உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, January 15, 2014

அரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா? : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்!அரசியல் களம் : மக்களுக்கு நன்மை செய்தது யார் காங்கிரசா, பா.ஜ.,வா, 3வது அணியா? : ஒரே மேடையில் பல்வேறு கட்சி தலைவர்கள் மோதல்


அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக உள்ளவர்கள், விழா மேடைகளில், ஒன்றாக பங்கேற்பதே அதிசயம். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, "துக்ளக்' வார இதழின், 44வது ஆண்டு விழாவில், பா.ஜ., காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்றனர். தங்களின் கட்சி பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும், அவர்கள் முன்வைத்த வாதங்கள் இதோ:

இல.கணேசன் - பா.ஜ., தேசிய குழு உறுப்பினர்: காங்கிரசின், 10 ஆண்டு கால ஆட்சியில், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஊழல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் போன்றவையே நிறைந்திருந்தன. ( ஆமாம் இவர்கள் ஆட்சி செய்து இருந்தால் ஊழலே பண்ணி இருக்கமாட்டார்கள், இவர்கள் மிக பரிசுத்தமானவர்கள். ஆண்டவரே இவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதத்தை தாருங்கள் ) இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் வாயே திறக்கவில்லை.( திருடுபவன் வாயை திற்ந்து பேசுவானா என்ன இது கூட இவருக்கு தெரியவில்லையே ) காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு கட்டுப்பட்டே பிரதமர் செயல்பட்டார். ( ஆமாம் மோடி வந்த மட்டும் என்னவாம் அவர் ஆர் எஸ் எஸ் இக்கு கட்டுபபட்டுதானே செயல்பட முடியும் )நாட்டின் எல்லைப் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. இலங்கை ராணுவத்தால், தமிழக மீனவர்கள், நாள்தோறும் கைது செய்யப்பட்டாலும், அதைத் தடுக்க, மத்திய அரசு தவறி விட்டது. உள்நாட்டிலும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது. லோக்சபா தேர்தலில், வளர்ச்சியை முன்னிறுத்தி, ஓட்டு கேட்கிறோம். குறிப்பாக, தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முக்கியத்துவம்( கர்நாடாகவில் பாஜ ஆட்சி செய்த போது நதி நீர் இணைப்புக்காக என்ன செய்தது) அளிப்போம். பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, நரேந்திர மோடி, குஜராத்தில், பல விதத்திலும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ( வெளினாட்டில் வாழும் குஜராத்திக்கள் மேலும் அதிக அளவுசுரண்ட வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்தார். நீங்கள் சொல்வது உண்மையென்றால் அதே திட்டத்தை பாஜா ஆளும் பிரமாநிலங்களுக்கு அறிமுகப்படுத்தி  வளர்ச்சியை ஏற்படுத்தி காண்பித்து இருக்கலாமே அது ஏன் முடியவில்லை )கிராமங்கள்தோறும் குடிநீர், தடையற்ற மும்முனை மின்சாரத்தை அவர் வழங்கியுள்ளார்.குஜராத்தில், மதுக் கடைகள் இல்லை.( ஆனால் கள்ளச்சாரயம் உண்டாமே அதை பற்றி ஏன் சொல்லவில்லை ) ஆனால், திட்டங்கள் மூலம், மானியம் அளிக்கப்படுகிறது.( ஆமாம் முதலாளிகள் மேலும் லாபம் சம்பாதிக்கதானே மாணியம் தரப்படுகிறது ) அரசு அலுவலகங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ( அலுவலகத்தில்தான் வாங்குவது ஒழிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் அலுவலகத்தின் வெளியில் வாங்குவது ஒழிக்கபடவில்லையாமே )ஆட்சி நிர்வாகத்தில், அரசியல் கட்சியினரின் தலையீடு கிடையாது. ( ஆனால் RSS இயக்கத்தின் தலையீடு மட்டும் இருக்கும்தானே )எனவே, மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் மீது, மதவாத முத்திரையை குத்துகின்றனர்.(இந்திய நாடு இந்துக்க என்று குரல் கொடுத்தால் குத்தாமல் என்ன செய்வார்கள் ) ஆனால், நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் பல மதத்தினர் பாதிக்கப்பட்டாலும், குரல் கொடுக்கிறோம். (எப்படி குரல் கொடுக்கிறீர்கள் இந்துகளே கூடுங்கள் மற்ற மதத்தினரி கொல்லுங்கள் என்றுதானே )மற்ற கட்சிகள் எல்லாம், இந்துக்கள் பாதிக்கப்பட்டால், வாய் திறப்பதில்லை. எங்கள் மீது சுமத்தப்படும், மத முத்திரை இதுதான். இதை, மதவாதம் என்று சொன்னால், அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.(திருடனை திருடன் என்று சொன்னால் திருடன் கூட கவலைப்படுவதில்லைதான் )ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசின் கைப்பாவை. லோக்சபா தேர்தல், தேசிய அளவில், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் யுத்தம்.( ஆமாம் இதில் நீங்கள் மண்ணை கவ்வப் போவது நிச்சயம்) இதில், பெரும்பான்மை எம்.பி.,க்களை வெல்லும் கட்சியே, நிலையான ஆட்சி அமைக்க முடியும். ( இது எல்லோருக்கும் நல்லாவே தெரியும் )சிறு கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து, ஐந்தாண்டுகளில், இரண்டு, மூன்று தேர்தல்களை சந்திக்க வேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.( சிறு கட்சியாய் இருந்தாலும் அவர்களுக்கு பெரும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர்களாலும் ஐந்தாண்டுக்கு ஆட்சி செய்ய முடியும்தானே)

டி.கே.ரங்கராஜன் - மார்க்சிஸ்ட் எம்.பி.,: லோக்சபா தேர்தலில், முன்னிறுத்த வேண்டிய பொருளாதார கொள்கை மற்றும் மாற்று அரசியலை விட்டு விட்டு, தனிமனித புராணத்தை, பா.ஜ., பாடுகிறது.(மிக மிக உண்மை) மோடி வந்தால் என்ன செய்வார் என்பதையே, வாக்காளர்கள் மத்தியில் கூறவேண்டுமே தவிர, மோடி என்ற தனி மனிதனை முன்னிறுத்துவதால் பலனில்லை.( இதுவும் சரிதான்)  பா.ஜ.,வினரால், அவர்களின் தலைவர், வாஜ்பாய் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. மாறாக, வல்லபாய் படேலை முன்னிறுத்துகின்றனர். படேல், சிறுபான்மையினருக்கு எதிரானவர், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்பதால், இந்த வேலையை பா.ஜ., செய்கிறது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதே, இப்போதைய தலையாய பிரச்னை.(கோவில் கட்டினால் எல்லாம் சரியாகி ப்ம் சரியாகி போய்விடும் சர்தார் வல்லபாய் படேலுக்கு மிகப் பெரிய சிலை எழுப்பினால் பொருளாதாரம் சரியாகிவிடும் என்பதுதான் மோடியின் பொருளாதாரக் கொள்கைங்க)மேலும், படித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இதைப் போக்க என்ன செய்யவேண்டும் என்பதே முக்கியம். கம்பெனிகளுக்கு சாதகமான, பொருளாதாரத்திலிருந்து மாறி, மக்கள் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் தொழில் வளத்தை மேம்படுத்த, அன்னிய முதலீடுகளை வரவேற்று, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்த மாற்று பொருளாதாரத்தை முன்னிறுத்தும் பணியை, காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மூன்றாவது அணியால் மட்டுமே செய்ய முடியும். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால், காங்கிரசிலிருந்து, பா.ஜ., எந்த விதத்தில் வித்தியாசம் கொண்டது, என்பதை பார்க்க வேண்டும்.( காவி & வெள்ளை வேஷ்டி என்பதுதான் வித்தியாசம்) இரு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே உண்மை.

பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர்: காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லும், பா.ஜ., ஆட்சியில், சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் நடந்தது. "எல்லையை பாதுகாக்கவில்லை' என, கூறும், பா.ஜ., ஆட்சியில் தான், பாகிஸ்தான் ராணுவம், கார்கில் பகுதியில் ஊடுருவியது. இது கூட, மாடு மேய்க்கும் சிறுவன் சொன்ன பின்னரே, மத்திய அரசுக்கு தெரியவந்தது. லோக்சபா கட்டடத்துக்குள், பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதும் பா.ஜ., ஆட்சியில் தான். எனவே, ஊழல், நாட்டின் பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில், தனிப்பட்ட ஒரு கட்சியை குற்றம் சுமத்துவது நியாயமற்றது. "மோடி ஊழலற்றவர்' என, கூறுகின்றனர். ஆனால், அவரது அமைச்சரவையில் தான், ஊழல் வழக்கில் சிக்கி, இரு ஆண்டுகள் தண்டனை பெற்றவர் அமைச்சராக உள்ளார்.( இது வரை சொன்னது உண்மைதான் காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் உண்மைகள் இது மட்டுமே)ஒன்பது ஆண்டுகளில், காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்கின்றனர். நாட்டில் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டன. ( அதன் மூலம் சுரண்டலுக்கு வழி ஏற்படுத்தபட்டனவே தவிர வளர்ச்சி ஏற்படுத்தவில்லை )தகவல் அறியும் உரிமைச் சட்டம். உணவு பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டம் இருப்பதால் தான், இப்போது கூறும் ஊழல்களை வெளிக்கொணர முடிந்தது.( எந்த ஊழல்களை சொல்லுரீங்க ) ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க, லோக்பால் சட்டத்தையும், காங்கிரஸ் அரசே நிறைவேற்றியுள்ளது. ஆனால், மாநில அளவிலான ஊழல்களுக்கு, லோக் ஆயுக்தாவை, குஜராத் முதல்வர் இன்னும் அமைக்க மறுக்கிறார்.( ஆமாங்க அதை அமுல்படுத்தினால் நாளை அவரையும் அதில் மாட்டிவிடுவீங்களே ஆளு உஷார்தான் வரும்முன் காப்பவர் மோடிங்க) காங்கிரசின் தொடர் ஆட்சியால் தான், நாட்டில், ஜனநாயகம் காக்கப்படுகிறது. ( ஊழலில் மட்டும் ஜனநாயகம் அதைதானே சொல்லுறீங்க )ஆனால், மோடியை முன் நிறுத்துபவர்கள், நாட்டுக்கு என்ன கொள்கையை முன் வைக்கின்றனர்.(வெள்ளை வேட்டியை காவி வேட்டி ஆக்குவதும், இத்தாலி குடும்பத்தாரின் வளர்சிக்கு பதில் படேல்களின் வளர்ச்சிக்கும் RSS வளர்ச்சிக்கும் உதவுவதுதான் அவர்கள் கொள்கை இது கூட தெரியாத மக்கள் வோட்டு போட கூட லாய்க்கு இல்லைங்க) அவர்களின் செயல்பாடுகள், நாட்டுக்கு உகந்ததா என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு, மூவரும் பேசினர்.


ஆமாங்க அவர்கள் மூவரும் அப்படி பேசினால் மதுரைத்தமிழன் இப்படிதானுங்க ரெட்கலரில் உள்ளது போல பேசுவான்.

சரிங்க இந்தியாவில் ஒட்டு உரிமை இல்லாத நான் எனக்கு தெரிஞ்சதை பேசிட்டேன். இதை படித்துவிட்டு நீங்களும் சும்மா  பேசாமல் போனால் எப்படி நீங்களும் பின்னுட்டம் மூலம் பேசி செல்லுங்க...இதை சொல்லக் காரணம் உங்களுக்கு இந்தியாவில் ஒட்டுரிமை உண்டுங்க நீங்கதான் அரசாங்கத்தை தேர்தெடுக்கப் போறீங்க.அன்புடன்
மதுரைத்தமிழன்
6 comments :

 1. இந்தியாவில் எனக்கும் ஓட்டு உரிமை இல்லைங்கோ.

  நம்ம மக்கள் கண்டிப்பாக பிரியாணிக்கு தான் வாக்களிப்பார்கள். கவலைப்படாதீர்கள்.

  http://unmaiyanavan.blogspot.com.au/2014/01/blog-post_14.html - இந்த பதிவில் நான் தங்களுக்காக ஒரு புகைப்படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. பிரியாணிக்கு மட்டும் தடைன்னா, பிறகு கூட்டங்களுக்கே ஆள் கிடைக்காது. அப்புறம் "அலை"-ஐ எப்படி காட்டுவார்கள். பிறகு வோட்டு எப்படி வாங்குவார்கள்?
  மோடிஜி, பார்த்து சூதானமா இருந்துக்கோங்கஜி!

  ReplyDelete
 3. ரெட் கமெண்ட்ஸ் சூப்பர்! காவிக்கும் வெள்ளைக்கும் மாற்றாக ஒன்று இருந்தால் அதுக்கு ஓட்டுப்போடலாம்! இல்லாது போனால் வெள்ளை பத்து வருசம் சம்பாதிச்சிருச்சு! காவியை சம்பாதிக்க விட வேண்டியதுதான்!

  ReplyDelete
 4. பிரியாணிக்கே தடையா ? குவாட்டருக்கும் தடை கொண்டு வர சொல்லுங்க, அரசியல் விழாவுக்கு ஒரு பய வரமாட்டார்கள் ஆமா...

  ReplyDelete
 5. நல்ல கருத்துகள் சிகப்பில்!! :)))

  ReplyDelete
 6. மோடி பலருக்கும் கற்பனை கதாநாயகன். உங்களுக்கோ கலகலப்புக்கு. நடத்துங்க. நடத்துங்க.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog