கலைஞரை
ரஜினி சந்தித்தது வாழ்த்து
சொல்ல அல்ல.
அப்படியானால்
நடந்தது என்ன?
கலைஞரை
ரஜினிகாந்த சந்தித்தது பிறந்த
நாள் வாழ்த்து சொல்ல என்று
செய்திகள் பரப்பபட்டாலும்
அது முக்கிய காரணமல்ல என்று
உளவுதுறை வட்டாரச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
அந்த
உளவுதுறை செய்திகளின் படி
கலைஞர் அழைத்ததால்தான் ரஜினி
அவரை பார்க்க சென்றார் என்றும்.
அப்போது
நடந்த பேச்சு வார்தையில்
பிறந்த நாள் வாழ்த்தையும்
சொல்லவில்லை கோச்சடையான்
படம் பாருங்கள் என்றும்
அழைப்பு விடுவிக்கவில்லை
அப்படியானால் நடந்தது என்ன?
2ஜி
வழக்கும் கலைஞர் டிவி வழக்கும்
மிக தீவிரமாக நடை பெறுகின்றன.
இந்த
வழக்குகளில் முதலில் கனிமொழி,
மற்றும்
தன் மனைவியும் சிக்கி இருந்தார்கள்
அதுமட்டுமல்லாமல் இப்போது
அந்த வழக்குகளில் ஸ்டாலின்
பெயரும் மிதந்து வர ஆரம்பித்து
இருக்கிறது.
மத்தியிலோ
தனக்கு வேண்டிய ஆட்சியில்
இல்லை என்பதால் கலைஞர் மிக
கவலை கொண்டுள்ளார்.
அதில்
இருந்து தன் குடும்பத்தை
காப்பாற்ற ரஜினியை நாடியுள்ளார்.
காரணம்
மோடிக்கு மிக நம்பிக்கை
வாய்ந்தவர் ஒருவர் தமிழகத்தில்
உண்டு என்றால் அவர் ரஜினிகாந்த
என்பதால் அவரை அழைத்து பேச்சு
நடத்தி இருக்கிறார்.
ரஜினி
வேண்டுகோள் விடுவித்தால்
மோடி நிச்சயம் கேட்பார் என்பது
கலைஞரின் எண்ணம்.
அது
மட்டுமல்ல 2
வருடம்
கழித்து வருகின்ற சட்ட மன்ற
தேர்தலில் மோடியோடு கூட்டணி
வைத்தால்தான் தன் கட்சி வெற்றி
பெரும் என்பதை அறிந்துள்ளார்.
அதனால்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில்
பிஜேபியோடு கூட்டணி வைத்து
அவர்களுக்கு ஆட்சியில் பங்கு
என்று ஆசை கூறி செயல்பட
முயற்சிக்கிறார்.
இதற்காக
தூதுவராக ரஜினியை உபயோகப்படுத்த
நினைக்கிறார்.
இதுதான்
ரஜினி கலைஞர் சந்திப்பில்
நடந்து இருக்கும் என்றும்
உளவுத்துறை செய்திகள்
தெரிவிக்கின்றன.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி
:மதுரைதமிழன்
+
சிந்தனைகள்
=
உளவுத்துறை
அல்லது உண்மையில் உளவுத்துறையில்
இருந்துதன் யாரவது இப்படி
தகவலை தந்து இருக்கிறார்களா
என்பது சிதம்பர ரகசியம்
இது சிதம்பர ரகசியமோ இல்லை மதுரை ரகசியமோ ?
ReplyDeleteஇது உண்மை இல்லை என்பதில் எந்த ரகசியமும்
இல்லை .
அப்டி நடந்தாலும் ஆச்சரியபட ஒன்னுமில உளவுத்துறை அவர்களே :)
ReplyDeleteஅரசியல இதில்லாம் சாதாரணமப்பா:)
கோச்சடையானுக்கு வரி விலக்கு கிடைத்துள்ள வேளையில் ரஜினி, தானே போய் கலைஞரை சந்தித்தது மர்மமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வதும் உண்மையாக வாய்ப்பிருக்கிறது
இந்த சிதம்பர ரகசியத்தை வைத்தே ஒரு படம் எடுக்கலாம் போல இருக்கே!!!!
ReplyDeleteஉருட்டுக் கட்டையால மதுரைத்தமிழன் வீட்டில வாங்குவது போதாமல் இதுவுமா !!:))
ReplyDeleteஇதெல்லாம் கப்சா
ReplyDeleteஆஹா.... என்னமா யோசிக்கறீங்க மதுரைத் தமிழன்....
ReplyDeleteஅனைத்தும் சாத்தியமே! :)
நல்ல கற்பனைதான், ஆனால் இது உண்மையானாலும் ஆச்சர்யப்படவேண்டாம்.
ReplyDelete