Monday, December 23, 2013

வலைத்தளங்களில் எழுதுவது உபயோகமானதுதானா அல்லது டைம் வேஸ்டா?


வலைத்தளங்களில் பதிவு எழுதி சமுகத்தில் எந்தவொரு பெரிதான எந்த மாறுதல்களையும் உருவாக்க முடியாது அதில் எழுதுவது என்பது உபயோகமற்றது அது டைம் வேஸ்ட் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல என்பது மிக மெதுவாகவும் உறுதியாகவும் மக்கள் மனதில் மட்டுமல்ல தலைவர்கள் மத்தியிலும், கார்பொரேட் கம்பெனி ஒனர்கள் மனதிலும் பதிந்து கொன்டிருக்கிறது .





அமெரிக்காவில் 6 கார்பொரேட் கம்பெனியின் பிடியில்தான் மீடியா சிக்கி கிடந்தன. இந்த மீடியாக்கள் அவர்களின் லாபம் கருதியே சுயநலத்துடன் செயல்பட்டு வந்தது அவர்கள் தருவதுதான் செய்திகாவும் மக்கள் மனதில் பதிந்து வந்தன. சில சமயங்களில் அதன் ஆசிரியர்கள் உண்மையான தகவல்களை பதிய முனைந்தால் அது அவர்களின் தொழிலுக்கே வேட்டு வைத்தன,

இப்படி பட்ட சூழ்நிலைகளில்தான் இண்டர்நெட்டும் வந்து சமுக வலைதளங்களும் வர ஆரம்பித்தன. இதன் மூலம் பல கருத்துகள் உண்மைதகவல்கள் தனிப்பட்ட மனிதர்களின் முயற்சியால் வர ஆரம்பித்தன. அதிலும் அமெரிக்காவில் பேச்சுரிமையும் எழுத்துரிமையில் அரசாங்கமே தலையிட முடியாத சுதந்திரம் இருப்பதால் மக்கள் தங்கள் கருத்துக்களை தைரியமாக சொல்ல ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக பல சமுக நல ஆர்வலர்கள் , பொருளாதார மேதைகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் தனது சொந்த தளங்களின் மூலம் எழுத ஆரம்பித்ததால் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின..


இப்படி பட்ட பல உண்மைகள் கார்பொரேட் கம்பெனிகளால் நடத்தப்படும் மிடியாக்களால் முன்பு தங்கள் சுயநலத்திற்காக தணிக்கை செய்யப்பட்டு தங்களுக்கு சாதகமாக வெளியிடப்பட்டன. ஆனால் வலைத்தளங்கள் வந்து எழுத தொடங்கிய பின்னர் இது அவர்களின் முகத்திரையை கிழிக்க ஆரம்பித்தன. இதனால் இந்த மீடியாக்களால் நடத்தப்படும் பத்திரிக்கை இதழ்கள் மற்றும் டிவிகளுக்கு மிகவும் சரிவு ஏற்பட்டது


இந்த வலைத்தளத்தின் வளர்ச்சி அதாவது எலக்ரானிக் மீடியாவால் ப்ரிண்ட் மீடியா வளர்ச்சியில் ஆட்டம் கண்டது என்றால் அது மிகையாகாது. இப்படி துறைஸ் சார்ந்த அறிஞர்கள் எழுதுவதை கவனித்த மக்களும் நாமும் ஏன் வலைதளம் தொடங்கி எழுதுக்கூடாது என்று கருதி அவர்களும் எழுத தொடங்கினர்கள். இதை சிட்டிஷன் ஜர்னலிஸம் citizen journalism என்று அழைக்கிறார்கள் . இந்த சிட்டிஷன் ஜர்னலிசஸம் மெதுவாக வளர்ந்து கொண்டிருக்கிறது .

இப்படி ஆயிரக்கணக்கான சிட்டிஷன்கள் எழுதுபவைகள் குப்பைகளாக கிடக்கின்றன அதை பார்க்க கூட ஆள் இல்லையென்றாலும் தொடர்ந்து தரமாக உண்மையைச் சொல்லி எழுதும் தளங்கள் மக்களால் மட்டும் மல்ல மீடியாக்களாலும் பார்க்கப்பட்டு அதிலும் இவர்கள் எழுதும் செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மையாகும்.

அதுமட்டுமல்லாமல் மெயின் மீடியாக்களால் கவர் செய்யபடாத , சொல்லப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகள் இந்த தளங்கள் மூலம் வெளி வந்து உண்மையை பட்டவர்தனமாக போட்டு உடைக்கின்றன. மேலும் குறிப்பிட்ட சமுகத்தை சாரந்த அல்லது அந்த சமுகத்தை பாதித்து கொண்டிருக்கும் செய்திகளை மீடியாக்கள் மறைக்க்கும் போது அது இப்படிபட்ட சிட்டிஷன் ஜர்னலிஷம் மூலம் வெளி வந்து அது பல சமுக வலைதளம் மூலம் பலரைச் சென்று அடைந்து அந்த பிரச்சனைக்கு வலு சேர்க்கிறது. இதற்கு உதாரணமாக இந்தியாவில் மீனவர்கள் பிரச்சனை, கூடங்குளம், முல்லைபெரியார் ஈழத்தமிழர்கள் பிரச்சனைகளை மெயின் மீடியாக்கள் திரித்து திசை திருப்ப முயன்ற போதும் இந்த தளங்கள் மூலம் பல உண்மை செய்திகள் பலரை சென்று அடைந்து இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.


அஜித் படம் போல இந்தியாவில் இது ஒரு ஆரம்பம் மட்டுமே... அதனால் தரமாக எழுதி வந்தால் உங்கள் தளங்களும் பலரால் பார்க்கப்பட்டு சமுகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த உதவுமல்லவா?


அன்புடன்
மதுரைத்தமிழன்






14 comments:

  1. ஐ! ஜாலி!
    எப்ப பாரு கம்ப்யூட்டர்ல உக்காந்து எழுதி என்னத்த சாதிச்சேன்னு இனி யாரும் கேட்க முடியாது!!

    ReplyDelete
  2. மிக உண்மை! ஆனால் அதே மிகப் பெரிய முதலாளித்துவ நிறுவனங்கள் மெல்ல மெல்ல இணைய செய்திகளில் ஊடுருவவும் தொடங்கிவிட்டன. ஆனால் Global Voices, TYT போன்ற மக்கள் ஊடகங்களும், சிற்றிதழ்களும் இணைய வெளி வந்த விரிவையும் சுதந்திரத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்களின் செய்திகளை மக்களுக்கே சிதைவின்றி அளிக்கத் தொடங்கியுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இணையப் பாவனை அதிகரிக்க உள்ளது, இதனால் இணைய செய்திகள் முக்கியத்துவம் பெற உள்ளதோடு, இணையத்தின் எழுதுவோரின் தேவையும் மிக உள்ளது. தரமான இணைய தமிழ் சஞ்சிகைகள், வலைப்பதிவுகள் மற்றும் மக்கள் ஊடகங்கள் வர வேண்டும் என்பது என் அவாவும். நன்றிகள்!

    --- விவரணம்.  ---

    ReplyDelete
  3. இணைய தளங்களில் நல்ல விஷயங்களை சொல்வது சமூக மாற்றத்திற்கு பயனாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இணையத்தின் பயன்பாட்டை சரியான முறையில் பயன் படுத்தி கொள்வதில்தான் இருக்கிறது தனிமனித நலமும்... சமூக நலமும்! சமூக மாற்றம் நம் இல்லத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது...

    ReplyDelete
  4. தெளிவாக சுருக்கமாக அழகா எழுதியிருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  5. முதலில் எங்கள் ராஜிக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் உங்களின்
    சிறப்பான பகிர்வினால் ஒரு கேள்விக்குப் பதில் திரட்டிவிட்டா :)
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. உங்க வீட்டுக்காரம்மா உங்களுக்கு சொன்ன அறிவுரையை, நீங்களே சொன்னது மாதிரி திரித்து ஒரு பதிவாக போட்ட உங்க சாமர்த்தியத்த கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

    ReplyDelete
  7. தரமான பதிவுகளை யாரும் படிக்க மாட்றாங்க அண்ணே

    சினிமா ந்யூஸ்னா படிப்பாங்க

    ReplyDelete
  8. நீங்கள் சொல்வது உண்மை தான்! அழுத்தமான உண்மையான புதுமையான கருத்துக்களை எழுதினால், மெதுவாக, ஆனால் நிச்சயமாக, அதை ஏற்றுக்கொள்ளும் தரமான வாசகர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் பல இணையதளங்கள் விஷயத்தில் கண்கூடாகக் காண்கிறேன். வெற்று வதந்திகளை எழுதாமல் sincerity உடன் எழுதினால் தொடர்ந்து வரும் வாசகர் கூட்டம் இருக்கவே செய்கிறது.

    ReplyDelete
  9. தங்களின் இந்த பதிவைப் படித்த பிறகு, தரமான பதிவுகளைத் தான் பதிய வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்கிறேன் தரமான பதிவை பதிய முடியுமான்னு.

    ReplyDelete
  10. பொதுவாக சினிமா பற்றிய செய்திகள் அதிகம் வாசிக்கப் பட்டாலும் தரமான படைப்புகளை தேடுவோரும் அதிகரித்துள்ளனர். ஒரு செய்தி பல்வேறு கோணங்களில் சாமான்யர்களாலும் அலசப்படுவது சிறப்பு . எதிர்காலத்தில் குறிப்பிடத் தக்க மாற்றத்தைஏற்படுத்த இணையம் உதவும் என்பதில் ஐயமில்லை. இணையத்தில் செய்திகளை படித்துவிடுவதால் பல நாட்களில் செய்தித் தாளை பிரிப்பதே இல்லை.
    மதுரை தமிழனிடம் இருந்து வித்தியாசமான சிறப்பான பதிவு,

    ReplyDelete
  11. தரமான செய்திகள் என்றும் நிராகரிக்கப்படுவதில்லை.... என்ன கொஞ்ச காலம் ஆகும் ஏற்றுக்கொள்ள.... கண்டிப்பாக நீங்கள் சொல்லும் சிட்டிசன் ஜர்னலிசம் கவனிக்கப்படும் இடத்திற்குச் செல்லத்தான் போகிறது...

    ReplyDelete
  12. சத்தியமான உண்மை.......பதிவுகள் எழுத சோம்பல் கொள்வோருக்கு இந்த பதிவு புத்துணர்ச்சி தரும் என்பதில் சந்தேகமே இல்லை....!

    ReplyDelete
  13. நல்ல அலசல் மதுரைத் தமிழன். பாராட்டுகள்.

    ReplyDelete
  14. உ களுடைய ஆய்வு நன்றாக உள்ளது டைம்வேஸ்ட் செய்யவேண்டும் என்று எழுதுபவர்களால் வலைதளங்களை படிக்கும் சிலருக்கு அப்படி தோன்ற வாய்ப்புகள் உள்ளது சம்பந்தம் இல்லாமல் தலைப்பினை கொடுத்து வாசகர்களை ஏமாற்றும் பதிவுகளால் இனைத்தில் படிப்பவர்களுக்கு இத்தகைய மன நிலை ஏற்ப்படும். ஒவ்வொருவருக்கும் அவரவர் நேரம் பொன்னானதுதானே அதை அவர் விருப்பம் போல் பயன்படுத்துவர் ஆனால் அவர் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றி அவர்களுடைய டைம் வேஸ்ட் செய்தால் அவர்களுக்கு இனைத்தில் படிப்பதே டைம்வேஸ்ட்டாக கூட தோன்றலாம்.

    முயற்சி மேர்கொண்ட மதுரை தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.