சீனர்களின் பார்வையில் இந்தியா இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதா அல்லது சீனர்களின் பார்வைதான் அசிங்கமா?
நான்
வலைதளங்களில் உலாவிக்
கொண்டிருக்கும் போது சீனர்கள்
நடத்தும் தளங்களுக்கு செல்ல
நேர்ந்தது.
அதைப்
பார்த்த போது எனது மனம் கூசிப்
போனது.
காரணம்
அவர்கள் இந்தியாவை பற்றிய
போட்டோக்களை வெளியிட்டு
கருத்துகளை சொல்லி இருந்ததுதான்.
அவர்கள்
நாட்டில் பல இடங்கள் இதை விட
மோசமாக இருந்தாலும் அவர்கள்
உலக அரங்கில் நமக்கு களங்கத்தை
ஏற்படுத்த இப்படி செய்கிறார்கள்.
இதைப்
பார்த்ததும் மனம் கொதித்தாலும்
அவர்களுக்கு இப்படி நம்மைபற்றி
இப்படி அசிங்கமாக எடுத்து
சொல்ல வாய்பளித்த நம் இந்திய
மக்கள் மீதுதான் மிக அதிக
கோபம் வருகிறது..
இதைப்
பார்க்கும் நீங்கள் சீனர்களை
பழிப்பதற்கு பதிலாக என்ன
நினைக்கிறிர்கள் எதிர்காலத்தில்
இப்படி நடக்காமல் இருக்க
உங்கள் பங்களிப்பு என்ன என்று
பின்னுட்டத்தில் சொல்லிச்
செல்லுங்களேன்.
இந்தியாவில்
பார்க்க அழகான இடங்கள் எவ்வளவோ
இருந்தும் இந்தியாவிற்கு
வந்த டிராவலர் கண்களில் பட்டது
இதுதானோ?
மக்களே
நடந்தது நடந்ததாக இருந்தாலும்
இனிமேல் நாம் என்ன செய்வது
என்பதை பற்றி யோசிப்போமே.
செவ்வாய்
கிரகத்திற்கு ராக்கெட் விட்ட
செலவில் ஒரு பகுதியையாவது
நாம் இதற்கு செலவழித்தால்
நமக்கு சுகாதார கேடு ஏதும்
வராது அல்லவா,
காங்கிரஸை
குறைக் கூறும் மோடியும்
வல்லவாய் படேலுக்கு சிலை
வைக்கும் முயற்சிக்கு பதிலாக
அதற்கு செலவிடும் தொகையை
இதற்கு செலவிட்டு புனித
இடங்களை சுத்தம் செய்ய
வாக்குறுதி தருவாரா?
மக்களும்
புதிது புதிதாக புனித இடங்களை
கட்டுவத்ற்கு பதிலாக ஏற்கனவே
இருக்கு புனித இடங்களை சுத்தமாக
வைக்க முன் வருவார்களா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நீங்கள் வெளியிட்டுள்ள படங்கள் காசி பகுதியில் தினசரி நடப்பவை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நம்மவர்கள் திருந்த மாட்டார்கள்.
ReplyDeleteஆஹா..ஐயா நீங்க அதை நேரிலேயே பார்த்திருக்கீங்களா? நம்மோட மூட நம்பிக்கைக்கு அளவே இல்லையே.. என்ன செய்ய?
Delete+++++
வணக்கம்...
நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
அயோத்தியில் ராமருக்கு கோவில், குயராத்தில் வல்லபாய்க்கு சிலை, நாடெங்கும் பல கோடிகள் புரளும் ஆயிரம் ஆயிரம் ஆசிரமங்கள், ஆயிரம் சாமியார்கள், கோவில்கள், கும்பாபிசேகங்கள், எதாவது சொன்னா குத்திக் கொலை செய்யவும் துணியும் சங்கராச்சாரிகள், அவர்களுக்கு வழக்காட பல வரதாச்சாரிகள், இணையத்தில் உலாவும் விரதாச்சாரிகள் எவர் கண்ணிலும் வடநாட்டுக் கூவமாம், கங்கை நதி கண்ணில் படவில்லையோ, பட்டும் படாமல் கமுக்கமாய் அடக்கி வாசிக்கும் புனிதவாளர்களே, நம் நாட்டின் மிகப் பெரிய நதிக்கரையில் வீற்றிருக்கும் மிகப் பழமையான கலாச்சார நகரத்தின் கோலத்தை பாருங்கள்! இன்னமுமா கங்கை புனித நதி என கதை அளக்கின்றீர்.. அவலம்! பேரவலம்..
ReplyDeleteசாட்டையடி பதிவு ஆனால் இதற்கு நிவாரணம் செய்தான் இங்கே யாருமில்லை, நம் மக்களின் நம்பிக்கை அப்படி வேறென்னத சொல்ல...!
ReplyDeleteஇப் படங்கள் காசி பகுதியில் தினசரி நடப்பவை ! நான் சென்றபோது நேரில் பார்த்திருக்கிறேன்! அதன் பிறகு கங்கையில் காலை வைக்கக்கூட மனம் ஒப்பவில்லை! இவர்கள் திருத்தவும் மாட்டார்கள்! திருந்தவும் மாட்டார்கள்!
ReplyDeleteநான் இந்த இடங்களை பார்த்ததில்லை... பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கு...! அரசும், பொதுமக்களும் மனசு வைச்சாத்தான் மாற்றம் கிடைக்கும்...!
ReplyDeleteதவறுக்குக் காரணம் நாமதானே...
ReplyDeleteநாம தூய்மையாக வைத்திருந்தால் அடுத்த வீட்டு நாய் ஏன் நம்ம வீட்டுக்குள் வந்து விளையாடப் போகிறது.
சீன நாய்கள் அதிகம் வாலாட்ட நம் அரசும் ஒரு காரணமே....
ReplyDeleteகாசியில் நடக்கும் எல்லா அவலங்களையும் புனிதம், நம்பிக்கை என்ற பெயர்களில் திரைபோட்டு மறைத்து விடுகின்றனர். நானும் இந்த அவலக் காட்சிகளை தொகுத்து வைத்து இருக்கிறேன். பதிவாக எழுதலாம் என்று இருந்தேன். என்னவோ போல் இருந்ததால் எழுதவில்லை. தங்களின் பகிர்வுக்கு நன்றி!
திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை பார்த்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தின்னு சொல்லுவாங்க. அதனால, காசில போய் சாகனும் இல்லாட்டி இறுதி சடங்கு நடக்கனும்ன்னு நம்மாளுங்க நினைக்குறதாலதான் காசிக்கு இந்த கதி :-(
ReplyDeleteஐயோ...இப்படிப்பட்ட அசிங்கமான செயல்களும் இந்தியாவில் அரங்கேறுகிறதா? அதற்காக நாம் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டும். சுகாதார சீர்கேடுகளைத் தரும் இதுபோன்ற செயல்களை கண்டிப்பாக தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteநீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?
அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..
சரியா...?
உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?
அப்போ தொடர்ந்து படிங்க...
ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!
நேற்று பி பி சி யில் , அமைச்சர் சிதம்பரத்துக்குப் பதில்கூறுவதாக இலங்கை மந்திரி ஒருவர், "எங்களுக்கு புத்தி சொல்லாமல், உங்கள் மக்களுக்குக் கக்கூசு (மலசலகூடம்) கட்டிக் கொடுங்கள். தமிழ்நாட்டை விட வட இலங்கை சிறப்பான வசதிகளுடன் உள்ளது;
ReplyDeleteஎன நக்கலடித்துள்ளார்.
இலங்கையனாக இருந்த போதும் இந்தியாவை நக்கலடிக்கும் போது, அவர்கள் அறிவு அவ்வளவே என எண்ணிய போதும் மனம் வேதனையுறும்.
ஆனாலும் நானும் வந்து பார்த்தேன். இந்த அளவு ஏன் தங்களைச் சுற்றி அசுத்தத்துடன் வாழ்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
அடுத்து சீனர் இதை தான் பார்த்தார்கள், ஆனால் அவர்கள் நாட்டில் பிச்சைக்காரரைக் கொன்றே விடுவார்கள், நடு வீதியில் டாக்கியால் மிதித்துக் கொன்று விடுவார்கள் என்பதனை அவர்களுக்கு யாராவது புரிய வைக்கவேண்டும்.
சங்காய் நவீனமயப்படுத்துவதென எத்தனையாயிரம் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தவர்கள்,
எதிர்த்தவர்களை இரவோடிரவாக முடித்தவர்கள், என்பதையும் பலருக்குத் தெரியும்.
இன்றும் சாப்பிடத்தவிர வாய்திறக்க உரிமையற்ற சீனர்கள் , இதையெல்லாம் பேசுவது வேடிக்கையே!
ஆனாலும் கங்கையைப் புனிதமெனும் மாயையில் இருந்து மீண்டு அதை நல்லநிலைக்கு கொண்டுவர எல்லோரும் முயலவேண்டும்.
இனிவரும் தலைமுறையாவது, முத்திக்கு வழி கங்கையில் பிணத்தை விடுவதில்லை. மனிதனாக வாழ்வது
என்பதை புரிய வைக்க வேண்டும்.
கண்மூடித்தனமான நம்பிக்கைகள்! மற்றும் சாத்திரங்களை தவறாக புரிந்துகொள்ளும் அறைகுறைகளால் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்கிறது! ஓர் உறுதியான அரசு நினைத்தால் இதை தடுக்க முடியும்! என்ன அடுத்த முறை ஆட்சி அமைக்க முடியாது என்ற பயமே அவர்களை தடுக்கிறது! வட இந்தியர்களிடம் அடிப்படையிலேயே கொஞ்சம் சுகாதார விழிப்புணர்வு குறைவு என்றே தோன்றுகிறது!
ReplyDeletemaaruvathu migavum siramam thaan...
ReplyDeleteஇப்படியான இடங்களில் தமிழ் நாட்டிலும் உண்டு, பிணங்களைக் காண முடியாதே தவிர, மற்றக் கழிவுகளைக் கண்ட இடத்திலும், எறிவதும், மலம் கழிப்பதும், அதே இடத்தில் அல்லது அதற்கு முன்னாலே உண்பதையும், உறங்குவதையும், சனநடமாட்டமுள்ள கடற்கரையையே மற்றவர்கள் முன்னாலேயே கழிப்பறையாக்குவதையும் தமிழ்நாட்டில் காணலாம். புனிதமான கோயில்களின் சூழலைக் கூட மதிக்கத் தெரியாது, அதையும் விட்டு வைக்க மாட்டார்கள். இலங்கையைப் போல் சுகாதார பழக்க வழக்கங்களை, அல்லது சுகாதாரத்தை ஒரு பாடமாக இளவயதிலேயே எல்லாப் பாடசாலைகளிலும் பயிற்றுவித்தால், அடுத்த தலைமுறையாவது திருந்தும். தமிழ்நாட்டில் இருக்கும்போது பல விடயங்களைப் பார்த்து நான் பெருமைப்படுவதுண்டு. எத்தனை தடவை அங்கு சென்றாலும் சலிப்பதேயில்லை. எவ்வளவோ நல்ல விடயங்கள் தமிழ்நாட்டில் இருந்தும், இந்த விடயம், அதாவது பொது இடங்களை அசிங்கப்படுத்துவது தமிழ்நாட்டுக்கு மிகவும் கேட்ட பெயரைப் பெற்றுக் கொடுக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteஅடுத்தவரின் அழுக்குகளைத் தன்னுள் சேர்த்தே
ReplyDeleteதன்னை அழுக்காக்கிக் கொண்டு
தன் புனிதத்தைக் கெடுத்துக்கொண்டது கங்கை.
பாவம்.... அதற்கு வாயிருந்தால்...
“மனசை சுத்தமாக வைத்துக்கொண்டால்
நேராக சொர்க்கம் செல்லலாம்.
அதைவிட்டு
நீங்கள் சொர்க்கம் செல்ல
என்னை நரகமாக்கி விட்டீர்களே...“ எனறு
சொல்லி அழுதிருக்கும்.
காசியில் நடக்கும் அவலங்களுக்குப் பெயர் புனிதம், நம்பிக்கை.
ReplyDeleteaggressive...
ReplyDeleteஇது காசி...... இங்கே பல விஷயங்கள் இன்னும் பழமையிலிருந்து மாறவில்லை. மாற முயற்சிப்பதும் இல்லை..... இங்கே இது தான் வியாபாரம்..... பலருடைய தொழிலே இது தான் மதுரைத்தமிழன்.......
ReplyDelete
ReplyDeleteகங்கை நதி பற்றி மூக்கில்லாத சீனர்களுக்கு என்ன தெரியும்? என்று உங்களுக்குப் பதிலளித்துள்ள http://aagayam.blogspot.in/2013/12/Ganges-River.html?showComment=1387626004416#c8442144643716960200 பதிவில் நானிட்ட இரு பின்னூட்டங்கள்.
---------------
a bundle of very good jokes ........
//கங்கயைப் பற்றிய அறிவியல் தகவல்களைத் தான் பகிர்ந்திருக்கிறேன்.//
!!!!!!!!!!!!!!
//கங்கை நீரைக் குடிப்பதால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும், //
உள்ளத்தை விடுங்க; உங்க உடல் நலமுற நிறைய கங்கை நீரைக் குடியுங்கள்.... “ரொம்ப நல்லது”!
பல ஆண்டுகளுக்கு முன் கங்கை நீரைக் காக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேச்ப்பட்ட போது, உங்களைப் போன்ற ஒரு எம்.பி. ”கங்கை புனிதமானது; அது மாசு படிந்தது என்று சொல்வதோ, அதை சுத்திகரிக்க எண்ணுவதோ கங்கைத் தாய்க்குச் செய்யும் அவமரியாதை” என்று பேசினார்; தினசரியில் அந்தக் காலத்தில் வந்த செய்தி இது. என் வகுப்பில் இதைப் போன்ற முட்டாள் தனத்தை எதிர்த்து நானும், மாணவர்களும் பேசியது இன்னும் நினைவில் உள்ளது.
-------------
மதுரைத் தமிழனின் பதிவில் உள்ள படங்களைக் காண மூக்கு எப்ப்டியிருந்தால என்ன ... கண்களும்,அறிவும் மட்டும் திறந்திருக்க வேண்டும்.