Monday, June 23, 2014



பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,

ஒரு சில தினங்களுக்கு முன்னால் பதிவர் இராஜலஷ்மி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை கிழ்கண்டவாறு சொல்லி உதவி உதவி என்று கேட்டு இருந்தார்.


சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கலாம் என்று " Reading List " என்கிற தலைப்பின் கீழே பார்த்தால் ஒரே ஒரு பதிவு மட்டுமே தென்படுகிறது. இது என்ன கலாட்டா? யாருமே பதிவுகள் எழுதவில்லையா? மொத்தப் பதிவுலகமே விடுமுறையில் உள்ளதா? என்று நான் தொடரும் பதிவர்கள் லிஸ்டைப் பார்த்தால் அது சரியாக வருகிறது. ஒவ்வொரு பதிவராக க்ளிக் செய்து பார்த்தால்..... சிலர் இன்று கூட பதிவு எழுதியிருக்கிறார்கள். ஆனால் என் டேஷ்போர்டில் தான் தெரியவில்லை. என்ன தவறு செய்கிறேன் என்று புரியவில்லை. Bloggerற்கு என் மேல் என்ன கோபம் என்று புரியவில்லை.



டேஷ்போர்டில் பார்த்தால் லேட்டஸ்டாக யார் எழுதுகிறார்களோ அவர்கள் பதிவு மட்டும் தெரிகிறது. அவர்களுக்குப் பிறகு வேறு யாராவது பதிவு எழுதினால் அடுத்தவரின் பதிவு தெரியும். இருந்தது மறைந்து விடும்.ஆக ஒன்றே ஒன்று மட்டுமே தெரிகிறது

இது அவருக்கு மட்டும் வந்த பிரச்சனையல்ல உலகில் உள்ள அநேக நாடுகளில் இருந்து எழுதும் பதிவர்களுக்கும் இது போல நேர்ந்து கொண்டு இருக்கிறது.

இதை அறிந்த கூகுல் ப்ளாக்கர் குழு இதை சரி செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். This is a bug, the Blogger crew is looking into it. என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால் உங்களுக்கும் இந்த பிரச்சனை நேர்ந்தால் அமைதியாக இருக்கும்படி பதிவுலகத்தை கேட்டு கொள்கிறேன்

சில பேருக்கு அது ஆட்டோமேட்டிக்காக சரியாகிவிடும்.அப்படி இல்லையென்றால் சில நாட்கள் பொருத்திருக்கவும்..

இந்த பதிவிடகாரணம் எனக்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது அதனால் யாருடைய பதிவுகளையும் படிக்க முடியவில்லை. அதனால் நீங்கள் ஏதாவது கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏதாவது பதிவிட்டு இருந்தால் அல்லது புதிய பதிவுகள் ஏதும் வெளியிட்டால் எனது இமெயிலுக்கு தகவல் அனுப்பவும்.. இமெயில் முகவரி avargal_unmaigal@ யாஹூ.com


அன்புடன்
மதுரைத்தமிழன்

29 comments:

  1. நானும் எனக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சனை என
    எண்ணிக் கொண்டிருந்தேன்
    தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. எனக்கும் அதே.

    ReplyDelete
  3. வந்துடிச்சே வந்துடிச்சே என் வாசல் தேடியும் வந்துடிச்சே மதுரைத் தமிழா
    இந்த ஒரு செய்தி போதும் மனம் ஆறுதல் அடைவதற்கு :)))) இதோ இன்றைய
    பாடல் மிகவும் பொறுமையாக பாடி ரசித்துக் கருத்தோடு கூடவே தமிழ் மணத்தில்
    ஓங்கி ஒரு குத்துப் போடவும்.. (அது போதும் எனக்கு அது போதுமே அடி வாங்கும்
    மதுரைத் தமிழா என் மனமும் இடி தாங்குமே :)))))) )
    http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_23.html

    ReplyDelete
  4. வணக்கம்
    எனக்கும் இதைய நிலைதான் என்வென்று தெரியாது. ஒருவருடைய பதிவு மட்டும் தெரியும். பார்த்தால் எல்லோருக்கும் இதைய பிரச்சினைதான்.... இந்த தகவலை ஒரு பதிவாக வெளியிட்டு மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எனக்கில்லப்பா!

    ReplyDelete
  6. என் நிலைமையும் அதே தான்!
    தங்கள் செய்தியால் எனக்கும் நிறைவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி சகோ. பொறுத்திருந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி சகோ ..நேற்றிலிருந்து இந்த பிரச்சினை எனக்கும் இங்கே மற்றொரு பதிவருக்கும் இருக்கு
    இப்போ கூட பார்த்தேன் ..நிலைமை இன்னும் சரியாகல்லை ..

    ReplyDelete
  9. அட அப்படியா சேதி. நான் எனக்குத் தான் இப்படின்னு நினைத்தேன். நாம தான் ஏதோ தப்பா தட்டி விட்டோம் அப்படின்னு நினைத்தேன். இன்று தான் தம்பி உங்கள் வலைக்கு வந்தேன்.நன்றி.

    ReplyDelete
  10. எனக்கும் தான்.

    ReplyDelete
  11. எனக்கும் இப்படி இரண்டு நாளாய் இருக்கிறது.

    ReplyDelete
  12. எனக்கும் இதே பிரச்சனை வந்துள்ளது. தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  13. same blood:(((
    very beautiful quote of Winnie the pooh!
    know some thing ! its d ambassador for the friendship day:))

    ReplyDelete
  14. எனக்கும் இந்த பிரச்சினை ...நல்ல வேளை சொன்னீர்கள் !
    த ம 6

    ReplyDelete
  15. எனக்கும் இதே பிரச்சினை இன்றில் இருந்து இனிதே ஆரம்பித்தது.

    ReplyDelete
  16. அடப் போகங்கப்பா...! எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... ஏனென்றால்...

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

    ReplyDelete
  17. Replies
    1. தமிழகத்தில் அவசர உதவிக்கு 100 என்பதற்கு பதில் உங்கள் நம்பரை இனிமே; போட்டுவிடலாம்தான் அம்மாதான் அதற்கு உத்தரவு இட வேண்டும்

      Delete
  18. மேல் சொன்ன பதிவின் விளக்கம் - பல வகையில்...

    அறிகிறதா...? தெரிகிறதா...? புரிகிறதா...? [http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html]

    ReplyDelete
  19. Why Blood.... Same blood... :)

    நேற்றிலிருந்து தலைநகரிலும் இந்த bug பரவி விட்டது..... பொறுத்திருந்து பார்க்கலாம். நான் முன்பே feedly பயனர் கணக்கு தொடங்கியிருந்தேன். அதில் எல்லோருடைய பக்கங்களையும் சேர்க்க வேண்டும்....

    விரைவில் சரி செய்து விடுவார்களா என்று பார்க்கலாம்.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  20. With me
    நண்பரே... இன்று ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்'' என்றொரு பதிவிட்டேன் கிடைத்ததா ?

    ReplyDelete
  21. வணக்கம் சகோதரர்!

    இதே பிரச்சனை நேற்றுத் தொடக்கம் எனக்கும் இருந்தது.
    உடனே நான் எங்கள் அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எழுதிக் கேட்க
    அவர் தனது இந்தப் பதிவைப் பாருங்கள் எனத் தந்துதவினார்.

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html

    அப்படியே இந்த feedly.com வழியாகச் செய்துவிட இப்பிரச்சனை ஒரு தீர்வுக்கு வந்துவிட்டது.
    யாரேனும் முயன்று பாருங்கள்!

    சகோதரர் தனபாலனுக்கும் உங்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  22. எனது வலைத் தளத்திற்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கும்
    என் உளமார்ந்த நன்றி சகோ!

    ReplyDelete
  23. feedly பயன்படுத்துவதால் இந்த தொல்லை இல்லை... ஆனால் சமயங்களில் அதுவும் தகராறு செய்கிறது...

    ReplyDelete
  24. அருமயான வேர்டிங்க்ஸ்!!!!!!! வின்னியின்...

    ஓ! பிரச்சினை எங்களுக்கும் இருந்தது/இருக்கின்றது அவ்வப்போது....பல சமயங்களில் வலைத்தளங்களே வருவதில்லை...நாங்கள் நினைத்தோம் இணையம்தான் இங்கு பிரச்சினை என்று....ப்ளாகரில் இருந்தாலும்...நெட்டும் பிரச்சினை என்று.....ஸ்கூல் பையனின் வலைத்தளம் எங்களுக்கு 10 நாட்களுக்கு மேல் ஆகின்றது வாசிக்க முடியாமல்...இன்னும் வர வில்லை......அவரது கேள்வி பதில் வாசிக்க மிகவும் முயற்சி செய்கின்றோம்...நாங்கள் அவருக்கு ஒரு மெயில் தட்டலாம் என்றால் வலைத்தளம் வந்தால் தானே!

    தகவலுக்கு மிக்க நன்றி! இந்தத் தகவலையே இப்போதுதான் பார்க்கின்றோம்! மிக்க நன்றி தமிழா.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.