உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, December 10, 2013

வலையுலக வாத்தியாரும் சிஷ்யனும் சந்தித்து பேசினால்......?

வலையுலக வாத்தியாரும் சிஷ்யனும் சந்தித்து பேசினால்......?பாலகணேஸும் சீனுவும் சென்னை எக்ஸ்பிரஸ் மாலில் அமர்ந்து ஜுஸை குடித்து கொண்டு ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் ஒரக் கண்ணால் அங்கு வரும் அழகு பெண்களை பார்த்து கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள்....அவர்கள்  இருவரும் பேசியதுதான் இது .அது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்காதீர்கள் இந்தியர் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் அமெரிக்கா அரசாங்கம் உளவு பார்த்து வருகிறது. அந்த உளவுத்துறையிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டதன் ஒரு பகுதிதான் இந்த பதிவு

  


சீனு பெரிய முன்கோபியாக இருந்த நான் இப்ப சாந்த சொரூபியா மாறிட்டேன்…!தெரியும் வாத்தியாரே உங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு நீங்க முன்னவே சொல்லி இருக்கீங்களே அதுக்கு இப்ப என்ன....(பாலகணேஷ் மைண்ட் வாய்ஸ் ; இனிமே சின்ன புள்ளைங்ககிட்ட பேசும் போது ஜாகிரதையாக இருக்கணும்)வாத்தியாரே உங்களின் சந்தோஷமான மண வாழ்க்கைக்கு காரணம் என்ன என்று நான் தெரிஞ்சுக்கலாமா?

தம்பி சீனு என்னால் முடியாததை என் மனைவியும், அவங்களாலே முடியாததை நானும் செய்து முடிச்சுடுவோம்..!

-

அப்படியா வாத்தியாரே உங்களால எது முடியாதது, அவங்களால எது முடியாதது?

-

சீனு எனக்குப் பொறுமையா உட்கார்ந்து டீவி சீரியல் பார்க்க முடியாது, அவளுக்கு சமைக்கிறது, துவைக்கிறது, வீட்டு வேலைகள்இதெல்லாம் முடியாதது…!வாத்தியாரே நீங்கள் நல்லா காமெடி பண்ணுறீங்க

(பாலகணேஷ் மைண்ட் வாய்ஸ் ; உண்மையை சொன்ன பயபுள்ள காமெடின்னு நினைக்குது...அப்படியே இருந்துட்டு போகட்டும் )

சீனு உனக்கு தெரியுமா ? அந்த மதுரைத்தமிழன் இருக்காருல்லஅவர் மனைவிக்கு ரொம்ப

பயப்படுவாரு…!வாத்தியாரே அப்ப நீங்க..?

-

சீனு அவர் மனைவிக்கு நான் ஏன் பயப்படணும்
வாத்தியாரே செம...காமடி ஹாஹஹாசரி வாத்தியாரே இதுக்கு பதில் சொல்லுங்க .....அந்த மதுரைத்தமிழனின் மனைவிக்கு கோபம் வந்தா அவரை பூரிக்கட்டையால் அடிப்பாங்கன்னு சொல்லுகிறார் அது போல உங்க மனைவிக்கு கோபம் வந்தா என்ன செய்வாங்க..அதுவா சீனு என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!அப்ப அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா வாத்தியாரே?

-

இல்லடா சீனு அவ எண்ணும் போது , நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!வாத்தியாரே உங்க கூட பேசிகிட்டு இருந்தா எனக்கு கல்யாணம் ஆசையே வாராது போலிருக்கே அப்ப நான் கிளம்புறேன்பாலகணேஷ் மைண்ட் வாய்ஸ் ; உனக்கு கல்யாணம் ஆக கூடாதுன்னுதானே கல்யாணம் ஆன நாங்க இப்படி பில்டப் பண்ணீ சொல்லுறோம். உன்னை இப்படியே சும்மா விட்டுட்டா நீ கல்யாணம் பண்ணி பொண்டாட்டி பின்னால சுத்திகிட்டு இருப்பே அப்ப வீட்டுக்கு போக பிடிக்காம ரோட்டுல சுத்துற எங்களுக்கு யாருப்பா கம்பெனி கொடுப்பாங்க....

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : அரசியல் தலைவர்களை மட்டும் வைத்து காமெடி பண்ணினால் நல்லா இருக்காது அதனால் வலையுலக தலைவரான பாலகணேஷையும் அவரது கட்சியை சார்ந்த தளபதியான சீனுவையும் வைத்து காமெடி பண்ணலாம் என்று மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவு

விரைவில் காணமல் போன கனவுகள் ராஜி பண்ணும் அட்டகாசங்கள் பற்றிய பதிவு வெளிவரும்

20 comments :

 1. ஹா... ஹா....செமையா கலாய்ச்சிட்டிங்க...! அடுத்து சகோ ராஜியா... பாருய்யா.. எப்படியெல்லாம் ப்ளான் பண்றாங்க...! இந்தியா பக்கம் வரும் போது மொத்தமா சேர்ந்து " வரவேற்பு" பண்ணிடுவோம் எப்படி வசதி?

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவா அது எங்கே இருக்கு? அதுக்கு எப்படி வரனும்?

   Delete
 2. அட்டகாசமான காமெடி!
  ஆனாலும் அந்த கார்டூன் டூ மச் ப்ரதர்!

  ReplyDelete
  Replies
  1. கார்டுனை நகைச்சுவையோடு பார்க்கும் போது டூமச்சாக இருக்காது சகோ

   Delete
 3. ஆக மொத்தத்துல, கல்யாணம் ஆகாதவங்களை கல்யாணம் பண்ணிக்காதீங்கண்ணு சொன்னா, அவுங்க எப்பத்தான் வாழ்க்கையில கஷ்டத்தை அனுபவிக்க கத்துப்பாங்க?

  ReplyDelete
  Replies
  1. இந்த கால புள்ளைங்க பெரியவங்க சொல்லுறதை எங்க கேட்கப் போறாங்க.. அவங்களுக்கு பட்டாதான் தெரியும் அது தெரியும் போது அவங்களும் இப்படி நம்ம போலத்தான் அட்வைஸ் சொல்லுவாங்க ஹும்ம்ம் ஆண் ஜென்மம் இப்படி பொண்ணுகிட்ட சிக்கி கஷ்டப்படனும் என்று தலையில் எழுதி இருக்கு அதை யாரலும் மாத்த முடியாதுங்க

   Delete
 4. ஹா.... ஹா... கலக்கல்...

  மைண்ட் வாய்ஸ் செம...!

  ReplyDelete
  Replies
  1. மைண்ட் வாய்ஸ் செமயா இருக்கா என்ன? நீங்க என் மைண்டல இருக்கீங்க. ஞாபகம் வைச்சுங்க... ஆனா உங்களை கலாய்ச்சா நீங்க சீரியஸா எடுத்துக்குவீங்களோ என்று யோசனையா இருக்கு

   Delete
 5. எங்கண்ணா ரொம்ப சாது அவர் சைட்லாம் அடிக்க மாட்டார். இந்த பதிவை தூயா பார்த்தால் என் மாமாவை நீங்க எப்படி தப்பா சொல்லலாம்ன்னு சண்டைக்கு வருவா! அடுத்து நானா!? சிக்கிட்டேன் இனி மீளவா முடியும்!!?

  ReplyDelete
  Replies
  1. தூயா இந்த மாமாவிடம் சண்டைக்கு வர மாட்டா உங்க கிட்டதான் சண்டைக்கு வருவா....காரணம் அந்த மாமா சாது என்பதால்தான் ஒரக் கண்ணால் பார்க்கிறார் என்றுதான் எழுதினேன் ஆனா நீங்கதான் சைட்டு அது இதுன்னு எழுதி இருக்கீங்க சகோ

   Delete
 6. நகைச்சுவைச் சிறுவிருந்து படைச்சிருக்கீங்க.

  சிரித்துக்கொண்டே ‘நன்றி’ சொல்றேன்.

  ReplyDelete
 7. தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

  http://maatamil.com

  நன்றி

  ReplyDelete
 8. செம காமெடி .. செம கலக்கல்.

  ReplyDelete
 9. ஆத்தாடி மதுரைத் தமிழனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி !! அடுத்து ராஜியா ?..:))))
  ராஜிக்கூட மைண்ட் வாய்ஸ் ல் பேசப்போவது யாரு ?...:))) .யாரு பேசினால் என்ன
  பகிர்வு அருமை ! வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 10. மிகவும் ரசித்தேன்
  சொல்லிச் சென்ற விதம் மட்டுமல்ல
  கற்பனைக்கேற்ற பதிவர்கள் தேர்வும் அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஹா...ஹா...நல்ல காமெடி

  ReplyDelete
 12. நகைச்சுவை அளவோடு, வரம்பு மீறாமல் இருக்கிறது, அருமை.

  ReplyDelete
 13. மதுரைக்கரரே.... சீனுவிடம் வாத்தியார், “வரதட்சணை வாங்காமல்
  கல்யாணம் பண்ணிக்கொண்டால் மனைவியிடம் காலமெல்லாம்
  கஷ்டப்படாமல் வாழலாம்“ என்று சொன்னதை ஏன் மறைத்தீர்கள்.

  நீங்க அப்போ வாங்கியதற்காக இப்போ வாங்குகிறீர்களோ என்னவோ...

  ReplyDelete
 14. ரசித்தேன்.....

  இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு பேரும் வரலை போல!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog