Tuesday, December 24, 2013

இதுதான்டா அமெரிக்கன் வாழ்க்கை 




மகள் : அப்பா. சாரிப்பா எனக்கு நேற்றுதான் கல்யாணம் ஆச்சுப்ப்பா! உங்களை கூப்பிட மறந்துட்டேன்.
அப்பா : பரவாயில்லைடா. அடுத்த முறை நடக்கும் போது மறக்காம கூப்பிடு. இந்த தடவை நீ கூப்பிட்டி இருந்தாலும் என்னால் வந்து இருக்க முடியாது உன் கல்யாணம் அன்றுதான் எனக்கும் இங்கு கல்யாணம் நடந்ததுடா


அமெரிக்கன் இந்தியனை பார்த்து உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர் என்று கேட்டான்.
அதற்கு இந்தியன் எனக்கு 2 சகோதரிகளும் 2 சகோதரர்களும் உள்ளனர் என்றான்.
அதை சொல்லிவிட்டு உனக்கு எத்தனை பேர் என்றான்.
அதற்கு அமெரிக்கன் எனக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை ஆனால் எனது அம்மாவால் எனக்கு 3 தகப்பனாரும் எனது அப்பாவால் 4 அம்மாக்களும் உள்ளனர் என்றான்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

நகைச்சுவை,
24 Dec 2013

16 comments:

  1. மிகச் சுருக்கமாக
    இரு நாடுகளுக்கும் கலாச்சார பண்பாட்டு
    விஷயத்தில் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை
    உணர்த்திய விதம் அருமை

    ReplyDelete
  2. சீக்கிரம் அந்த தரத்துக்கு நம்ம நாட்டை கொண்டு வந்துரணும் அப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கெளம்பிட்டாய்ங்கைய்யா... கெளம்பிட்டாய்ங்கைய்யா...

      Delete
  3. வணக்கம்
    வடிவேல் சொல்வது போல.ஐயோ..............ஐயோ............ நல்ல கலாச்சாரம் ..வாழ்க அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஹாஹாஹா! நல்ல தமாஷ்! அதுவும் முதல் ஜோக் சூப்பர்!! இந்தியால நாம் கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டு எத்தனை பேர் ரகசிய வாழ்க்கை நடத்தறாங்க! ஊருக்கும் தெரியாம, வீட்டுக்கும் தெரியாம.....அதுவும் சாதாரண மனுஷங்கலருந்து அரசியல் வாதிங்க, பிசினஸ் பீப்புள் வரைக்கும்...என்ன இங்க ரகசியம் அது அங்க ஊரறிய அவ்வளவுதான். அங்க இருக்கற நல்லது மட்டும் எடுத்துப்போம்!

    ReplyDelete
  5. அவங்க நாட்டு கலாச்சாரம் வேற! நம்ம நாட்டு கலாச்சாரம் வேற! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டக் கதையா நம்மாளுங்க அமெரிக்காவைப் பார்த்து மாற முயற்சிக்குறாங்க. நல்ல விசயத்தை மட்டும் எடுத்துக்கிட்டா எல்லோருக்கும் நல்லது

    ReplyDelete
  6. இங்கு நம்மவர்கள் இங்குள்ளவர்களின் பலதார விடயத்தைக் கேலிசெய்யக் கூறும் கதை. ஒரு பூங்காவில் ஒரு தம்பதியும் சில பிள்ளைகளும் விளையாடிக்கொண்டிருந்த போது, இன்னுமொருவர் வந்து இவர்கள் யாவரும் உங்கள் பிள்ளைகளா? எனக் கேட்ட போது அந்தக் கணவன் கூறினானாம்.
    " my childern, her children, and our children are playnig.
    ஆனால் இப்போ நம்மவர்களிடமும் இந்த நிலை சகசமாகிவிட்டது போலுள்ளது. நீயா நானா?; சொல்வதெல்லாம் உண்மை அவற்றைத் தானே பறை சாற்றுகிறது.

    ReplyDelete
  7. இதைத்தான் "நாயகன்" அன்றைக்கே சொல்லிட்டார்...
    நாலு பேருக்கு நல்லதுன்னா 'எதுவுமே' தப்பில்லை

    ReplyDelete
  8. ஆனாலும் அவர்கள் வெளிப்படையாக் இருக்கிறார்கள். நம்மிடம் அது கிடையவே கிடையாது. எல்லாம் என்னைத்தவிற எல்லோரும் அயோக்கியர்கள் என்று நினைத்துப் பேசுகிறார்கள்.

    கொபாலன்

    எல்லோரும் சிரித்து வாழ இந்தப் பதிவு :

    kgopaalan.blogspot.in

    ReplyDelete
  9. இந்தியாவிலும் இது வரும் காலம் மிக அருகில்....

    ReplyDelete
  10. வேறு புதுமையான ஜோக்குகள் சொல்லுங்கள் நண்பரே! அமெரிக்காவில் இம்மாதிரி ஜோக்குகளுக்கா பஞ்சம்?

    ReplyDelete
  11. * உங்க ஊரில் அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுடைய பொறுக்கி அப்பன்களெல்லாம் சுதந்திரமாத் திரியிறாணுக..

    * பிச்சைக்காரிகள், புத்தி சுவாதீனமில்லாதவளுகளை எல்லாம் "தாயாக்கி" விட்டுறாணுக ந்ம்ம ஊர் சண்டியர்கள்

    * மும்பை தராவி ஏரியாவில் மக்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்குணு போய் பார்க்கிறது. பச்சைக்குழதைகளை செக்ஸுவல் அப்யூஸ் பண்ணுற நாதாரிகள் நெறைந்து வழியிறானுக..

    * சங்கீதா ரிச்சர்ட் மாரி, யாருக்கு துரோகம் பண்ணியாவது முன்னேறிப்புடணும்னு திரிகிற "அறிவாளிகள்" நெனைப்பில் திரியும் ஈனப்பிறவி மலையாளிகள்..

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    அமெரிக்கர்கள் வாழ்க்கைமுறையை கேலி பண்ணுற அளவுக்கெல்லாம் நம்ம ஐ டி கல்ச்சர் இல்லைனு எல்லாருக்கும் தெரியும். என்ன நீங்க ஒரு 30 வருடம் பின்தங்கி இருக்கீங்க. அந்த பின் தங்கிய நிலையை கலாச்சாரம் மண்ணாங்கட்டினு அதைப் பெருமையா சொல்லிக்கிட்டு அலையிறீங்க!! அம்புட்டுத்தான்..

    ReplyDelete
  12. அருமையான கலாசாரம். இந்தியாவிலும் வெகுவிரைவில்

    ReplyDelete
  13. முன்பு இது மாதிரி தான் ஒரு நகைச்சுவை துணுக்கை மேலை நாட்டு கலாச்சாரமாக சொல்லுவார்கள் - "என் குழந்தைகளும், உன் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்". இந்த கலாச்சாரம் இப்போது இந்தியாவில் பரவி விட்டது. அது மாதிரி நீங்கள் சொன்ன கலாச்சாரமும் சீக்கிரம் இந்தியாவில் பரவி விடும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.