Monday, December 9, 2013

ஜோக்கர் விஜயகாந்த் -
விஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.







விஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க தயார்.

மதுரைத்தமிழன் அதை அவர் அறிவித்தாரா என்ன?
அதை அவர் என்ன அறிவிக்கிறது. எப்பவும் தோல்வி பெற்றவர்கள் மீண்டும் வெற்றி பெற டுடேரியல் காலேஜ்க்கு போவது இயல்பாக நடப்பதுதானே




விஜய காந்த்தின் நாளைய அறிவிப்பு இப்படியும் இருக்குமோ?


தமிழகத்தில் போட்டி இட்டு என் பலத்தை காண்பித்தேன். அதற்கு அடுத்து டில்லியிலும் போட்டி போட்டு என் பலத்தை காண்பித்தேன் அதன் பின் வருகிற அமெரிக்க பொது தேர்தலிலும் எனது கட்சி சார்பாக போட்டியாளர்களை நிறுத்தி என் பலத்தை இந்த உலகத்திற்கு நிருபிப்பேன்.



அமெரிக்காவில் எனது கட்சி தலமையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மதுரைதமிழனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.




அதன் பின் என் பலம் உலகுக்கே தெரியும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

 
எனது தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி விஜயகாந்த் அறிவிப்பு.



இந்த அறிவிப்பை கேட்டதும் தமிழ்நாடு டாஸ்மாக் குடி மக்கள் சங்கம் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது



இதையடுத்து தமிழ்நாடு கள்ளு இருக்குவோர் சங்கமும் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது



அடுத்ததாக டாஸ்மாக் ஊழியர் சங்கமும் இவரது தலைமையை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது




கறுப்பி எம்ஜியாரே இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

*********


யானைக்கு பலம் தண்ணியில் இல்லை அதன் தும்பிக்கையில்தான்


அதுபோல கேப்டனுக்கு பலம் டில்லியில இல்லை அவர் அடிக்கும் தண்ணியிலதானுங்க...


இது புரிஞ்சா அவர் கோமாளியாக ஆகமாட்டார்



09 Dec 2013

6 comments:

  1. அவரின் நகைச்சுவைப் பேச்சுக்குச் சரியான
    எதிர் நகைச்சுவைப் பதிவு
    இதைப் படித்தால்தான் அவருக்கும் என்ன
    பேசினோம் எனப் புரியும் என நினைக்கிறேன்
    மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நீங்க சொல்றது உண்மையாகறதுக்கும் வாய்ப்பு இருக்கு

    ReplyDelete
  3. டெல்லி தேர்தல் சம்பந்தமாக விஜய்காந்த்தோட பேட்டியை படிக்கும்போது ரொம்ப காமெடியா இருந்துச்சு. ஆனா அதைவிட உங்களோட இந்த பதிவை படிச்சவுடனே, விஜய்காந்த்தோட பேட்டியே பரவாயில்லைன்னு தோணுச்சு. ஏங்க!!! உங்களோட அரசியல் நகைச்சுவைக்கு அளவே இல்லையா!!!. ரொம்பவும் ரசிச்சு படிச்சேன். நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரசித்தேன்.

    இங்கே இருக்கும் 70 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக முன்பு தகவல் இருந்தது! நல்லவேளை 11 தொகுதியோடு போயிற்று! :))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.