உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, January 28, 2014

மோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்








#மோடியின் புளுகு மூட்டைகளை தோழர் நரேன் ராஜகோபாலன் ஆதாரத்தோடு நிரூபித்து வருகிறார்...மோடி குறித்தான ஊடகங்களின் பம்மாத்துகளுக்கும் (paid news), சம்பளத்துக்கு ஆள் வைத்து, இணையத்தில் பரப்பப்படும் பொய்யான செய்திகளுக்கும் இது போன்ற ஆதாரபூர்வமான கட்டுரைகள் சரியான சாட்டையடி.....நண்பர்கள் இதுபோன்ற கட்டுரைகளை முழுதும் படித்து, தங்களால் இயன்றளவு பரப்பவேண்டும்....

சு.பொ.அகத்தியலிங்




குஜராத் - மின்மிகை மாநிலம் - பின்னணியும் பின்விளைவும்
By Narain Rajagopalan
=======================================================
முதலில் மின்சார விநியோகமென்பது இரண்டு வகையாய் பிரிக்கப்படுகிறது. HT & LT. High Tension Power - 440 வோல்ட்ஸுக்கு மேலான பவர். இது தொழிற்சாலை, கனரக இயந்திரங்கள் இயக்கப் பயன்படுகிறது. நம் வீடுகளுக்கு வரும் மின்சாரம் Low Tension Power. LT - 220 வோல்ட்ஸுக்கு இணையானது. எல்.டியில் இயந்திரங்களை இயக்க முடியாது. எச்.டி யில் டிவி, ப்ரிட்ஜ் தீபாவளி பட்டாசாய் பொறியும். உருவாக்கப்படும் மின்சாரம் எல்.டியாகவோ, எச்.டியாகவோ மாற்றப்படுவது ட்ரான்ஸ்பார்மர் இடத்தில். அங்கிருந்து மின்கம்பங்கள், சின்ன ட்ரான்ஸ்பார்மர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இது தான் மின்சாரத்திற்கான ப்ரைமர்.

மோடி முதல்வராகப் பொறுப்பேற்றப் பிறகு செய்த முதல் காரியம் - விவசாயத்திற்கான மின்சார அளவீடை கணக்கெடுத்தது. நாள் முழுவதும் இலவச மின்சாரம் கொடுத்தாலும் விவசாயி பயன்படுத்துவது என்னமோ, நீர் இறைக்க இன்ன பிற சில்லரை வேலைகள் செய்ய தான். முழு நாளும் மின்சாரத்தின் பயன்பாடு வீடுகளுக்கு மட்டுமே இருக்கிறது. வயல்வெளிகளுக்கு இல்லை. இங்கிருந்து ஆரம்பித்தது லீலை. முதலில் விவசாயிகளுக்கு உத்தரவு போனது. இனிமேல் நள்ளிரவில் தான் வயல்வெளிக்கான மின்சாரம் தரப்படும். நள்ளிரவில் நீர் ஏற்றுதல், பாய்ச்சுதல் எல்லாவற்றையும் செய்து கொள்ளுங்கள். பகலில் இதற்கான எச்.டி மின்சாரம் வழங்கப்படாது. இதை சாக்காக வைத்து உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கிகளில் கடன் வாங்கி விவசாயத்திற்கென்று தனியாக பீடர் (feeder) லைன்கள் போடப்பட்டது. இந்தியாவில் விவசாயத்திற்கென்றே பீடர் லைன்கள் இருக்கின்ற ஒரே மாநிலம் குஜராத் தான்.

Sounds efficient, where is the problem ?

இந்தியாவின் மின்சாரத்தின் முக்கிய அமைப்பான Central Energy Agency (CEA) இதை முட்டாள்தனம் என்கிறது. எச்.டி லைன் போட ஒரு கி.மீக்கு ஐந்திலிருந்து ஆறு லட்சமும், எல்.டி லைன் போட மூன்றிலிருந்து நான்கு இலட்சமும் செலவாகும். இதில் திருட்டுகளும் அதிகம். இதை பராமரிப்பது தலைவலி. தமிழகமும், ஆந்திராவும் போன ஐந்து வருடத்தில் நாங்களும் களத்தில் குதிக்கிறோம், தனி பீடர் லைன்கள் போடுகிறோம் என்று மத்திய அரசை அணுகி 1,500 கோடிகள் கேட்டார்கள் நிதியமைச்சகம் மறுத்துவிட்டது. ஏனெனில் டெக்னிகல் அலசல்களில் இது ஒரு வேண்டாத செலவு என்று காரணங்களோடு விளக்கி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடாதல்லவா. மேலே சொன்ன கணக்கெடுப்பு தான் மோடியை மாற்றியது. கணக்கெடுத்தப் பிறகு மோடியின் உள்ளேயிருந்த குஜராத்தி வியாபாரி தெளிவாக விழித்துக் கொண்டார். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஏதோ ஒரு வகையில் மின்சார குறைபாடு உள்ளவர்கள் தான். இந்த குறைப்பாட்டினை சமன் செய்ய, குறைக்க தேசிய மின்சார க்ரிட்லிருந்து (National Power Grid) மின்சாரத்தை வாங்கிக் கொள்வார்கள். மோடி ஒரு குஜ்ஜு வியாபாரி. கணக்குப் போட்டுப் பார்த்தார். காலையில் இந்தியாவே வேலை செய்யும். மின்சார பயன்பாடு அதிகம். இரவில் பயன்பாடு குறைவு. ஆக காலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தேசிய மின்சார க்ரிட்டுக்கு குஜராத் அரசு விற்க ஆரம்பித்தது. ஏனெனில் லாபம் அதிகம். இரவில் பயன்படுத்தாத மின்சாரம் குறைவான விலைக்கு கிடைத்தது. ஆக அதிக விலைக்கு விற்று குறைந்த விலைக்கு வாங்கி efficiency-யை மேம்படுத்தலாம் என்கிற குன்சான திட்டம்.

மின்சார உற்பத்தியில் இருக்கக்கூடிய பெரும் சிக்கல், அதை தேக்கி வைக்க முடியாது. You can't store & regain the generated electricity. விளைவு அரசே மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கிறது என்று தெரிந்தவுடன், ஊரில் இருக்கக்கூடிய எல்லா நிறுவனங்களும் மின் தயாரிப்பில் இறங்க ஆரம்பித்தன. அதானி குழுமத்திற்கு வாரி வாரி சலுகைகளை இறைத்தார். அரை தசாம்சத்தில் தனியார் துறைமுகங்களில் ஆரம்பித்து உலகின் எல்லா அதிமுதலீடுகள் தேவைப்படும் அத்தனையும் குஜராத்திற்கு இடம் பெயர்ந்தன. ஏனெனில் அரசே தனியார் நிறுவனம் மாதிரி செயல் பட ஆரம்பித்தது தான் காரணம்.

தீபாவளி சமயத்தில், தீபாவளிக்கு முன்பாக எல்லா பட்டாசு கடைகளும் விலையை அதிகமாக சொல்லுவார்கள். தீபாவளி முடிந்த மூன்றாம் நாள் அதே பட்டாசு நாதியற்று கேட்கிற விலையில் கிடைக்கும். இந்தியாவில் மின்சாரமும் அப்படி தான். காலையில் ஆளாளுக்கு போட்டிப் போட்டு வாங்குவார்கள். விலையதிகம். இரவில் குப்புறப்படுத்து தூங்கும்போது வர்ற வரைக்கும் லாபம் என்பது தான் ரேட்டு. குஜராத்தி மூளை வியாபார மூளை. எதை எப்போது எந்த சந்தர்ப்பத்தில் விற்றால் அதிக லாபம் பெறலாம் என்பதை ரத்த நாளங்களில் சேமித்து வைத்திருக்கக் கூடிய ஜெனடிக்கல் பிறவிகள்

சிறிய நிலம் வைத்திருக்கிறாயா, விவசாயத்தை விட்டு வெளியேறு. நமக்கு உணவுப் பொருட்கள் வேண்டுமானால் மகாராஷ்டிராவிலிருந்து இறக்கிக் கொள்வோம். இதை சொல்லாமல், ஆனால் அரசு இயந்திரம் நிறைவேற்ற ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களில் குஜராத்தின் விளைநிலங்களின் பரப்பளவை கணக்கெடுத்தால் இது தெரியும். கொஞ்சம் கொஞ்சமாய் self sustainability போய், price arbitrage உள்ளே நுழைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே குஜராத்தின் மின்சார கட்டணம் அதிகம். அதற்கு காரணம் இது தான். தனியார் முதலாளிகள் அரசுக்கு விற்றது போக, Captive power selling ஆரம்பித்தார்கள். மின்சார விலை அதிகமாக இருந்தாலும், ஒரளவுக்கு தடையில்லாமல் கிடைத்ததால் நிறுவனங்கள் குஜராத் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். இதில் மோடி அரசின் வெப்ரெண்ட் குஜராத்தின் அட்டகாசங்கள் வேறு.

நிலக்கரியும், அலைகற்றையும் மட்டும் பொது சொத்தல்ல. நிலமும் கூட தான். முன்னிரண்டில் நடக்கும் கலவரமே குறைவான விலைக்கு அதை விற்றது. ஆனால் 5,000 கோடி முதலீடு என்கிற பவர்பாயிண்ட் பிரசண்டேஷனோடு போனீர்களேயானால், ஏக்கர் நிலம் 1000 ரூபாய்க்கு நீண்ட கால குத்தகைக்கு சர்வ சாதாரணமாக குஜராத்தில் கிடைக்கும். அகமதாபாத், பரோடா என விரிவடைந்து கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயிகளை விரட்ட ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாடு தொழில்துறை மாநிலமாக இருக்கிறதென்றால், இங்கே தண்ணீர் கிடையாது. 80களில் காயந்துப் போய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சபர்மதி ஆற்றில் இன்றைக்கு நீர் இருக்கிறதென்றால் அதற்கு நர்மதா அணை ஒரு முக்கியமான காரணம். நர்மதா அணையின் உயரத்தினை ஒரு அடி உயர்த்தினால், எத்தனை குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள், எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும், எவ்வளவு கோடிகள் தரவேண்டும், அதில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பது அத்தனையும் குஜராத்தின் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தலைகீழ் பாடம். ஆக இங்கேயும் கூத்து நடந்ததால் தான் மேதா பட்கர் முதற்கொண்டு ஆயிரத்தெட்டு தன்னார்வல நிறுவனங்கள் குஜராத்தில் பெருக ஆரம்பித்தன. சமூக சிக்கல்கள் இல்லாத ஊராய் கற்பிதம் பண்ணும் ஒரு மாநிலத்தில் இத்தனை தன்னார்வல நிறுவனங்களுக்கு என்ன வேலை ?

இந்த நிறுவனமயமாக்கலில் இன்னொன்றும் நடந்தது. பெரு நிறுவனங்கள் மின்சாரம் தாராளமாக கிடைக்கிறது என்கிற காரணத்தால் முழுக்க முழுக்க automate செய்யப்பட்ட விஷயங்களை உள்ளேக் கொண்டு வந்தார்கள். பலன்: வேலை வாய்ப்பு, முதலீடு அளவிற்கு சரி விகிதமாய் ஏறவில்லை. உ.தா டி. சி. எஸ் கிட்டத்திட்ட 2 இலட்சம் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது. அவர்களின் வருடாந்திர வருவாய் சற்றேறக்குறைய $15பில்லியன்கள். ஜாம் நகரில் முகேஷ் அம்பானியால் முழுக்க முழுக்க மெஷின்மயமாக்கப்பட்டிருக்கின்ற ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 25,000. (2,500 என்று விக்கி சொல்கிறது. நேரடி / மறைமுக வேலைவாய்ப்பு என்பதை 25,000 என்று கொள்ளலாம்) வருவாய் $100 பில்லியன்களை தாண்டலாம். அதுவும் ஒரு பைசா உள்ளூர் மக்களுக்கு வராது. ஏனெனில் ஜாம்நகர் ஏற்றுமதி கேந்திரம். பில்லியன் கணக்காய் சம்பாதிப்பது முகேஷ் அம்பானி குடும்பத்திற்கும் + ஷேர் ஹோல்டர்களுக்கும். இது தான் மோடி முன்வைக்கும் “வளர்ச்சி”. Crony Capitalism என்று உலகமெங்கும் உச்சரிக்கபடும் சொல்லின் உள்ளூர் உதாரணம். இதை தான் மோடியின் developmental plan என்பது ஒரு டூபாக்கூர் மாடல் என்பதை இரண்டொரு நிலைத்தகவல்களில் முன் வைத்திருந்தேன்.

18,000 கிராமங்களுக்கு மின்சாரம் போயிருக்கிறது என்று மோடி ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். கொஞ்சம் ஆழ்ந்து நோண்டினால், இதில் கிட்டத்திட்ட 17,000 கிராமங்களுக்கு கேஷுபாய் படேல் காலத்திலேயே இணைப்புக் கொடுத்தாகிவிட்டது. பத்தாண்டு காலத்தில் மோடி நியாயமாய் செய்தது 1,000 கிராமங்களுக்கு இதை நீட்டித்ததே. கையாலாகாத முதல்வர் என்று சொல்லப்படும் ஆந்திராவின் கிரண் குமார் ரெட்டி இதை விட அதிகமாய் சாதித்து இருக்கிறார்.

24 x 7 மின்சாரம் என்று மீடியா மாயாஜாலம் செய்யும் மோடி, ஏன் அகமதாபாத்தில் வியாழக்கிழமை தோறும் Power Holiday வைத்திருக்கிறார் ? வியாழன்னன்று தொழிற்பேட்டையில் இருக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாது. எச்.டி. மின்சாரம் வராது. இதே போல வதோதரா, பரோடா, சூரத், கச் என நீளும் மாவட்டங்களில் வாரத்தில் ஒரு நாள் இது இன்று வரை நடக்கிறது. மோடி ‘ஆசிர்வாதம்’ வழங்கிய அதானி குழுமத்தின் மொத்த கடன் 55,000 கோடிகளுக்கு மேல. வட்டி மட்டுமே 3500 கோடிகள். கட்டமைப்பினை தலைகீழாக புரட்டிப் போடுகிறேன் பேர்வழி என்று சொன்ன அரசின் கீழ் வந்த தனியார் நிறுவனங்களின் இலட்சணம் இது தான். ஆக 24 x 7 மின்சாரம் என்பது வசீகரமான பொய். இது குஜராத்தில் நிகழவில்லை. நிகழ்ந்ததாக பறை சாற்றுவது அபத்தம். 2011 சென்சஸ் டேட்டா இன்னும் ஒரு படி மேலே போய் நகரம் மற்றும் கிராமங்களில் இன்னமும் லைன் கூட இழுக்கப்படாத வீடுகள் என்று பெரிய எண்களை சொல்கிறது. இது தான் நிதர்சனம்.

பத்து வருடங்களில் எதுவுமே நடக்கவில்லையா ?

கண்டிப்பாக நடந்திருக்கிறது. மோடி எதுவுமே செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், மோடி முன்வைக்கின்ற அளவுக்கு “எதுவுமே” நடக்கவில்லை. கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகளில் 10-13% குறைவான ஒப்பந்தங்களே implementation நிலைக்கு போயிருக்கிறது (இந்திய சராசரி 9 -11%) விவசாயப் போராட்டங்கள் மாநிலங்கள் முழுக்க அதிகமாகி இருக்கின்றன. நீங்கள் கூகிளிட்டு தேடினால் இது எதுவுமே கிடைக்காது. ஏனெனில், சர்வாதிகார அரசுகள் ஊடகங்களை அடக்கி வைத்துப் போல, மோடிக்கு பின்னிருக்கும் Friends of BJP கும்பல், இணைய சாதுர்யத்தில் சமர்த்தர்கள். கூகிளின் அல்காரித்ததில் எதைக் கொடுத்தால் எப்படி லிஸ்டாகும் என்பதை தண்ணீர் பட்ட பாடாய் தெரிந்து வைத்திருப்பவர்கள். குஜராத் கலவரத்தை எப்படி கூகிளில் தேடுவீர்கள். “gujarat riots" என்று தானே. ஆனால் கூகிளில் வரும் ’குஜராத் ராயாட்ஸ்.காம்மிற்கு’ போனீர்களேயானால் (அது தான் முதலில் வரும்) மோடி குற்றமற்றவர், அது கலவரமே இல்லை அது ஒரு retaliation, 2000 முஸ்லீம்கள் சாகவேயில்லை என்கிற அளவிற்கு மூளை சலவை செய்வார்கள். இது தான் மோடியின் நிஜமான வெற்றி. ஆழமாய் யோசிக்க தெரியாத, யோசிப்பதை தவிர்க்கின்ற பொதுஜனம் இண்டர்நெட்லயே சொல்டான்பா என்று மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது என்கிற கோஷத்தை முன்னெடுப்பார்கள்.

மின்சார தயாரிப்பு என்பது அதிகமாகி, நிறுவனங்கள் ஆட்டோமேட் செய்து, உள்ளூர் வேலை வாய்ப்பினைக் குறைத்து, விவசாயத்தை நாசம் செய்து, சிறு விவசாயிகளை விரட்டி, உள்ளூரில் பெருநிறுவனங்கள் தவிர்த்து யாருமே பிழைக்க இயலாத சூழலை உருவாக்கி தான் இந்த ‘வளர்ச்சி’ சாத்தியமாகி இருக்கிறது. இதை முதலில் ‘வளர்ச்சி’ என்று ஒத்துக் கொள்ள முடியுமா ?

ஏன் குஜராத்திலிருந்து ஒரு மென்பொருள் நிறுவனம் கூட வரவில்லை ?
ஏன் குஜராத்தின் லோக்கல் ப்ராண்ட் என்று ஒன்றையும் நம்மால் சொல்லிக் கொள்ள முடியவில்லை ? (அமுல் விதிவிலக்கு - அதுவும் குரியன் இருந்தவரை. இப்போது போர்ட் ரூம் சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது)
குஜராத்தில் இவ்வளவு வளமிருக்கும்போது ஏன் குஜராத்திகள் ஆப்ரிக்காவிலும், லண்டனிலும், கனடாவிலும் போய் செட்டிலாகிறார்கள் ?
இத்தனை சிறப்பான ஆட்சி அமைந்திருக்கும்போது ஏன் CAG குஜராத் அரசை காறித்துப்புகிறது ?
இவ்வளவு முதலீடுகள் இருக்கும்போது ஏன் அரசின் கடன் உயர்ந்துக் கொண்டேப் போகிறது ?
ஏன் எல்லா சமூக அளவீடுகளிலும் (கல்வி, சுகாதாரம், மருத்துவம்) குஜராத் டாப் 5 இந்திய வரிசையில் இல்லை ?

எல்லாவற்றுக்குமான ஒரே பதில். மோடி நம்புவது ஒன்றினை தான். பொருளாதார பெருக்கம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்பதை தான். இதை தான் வளர்ச்சியாக அவர் முன் வைக்கிறார். His stanch belief is that Money can solve all the world's problem. அது ஒரு வேளை உண்மையெனில் அமெரிக்கா உலகத்திலேயே சுபிட்சமான சொர்க்கமாக இருந்திருக்க வேண்டும். இத்தனை வேலைவாய்ப்பின்மை ஏன் ? இத்தனை ஏற்றத்தாழ்வுகள் ஏன் ? ஏன் Occupy Wall Street நடக்கிறது ? அமெரிக்க கேப்பிடலிஸம் ஒரு அபத்தம் என்பதை அமெரிக்காவின் 1% பெருந்தனவந்தர்கள் கூட லேசாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஒற்றை அதிகாரமும், மிதமிஞ்சிய போதையும் தளும்பும் மோடியிடத்தில் அந்த புரிதலை எதிர்பார்ப்பது கடினம்.

இந்த ‘வளர்ச்சியை’ தான் நாடு முழுக்க பரவலாக்க மோடியின் ஆதரவாளர்கள் கெஞ்சுகிறார்கள். இந்த மின்சார உற்பத்தி அதன் பின் விளைவுகள், உள்ளூர் பொருளாதாரம் எப்படி நாசமாய் போனது என்பதுப் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஏனென்றால் மீடியாவுக்கு தேவை ஒரு பாஸிடிவ் செய்தி; ஊடகங்களுக்கு தேவை கொஞ்சம் எண்கள்; மக்களுக்கு தேவை ‘அவரு வந்தா நிலமை மாறிடும்’ என்கிற போதை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மூதோர் வாக்கு. மின்சாரம் தயாரிப்பதனாலேயே ஒரு மாநிலம் எல்லாவற்றையும் வென்று விட்டது என்பது முட்டாள்தனம். There is always an equal & opposite reaction to Every action. இந்த பபிள் வெடித்து சிதறும் காலம் வெகு தொலைவில் இல்லை.


தீக்கதிர் நாளிதழில் வேலை பார்க்கும் திரு. சு.பொ.அகத்தியலிங் அவர்கள் இதை தனது கூகுல் ப்ளஸில் பதிந்து இருந்தார். அவரது அனுமதியுடன் இது இங்கு பதியப்படுகிறது.

அன்புடன்
மதுரைத்தமிழன்.




14 comments :

  1. விழிப்புணர்வு பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. http://www.vibrantgujarat.com/images/pdf/Manufacturing-Sector-Profile.pdf

      Kirloskar Brothers Limited , Rliance, Tata, Top chemical, fertilizers & chemical companies. Leading Textile etc

      Rajkot is well known throughout the world for its casting and forging industries. Over the last few years, it has started to play an increasingly important role in the complex supply chains of many global engineering companies that make products such as electric motors, automobiles, machine tools, bearings, etc.[citation needed]
      There are about 500 foundry units in Rajkot.

      Rank Conglomerate Gross Income
      1 Adani Exports 123,428
      2 Indian Petrochemicals Corporation 86,050
      3 Vishal Exports Overseas 38,776
      4 Gujarat State Fertilisers and Chemicals 29,401
      5 Gujarat Narmada Valley Fertilisers 25,262
      6 Nirma 19,405
      7 Arvind Mills 16,145
      8 Torrent Power AEC 14,912
      9 Cadila Healthcare 14,881
      10 Gujarat Ambuja Exports 12,978
      11 Micro Inks 10,877
      12 Gujarat Alkalies & Chemicals 9,719
      13 Torrent Pharmaceuticals 9,685
      14 Sintex Industries 8,832
      15 Atul 8,406
      16 Gujarat Industries Power 8,009
      17 Gujarat Gas 7,752
      18 Alembic 6,514
      19 Gujarat Mineral Development Corporation 5,131
      20 Nova Petrochemicals 5,016
      21 Sterling Biotech 4,850
      22 LANXESS ABS 4,122
      23 Narmada Chematur Petrochemicals 3,660
      24 Gujarat Fluorochemicals 3,021

      Delete
  2. மோடியை ஆதரிப்பவர்கள் அவர் நிர்வாககத் திறறைமக்காக அல்ல என்று அவர் அடிப்பொடிகள் அல்லக்கைகளுக்கு நன்றாகவே தெரியும்; அவர் ஒரு RSS இந்து வெறியன் என்ற ஒரே காரனத்திற்கவே அவரை ஆதரிக்கிறார்கள்.

    அயோத்திக்கு முன்பு தமிழ் நாடு எப்படி அமைதிப் பூங்காவா க இருந்தது என்று அறியாத தற்குறிகள்--இன்றைய இளைய தலைமுறை!

    ReplyDelete
  3. சூப்பர். மோதியின் சித்து விளையாட்டுகளைப் பற்றி ஏற்கனவே நான் அறிந்துவைத்திருந்தாலும் இந்த கட்டுரை அதை மேலும் உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ்காரன் செய்வதைக் கூட வெளியில் சொல்லிக்கொள்ள தெரியாதவன். பாஜகக்காரன் செய்யாததையும் செய்ததாக சொல்லிக்கொள்வதில் வல்லவன். பேசத் தெரிந்தவர் மோடி. நம்முடைய கழகங்களும் மக்களைக் கவர்ந்தது பேச்சுத்திறனில்தானே அதேதான் இப்போது இந்திய அளவில் நடக்கிறது. நடக்கட்டும். பட்டால்தான் தெரியும் என்பார்கள். ஐந்து வருடம் அவர்கள் ஆளட்டும். மக்கள் அனுபவித்து தெரிந்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
  4. குஜராத்தைப் பற்றி ஒரு விரிவான அலசல்.

    ReplyDelete
  5. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=QHS_eSoOBzg
    ராகுல் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையென்றால், மோடி பாதியிலேயே ஓட்டம் பிடித்துவிட்டார்.
    எல்லோரும் தாத்தாவிடம் டியூஷன் போனால்தான் மிடியாவை எப்படி ஹான்டில் பண்ணுவது என்பது தெரியும்.

    ReplyDelete
  6. ஹாஹாஹா. ஒங்களுக்கு காமெடி பண்ண வேற மேட்டரே கெடக்கலயா.

    //பத்து வருடங்களில் எதுவுமே நடக்கவில்லையா? கண்டிப்பாக நடந்திருக்கிறது. மோடி எதுவுமே செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் மோடி முன்வைக்கிற அளவுக்கு எதுவுமே நடக்கவில்லை.//


    //என் சம்சாரம் அழகாயில்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா இவளவிட என் மச்சினி அழகாயிருக்கா.//

    இரண்டுக்கும் ஆறு வித்யாசங்கள் இருக்கு. சரியா கண்டுபிடிச்சு எளுதரவங்களுக்கு ஒரு தீக்கதிர் இலவசம்.

    கே. கோபாலன்

    ReplyDelete
  7. ஓகோ... இத்துல இவ்ளோ உள்குத்து கீதாபா...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
  8. ஆஹா மோடி இப்பிடிபட்ட ஆளா ? ஆக எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானா ?!

    ReplyDelete
  9. நல்லப் பதிவு.. எந்த அரசியல் வியாதியையும் நம்ப முடிவதில்ல..!! இந்தியாவின் நிலைமை என்ன ஆகுமோ?

    ReplyDelete
  10. சிதம்பரம் மற்றும் காஂக்ரெஸ் M,P 25 ஆண்டுகள் தமிழ் நாட்டிலிருந்து தன்னை அனுப்பிய தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன ?

    மத்திய அரசின் சார்பில் -

    பெரிய தொழிற்சாலைகள் எதாவது … ?
    விசேஷ பொருளாதார மண்டலங்கள் ….?
    பெரிய துறைமுகங்கள் …. ?
    மின் உற்பத்தி நிலையங்கள் …. ?
    சாலைக் கட்டமைப்பு வசதிகள் … ?
    பாதுகாபுத் துறை சார்பில் எதாவது தொழிற்சாலைகள் ..?
    ரெயில்வே துறை சார்பில் எதாவது தொழிற்சாலகள் .. ?
    மத்திய பல்கலைக்கழகங்கள் …. ?
    மத்திய அரசின் சார்பில் ஜிப்மர் போன்ற
    பெரிய ஆராய்ச்சி மருத்துவ மனைகள் .. ?

    - ஒன்றுமே கிடையாது.

    சரி தமிழ் நாட்டின் பெரும் தலைவலியாக உள்ள -

    காவிரி நதி நீர் விவகாரம் -
    முல்லைப் பெரியாறு விவகாரம் -
    மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு
    மின்சாரம் கொண்டு வர வழி -வசதி …
    ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசிலிருந்து உதவி -

    - எதுவுமே இல்லை -

    குறைந்த பட்சம் ரேஷனில் ஏழைகளுக்கு விற்கப்படும்
    மண்ணெண்ணையாவது மத்திய தொகுப்பிலிருந்து
    குறைக்கப்படாமல் சீராகக் கிடைக்க வழி -

    உம் ஹூம்.

    பிறகு என்ன ................ அங்க இருக்கணும்....???

    60 years for Congress and do you need Rahul to be PM

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் பணமே இல்லை என்றால் சிதம்பரம் மீது குறை கூறலாம்.

      மிக்ஸி, கிரைண்டர் (மின் விசிறி தேவையானது) மடிக்கணினி, உணவு, நீர் (இவை எல்லாம் திருமங்கலம் பார்முலா இல்லாமலே குறைந்தது 4 வோட்டுகள் பெற்றுத்தரும்) எல்லாம் வழங்கும் அளவுக்கு பணவசதி பெற்ற அரசு இருக்கும் மானிலத்தில் சிதம்பரத்திடம் கேட்டுப் பெற என்ன இருக்கிறது. காவிரி நீர் போன்ற விசயத்தில் நமது மானிலக் கட்சிகளே ஒன்றை ஒன்று குறை சொல்லிக் கொள்ளும்போது சிதம்பரம் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். சிரியுங்கள் - நமது மாணவர்களிடம் மடிக்கணினி இருக்கிறது. கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை.

      மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்றவற்றை உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்தவுடனே அறிவித்த தற்போதைய அரசுடன் நமது கம்யூனிஸ்ட் தோழர்கள் கூட்டணி சேரப் போகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நமது முதல்வர் பிரதமர் ஆகப் போகிறார்.

      சாலைகளில் கட்சிச் சின்னங்கள் இருந்தபோது நேர்மை இருந்தது. தலைவர்கள் படம் வந்தபோது அது அழிந்தது. B J P யும் மோடியை முன்னிறுத்தி இதைத்தான் செய்கிறது.

      மற்ற சாதி, மதக் கட்சிகளைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை.

      பிறகு என்ன, ஒரு ஹிட்லர் அங்க இருக்கணும்

      கோபாலன்

      Delete
  11. முதலில் என்ன தலைப்பில் எதைப்பற்றி மதுரை தமிழன் எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்... விவாதம் மோடியைப் பற்றி!.

    விவாதத்தை திசை திருப்ப..சிதம்பரம் ராகுல் இங்கு தேவையில்லை...
    மோடியைப் பற்றி மதுரை தமிழன் கூறிய கருத்துக்கள் மேல் விவாதம் செய்யுங்கள்...அது தான் முறை!

    வேண்டும் என்றால், சிதம்பரம் ராகுல் பற்றி அவர் பதிவு போட்டால் அப்ப வந்து ,,இப்ப கூறிய கருத்துக்களை சொல்ல்லுங்கள்..

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 384 ) அரசியல் ( 247 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 111 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 81 ) ஜெயலலிதா ( 72 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 31 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) தமிழகம் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog