி கூடதான் வாழ்கிறேன்

5. உங்களுடைய குழந்தையின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
அப்பாவுக்கு கஷ்டம் இல்லாமல் உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையா நீயா தேர்ந்தெடுத்தற்கு நன்றியம்மா கல்யாண விருந்துக்கு அப்பாவை மறக்காம கூப்பிட்டதற்கு நன்றியம்மா என்று சொல்லுவேன்

6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்?
பேஸ்புக்கில் பெண்களுக்கு கிடைக்கும் லைக்ஸை போல ஆண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்று அறிந்து அதை தீர்க்க முயல்வேன்

7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதை தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?
அட்வைஸா அதுவும் அடுத்தவர்களிடம் இருந்தா? ஹாஹா அப்படி கேட்கும் வழக்கமே என்னிடம் இல்லையே

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியை பரப்புக்கிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
அதுதான் நீங்களே சொல்லீட்டீங்களே அது தவறான செய்தி என்று அதனால் நான் கவலை ஏதும் பட மாட்டேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்துவிட்டால் அவரிடம் என்ன சொல்லுவீர்கள்?
டேய் உன் மனைவி இறந்து போனதை கேட்கும் போது எனக்கு மிக வருத்தமாக இருக்குதடா( மைண்ட் வாய்ஸ் நீ மட்டும் சந்தோஷமாய் இருக்க போகிறாய் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமா இருக்காதா என்ன)

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீங்க?
இப்படி மொக்கை பதிவா எழுதி மக்களை சாவடிப்பேன்.


என் பதில்களை கேட்ட சகோ ராஜி http://rajiyinkanavugal.blogspot.com போயும் போயும் உங்களிடம் கேட்டேன் பாருங்கள் என்று தலையில் அடித்து கொண்டார். அதை பார்க்க பாவமாக இருந்ததால் ராஜிம்மா இந்த கேள்விகளுக்கு எல்லாம் உன்னுடைய பதில் என்னம்மா அதை "இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?" என்ற தலைப்பில் ஒரு பதிவா போடும்மா.

இதே கேள்விகளை நான் சகோ
1,பாலகணேஷ், http://minnalvarigal.blogspot.com
2.பாண்டியன், http://pandianpandi.blogspot.com
3. உஷா அன்பரசு http://tamilmayil.blogspot.com/
4.அருணா செல்வம்,http://arouna-selvame.blogspot.com
5.அம்பாளடியாள்,http://rupika-rupika.blogspot.com
6.மைதிலி கஸ்தூரி ரங்கன் http://makizhnirai.blogspot.com/,
7.முரளிதரன்http://tnmurali.blogspot.com/
8.வெங்கட் நாகராஜ் http://venkatnagaraj.blogspot.com
9.சொக்கன் சுப்ரமணியம் http://unmaiyanavan.blogspot.com
10.ரமணி சார் http://yaathoramani.blogspot.com/

ஆகியோரிடம் கேட்கிறேன் . முடிந்தால் உங்கள் தளங்களில் பதிவாக போட்டு அத்றகான லிங்குகளை இங்கே தரவும் மேலும் உங்களுக்கு தெரிந்த 10 பேர்களிடம் இந்த கேள்விகளை தொடர் பதிவுகளாக போடச் சொல்லுங்கள்.அத்றகான லிங்குகளை இங்கே தரவும் நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கேள்விகள் சிரியஸான கேள்விகள் அதனால் நீங்கள் அந்த கேள்விகளுக்கு சிரியஸான பதிலாக போடவும் வேண்டுமென்றால் நகைச்சுவையாக நீங்கள் சொல்ல விரும்பும் பதில்களை ( ) ப்ராக்கெட்க்குள் போடவும்... உஷா அன்பரசு போல எஸ்கேப் எல்லாம் வேண்டாம் 

எனது வேண்டு கோளுக்கிணங்க முதலில் பதிவு இட்ட மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு எனது நன்றி. அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பதிலை கூறி வியக்க வைத்து இருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அந்த பதிவிற்கான லிங்க் இதோ http://makizhnirai.blogspot.com/2014/06/self-estimation.html

51 comments :

 1. ஆஹா, என்னடாது தொடர் பதிவை ரொம்ப நாளாக காணோம்னு பார்த்தேன். தொடர் பதிவு வந்துடுச்சு.

  ஆனா அது எப்படிங்க உங்களால இந்த மாதிரி குண்டக்கமண்டக்க கேள்விகளை எல்லாம் கேக்க முடியுது?

  சீக்கிரம் ரூம் போட்டு யோசிச்சு, இதற்கான பதிலை பதிவுல போடுறேன்.

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டையால் அடிவாங்கும் ஒருவனால்மட்டும் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க முடியும்

   Delete
 2. நான் நினைச்சன் அப்பவே நினைச்சன் இந்த முட்டாப் பயல் என்னுடைய
  பெயரை இங்க எங்கேனும் இழுப்பான் என்று இழுத்துட்டானே இப்ப நான்
  என்ன பண்ணுவேன் ???????????????.....ஹலோ மைக் செற்றிங் இங்கின
  யாராவது பதில் எழுத உதவி செய்வீகளா ????...(..:))))) )(எழுதினாப் போச்சு )

  ReplyDelete
  Replies
  1. பாட்டியம்மா பதில் சீரியஸா இருக்கனும். சத்திரத்துல யாரவது எழுதி கொடுத்த பதிலா இருக்க கூடாது

   Delete
 3. கலக்கல் பதில்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ..சரக்கை கலக்கி அடித்துவிட்டு எழுதிய பதிலாக இருப்பதால் அது கலக்கலா வந்துடுச்சு போல இருக்கு..படித்து ரசித்தற்கு நன்றி நண்பரே .

   Delete
 4. ரொம்ப நாளாச்சு வலைப்பக்கம் வந்து... வந்து மாட்டிக்கிட்டேனா? எதோ ஒண்ணு ரெண்டு கேள்விக்காவது இங்கயே பதிலை சொல்லிடறேன்...1) வெத்திலை பாக்கோடத்தான்...வெறென்ன முறுக்கா திங்க முடியும். 3) ஏ லூசு இப்படியெல்லாம் சிரிச்சி வைக்காத ன்னு எம்புருஷன் சொன்ன மறு நாள்லயிருந்து...10) காது கிழியறளவுக்கு பாட்டு சத்தம் வச்சிட்டு நடந்துக்கிட்டேயிருப்பேன்...


  இன்னும் பத்து பேரை வேற மாட்டிவிடனுமா? பாவம் அந்த பத்து பேர் பிழைச்சி போகட்டும்னு பெரிய மனசு பண்ணி ... சிங்க நடை போட்டு... சிங்கிளாவே நடைய கட்டுறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஹலோ நக்கல் பதிலா இருக்க கூடாது சிரியஸா சிந்தித்து பதில் பதிவு போடவும்

   Delete
 5. தொடர் பதிவா!? சிக்க வச்சுட்டீங்களே!

  ReplyDelete
  Replies
  1. வலையுலகின் பிரபலமான எங்க சகோவின் பதில்கள் இல்லையென்றால் எப்படி அதனாலதான் இந்த அழைப்பு

   Delete
 6. 100 வது வயதில் புட்டி மட்டுமில்லாம குட்டிகளோடு கொண்டாட வாழ்த்துகள்

  ReplyDelete
 7. வயது வித்தியாசமின்றி வாலிபிகளையும் வயோதிகளையும் வரம்பின்றி வம்புக்கிழுக்கும் வெட்டி வாலிபரை விளையாட்டாக வளர விட்டு வேடிக்கைபார்க்கும் வலைப்பதிவாளர்களிடமிருந்து வாழ்க வாழ்கவென்று வாழ்த்தி வருத்தத்துடனும் வணக்கத்துடன் விடைபெறும் வந்தாரை வாசலிலெயே வாழ்த்தி வரவேற்று வாழ வைக்கும் வஞ்சமில்லா வயோதிக வள்ளல் வைகைப்புயல் வடிவேலு.

  மொக்கைக்கு மன்னிக்கவும்,
  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. மொக்கைகளுக்கும் இங்கு இடம் உண்டு

   Delete
 8. பவர் கட், தீர்க்க வேண்டிய பிரச்சனை - செம...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ''வலையுலகில் பவரான' நீங்கள் பவரான கேள்வியையும் பதிலையும் படித்து ரசித்து மகிழ்ந்தற்கு நன்றி

   Delete
 9. நண்பரே, இதோ என்னுடைய பதில்கள்.
  http://unmaiyanavan.blogspot.com.au/2014/06/blog-post_19.html

  ReplyDelete
  Replies
  1. படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி சொக்கன்

   Delete
 10. ஆஹா..... என்னமா கேள்வி கேட்டு என்னமா பதில் எழுதுகிறீர்கள்....
  நானுமா...?
  சீரியஸான பதிலா....? எனக்கு ரொம்ப கஷ்டம்.
  இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பதில் எழுதும் முன் கணவரின் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி பதில் அளித்தால் எல்லா பதிலும் சிரியஸா வரும்

   Delete
 11. ஹலோ எனக்கு நித்திரை வந்து உயிர் மூச்சைத் தடுக்குது ஆதலால் பின்னர்
  வந்து சாவகாசமாய் வாசிக்கின்றேன் இதோ நீங்க கேட்ட கேள்விக்குப் பதில் :)
  எப்படியும் பத்துப்பேரை விரைவில் வலை வீசிப் பிடித்து வருவேன் என்னை
  நம்புங்கள் பேராண்டி ஆச்சி வயசான காலத்தில அதிக நேரம் கண் முழிச்சா ஆகாது
  ம்ம் ...:))

  ReplyDelete
  Replies
  1. பாட்டியம்மாவின் வலையில் சிக்காதவர்கள் யாரும் உண்டோ என்ன?

   Delete
 12. Replies

  1. படித்'தேன்' ரசித்'தேன்' மகிழ்ந்'தேன்" நன்றி

   Delete
 13. வணக்கம் நண்பரே. வைய விரி வலை என்பது இதுதானோ? தங்கை மைதிலி சொன்னபிறகுதான் நானும் பார்த்தேன். என் வலைப்பக்கதில் தொடர்ந்திருக்கிறேன். தொடர்வோம் நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூலுக்கு செல்லாமல் ஆசிரியரையும் பதில் சொல்ல வைத்த மாணக்கன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்... பதில்களை படித்தேன் மிக அருமை

   Delete
 14. இதை தானே செய்ய சொன்னீங்க.http://makizhnirai.blogspot.com/2014/06/self-estimation.html
  பதிவுலகை செம ஹாட் டா சுத்தி வருது இந்த topic. very....very...happy:)

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போல உள்ளவர்களின் முயற்சியால்தான் இந்த தொடர் பதிவு இன்னும் ஹாட்டாக சுற்றி வருகிறது

   Delete
  2. தேங்க்ஸ் and சாரி
   தேங்க்ஸ் ;இந்த பதிவால் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.:)
   சாரி ; கொஞ்சம் மூட் அவுட் டா போட்டதால் இரண்டாம் பதிவில் லிங்க்கை பார்த்து தெரிஞ்சுகுவாங்கனு நினைத்துக்கொண்டு உங்க பேரை தனியா mention பண்ணாததுக்கு:(
   மேலும் ஒரு லிங்க் http://vishcornelius.blogspot.in/2014/06/blog-post.html?showComment=1403628341248#c4085964741078848532.

   Delete
 15. அன்புடையீர்..
  அன்பின் சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் தளத்தினூடாக - தங்களின் தளத்தினை சந்தித்ததில் மகிழ்ச்சி..
  நல்லதொரு ரசனையான வினா விடை விளையாட்டினை ஆரம்பித்து வைத்ததில் - கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ஆனது.
  கேள்விக் கணைகளில் சிக்கிக் கொண்ட நானும் விடையளித்திருக்கின்றேன்.. அன்புடையீர் தங்களுக்கு நேரமிருப்பின் - வருகை தந்து மகிழ்விக்க அழைக்கின்றேன். வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவினையும் பதில்களையும் படித்து மகிழ்ந்தேன்

   Delete
 16. இந்த தொடக்கம் நன்மையில் முடியட்டும் நாரதரே....
  (நாரதரை முலானியில் மொழி பெயர்த்தால் - நண்பரே)

  ReplyDelete
  Replies
  1. இதுவரை நன்மையில்தான் சென்று கொண்டு இருக்கிறது. கருத்திற்கு நன்றி... உங்களது பதில்களையும் படித்து மகிழந்தேன்

   Delete
 17. Replies
  1. நாந்தான் இந்த தொடரை ஆரம்பித்து வைத்தேன்.பதிவு எழுதும் போது தொடர்பதிவு என்ற எண்ணம் கூட சிறிதளவுகூட இல்லை வழக்கமாக நானே கேள்வி கேட்டு நக்கலாக பதில் சொல்லி எழுதுவது போலத்தான் எழுதினேன் ஆனால் பதிவு எழுதி முடித்த பின் எனக்கே அந்த கேள்விகள் சிறப்பாக இருப்பதாக தோன்றியதால் இதை ஏன் சிறந்த பதிவாளர்களான சிந்தித்து பதில் சொல்லக் கூடிய நீங்கள் மஞ்சு சுபாஷினி, ரமணி, துளசி, போன்றவர்களுக்கு மட்டும் அனுப்பி பதில் எழுத சொல்லாம் என்று நினைத்தேன். ஆனால் உங்களைப் போல ஜாம்பவான் கள் இவனுக்கு வேற வேலையில்லை என்று நினைத்து விடுவீர்கள் என்பதால்தான் என் மனதை மாற்றி மற்றவர்களை அழைத்தேன். நான் இந்த அளவிற்கு ஹாட்டாக வலையுலகை சுற்றி வரும் என்று எதிர்பார்க்கவில்லை

   Delete
 18. எங்களுக்கு சகோதரி மைதிலி அனுப்பினாங்க! சரி அறிவுச் சுடர் சகோதரி அனுப்பியிருக்கேன்னு பார்த்து பதிலும் பதிவா போட்டோம்...பாத்தா வலை விரிப்பு இங்கிருந்துதான் ஆரம்பம்னு தெரிஞ்சுகிட்டோம்! பயங்கரமா சுத்துது போல......கலாய்த்தல் மன்னரின் பதில்கள வாசிச்சு செமயா சிரிச்சோம்! 5, 7, 8, 10 மிகவும் ரசித்தோம்! ஒவ்வொருவரின் வலைத்தளத்தையும் பார்த்து வருகின்றோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாக, பல சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன! நீங்கள் ஆரம்பித்த இந்த வலை நல்ல வலையே! மிக்க நன்றி மதுரைத் தமிழா......!!!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு மிகவும் நன்றி...

   Delete
 19. காவிய கவி இனியா வின் லிங்க் http://kaviyakavi.blogspot.com/2014/06/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிகவும் நன்றி...

   Delete
 20. மதுரை தமிழரே உங்களை தேடி தேடி மூச்சு வாங்குது எங்கெல்லாம் தேடி அலைந்தேன் தெரியுமா யார் அந்த மதுரை தமிழன் என்று, ஏம்ப்பா இந்த வேண்டாத வேலை என்று ரொம்ப கோபமா தான் இருந்திச்சு. அப்புறமா யோசிச்சு பார்த்தா ரொம்ப விளையாட்டு பிள்ளையா இருக்கியே என்னு மனிச்சுட்டேன். தொடரை தொடக்கி வச்சா மட்டும் போதுமா? வந்து கருத்து போட வேண்டாமா ? link தரலாம் என்று பார்த்தால் ஏற்கனவே என் தோழி மைதிலி இட்டுவிட்டார். தங்கள் பதில்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக அருமையாக தந்துள்ளீர்கள். வலை தள உறவுகளை ஒன்று சேர்க்கும் நல்லதொரு முயற்சி .
  தங்கள் எண்ணம் ஈடேற நல் வாழ்த்துக்கள் .சகோ..!

  ReplyDelete
  Replies
  1. மூச்சு வாங்கும் அளவிற்கு வயதாகிவிட்டதா உங்களுக்கு?

   பாராட்டிற்கு நன்றி

   Delete
 21. ஆஹா நம்மையும் இதுல கோத்து விட்டு இருக்கீங்களா.....

  உங்களோட பதில் எல்லாம் கலக்கலா இருக்கு.... நானும் பதில் சொல்ல முயல்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. எப்போதும் மிக சிறப்பாக பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு அழைப்பு விடுவிக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா அதனால்தான் அழைத்தேன்

   Delete
 22. கொஸ்டின் பேப்பரே சரியில்லே.
  ஒரு ஒரு கேள்விக்கும் எவ்வளவு மார்க்கு எவ்வளவு மணிக்குள்ளே முடிக்கணும் . எவ்வளவுன்னக்க பாஸ் மார்க்கு ஒரு வெவரமும் இல்லே அதாவது பரவாயில்லே என்னைக்குப் பரிச்சன்னு முன்னாடியே சொன்னாத்தானே பிரிபரேசன் அதாங்க ஹி.... ஹி .... பிட் அடிச்சு எடுத்துட்டு வரமுடியும்.. ஐயோ ஐயோ இது கூட தெரியாமயா பரிச்சை நடத்துறீங்க ?

  ReplyDelete
  Replies
  1. பதில் கிடைத்த பின் தான் மார்க்குகள் பற்றிய விபரம் தர முடியும் இல்லையென்றால் மார்க்கு ஏற்ற மாதிரி பதில் சொல்லிடுவிங்கல்ல

   Delete
 23. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப் பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. முத்துக்கு முத்தாக பத்துக்கு பத்தாக இருக்கும் இந்த கேள்வி பதில்களுக்கு உங்கள் தளத்தில் பதில் அளிக்கலாமே?

   Delete
 24. அலுவலக பணி சில நாட்களாக வலைப் பக்கம் வரமுடியவில்லை . இப்போதுதான் பார்த்தேன்
  அசத்தல் கேள்விகள் அதிரடி பதில்கள்
  இந்தக் கேள்விகளுக்கு என் பதில்கள் மொக்கையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். .
  இருந்தாலும் சொல்ல முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான பதிவு போடும் உங்களுக்கு மொக்கை பதிவு எப்படி போடுவது என்பது கூட தெரியாது. அப்படியே உங்கள் பதிலும் உங்கள் பதிவுகளை போல சிறப்பாகவே இருக்கும்

   Delete
 25. நீங்க தான் இந்த பயணத்தை ஆரம்பிச்சதா :)
  ரொம்ப அருமையாக இருக்குங்க உங்கள் கேள்விகளும் அதற்குரிய உங்களது ட்ரேட் மார்க் பதில்களும் :)
  அமெரிக்காவில் ஆரம்பிச்சு ஜெர்மனி வழியா இங்கிலாந்து வந்த உங்கள் கேள்விகளுக்கு நானும் பதில் அளித்துவிட்டேன் .

  ReplyDelete
 26. கேள்வியின் நாயகனே......

  உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ எனது பதிவில்!

  http://venkatnagaraj.blogspot.com/2014/06/blog-post_25.html

  ReplyDelete
 27. ஓஓ இப்படி இருந்ததா? அதன் தொடக்கம். நல்ல கேள்வி நல்ல பதில்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog