Monday, June 30, 2014



'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..


சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாயில்லை,குடும்பத்தில் உள்ள வன்முறைகள். இரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள் தான். கூர் தீட்டப்பட்ட கத்திகளைப் போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன. அதன் வலி மிக அந்தரங்கமானது.ஆறாத ரணமுடையது.

கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.

--கதா விலாசம் -- எஸ்.இராமகிருஷ்ணன்

படித்தேன் ரசித்தேன்...சுவைத்தேன், அறிந்தேன், மகிழ்ந்தேன் அதனால் இங்கு பகிர்ந்தேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

17 comments:

  1. அருமை
    சொன்னது மிகச் சரி
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நகைச்சுவை மட்டுமல்ல இலக்கிய ரசனையும் உடையவர் எனபதை நிருபித்து விட்டீர்கள். எஸ் ரா வின் எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் உண்மைகளை பறை சாற்றுகின்றன. அவர்கள் உண்மைகள் என்ற தலைப்புக்கு இது மிகவும் பொருத்தமாக உள்ளது

    ReplyDelete
  3. உண்மைதான் ,நீங்கள் வாங்கும் பூரிக்கட்டை அடிகளையும் கதவுகள் வெளியே தெரியாமல் செய்து விடுகின்றன !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஜி! அவைதான் பதிவுகளாக வெளிவந்து விடுகின்றனவே! "அவர்கள் உண்மைகள்"!!!!!!!!

      Delete
    2. அந்த பதிவுகள் எல்லாம் நம்மள மாதிரி ஆட்கள் படிக்கிறதுக்கு, அவருடைய பக்கத்து வீட்டில வெள்ளைக்காரர்கள் தான் இருக்கிறார்களாம்!!!!

      Delete
  4. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  5. கதவு, சன்னல்களை கண்டுபிடித்தவனும் ஒரு விஞ்ஞானிதான். நண்பரே....

    ReplyDelete
  6. கதவு இல்லைன்னா என்ன....?
    அதுதான் வாங்கும் அடிகளை வரிக்கு வரி வலையில் எழுதி விடுகிறீர்களே....

    ReplyDelete
    Replies
    1. தன்னிலை விளக்கம் எந்த அளவிற்கு உண்மையென்று நேரில் கண்டால் தானே தெரியும் ?

      Delete
  7. வாசித்தோம்! ராமகிருஷ்ணன் அவர்களின் கதாவிலாசத்தை! நல்ல பகிர்வு தமிழா....மீண்டும் வாசிக்க பகிர்ந்ததற்கு!!!!

    ReplyDelete
  8. நாங்கள் இடும் பின்னூட்டங்கள் அப்லோட் ஆக மாட்டேன் என்கின்றன.....ப்ளாகர் பிரச்சினை??!!!

    ReplyDelete


  9. அதுக்கு முன்னால
    முதல்ல
    சாளரத்தை (யன்னலை) சாத்துங்கள்
    அதுக்குள்ளே
    வெளியிலிருந்து
    எதுவும் நுழையாமலா
    உள்ளிருந்து எதுவும்
    வெளியே செல்லாமலா
    எனக்கும் தான் தெரியவில்லையே!
    தத்துவங்கள்
    உடனே புரியாது தான்
    போகப் போகப் புரிந்துகொள்வோம்!

    ReplyDelete


  10. அதுக்கு முன்னால
    முதல்ல
    சாளரத்தை (யன்னலை) சாத்துங்கள்
    அதுக்குள்ளே
    வெளியிலிருந்து
    எதுவும் நுழையாமலா
    உள்ளிருந்து எதுவும்
    வெளியே செல்லாமலா
    எனக்கும் தான் தெரியவில்லையே!
    தத்துவங்கள்
    உடனே புரியாது தான்
    போகப் போகப் புரிந்துகொள்வோம்!

    ReplyDelete
  11. சன்னலை சாத்துவதற்கு இப்படி கூட அர்த்தம் இருக்கிறதா!!!

    ReplyDelete
  12. படித்ததில் பிடித்தது - எனக்கும் பிடித்தது ம.த.

    ReplyDelete
  13. நான் வசிக்கும் தெருவுக்கு கதவுகளே!!! இல்லை.அதனால்தான் என்னவோ... தெருவில் போவோர் வருவோர் காதுகளை அடைத்துக்கொண்டு போகிறார்கள்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.