Wednesday, December 18, 2013

அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்யும் குற்றங்கள்?


அமெரிக்காவில் வசித்த இந்திய தூதரக துணை அதிகாரியை கைது செய்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முறையில் அமெரிக்க தூதரக தலைவர் மற்றும் அதிகாரிகள் இந்தியாவில் செய்யும் குற்றங்களை இந்திய அரசாங்கம் பட்டியல் இட்டு.... இதற்காக நாங்கள் ஏன் அவர்களை கைது செய்யக் கூடாது என்று இந்திய அரசாங்கம் அமெரிக்கவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.




அமெரிக்க அரசே இந்த காரணம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா ( இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று தேர்தல் நேரத்தில் மக்கள் கூப்பாடு போடுவது போல இதை சொல்லவும்)


அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்த குற்றங்களின் பட்டியல் :

1. அமெரிக்க அதிகாரிகள் சிறுநீரை தெருவில் கழிக்காமல் பாத்ரூம் தேடி சென்று கழித்தது முதல் குற்றம்

2. அமெரிக்க அதிகாகரிகள் வசிக்கும் வீட்டில் சேரும் குப்பைகளை வீட்டிற்கு வெளியே எறியாமல் இருந்தது அடுத்த குற்றம்.

3. அமெரிக்க அதிகாரிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது ரோட்டில் எச்சில் துப்பாததும் குற்றமே.

4. அவர்கள் இந்திய சரக்கை அடிக்காமல் தங்கள் நாட்டு சரக்கை அடித்தது மிகப் பெரிய குற்றம். இது இந்திய சரக்கை உலக அளவில் அவமானப்படுத்தியது போல உள்ளது எனவே இந்திய சரக்கை இழிவு படுத்தியதும் குற்றமே.

5. தன் வீட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு நல்ல சாப்பாடு மற்றும் அதிக அளவு சம்பளம் கொடுத்ததும் குற்றமே.

6. இதுவரை இந்தியாவில் பணிபுரிந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் அங்கு வேலைசெய்யும் இந்திய பெண்களை மானபங்கபடுத்ததது இந்திய பெண்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது. எனவே அதை செய்யாததால் அதுவும் குற்றமே.

7. எங்கள் நாட்டின் எதிர்கட்சி தலைவர் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பித்த போது அவரிடம் லஞ்சம் வாங்கியாவது விசா கொடுத்து இருக்கலாம். அப்படி செய்யாமல் இருந்தது லஞ்சம் வாங்கும் எங்களை இழிவு படுத்துவது போல இருப்பதால் அதுவும் ஒரு குற்றமே

8. இந்தியாவில் பணி புரியும் போது இந்தியாவின் தேசிய உணவான சாதத்தை மூன்று வேளையும் உண்ணாமல் தங்கள் நாட்டு உணவை மட்டும் உண்டது..

9. தூதரகத்திற்கு வரும் போது வேஷ்டி சட்டை, குர்தா அணியாமல் வந்தது.

10. அமெரிக்க தூதர்கள் மலம் கழித்துவிட்டு பேப்பரில் (டாய்லெட் டிஷ்யூவில் )துடைக்கிறார்கள் இது கடவுளை அவமதிப்பதாக இருக்கிறது அதனால் இதுவும் குற்றமே

இப்படி பல குற்றங்கள் செய்துவிட்டு எங்கள் அதிகாரி குற்றம் செய்து இருக்கிறார் என்று கைது செய்வது முறையல்ல.



அப்துல்கலாமை , ஜார்ஜ் பெர்ணாண்ட்ஸ் போன்றவர்களை அவமானப்படுத்தியது எல்லாம் எங்களுக்கு பெரிதல்ல. சாருகான்,கமலஹாசன் போன்றவர்களை அதிகநேரம் இமிகிரேஷனில் உட்கார வைத்த விசாரணை செய்த போது எங்கள் உள்ளம் கொதித்தது அப்படி இருந்தும் நட்புக்காக நாங்கள் பேசாமல் இருந்தோம் ஆனால் லோக்சபா வரும் நேரத்தில் எங்கள் பெண் அதிகாரியை கைது செய்யதது எங்களால் பொருக்க முடியவில்லை அதனால் நாங்கள் சுனாமி போல பொங்கி எழுந்துவிட்டோம் அமெரிக்க அரசாங்கமே எங்களிடம் விளையாட்டு வேண்டாம் இதோடு நிறுத்திவிடு இல்லையென்றால் எங்கள் பிரதமர் உங்கள் காலில் விழுந்து கதறும் நிலைமைக்கு எங்களை கொண்டுவீடாதீர்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை கைது செய்ய இந்த காரணங்கள் போதுமே!!!

மிக விரைவில் எனது அடுத்த பதிவு  இந்தியாவிற்கு இந்திய அரசாங்கமே தலைக்குனிவை ஏற்படுத்தி கொள்கிறதா படிக்கதவறாதீர்கள் 






7 comments:

  1. அடுத்த பதிவுக்கு விளம்பரம் போட்ட முதல் பதிவரையா, நீர்!

    ReplyDelete
  2. நல்ல காரணங்கள்தான்

    ReplyDelete
  3. இது தான் உட்கார்ந்து யோசித்தது என்பார்களோ........

    ReplyDelete
    Replies
    1. இது உட்கார்ந்து யோசிப்பது இல்லை. அலுவலகத்துக்கு மட்டம் போட்டு, ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்து எழுதின பதிவு இது. சரி தானே மதுரை தமிழா??

      Delete
  4. இந்திய அரசு தனது தூதரக அதிகாரி(கள்) செய்யும் அப்பட்டமான மனித உரிமைக் குற்றங்களை பன்னாட்டு அளவில் மூடி மறைக்க பகீரத பிரயத்தனம் செய்து வருவது, இந்தியாவுக்கு மட்டுமல்ல அயலக இந்தியர்களுக்கும் பெரும் அவப் பெயரை பெற்றுத் தந்துள்ளது என்பது தான் உண்மை. அமெரிக்க அதிகாரிகள் செய்யும் குற்றங்களை பட்டியலிடுவோம் எனக் கூறியதில் இருந்தே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல தம் குற்றத்தை தாமே ஒத்துக் கொண்டும் உள்ளனர்.

    --- தேவயானி விவகாரமும் இந்தியர்களால் மூடி மறைக்கப்படும் குற்றங்களும்.. ---

    ReplyDelete
  5. எதற்குமூன்று மைனஸ் ஓட்டு என்று முழுமையாக படித்தால்? ம்ம்ம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.