Thursday, June 12, 2014



வீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்

உலகுக்கே தெரிந்த விஷயம் கலைஞருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?



கலைஞர் தனது பிறந்த நாளுக்கு முன் திமுகவின் செயற்குழு கூட்டதை கூட்டி திமுக தோற்றது ஏன் என்ற ஆராய 6 பேர் கொண்ட குழுவை நியமித்து இருக்கிறார் என்ற செய்தி அறிந்தேன். அதை படித்ததும் கலைஞர் என்னவோ காமெடி பண்ணுவதாக மட்டுமே எனக்கு தோன்றியது

மக்களவை தேர்தலில் திமுக தோற்றதற்கு வெளிப்படையான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே..ஆனால் அது எப்படி ஒரு கட்சியின் தலைவருக்கு மட்டும் தெரியாமல் போயிருச்சுங்க. ஒரு வேளை உண்மையிலே கலைஞர் வெளி உலகம் தெரியாமல் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு இருக்கிறரோ என்றுதான் என்ன தோன்றுகிறது.

ஒருவேளை அவர் நியமித்த 6 பேர் குழுக்கு உண்மை தெரிந்து இருந்தாலும் ஸ்டாலின் மிரட்டல் காரணமாக தலைவர்கிட்ட உண்மையை சொல்ல முடியாமல் பொய்தகவல் கொடுக்கலாம் என்பதால் திமுக தோல்வியடைந்தற்கான உண்மையான காரணங்கள் இங்கே கலைஞருக்காக தரப்பட்டு இருக்கின்றன.

1. குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் தந்து கட்சியையும ஆட்சி அதிகாரத்தையும் குடும்பத்தாரிடம் தாரை வார்த்துவிட்டது...

2. 2ஜி ஊழல், இலங்கை இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தது..

3. எல்லாவற்றையும்விட நாளுக்கு நாள் ஒரு நிலை எடுத்து கட்சியினரையே கருணாநிதி குழுப்பியது...

4. சுயநலத்திற்காக காங்கிரஸை கட்சிய்ல் கடைசிவரையில் தொங்கி கொண்டிருந்தது.

5. விஜயகாந்த் கட்சியை பெரிதாக நம்பி ஏமாந்து போனது

உண்மை நிலவரம் இப்படியிருக்க, தோல்விக்கான காரணங்களை ஆராய குழு அமைப்பு.. சுய பரிசோதனை வேண்டும் என்றெல்லாம், என்று கலைஞர் ஏன் காமெடி பண்ணுகிறார்?

ஒன்று மட்டும் நிச்சயம் திமுக தோற்றதில் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு எந்த பங்கும் கிடையாது.

திமுகவை தோற்கடித்தது கலைஞரின் குடும்பம் அன்றி வேறெந்த சக்தி உண்டு? தெரிந்தவர்கள் அல்லது திமுகவின் உண்மையான தொண்டர்களே காரணத்தை சொல்லுங்களேன்..

கலைஞர் நியமித்த குழு தோல்விக்கான காரணத்தை இப்படித்தான் சொல்ல வேண்டுமோ? அல்லது சொல்லுவார்களோ என்னவோ?

1.பேஸ்புக் மோகத்தில் இருக்கும் மக்கள் வழக்கமாக பேஸ்புக்கில் பெண்களின் பக்கதிற்கு மட்டும் அதிக லைக்ஸ் போடுவது போல பெண்ணான ஜெயாவிற்கு ஒட்டு போட்டதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம்

2. ஜெயலலிதாவை மோடியின் சகோதரி என்று நினைத்து மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள்.

3. ஜெயலலிதா ஹெலிகப்டரில் சுற்றி சுற்றி வந்தார் ஆனால் ஸ்டாலின் இன்னும் பழைய ஸ்டைலில் வேனில் பிரச்சாரம் செய்தார் காலத்திற்கு ஏற்ப மாறாததும் திமுகவின் தோல்விக்கு காரணம்

4. டாஸ்மாக்கின் அபார வளர்ச்சியின் காரணமாக மக்கள் போதையில் இருந்ததும் ஒரு காரணம்.

5. ஸ்டாலினுக்கு சிக்ஸ்பேக் இல்லாததும் ஒரு காரணம்.

6. ஜெயலலிதா யாகங்கள் பூஜைகள் வெளிபடையாக செய்தார் ஆனால் ஸ்டாலின் குடும்பத்தினர் மறைமுகமாக செய்ததால் தெய்வம் சதி செய்துவிட்டதும் ஒரு காரணம்

7. ரஜினி கலைஞரையோ ஸ்டாலினையோ வீட்டிற்கு தேர்தல் சமயத்தில் வீட்டிற்கு டீ குடிக்க கூப்பிடாததும் ஒரு காரணம்


8. குஷ்புவிற்கு சீட் தராததும் ஒரு காரணம்

9. ஸ்டாலின், அழகிரி, தயாநிதி,கனிமொழிக்குள் கூட்டணி சரியாக அமையாததும் திமுகவின் தோல்விக்கு காரணம்

10. .தி.மு.. எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் கமிஷனுடன் மட்டும்தான் கூட்டணி வைத்தது. அதுவும் திமுகவின் தோல்விக்கு காரணம்


11. தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா ஏன் பிரதமாரக வரக் கூடாது என்று இந்த மதுரைத்தமிழன் எழுதிய பதிவு தமிழ மக்களின் மனதை ஒட்டு மொத்தமாக மாற்றியதும் மிகப் பெரியகாரணம்.

மக்களே மீதமுள்ள காரணங்களை பின்னுட்டத்தில் நீங்களும் சொல்லி இந்த ஆறு நபர் குழுவை காப்பாற்றுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. அ.தி.மு.க விடம் தேர்தல் கூட்டணி வைக்கததே தோல்விக்கான முக்கியமான காரணம்...ஹிஹி...

    ReplyDelete
  2. மதுரைத் தமிழனுக்கு இருக்கிற அறிவு இந்த உலகத்தில வேற யாருக்குப்பா
    இருக்கு !! அநியாயமா ஆறுபேர் கொண்ட குழுவைத் தேர்வு செய்து காலத்தையும்
    நேரத்தையும் செலவளிக்கிராங்களே மடையனுக நீங்க எழுதுங்க மதுரைத் தமிழா
    நாங்க தெரிஞ்சு கொள்ளுறோம் :)))))

    ReplyDelete
  3. மஞ்சள் துண்டு மகானுக்கு, சிவப்பு தான் ராசியாக நிறமோ! சிவப்பு நிறக் கல் வைத்து மோதிரம் போட்டுள்ளாரே- பகுத்தறிவுப் பகலவனின் சீடன், அது தான் கேட்டேன்.
    தேர்தல் தோல்வியை "ஆற்றில் போட்டுக் குளத்தில் தேடுவது போல்" தேடிக்கிட்டே , அடுத்த தேர்தல் வரை தேறிவிடுவார்.

    ReplyDelete
  4. இன்னும் தமிழர்களை மாக்களாக எண்ணும்கருணாநிதி குடும்பத்தினரின் வீழ்ச்சியின் ஆரம்பம் 2011, 2014. தமிழகத்தை ஒரு தமிழன் ஆளும் காலம் கனிந்துவருவதைக் காட்டுகிறது.

    ReplyDelete
  5. எனக்கு வந்த ஒரு SMS ஜோக் சொல்றேன்...
    இந்த பதிவுக்கு தொடர்பு இருக்கான்னு பாருங்க.
    இத்தனை வருசமா செம்மொழிகாக போராடியவர்
    இப்போ கனிமொழிகாக போராடிட்டு இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹாஅ அருமை! மிகச் சரிதாங்க!

      Delete
  6. யானை தன் தலையில் தானே
    மண்ணை வாரி போட்டுக் கொள்ளுமாம்.....

    ReplyDelete
  7. கலைஞரை வீட்டுச்சிறையில் வைத்து, அவர் கைகளை கட்டிப்போடாமல், அவர் போக்கில் விட்டிருந்தால்,அவர் நிச்சயம், காங்கிரஸ் மற்றும் தே மு தி க-வுடன் கூட்டணி அமைத்து சென்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்.குறைந்தது இவ்வளவு மோசமான தோல்வி அடைந்திருக்க மாட்டார்.

    ReplyDelete
  8. எல்லாமே ரசித்தோம்! 2,3,4,5 மிகவும் ரசித்தோம்! 6 பேர் குழுவ நம்மளால எல்லாம் காப்பாத்த முடியாது! இத்தனை அழ்காகச் சொல்லிய மதுரைத் Tamil guy அதையும் குறும்பாய் சொல்லலாமே!

    ReplyDelete
  9. முக்கிய காரணம் இலங்கை பிரச்சினை தான்

    ReplyDelete
  10. அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் :

    திமுக கரை போட்ட வேட்டி கட்டிக்கிட்டு கூட்டமா கட்சிக்காரனுக போட்ட அளவுக்கதிகமான, தாங்கமுடியாத அலப்பர.

    தலைவி இதைக் கட்டுப் படுத்தியதால் வெல்கிறார். எவ்னும் கடசி வேட்டி கட்றதில்ல. எவன் அடிக்கறான்ன்னு யாருக்கும் தெரியாதுல்ல.

    கோபாலன்

    ReplyDelete
  11. நல்ல யோசிச்சு இருக்கீங்க ம.த. 6 பேர் குழுவிற்கு நிச்சயம் உதவும்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.