Friday, December 20, 2013

அமெரிக்க அதிபாராக அல்லது மதுரைத்தமிழனாக இருந்தாலும்  கஷ்டம் ஒன்றுதானங்க...

அவர்கள் எந்த பொண்ணுக கூட சிரித்து பேசினாலும் பொண்டாடிகளுக்கு பொறமை வந்துடுதுங்க...





எல்லோருக்கும் வாய்க்கும் மனைவிகள் எல்லாம் இப்படிதானோ இருப்பாங்க?

சரவணா என்ன கொடுமையடா இது......சந்தோஷமாக சிரிச்சு பேச கூட நமக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன,.

இந்த கொடுமையை யாருக்கிட்ட சொல்லுறதுன்னு தெரியாமா மக்களே உங்களிடம் இந்த பதிவு மூலம் கொட்டிவிட்டேன். நீங்களும் உங்களுக்கு நேரும் கொடுமையை பதிவில் பின்னுட்டமாக பதிவு செய்யுங்கள்

நீங்கள் பின்னுட்டம் போட இங்கு டெம்ளேட் கருத்துக்கள்.

1. உங்களின் பதிவை படிக்கும் கொடுமையை விட எங்கள் மனைவி பண்ணும் கொடுமையை மிக குறைவுதான்.

2. கொடுமைன்னா என்ன? இப்படிக்கு கல்யாண ஆசையில் கனவு காண்பவர்கள்.

3. என் மனைவி அடிக்கடி அவ அம்மா வீட்டிற்கு போய்விடுவா அதனால் நான் சந்தோசமாக இருந்து உங்கள் பதிவை ஜாலியாக படித்து கொண்டிருக்கிறேன்.

4. நாங்க எல்லாம் ரொம்ப விவரம் தெரிஞ்ச ஆளு உன்னை மாதிரி லூசு கிடையாது அதனால் நாங்க பொண்டாட்டி பக்கத்துல இல்லாதப்பதான் இப்படி கடலைப் போடுவோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
20 Dec 2013

15 comments:

  1. ஹா...ஹா...சும்மாவே அங்க எரிஞ்சிக்கிட்டு இருக்கு
    இதில இது வேறையா...?

    ReplyDelete
  2. ஐந்தாவது டெம்பிளேட்டா ,இதையும் சேர்த்துக்குங்க ...No comments !
    +1

    ReplyDelete
  3. பெண்களுக்கு பொறாமை குணம்னா ஆண்களுக்கு சந்தேக குணம்ங்க...!

    ReplyDelete
  4. வாய்ப்புகளை நாமே எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  5. நல்லா சொன்னீங்க!! ஆனா சொல்ல முடியாத நிலைமைங்க! அதனால...... அதனால.......த.ம. ஓட்டுப் போட்டுட்டேங்க! கைல மை கூட வைக்கலீங்க!

    ReplyDelete
  6. நல்ல வேளை.எனக்கு அதெல்லாம் இல்லை.எனக்கு கல்லு யாணமே ஆகலை.எப்படி தப்புச்சேன்ல....

    ReplyDelete
  7. சூப்பருங்கோ... மீ எஸ்கேப்.

    ReplyDelete
  8. கல்யாணமாகி பாச்சுலர்களாக வாழும் எங்களுக்கெல்லாம் இந்த கஷ்டமில்லைங்கோங்கோங்கோ

    ReplyDelete
  9. கஷ்டம் ஒரே மாதிரித்தான்..
    ரியாக்ஷன் வேறே வேறே இருக்கும்.
    மதுரைத் தமிழனுக்கு என்ன நடக்குமின்னு எல்லாருக்கும் தெரியும்.

    ReplyDelete
  10. பூரிக் கட்டையுடன் ஒரு டெம்ப்ளேட் போட்டீர்கள் என்றால் அதற்குத் தான் என் ஓட்டு.

    ReplyDelete
  11. ஜாக்கிறதை. அவங்களுக்கு செல் போனில் கால் வரும்வரை காத்திருங்கள். அப்பறம் நேரம் போறதே மூணு பேருக்கும் தெரியாது.

    gopaalan

    ReplyDelete
  12. மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னுடைய வலைப்பூவை படிக்காதீங்கன்னு எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க. அது எவ்வளவு உண்மைன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். தெரியாத்தனமா இந்த பதிவை படிக்கும் போது, வீட்டு அம்மணி பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க. அவ்வளவு தான் அவுங்க முகம் போன போக்கைப் பார்க்கணுமே!! கஷ்டம்டா சாமி. அதனால அவுங்க தூங்கின பிறகு தான் இந்த பின்னூட்டம்.

    ReplyDelete
  13. நீங்கள் மதுரைத் தமிழனாகவே இருங்கள்! அதெல்லாம் சரி! உங்கள் பதிவுகளை எல்லாம் உங்கள் மனைவி படிப்பதுண்டா?

    ReplyDelete
  14. வெளிய புலி, வீட்டுல எலி!?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.