Friday, December 27, 2013

லீக்கான கலைஞர் & ஸ்டாலின் பேசிய ரகசிய தேர்தல் பேச்சு

தம்பி ஸ்டாலின் எங்கப்பா இருக்கே?

அப்பா நான் உங்க பின்னாலதான் இருக்கேன்.


 
அன்புடன்
மதுரைத்தமிழன்





அப்பா நீ தளபதியப்பா நீ எப்பவும் முன்னாலதான் இருக்கணும் உனக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்பதினால்தான் உன் அண்ணனையும் தங்கையையும் பின்னால உடகார வைத்து இருக்கிறேன்.

அதி சரிப்பா நீங்க எல்லோர் முன்னாலயும் என்னை தம்பின்னு கூப்பிடறது எனக்கு அவமானமாக இருக்கு அதனால நான் உங்கள் பையனாக இருந்தாலும் இப்ப கட்சிக்கு நான் தான் தளபதி அதுனால நீங்கள் இனிமேல் என்னை தளபதி என்று தான் கூப்பிடனும்

சரிங்க தளபதி வர்ர பரிட்சையில் அந்த பிராமணப் பெண் 40 க்கு 40 வாங்கி பரிட்சையிலே பாஸாகிவிடுவேன் என்று அடித்து சொல்லுகிறது. நீங்க எப்படிப்பா எந்த நிலைமையில் இருக்கிறீங்க...

அது வந்து வந்து...

என்னப்பா வந்து வந்து என்று சவ்வா இழுக்குறீங்க...

இல்லப்பா எனக்கு பரிட்சை தனியா எழுத பயமா இருக்குப்பா அதனால

அதனால என்னப்பா உனக்கு கனிமொழி அழகிரி உதவி வேணுமாப்பா?

இல்லப்பா தளபதிக்கு துணையாக ஒரு கேப்டன் வேணுமப்பா

கேப்படனுக்கு பரிட்சையில் பாஸாக எல்லா பதிலும் தெரியுமாப்பா?

இல்லப்பா எனக்கு கொஞ்சம் தெரியும் அவருக்கு கொஞ்சம் தெரியும்

அதனால ரெண்டு பேரும் சேர்ந்தா

ரெண்டு பேரும் சேர்ந்தா எல்லா சீட்டையும் எடுத்து பரிட்சையில் பாஸாகிவிடலமப்பா?

அப்பா உனக்கு ரொம்ப ஆசையப்பா....நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா 5 ல் இருந்து 10 சீட்டு வாங்கிடுவோம் என்று நம்பிக்கை இருக்குப்பா

தளபதி 10 சீட்டாவது வாங்கிடனும் இல்லைன்னா அது நமக்கு கவுரவம் இல்லையப்பா...அது சரி அப்ப நீ கேப்டனுக்கு தூது விடுப்பா

அப்பா நான் தளபதியப்பா நான் யாருக்கு தூதுவிட்டா என் கவுரவத்திற்கு இழுக்குப்பா அதனால நீங்கதான் அவருக்கு தூது விடணும்

அப்ப எனக்கு மட்டும் கவுரவம் இல்லையா என்ன?

என்னப்பா கவுரவம் அது இதுன்னு பேசுறீங்க உங்களுக்கு இருந்த கவுரவத்தை நாங்கதான் எப்பவோ காற்றில் பறக்க விட்டுடோமே

சரிப்பா அதை நான் அன்பழகன் அவரிடம் சொல்லி ஏற்பாடு பண்ணுறேன். அப்புறம் இந்த மதுரைத்தமிழன் யாருன்னு விசாரிப்பா அவன் நம்ம அழகிரி ஊர்க்காரனா இருக்கான்.. அவன் அழகிரிக்கு வேண்டப்பட்ட ஆளா இருப்பானோ என்று சந்தேகமாக இருக்குப்பா


அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Dec 2013

12 comments:

  1. ரகசியத்தை அம்பலமாக்கி விட்டீர்களே!
    படத்துக்கு கீழுள்ள பத்திகள் வேறு மொழி எழுத்துக்கள் போல் காணப்படுகிறதே. என் கணினிப் பிழையா?

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி நண்பா. கணணி பிழையை சரி செய்துவிட்டேன்.

    ReplyDelete
  3. ரகசியம்... இது பரம ரகசியம்..

    ReplyDelete
  4. ஓ! கதை அப்படிலாம் போகுதா!? இனி மதுரை தமிழனை பாசத்தால கட்டிப்போட்டு திருவண்ணாமலை மாவட்டத்தை என் பேருக்கு எழுதிக்க வேண்டியதுதான்!!

    ReplyDelete
  5. சகோ! சகோ! சாப்பிட்டீங்களா!? இந்தாங்க பாதாம் அல்வா செஞ்சேன். சாப்பிடுங்க. உங்க சட்டை ஒண்ணு தந்தா அதுல உங்க பேரை எம்ப்ராய்டரிப் போட்டு தருவேன். இந்த சமிக்கி மாலை நல்லா இருக்கா!? நீங்களே வச்சுக்கோங்க. என்னை மறந்துடாதீங்க! திருவண்ணாமலை மாவட்டம் எனக்கு.

    ReplyDelete
  6. விக்கிலீக்ஸ் மாதிரி ஆஃப் தி ரெகார்ட்ஸ் எல்லாம் வெளியிடும் உங்களின் தைரியத்தை பார்த்தால் அமெரிக்கா சென்றும் மதுரக்காரனின் டெர்ரர்னஸ் குறையவில்லை என்பது நன்றாக தெரிகிறது

    ReplyDelete
  7. ரகசியம் அம்பலமாகிவிட்டதே......

    ரசித்தேன்..

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வுக்கும் பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும்
    வளமும் பெற்று வாழ்ந்திடவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  9. நடு நடுவே உங்கள் போட்டோ எதுக்கு?

    ReplyDelete
  10. தேர்தல் ரகசியம் வெளிவந்தது மட்டுமல்ல அதை விட மதுரை தமிழனின் குசும்பு புத்தி இருக்கிறதே அது நாளுக்கு நாள் கூடுகின்றது!!!!! அருமையான ரசிக்கும்படியான அரசியல் பதிவு அதுவும் அதற்கேற்றார் போல படங்களுடன்!!! நல்ல கற்பனை வளம்!!! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  11. ஆஹா, இது தான் நீங்க அரசியல் பதிவா போடுவதன் ரகசியமோ??. எனக்கும் அதே சந்தேகம் தான் . நீங்க அழகிரி ஆதரவாளரா,ஸ்டாலின் ஆதரவாளரா (இதை "நீங்க நல்லவரா கெட்டவரா என்ற விதத்தில் படிக்கவும்")

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.