உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 9, 2013

விஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.

ஜோக்கர் விஜயகாந்த் -
விஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.விஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.

மதுரைத்தமிழன் அதை அவர் அறிவித்தாரா என்ன?
அதை அவர் என்ன அறிவிக்கிறது. எப்பவும் தோல்வி பெற்றவர்கள் மீண்டும் வெற்றி பெற டுடேரியல் காலேஜ்க்கு போவது இயல்பாக நடப்பதுதானே
விஜய காந்த்தின் நாளைய அறிவிப்பு இப்படியும் இருக்குமோ?


தமிழகத்தில் போட்டி இட்டு என் பலத்தை காண்பித்தேன். அதற்கு அடுத்து டில்லியிலும் போட்டி போட்டு என் பலத்தை காண்பித்தேன் அதன் பின் வருகிற அமெரிக்க பொது தேர்தலிலும் எனது கட்சி சார்பாக போட்டியாளர்களை நிறுத்தி என் பலத்தை இந்த உலகத்திற்கு நிருபிப்பேன்.அமெரிக்காவில் எனது கட்சி தலமையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மதுரைதமிழனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.
அதன் பின் என் பலம் உலகுக்கே தெரியும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

 
எனது தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி விஜயகாந்த் அறிவிப்பு.இந்த அறிவிப்பை கேட்டதும் தமிழ்நாடு டாஸ்மாக் குடி மக்கள் சங்கம் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளதுஇதையடுத்து தமிழ்நாடு கள்ளு இருக்குவோர் சங்கமும் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளதுஅடுத்ததாக டாஸ்மாக் ஊழியர் சங்கமும் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது
கறுப்பி எம்ஜியாரே இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

*********


யானைக்கு பலம் தண்ணியில் இல்லை அதன் தும்பிக்கையில்தான்


அதுபோல கேப்டனுக்கு பலம் டில்லியில இல்லை அவர் அடிக்கும் தண்ணியிலதானுங்க...


இது புரிஞ்சா அவர் கோமாளியாக ஆகமாட்டார்7 comments :

 1. அவரின் நகைச்சுவைப் பேச்சுக்குச் சரியான
  எதிர் நகைச்சுவைப் பதிவு
  இதைப் படித்தால்தான் அவருக்கும் என்ன
  பேசினோம் எனப் புரியும் என நினைக்கிறேன்
  மிகவும் ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நீங்க சொல்றது உண்மையாகறதுக்கும் வாய்ப்பு இருக்கு

  ReplyDelete
 3. டெல்லி தேர்தல் சம்பந்தமாக விஜய்காந்த்தோட பேட்டியை படிக்கும்போது ரொம்ப காமெடியா இருந்துச்சு. ஆனா அதைவிட உங்களோட இந்த பதிவை படிச்சவுடனே, விஜய்காந்த்தோட பேட்டியே பரவாயில்லைன்னு தோணுச்சு. ஏங்க!!! உங்களோட அரசியல் நகைச்சுவைக்கு அளவே இல்லையா!!!. ரொம்பவும் ரசிச்சு படிச்சேன். நன்றி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ரசித்தேன்.

  இங்கே இருக்கும் 70 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக முன்பு தகவல் இருந்தது! நல்லவேளை 11 தொகுதியோடு போயிற்று! :))))

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog