Thursday, December 5, 2013

ஒரு நல்ல இந்துவை காப்பாற்றாத பிஜேபி இந்து மதத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற போகிறதா என்ன?

நேற்று ஆனந்தவிகடனை புரட்டிய பொது கண்ணில் பட்டது "காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!' என்ற கட்டுரை . அந்த கட்டுரையில் வந்த கேள்விகள் மிக நியாமான கேள்வி அதை அப்படியே பிரசுரித்த விகடனாரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். பிராமணாள் பத்திரிக்கை என்று கருதப்படுகிற ஆனந்த விகடனில் ஒரு ஏழைப் பிராமினுக்காக ஆதரவாகவும் அதே நேரத்தில் பவர் வாய்ந்த பிராமின் சக்திகளை எதிர்த்தும் பிஜேபிக்கு சாட்டையடி கொடுத்தும் எழுதப்பட்ட கட்டுரை. இந்த கட்டுரையை வெளியிட்ட ஆனந்தவிகடனின் நேர்மையை பாராட்டுகிறேன்.




ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி கிழே : Courtesy : Vikatan



கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?என்ற அச்சத்தினாலா?

'என் கணவரைக் கொன்றுவிட்டதைப் போல என்னையும் என் பிள்ளைகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்என்று பத்மா கதறியபோது, 10 பேர் அவர் வீட்டுக்கு முன் திரண்டிருந்தால், அந்த விதவைப் பெண்ணுக்கு நெஞ்சில் கொஞ்சமாவது தைரியம் வந்திருக்குமே? 'எங்களை மறுவிசாரணை செய்ய வேண்டும். அன்று, பலரும் எங்களை மிரட்டியதால் மாற்றிச் சொல்லி, பிறழ்சாட்சி சொல்லவேண்டியதாயிற்று. இப்போது சரியாகச் சொல்லத் தயாராக இருக்கிறோம்என்று சங்கர் ராமனின் மகன் ஆனந்த் சர்மா, அலறியபடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, இரண்டு பேர் அவர்களுக்குப் பக்கத்தில் போய் நின்றிருந்தால், பயம் இல்லாமல் குற்றவாளிகளை அடையாளம் காட்டி இருப்பார்களே? கோயில், ஆச்சாரம், அனுஷ்டானம், பழம்பெருமை, ஸ்ரீபெரியவாள், ஸ்ரீமடம் என்று பேசிக்கொண்டே இருந்த ஒருவரை, அநாதையாகப் பலி கொடுத்துவிட்டு, அவரது குடும்பத்தைப் பரிதவிக்கவிட்டு... இந்த இந்துக்களைக் காப்பாற்றாமல் எந்த மதத்தைக் காப்பாற்றப்போகிறீர்கள்?



மேலே கேட்ட கேள்விகள் காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பையும் ஒட்டி எழுப்பட்டதாக இருந்த போதிலும் அது கோபத்தில் பிஜேபியை நோக்கி தூக்கி ஏறியப்பட்ட தீப்பந்தமாகவே இருக்கிறது இதே கொலையை வேறு மதத்தில் உள்ளவர்கள் அல்லது இந்து மதத்தில் உள்ள வேறு ஜாதியினர் செய்து இருந்து இப்படி ஒரு தீர்ப்பு வழங்கி இருந்தால் பிஜேபி பொங்கி சுனாமி போல மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி இருக்கும், ஆனால் செய்தது என்னவோ மடத்தில் உள்ளவர்கள் என்பதால் அடிபட்ட செத்த பாம்பு போல நடித்து அமைதியாக இருந்து கொண்டிருக்கிறது..



ஒரு ஏழை பிராமிண் குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடாத பிஜேபி இந்து மதத்தை, இந்திய கலாச்சாரத்தை காப்பாற்ற போகிறோம் என்று கூறித் திரிகிறார்கள்

இதோ இன்னொரு மன்மோகன் சிங்க் மோடியின் உருவத்தில் பிஜேபியில் அவதரித்து இருக்கிறார்.



இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய ஒரு சாபக்கேடு நாடு என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய நாட்டில் நல்ல தலைவன் என்று சொல்லிக் கொள்ள ஒருத்தரும் பிறக்கவில்லையோ என்று தோன்ருகிறது.



இந்தியாவை காப்பாற்ற கடவுள்தான் அவதாரம் எடுத்து வர வேண்டும்.





அன்புடன்
மதுரைத்தமிழன்
05 Dec 2013

14 comments:

  1. ஒருவேளை இப்படியும் சொல்லலாம்
    அன்று பி.ஜே பி ஆதரவளித்திருந்தால்
    அவாளுக்கு அவா எனவும் சொல்லலாம்
    நீங்கள் தொடர்ந்து மோடி அவர்கள் குறித்தே
    எழுதுவது மோதி ஆதரவாளரோ என என்ன வைக்கிறது
    (ஆதரித்துத்தான் ஒருவரை பிரபலம் ஆக்கவேண்டும்
    என்பதில்லை,எதிர்த்தும் செய்யலாம்தானே )

    ReplyDelete
    Replies
    1. காலத்துக்கு ஏற்ப மனதில் தோன்றியதை கிறுக்குகிறேன். அவ்வளவுதாங்க. நான் யாருக்கும் ஆதரிக்கவுமில்லை அதே நேரத்தில் எதிர்ப்பது இல்லை என்னைப் பொருத்த வரை மன்மோகனுக்கு பதிலாக மோடி வரலாம் மோடிக்கு பதிலாக ஜெயலலிதா வரலாம் ஆனால் இவர்கள் மூவருக்கும் பதிலாக ஒரு நல்லவர் வரலாம் ஆனால் அப்படிபட்ட நல்லவர் இன்றும் மக்களோடு மறைந்திருக்கிறார் போலும்

      Delete
    2. சூப்பரா சொன்னீங்க அண்ணே ஆனா அப்படி நல்லவர்கள் யாரும் வர வாய்ப்பே இல்லை

      Delete
  2. நல்ல தலைவர்களா இருக்க வேண்டியவங்கள்லாம்... வெளி நாட்டுக்கு போய் உட்கார்ந்துக்கறாங்களே சாமீ ............. !!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கென்ன... ஆனால் நல்ல தலைவியாக வரக் கூடியவங்க இந்தியாவுல பலர் இருக்கிறாங்களே...அதிலும் ஒருவர் வேலூரில் இருக்கிறாருங்க....

      Delete
  3. தலைவருக்கு ஒரு ஓட்டு....
    த ம - 3

    ReplyDelete
    Replies
    1. செல்லாத ஒட்டுப் போட்ட தலைவிக்கு ஒரு கொட்டு

      Delete
  4. நல்லாட்சி புரிய நான் தயார். ஓட்டு போடவும், எனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய நீங்க இந்தியா வர்றிங்களா!?

    ReplyDelete
  5. "இந்தியாவைக் காப்பாற்ற க்டவுள் தான் அவதாரம் எடுத்து வர வேண்டும்" அவரே வந்தாலும் வரையும் லஞ்சம் கொடுத்து கவுத்துருவாங்களோ?!!!!! ஏன் என்றால் நம்ம இந்தியா லஞ்ச ஊழலுக்குப் பேர் எடுத்ததுதானே!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. நல்ல இந்து? கெட்ட இந்து என்றெல்லாம் உண்டா? முதலில் சாதி, அப்புறம் பணம். இரண்டும் தான் மதங்களின் மூலதனம். ஏழையாக இருந்தால் எவ்வளவு பெரிய நல்லவனாலும், சாதியானாலும் நீதி என்னவோ பணம் படைத்தவருக்கே வளைந்து கொடுக்கும்.

    --- விவரணம். 

    ReplyDelete
  7. அழுக்கு அரசியல்! :(((

    த.ம. 6

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.