Wednesday, June 11, 2014


நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?



ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக உழைத்து விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது எனஆச்சரியப்பட்டான்.அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது.விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான். புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது.

''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போது நமக்கு உணவு கொடுக்க மாட்டாரா?''என்று எண்ணிய அவன் மறுநாள் முதல் விறகு வெட்டச் செல்லாது வீட்டிலேயே சோம்பிக் கிடந்தான்.ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் உணவு கிடைக்கவில்லை .காரணம் கேட்டு இறைவனை வணங்கி வேண்டினான்.இறைவன் கூறினான்,'நீ நரியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.புலியை உதாரணமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.'

இப்படித்தான் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நமக்கு சாதகமான விசயங்களை மட்டும் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்
நெட்டில் படித்தது

8 comments:

  1. ஏற்கனவே படித்தது என்றாலும் உங்க நடையில் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கு :)

    ReplyDelete
  2. நெட்டிலிருந்து சுட்டாலும், பொட்டிலடித்தது போல பட்டென்று சுட்டிக்காட்டியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. இக்கதைக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு வரி சேர்த்து இருக்கலாம் !

    ReplyDelete
  4. நல்ல குட்டிக் கதை.
    சாதகமானதை எடுத்துக் கொள்வது நல்லதுதான். எது சாதகமானது என்பதைத்தான் மனிதன் தவறாகக் கணிக்கிறான். அதை இந்தக் கதை உணர்த்திவிட்டது

    ReplyDelete
  5. நல்ல கதை!‘
    நல்ல பகிர்வு!

    ReplyDelete
  6. கதை சரிதான். ஆனால் தலைப்புதான் கொஞ்சம் குழப்பமாகி விட்டது.... நமக்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்கிறோம்.. பாதகமானவைகளை கண்டுகொள்வதில்லை.

    ReplyDelete
  7. நல்ல ஒரு கதை. நல்ல ஒரு இடுகை!

    ReplyDelete
  8. நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.