Wednesday, June 11, 2014



அம்மா திமுகவின் அடுத்த சாதனை?


மலிவு விலையில் பல பொருட்களை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு இப்போது அம்மா உப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்தாக வரும் லிஸ்டில் மலிவு விலையில் விஷம் அறிமுகப்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது..

இதை ஏன் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதற்கான காரணமும் கசிந்துள்ளது.

அது இதுதான்....

டாஸ்மாக் மிக் அதிக வருமானம் தரும் அரசு துறையாக வளர்ந்து வருகிறது. இதில் பல குடும்ப தலைவர்கள் (கணவர்கள்) தினம் தினம் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அப்படி லாபம் தரக் கூடிய துறையில் தங்கள் கணவர்கள் தினமும் இன்வெஸ்மெண்ட் செய்வதால் அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை இதனால் குடும்பம் தெருவிற்கு வரும் நிலை வருகின்றது என்று பல பெண்கள் போராடிவருகிறார்கள். இவர்களின் கஷ்டத்தை அறிந்து அவர்களின் துன்பத்தை போக்க தமிழக அரசால் அறிமுகப் படுத்தபடுவதுதான் அம்மா விஷம் இது மிக மலிவு விலையில் கிடைப்பதால் பெண்கள் வாங்கி அருந்தலாம் இதை அருந்துவதன் மூலம் ஒரே அடியாக கவலையிலிருந்து விடுபடலாம். அது போல மனம் உடைந்து போன மாற்று கட்சியினருக்கு இது இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது மிக கவனிக்க தக்க விஷம் இல்லை விஷயம் ஆகும்

அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி அளவிற்கு மிஞ்சினால் அமுதமும்(சுயவிளம்பரம்) விஷமாகும் என்பது தமிழக முதல்வருக்கு மறந்துவிட்டதா என்ன?
11 Jun 2014

4 comments:

  1. மதுரை தமிழனுக்கு ஒரு பாட்டில் பார்சல் விரைவில் வீடு தேடி வரும்....!

    ReplyDelete
  2. இது ஏதோ நகைச்சுவைக்காகத் தானே எழுதினீர்கள்....?

    ReplyDelete
  3. மலிவு விலையில் விஷம் அம்மாவை தாக்கி எழுதுபவர்களுக்கு குடுக்கத்தானாம்

    ReplyDelete
  4. அடடா.....

    இன்றைக்கு மலிவு விலை மளிகைக் கடை பற்றி படித்தேன். இங்கே விஷம்! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.