உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, January 21, 2014

ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்


ஆண்களே நீங்கள் கிச்சனுக்கு புதுசா ? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்
 


பெண்கள் எல்லாம் தெரிந்தவர்கள் அதனால்தான் இதை நான் ஆண்களுக்கு என்று சொல்லி இருக்கிறேன்
01) மனைவிக்கு சாப்பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும். இப்படி செய்யாமல் இருந்தால் மாலையில் உங்கள் மனைவி உங்களை கிழிச்சு போடுவாங்க


02)முட்டாள் தனமாக கஷ்டப் பட்டு   முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்கவேண்டாம், கீரையை ஒரு துணியில் சுற்றிவைத்தால் மறுநாள் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சமையல் செய்து விடலாம்.

03.)வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும். இந்த டிப்ஸை மட்டும் உங்க மனைவியிடம் சொல்ல வேண்டாம். இதை அவங்க கற்றுக் கொண்டால் உங்கள் தோலை உறிக்க இந்த முறையை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது

04.) பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும். ஆனா உங்க பொண்டாட்டி ரொம்ப குழைஞ்சு குழைஞ்சு பேசுறான்னா அவங்க வீட்டு சைடில் இருந்து யாராவது வரப் போறாங்கன்னு அர்த்தமுங்க ஜாகிரதையாக இருந்துகுங்க


05) பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும். அதற்க்காக உங்க பொண்டாட்டி கை மிருதுவாக இப்படி ஏதும் செய்து விடாதீர்கள்

06)சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் மனைவி பூரிக்கட்டை கையில் எடுத்தால் உங்க உடம்பு பூபோல மாறிவிடும்

07)சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும். இந்த முறையை பயன்படுத்தி உங்கள் மனைவி  வாயை அடைக்க முயற்சிக்க வேண்டாம். அது நடக்காத காரியம்

08)துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லதுபுளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும். ஆனால் உங்கள் மனைவி அடித்து உங்கள் உடம்பில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் போக வாய்பில்லை

09)தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமானசூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும். தேங்காய் நார் இல்லையென்றால் வீட்டில் கொட்டிக் கிடக்கும் மனைவியின் முடியை வைத்து தேய்க்கலாமா என்று எல்லாம் கேட்க கூடாது

10)கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.  மனக்குறையை அல்லது கறையை போக்க இந்த முறை பயன் படாதுங்க

11)சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு அல்லது ஒரு எலுமிச்சம்பழத்தை, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும். இந்த முறையை குக்கர் சைஸில் கருப்பாக இருக்கும் உங்கள் மனைவிக்கு உதவாது

12)உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும்.  தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.

13)போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும். உங்கள் இன்லாவை பிடிக்கவில்லையென்றாலும் இம் முறையை பயன்படுத்தி உலகைவிட்டே ஒடவிடலாம்.

14) 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள். உங்க மனைவி உங்களை வெறுப்பேத்தினால் இதற்கு பதிலாக சுகரை கலந்து அவர் பெட்டுக்கு அருகில் தெளித்து விடுங்கள்.மெயிலில் வந்த டிப்ஸை எனது வழியில் மாற்றி தந்து இருக்கிறேன். உபயோகமாக இருக்குமென நினைத்தால் பயன்படுத்தவும் இல்லையென்றால் உங்கள்  துணைவிக்கு சொல்லித்தரவும் ஆனால் என் விலாசத்தை மட்டும் எந்த பெண்ணிடமும் தந்துவிட வேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

35 comments :

 1. பயனுள்ள பகிர்வு. எல்லாம் சரி உங்க முகவரி தந்தால்தான் என்ன!?

  ReplyDelete
  Replies

  1. தந்தால் என்னவா? பூரிக்கட்டைக்கு பதிலாக உலக்கையை தூக்கிட்டு வந்திடுவாங்க

   Delete
 2. அடடா...! இத்தனை இருக்கா...? உண்மையிலே பயனுள்ள குறிப்புகள்... நன்றி...

  உங்களின் கருத்துக்கள் வழக்கம் போல் கலகல... கலக்கல்...!

  ReplyDelete
  Replies
  1. பயனுள்ள குறிப்பு யாருக்கு உங்களுக்காக இல்லை உங்க வூட்டு அம்மாவுக்கா?

   Delete
 3. வீட்ல கிச்சன் உங்க இன்சார்ஜ்தான் போல... சும்மாவே மெயில்ல வந்த தகவல்னு பில்-டப்பு...! சரி சரி நீங்க சொன்னதை எங்க வீட்லயும் சொல்லிட்டேன்! கணவர்களுக்கு உபயோகமான தகவலை சொன்னதுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கணவ்ருக்கு உபயோகமான தகவல் என்றால் சரி ஆனால் கணவர்களுக்கு என்று சொல்லும் போது எங்கோ உதைக்குதே? ஹீ.ஹீ

   Delete
 4. எல்லாமே சுட்ட டிப்ஸா இருக்கே?
  சுடாத டிப்ஸ் ஸ்டாக் இல்லையா ?
  (சுட்ட பழம் சுடாத பழம் ஞாபகப்படுத்திக் கொள்ளவும் )

  ReplyDelete
  Replies
  1. இது கிச்சன்ல சுட்ட சிப்ஸ் ஸாரி சிப்ஸ். எங்க கிச்சன்ல சுட்டதுதான் கிடைக்கும் ஹீ.ஹீ

   Delete
 5. நல்லா தொியுதுங்க நீங்க தான் வீட்டில் எல்லாம் செய்றிங்கன்னு சரி சரி எங்க வீட்டிலும் படிக்க சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்தீங்களா வீட்டுல நாந்தான் எல்லாம் என்று உங்களுக்கு கூட தெரிஞ்சு இருக்கு? ஆனா என் மனைவிக்கு தெரியலை பாருங்க? என்ன அநிஞாயம்

   Delete
 6. இதுல என்ன எழுதிருக்குன்னு முழுக்கப் படிச்சு வைங்க. இதுல போட்டிருக்க்ற சாமானல்லாம் வாங்கிட்டுவர கடைக்குப் போய்ட்டிருக்கேன் அப்டீன்டு என் சம்சாரம் பையை எடுத்துட்டு ஓடிட்டா.

  இனிமேல் இதுபோல தகவல்களை வெளியிடும்போது ஆண்களுக்கு மட்டும் என்று குறிப்பிடவும். நாங்க சுதாரிச்சுக் கிடுவோம்.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. நிறைய பதிவில் ஆண்களுக்கு மட்டும் என்று போட்டேனுங்க ஆனா அதை முதலில் வந்து படிக்கிறவங்க பெண்களாகத்தான் இருக்குறாங்க என்ன செய்ய?

   Delete
 7. Men who say women belong to the kitchen obviously do now know what THEY(women) will do with them in the bedroom. (entering with poorikattai?)

  இதெப்டிருக்கு.

  கே. கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா உங்கள் கருத்து படிக்க அருமையாய் இருக்கு ஆனால் அப்படி ஏதும் உண்மையில் நடந்துவிடுமோ என்று பயமா இருக்குங்க...இப்படி எல்லாம் என்னை ஏன் பயமுறுத்துறீங்க

   Delete
 8. உங்க அனுபவம் எனக்கு புதமையா இருக்கு.எனக்கு பொண்டாட்டி,குட்டி எதுவுமே இல்லையே!

  ReplyDelete
  Replies

  1. பொண்டாட்டி குட்டி இல்லைன்னா என்ன நமக்கு வயிறு ஒன்னு இருக்கே அதனால் மேலே சொன்ன டிப்ஸை பயன்படுத்தவும்

   Delete
 9. கட்டக்கடசியா ஒரு டிப் கொடுத்தெபாருபா "சுகர கலந்து பெட்டுக்கு அருகே..."ன்னு, நெஞ்ச தொட்டுடிச்சு!
  நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. சுகர் இல்லைன்னா கவலைபடாதீங்க் நீங்க கிட்ட படுத்துகுங்க ஏன்னா நீங்க ரொம்ப ஸ்வீட்டனவராச்சே

   Delete
 10. பயனுள்ள குறிப்புகள் போலத்தான் இருக்கு
  நாளைக்கு முருங்கைக் கீரையைச் சோதனைக்கு
  செய்துபார்த்தபின் பிறவற்றை
  செய்யலாம் என நினைக்கிறேன்
  எல்லாம் ஒரு சுதாரிப்புத்தான்...

  ReplyDelete
  Replies
  1. பாத்தீங்களா பெரியவங்கன்னா பெரியவங்கதான் எள்ளு என்றால் எண்ணையாய் இருக்கீங்க

   Delete
 11. வீட்டுக்குறிப்புக்கள் அருமை! உங்க கருப்பு கலர் டிப்ஸ் கலக்கலோ கலக்கல்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இது தான் எனக்கு தெரியுமே இதற்கு பதிலாக உருப்படியாய் ஏதாவது போடுங்க என்று சொல்லுவிங்களோ என்று பயந்து கிட்டு இருந்தேன்

   Delete
 12. நல்ல டிப்ஸ்..... பயன்படும்! [நான் டிப்ஸ் மட்டும் தான் சொன்னேன்! சிவப்பு வண்ணத்தில் உள்ளவற்றை ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஸ்மார்ட்டானா ஆளுங்க ஹீ.ஹீ

   Delete
 13. நல்ல குறிப்புக்கள்...

  ReplyDelete
  Replies
  1. இதை பயன்படுத்தி பாருங்க. அதன் பின் உங்கவீட்டுல அன்பு மழைதான் பொழியும்

   Delete
 14. Replies
  1. இதை பயன்படுத்தி பாருங்க. அதன் பின் உங்க வூட்டு அம்மா என் அத்தான் என்னைத்தான் என்று பாட்டுபாடி மகிழ்வார்கள்

   Delete
 15. இந்த வருடத்தின் கிச்சன் கில்லாடி விருது பெரும் தோழர் மதுரை தமிழனின் ஈ மெயில் முகவரி இல்லாத காரணத்தால் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை இங்கேயே தெரிவித்துக்கொள்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. இந்தாங்க இமெயில் ஐடி avargal_unmaigal at yahoo.com. மறக்காம பரிசு தொகையை அனுப்பிடுங்க

   Delete
 16. ஆமா, இந்தப்பதிவுக்கும், முதல் புகைப்படத்துக்கும் என்னங்க தொடர்பு????

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இவ்வளவு அப்பாவியா இருக்குறீங்க... சரி எல்லோரும் கண்ணை மூடிக் கொளுங்க... நீங்க உங்க காதை காட்டுங்க. அது வந்துங்க கிச்சன்ல குக்கிங்க் பண்ணி சூடான நாம இப்படி மனைவி பெட்ல இருப்பதை பார்த்தா கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்குமுங்க அது இலைமறைவா சொல்ல முயற்சித்து இருக்கேனுங்க அவ்வளவுதான்

   Delete
 17. இப்பத்தான் புரியுது, அடிக்கடி நீங்க ஏன் பூரிக்கட்டையால அடி வாங்குறீங்கன்னு.... இப்படி உங்க மனைவி, நீங்க செய்யுற வேலைக்கு டிப்ஸ் மேல டிப்ஸா கொடுத்தும், நீங்க ஒழுங்கா அந்த டிப்ஸ் எல்லாம் கடைப்பிடிக்காததுனால தானே.
  இப்படி உங்க மேல தப்பை வச்சுக்கிட்டு, மனைவியை குறை சொன்னா என்னங்க அர்த்தம்!!!!

  ReplyDelete
  Replies
  1. ஒரு நாளைக்கு ஒரு டிப்ஸ் தந்தா ஒகே ஆனா டிப்ஸுக்கு மேலே டிப்ஸா கொடுத்தா மீ பாவங்க புள்ளைக் குட்டிகாரனுங்க வயசு வேற ஆயிடுச்சுங்க எவ்வளவுதான் ஞாபகம் வைச்சுகிறது

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog