Monday, December 9, 2013

அரசியல் தலைவர்களா அல்லது ஜோக்கர்களா? அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்

முருகப் பக்தர்கள் காவடி எடுத்து முருகப் பெருமானை பார்க்க செல்லுகிறார்கள் ஆனால் மோடி பக்தர்கள் ?




செய்தி1  : தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சரிவர தேர்தல் பணியாற்றாததே காரணம்.



யாரய்யா உனக்கு ஞானதேசிகன் என்று பெயர் வைத்தது. தேசிகரே நல்லா வாயில வருது... தோல்விகளுக்கு காரணம் தலைவர்கள் தன் பணியை ஒழுங்காக செய்யாததால்தான் என்பது இந்த கூமுட்டைக்கு தெரியாமல் போனது மட்டும் இல்லாமல் அதை தொண்டர்கள் மேல் பழியை போடுகிறாரே.. இப்படிபழி கூறி பேசினால் இப்ப கிடைச்ச ஒட்டும் வருகிற தேர்தலில் கிடைக்காம போயிடுமப்பூ....


அது மட்டுமல்ல இந்த ஞான சூனியத்திற்கு தெரியவில்லையா உங்கள் கட்சியில் இருப்பது நாலு தொண்டன் மட்டும்தானே அவனால் எப்படி அய்யா தொகுதி முழுவதும் பணி செய்ய முடியும்... தலைவனா இருப்பவன் இறங்கி வந்து வேலி செய்யனுமய்யா. ஞான தேசிகரே உங்களுக்கு என்ன அரசியல் ஞானமய்யா தொண்டர்கள் சரியில்லையா?என்ன விமர்சனம்?என்ன கருத்து? டில்லியில் எல்லோரும் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். நீங்கள் தொண்டர்கள் மேல் பழி சாட்டுகிறீர்கள் ? உங்களை மாதிரி ஆட்கள் தலைவர்களாக இருந்தால் நாடு எப்படி வளரும் கட்சி எப்படி வளரும்






அன்புடன்
மதுரைத்தமிழன்


செய்தி :'.தி.மு..,வுடன் கூட்டு சேர்ந்தால் நாற்பதும் நமக்கே!': தமிழக பா.., வலியுறுத்தல் ? லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உத்திகள் குறித்து, விவாதிப்பதற்காக, டில்லியில், பா.., தரப்பில், மாநில வாரியாக, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக பா.., சார்பில், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை அழைத்து, அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ் ஆகியோர், ஆலோசனை நடத்தினர்தமிழத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியான அ.தி.மு..,வுடன் கூட்டு சேர்வது, பா..,வுக்கு பலமான கூட்டணி வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பது உண்மை. .தி.மு.., - பா.., கூட்டணி அமைந்தால், நாற்பது தொகுதி களிலும் வெற்றி பெறலாம் என்ற கருத்து, மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக பா.., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே மோடி அலை மீது நம்பிக்கை இல்லை போலும்,

சரிங்க நீங்க சேர ஆசைப்பட்டா போதுமா என்ன? அதுமட்டுமல்லாமல் அம்மா மூஞ்சியில அடிச்சா மாதிரி "மவனே ஓடிப் போயிரு" நான் தனித்துதான் போட்டி என்று சொன்ன போதும் கூட மோடி மீது நம்பிக்கை இல்லாமல் அம்மாவின் காலை சுற்றி வந்தவாரே, கொஞ்சம் கூட வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல், அதிமுக வுடன் கூட்டணி பற்றி எப்படித் தான் தமிழக பா ஜ க சிந்திக்கிறதோ?




அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. நல்லா கேட்டீர்...! அம்(மா)மன் படம் போட்ட பனியன் போட்டதோடு பொன்.ரா.கி வாயை வேற கிழிச்சி... என்ன வேலை இதெல்லாம்...? ஹா... ஹா... அதுசரி எப்பிடி இருந்த அவரு இப்படியாயிட்டாரு...? தலைய ' தல' உடம்பிலயாவது வைக்க கூடாதா? இப்படி ஓம குச்சி உடம்புல பிக்ஸ் பண்ணிட்டீரே..?!
    அப்புறம் பாஸ் இந்த ஆ.வி ஜு.வி யிலிருந்து ஒரே போன்... உங்களுக்குதான் மதுரை தமிழனை தெரியுமே அவரை கொஞ்சம் இங்க அனுப்பி வைங்கன்னு...!

    ReplyDelete
    Replies
    1. நான் யாரையும் கிழிக்கலைங்க.... அவங்க ப்ளிக்கா சொன்ன கருத்துக்கு என் மனதில் பட்ட கருத்துகளை சொல்லி வரேனுங்க அவ்வளவுதான்

      அவங்க அனுப்பி வைக்க சொன்னது என்னை இல்லைங்க மதுரைத்தமிழனை அதாவது விஜயகாந்த், அழகிரியைங்க...

      Delete
    2. ஆமா ரொம்ப சீரியஸா பதில் சொல்லிட்டிங்களாக்கும்...வெவ்வவ்வே... நான் கிழிச்சதா சொன்னது உங்க எழுத்தை இல்ல... படத்துல வாயை கிழிச்சி வேல் குத்தியிருக்கீங்களே அதை... என்னோட கமெண்ட் மொத்தம் உங்க படக்கலவை பற்றித்தான்பா..! ஜூவி .. ஆ.வி.. கூட இதுக்குத்தான் கூப்பிட்டாங்க... என்னமா கலக்குறார்னு சொல்றாங்கப்பா..!

      Delete
  2. சூட்டோடு சூட்டாக
    சூடான அரசியல் விமர்சனம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியதை சூட்டோடு சூடாக படித்து கருத்து சொன்னமைக்கு மிகவும் நன்றிங்க

      Delete
  3. அமரிக்காவில் இருந்தாலும், இந்திய அரசியலைக் கூர்ந்து கவனித்து எழுதும் அரசியல் விமர்சனம் அருமை!
    உங்கள் திறமை பாராட்டத் தக்கது!
    த.ம 3

    ReplyDelete
  4. நீங்க இந்தியா வந்தால் கைமாதான்!!

    ReplyDelete
  5. ரெண்டு தேசியக்கட்சிகளும் மாநில தலைமையை தேர்வு செய்யும்போது கணக்கில்கொள்ளும் மிக முக்கிய தகுதி "தானாக சிந்திக்கக்கூடாத"வராக இருக்கவேண்டும் என்பது. பிறகு அவர்கள் இ(எ)ப்படித்தான் சிந்தித்து முத்துக்களை உதிர்ப்பார்கள்!?

    ReplyDelete
  6. உங்களுக்கு ரொம்பவே தைரியம் ஐயா. உங்களின் அரசியல் விமர்சனத்தை தொடருங்கள் . நன்றி

    ReplyDelete
  7. சகோதரருக்கு வணக்கம்
    இந்திய அரசியல் விடயங்களை மிக அழகாக கூர்ந்து கவனித்து தங்கள் பாணியில் நக்கலுடன் தந்த விதம் மிக அருமை. படமும் நீங்கள் கூறும் கருத்துக்கும் வலு சேர்த்துள்ளது. மிகச் சிறப்பான சிந்தனை தங்கள் படம் தெரிவிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சூடான அரசியல் பகிர்வு....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.