பிஜேபி தலைமைக்கு
பிஜேபி தொண்டன் தரும்
எச்சரிக்கை ( திமுகவுடன்
சேர்ந்தால் ?)
திமுகவுடன் தமிழக
பாரதிய ஜனதா கூட்டணி வைக்கும்
முயற்சியில் இறங்கியுள்ளதை
கேள்விபட்ட ஒரு பிஜேபி
தொண்டணின் மனநிலை இதுதான்.. இது
பிஜேபி தொண்டணின் மனநிலை
மட்டுமல்ல பிஜேபிக்கு ஒட்டுப்
போடும் மனநிலை கொண்ட எல்லோர்
மனதிலும் இப்படி தோன்றாமல்
இருக்காது அல்லவா?
பேஸ்புக்கில் நான்
படித்தது... அதை உங்களுடன்
பகிருகிறேன்
தமிழக பாரதிய
ஜனதாவுக்கு ஒரு வேண்டுகோள்
நீங்கள் தி.மு.க வுடன்
கூட்டணி வைத்தால் இந்தியாவை
நேசிக்கும் இந்து மதத்தை
பின்பற்றும் என் நிலைபாடு
இதுதான் அனைத்து மதங்களும்
சமம் என்று கூறும்
இந்தியாவில்
பெரும்பான்மையினர் என்று
பெயரளவில் கூறும்
இந்துகளின் நிலைதான் மோசமாக
உள்ளது. நான் வணங்கும்
கடவுள்களையும் பின்பற்றும்
மதத்தையும் தனது அரசியல்
இலாபத்துக்காக கொச்சை
படுத்தியவர்களோடு கூட்டணி
தேவையா? இதுவரை எங்கள் மத
விழாக்களுக்கு மட்டும்
வாழ்த்து கூறாதவர், 2007 ல் பா.ஜ.க
அலுவலகம் புகுந்து பெண்களை
தாக்கியவர்கள், திராவிடம்
பேசி தமிழை அழித்தவர்கள்,
எங்கள் தமிழ் காவிய நாயகி
மணிமேகலையை கண்டவர்களோடு
ஒப்பிட்டவர், இன்னும்
எவ்வளவோ சொல்லி கொண்டு
போகலாம் இவர்களோடு கூட்டணி
தேவையா????
தனியாக நின்று
தோற்றாலும் கூட சந்தோஷம்
தான் தன்மானத்தை இழந்து ஒரு
வெற்றி தேவையா?
தமிழகத்தில் நாம்
தோற்றாலும் மத்தியில்
கண்டிப்பாக மோடி பிரதமர் ஆக
போவது உறுதி. நீங்கள் தி.மு.க
வோடு கூட்டணி வைத்து
போட்டியிட்டால் மத்தியில்
ஆட்சி கேள்விகுறி தான்.
தன்மானத்தோடு தனியாக
போட்டியிடுங்கள் தமிழ்
நாட்டில் சில தொகுதிகள் நம்
வசமாகும்.
|
பேஸ்புக்கில் படித்தை
உங்களுடன்
பகிரும்
மதுரைத்தமிழன்.
டிஸ்கி : மோடிக்கு அலை
இருப்பவர்கள் என்று
கருதுபவர்கள், மோடிக்கு ஆதரவு
தர நினைக்கும்
நடுனிலையாளார்கள், பிஜேபி
கட்சியினர், இந்த பிஜேபி
தொண்டன் கேட்பது சரிதானா?
உங்கள் கருத்துக்களை தரமான
முறையில் பின்னுட்டத்தில்
சொல்லிச் செல்லுங்கள்
தேர்தல் சமயத்துல இப்படியெல்லாம் போஸ்டர் அடிக்க நல்ல ஐடியாவை நீங்களே தருவீங்க போலிருக்கே...!
ReplyDelete
Deleteஎல்லா கட்சிகளுக்கும் ஐடியா இங்கு இலவசம்
என்னுடைய கருத்தும் அதுவே. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு போய், ஊழல், இந்துமத எதிர்ப்பு, ரவுடியிசம் ஆகியனவையினை கொள்கையாக கொண்ட கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், அது கீழ்த்தரமான அரசியல் என்பது என் கருத்து.
ReplyDeleteஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் தனது கொள்கைகளையும் தொண்டர்களையும் அடகு வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
Deleteதமிழகத்தில்
ReplyDeleteபிஜேபிக்கு தனியாக நின்றால் ஒரு சீட் கூடகிடைக்க வாய்ப்பில்லை.இப்படியே
ஒவ்வொரு மாநிலத்திலேயும் கூட்டணியை தவிர்த்தால் ஆட்சியை பிடிப்பது
சிரமம்.செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கூட்டணி வைத்து தனக்கென்று சில
தொகுதியை கைப்பற்றினால் மட்டுமே கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சியை
எட்டமுடியும்.
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிஜேபிக்கு மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது மிக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. பிஜேபி மிக சிறிய கட்சிகளை அரவணைத்து சென்றால் நிச்சயம் மேலும் சில சீட்டுகளை பெற வாய்ப்புக்கள் உள்ளது இதைத்தான் பிஜேபி செய்ய வேண்டும். அதன் பின் தேர்தலுக்கு பின்பு தம் கட்சி அதிக இடங்களில் வந்தால் அதன் பின் மற்றைய கட்சிகளின் ஆதரவை கேட்டு ஆட்சி அமைக்க வேண்டும். பொய்யான அலை வெற்றி வாய்ப்பை தராது அது ஒவ்வொரு பகுதியிலும் சில ஆயிரம் வோட்டை மட்டும் பெற்று தருமே தவிர வெற்றிக் கனியை தராது என்பதுதான் என் கருத்து இதை பிஜேபி தலைமை ப்ரிந்து கொண்டால் அவர்கள் ஆட்சிகட்டிலில் அமர வாய்ப்பு உண்டு
Deleteகாங்கிரஸ் ,பிஜேபி இல்லாத மாற்று அரசியலே இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.
ReplyDeleteதி மு க வோ-அ தி மு க வோ எப்படி முடிவெடுப்பார்கள்.பொறுத்திருந்துதான் பார்க்கணும்.பிஜேபிக்கோ , தி மு க விற்கோ தொண்டனின் மன நிலை அறிந்து செயல்படுவார்களா.!? கேள்வி குறியே!அவர்களது ஆசை ஆட்சி கட்டிலே!
காங்கிரஸ் பிஜேபி இல்லாத மாற்று தலைமை என்றால் அது ஜெயலலிதாவின் தலைமையாகத்தான் இருக்கும் அதற்கு மிக கஷ்டப்பட வேண்டும்.
Deleteமுதலில் இந்த திமுகாவை எல்லோரும் ஒதுக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த ஒரு கட்சிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர்த்து) சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து தமிழையும் தமிழகத்தையும் நாசப்படுத்தியது.
திராவிடன் என்று ஒரு பசப்பு வார்த்தையை கூறி தமிழர்களை வஞ்சித்தது!
Deleteமிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
பதவிக்காக பிஜேபி ஆட்சியில் ஒட்டியிருந்து விட்டு கடைசி நேரத்தில் விலகியது திமுக. அதோடு மீண்டும் கூட்டு வைத்தால் கண்டிப்பாக அதற்கு ஓட்டு கிடைக்காது! பேசாமல் ஆம் ஆத்மி போல ஒரு புதிய கட்சிக்கு ஓட்டளித்து பார்க்கலாம்!
ReplyDeleteகாலம் மிக குறுகிய அளவில் இருப்பதால் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை ஆனால் தலைவர்கள் சுயனலம் இல்லாமல் சிந்தித்தால் மூன்றாவது அணி ஏற்படுத்தலாம்
Deletejaya lalitha thalimil 3 am ani undagava vaipugal athigam
Deleteஇந்தியத் திருநாட்டை மதவெறியிலிருந்தும் ஊழல் கோட்டையிலிருந்தும் பன்னாட்டு கம்பெனிகளின் ஊதுகுழல்களிலிருந்தும் கொஞ்சமாவது விடுபட வேண்டுமென்றால் மக்கள் மூன்றாவது மாற்றை நோக்கி சிந்தனையை திருப்புவதுதான் மக்கள் தேசத்திற்கு ஆற்றவேண்டிய மகத்தான கடமை.என்று கருதுகிறேன்.
ReplyDeleteஅரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா.... எனும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது....
ReplyDeleteமதுரை தமிழா நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள். பூரிக்கட்டை சின்னத்திற்கு நான் வோட்டு போடுகிறேன்..,
ReplyDeleteennagkanna ithu.aatchiyaipitikkanum. athuthanmukkiyamne.matrathellam appuramthanne. kollgaya? illanne. yarukkum illanne.ukkalukkumillanne.
ReplyDeleteநண்பரே தயவு செய்து கருத்தை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் இடுங்கள் இப்படி இரண்டும் கெட்டானாக இடாதீர்கள் காரணம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை
Delete