Wednesday, December 18, 2013

கலைஞர் உடைத்தது மண்டபம் என்றால் அம்மா உடைக்கப் போவது முரசா?





காங்கிரஸுடன் விஜயகாந்த கூட்டு என்றால் கூட அம்மா பொறுத்து இருப்பார். ஆனால் தன்னுடன் போட்டி களத்தில் நிற்கும் மோடியுடன் கூட்டு என்பதை அம்மாவால் பொறுத்து கொள்ள முடியாததால் அவரின் விளையாட்டு ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு முயற்சிதான் இது

தேமுதிக கட்சியிலிருந்து மேலும் மூன்று பேர் வெளியேறத் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் வெளியேறும்போது அதிகாரபூர்வமாகவே கட்சிப் பிளவு அறிவிக்கப்படுமாம். அந்தப் போட்டி கட்சியில் அவைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, பண்ருட்டியாரை அந்தப் பதவியில் அமர்த்தப் போகிறார்களாம். பதவியில் இல்லையென்றாலும் மூத்த தலைவர் வீட்டில் அவை கூடுகிறதாம். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறதாம். அப்படி போட்டி கட்சி உருவானால், மேலும் பல எம்.எல்..க்களும் அந்தக் கட்சிக்கு தாவக்கூடும் என்கிறார்கள்


இந்த தேமுதிக பிளவுபடுத்தும் நிகழ்வு லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்டு முரசு சின்னம் முடக்கப்படும் என்றும் சொல்லுகிறார்கள், விஜயகாந்துடைய தேமுதிக கட்சி பா.ஜ கட்சியுடன் சேர்ந்தாலும் அதன் போட்டி கட்சி அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து வெற்றிக்கு உழைக்கும் என்று தகவல் அறிந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே
    அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில்...

    ReplyDelete
  2. ஆக மொத்தத்துலே அம்மா தனித்து போட்டி என்பதெல்லாம் சும்மாவா?

    ReplyDelete
  3. அரசியேல்ல இதெல்லாம் சாதாரணம்ம்பா

    ReplyDelete
  4. தமிழ்நாட்டில ஒரு நிருபர் படையே வச்சிருப்பிங்க போல!!.

    ReplyDelete
  5. தமிழகத்தின் விடிவெள்ளியா வருவார்ன்னு நம்புன விஜயகாந்த் தன் தெளிவில்லாத பயணத்தால் அரசியல் கோமாளியாகிட்டாரே!

    ReplyDelete
  6. அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா.....

    ReplyDelete
  7. முதல் படமே பயங்கரமா இருக்கு

    ReplyDelete
  8. ந்ம்ம நாட்ல சின்னத்துக்காக ஓட்டுப்போட்டவங்கள்ளாம் செத்து ரொம்ப நாள் ஆச்சு. இது விஜகாந்தின் நெர்மைக்கு வந்த சோதனை. அந்த அம்மா அப்டி ப்ண்ணா இவரு பேசாம பன் ரொட்டியை சினனமா வெச்சுக்கிட்டு. ஏழைகளின் உணவு என்று சொல்லிக்கலாம் அந்த ஆளுக்கும் ஆப்பு வெச்சாப்ல ஆச்சு.

    கொபாலன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.