Thursday, June 26, 2014




தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்?

தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகளைக் களையெடுக்கும் பணியைத் தொடங்கிவிட்டது இதுவரைக்கும் 3 மாவட்டச் செயலாளர்கள், 5 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றிய செயலாளர்கள் என மொத்தம் 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அது மிகவும் சரி


ஆனால் தேர்தலின் போது கட்சிகாரர்களை மிகவும் குழப்பி சிறப்பாக முடிவு எடுக்காமல் இருந்த கலைஞரையும் ஸ்டாலின் நீக்கம் செய்யாதது ஏன்?

தேர்தலின்போது பணியாற்றாத திமுக நிர்வாகிகளைக் களையெடுத்த ஸ்டாலின் அது போல தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கும் கல்தா கொடுபக்காமல் இருப்பது தவறுதானே? தனக்கு வேண்டியவர் தவறு செய்தால் மட்டும் மெளனமாக இருந்து நடவடிக்கை எடுக்காதது தவறுதானே

டிஸ்கி : திமுகவில் கலைஞர் தலைவராக உப்புக்கு சாப்பாணியாக இருப்பதை விட ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்து கலைஞர் தனக்கு வேண்டியவர்களுக்கு அந்த கட்சியில் பதவி கொடுத்து தேர்தல் வரும் போது திமுகவுடன் கூட்டணி வைத்து கொள்ளலாமே அப்படி செய்தால் மட்டும் கலைஞர் தனக்கு வேண்டியவர்களுக்கு உதவி செய்ய முடியும். என்ன நான் சொல்வது சரிதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்

திமுக ,அரசியல் ,கலைஞர், ஸ்டாலின்
26 Jun 2014

6 comments:

  1. விரைவில் அதுவும் நடக்கலாம் :)
    த.ம 1

    ReplyDelete
  2. உங்கள் சிந்தனை சிறப்பு ...

    தமிழன் எல்லோரையும் வரவேற்பான்

    ReplyDelete
  3. நல்ல ஐடியாதான். யார் கண்டது அப்படி நடந்தாலும் நடக்கலாம்

    ReplyDelete
  4. நீங்க கலைஞரை எதுக்காக தனியா கட்சி ஆரம்பிக்கச் சொல்றீங்கன்னு தெரியுது, அவரை நம்பாம, பேசாம நீங்களே ஒரு கட்சியை ஆரம்பிச்சுடுங்களேன்...

    ReplyDelete
  5. திமுக போற போக்கைப் பாத்தா நீங்க சொல்றதும் நடக்குமோ? ஐடியா ஓகே ஆனா கலைஞரினஇந்தத் தள்ளாத வயதில் இது தேவையா?!!!!!!!! இன்னும் கட்சி ஊத்திக்கவா......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.