உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 17, 2013

எங்கே சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி ? சிறு விமர்சனம்

எங்கே சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி ? சிறு விமர்சனம்




மக்களால் பரவலாக பார்க்கப் படுவது விஜய் டிவி. இது சன் டிவியை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வந்தது. இந்த டிவி நிகழ்ச்சிகளில் இப்போது தடுமாற்றம் வந்து தரம் இழக்க தொடங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை... அதனால்தான் என்னவோ அவர்கள் சினிமா துறையை அதிக அளவு சார்ந்து அதை சார்ந்த நிகழ்ச்சிகளாக வெளியிட்டு இழப்பை சரிகட்ட முயற்சி செய்கிறார்கள் .காரணம் மக்களிடையே காணப்படும் சினிமா துறையின் கவர்ச்சிதான். அதனால் தான் என்னவோ சினிமா துறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் தந்து மற்ற நிகழ்ச்சிகளில் தரம் இழக்க தொடங்கியுள்ளது.


விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய சிறு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..


தமிழ்பேச்சு எங்கள் மூச்சு : முதலில் இந்த மாதிரியான நல்ல நிகழ்ழ்சியை கொடுத்ததற்கு விஜய் டிவியை பாராட்டுவோம். ஆனால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவியினர் கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் தெரிந்த, தமிழை விரும்பும், ஆனால் தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் கூட தமிழை சுவாசிக்க வைத்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தி இருந்தால் இது நீயா நானா அல்லது சூப்ப்ர் சிங்கரைவிட அதிக பாப்புலர் அடைந்திருக்கும் என்பது உறுதி...

இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்திருக்கலாம் என்பதை பார்க்கலாமா?
இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை மற்ற நிகழ்ச்சியின் அரங்கத்தை போல பிரமாண்டமாக அமைத்திருக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கும் சினிமா பிரபலங்களையும் மற்ற நடுவர்களோடு உதாரணமாக சூர்யா,தனுஸ், விஜய், கமல் போன்ற நடிகர்களையும் அவ்வப்போது இடை இடையே அமர்த்திருக்கலாம். அது போல இந்த நிகழ்ச்சியை கல்லூரிகளிலும் வைத்து நடத்தி இருக்கலாம் கல்லூரி மாணவ மாணவிகளையும் ஏதாவது ஒரு வகையில் இணைத்து நடத்தி இருக்கலாம் இறுதியாக மற்ற சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தருவது போல இதற்கும் பரிசுத் தொகையை சற்று அதிகமாக தரலாம். தமிழ் பேசுபவர்கள் என்றால் அவர்கள் வேட்டி சர்ட் போட்டுவந்துதான் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமா என்ன? இறுதி போட்டியில் ஜெயித்தவருக்கு பரிசுத் தொகை 1 லட்சம்தான் என்றால் மனதைச் சுடுகிறது. மக்களின் மனதை கெடுக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு பல லட்ச கணக்கில் பரிசு தரும் போது தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்பவர்களுக்கு லட்சம் என்பது அவர்களின் மூச்சை அப்படியே நிறுத்த தரும் தொகையாகத்தான் இருக்கிறது. ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்துபவரிடம் கேட்டால் கூட அவர் இன்னும் ஒரு 1 லட்ச ரூபாயயை இந்த நிகழ்ச்சிக்கு நங்கொடையாக கொடுத்து இருப்பார்கள்/

இறுதி நிகழ்ச்சியை பார்த்த எனது குழந்தை கேட்டது இதுதான் என்னப்பா இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவன் இறந்து விட்டானா அவனுக்கு பெரிய மாலையை போட்டு இருக்கிறார்களே என்று கேட்டது.( இதை நான் ஏதோ சொல்லவேண்டுமென்பதற்காக சொல்லவில்லை உண்மையில் என் சிறு குழந்தை கேட்டதுதான். ஒரு வேளை அவள் தமிழ் சினிமா பார்ப்பதின் விளைவோ என்னவோ ) இதை கேட்ட எனக்கு மிக மனவருத்தைதான் தந்தது.

ஜோடி நம்பர் 1: டான்ஸ் திறமையை வெளிக் கொணரும் ஒரு நிகழ்ச்சிதான் ஆனால் திறமையை வெளிக்காட்டுவதாக சொன்னாலும் அசிங்கமான அங்க அசைவுகளை வார வாரம் விஜய் டிவி வெளிக் கொணர்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் முதல் 2 இடத்தில் வந்தவர்கள் ஆட்டம் டான்ஸின் திறமையை வெளிக்காட்டுபதாக இருந்தது. இந்தா நிகழ்ச்சிக்கு 3 வது 4 வது இடத்திற்கு வந்தவர்களுக்கு கொடுத்த பரிசு தொகையை தமிழ்பேச்சு எங்கள் மூச்சிற்கு முதலாவது வந்தவர்க்கு கொடுத்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான் அதிகமாக வெளிவந்தது .இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது. இனிமேலாவது இதில் கவனம் செலுத்த முயல்வார்களா என்றுதான் தோன்றியது?

60 நொடி ஆர் யூ ரெடி?
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் 60 நொடி ஆர் யூ சாக ரெடி என்று கேட்பது போல இருக்கிறது. இதை தவிர இதைப் பற்றி சொல்ல வேறு ஏதும் இல்லை


அது இது எது? இது ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாம். அதில் வரும் நகைச்சுவையை பார்க்கும் போது கண்ணில் இருந்து ரத்தக் கண்ணிர்தான் வருகிறது.


நீயா நானா? இது சமுக அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு சுவாரசியமான அரட்டைக் கச்சேரி நிகழ்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது, இது விஜய்டிவியின் பாப்புலர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது அதிலும் இப்போது மிக தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவே இருக்கிறது. முன்னைப் போல அதில் விருவிருப்பு இல்லை. வர வர இந்த நிகழ்ச்சி முன்பே செட்டப் செய்து சொல்லிவச்சார் போல பேசி வைத்து அதன்படி நடப்பதாகவே இருக்கிறது. சினிமாவில் நடிக்கும் எக்ஸ் ட்ரா ஆக்டர்களை கொண்டு இப்படி அழுக வேண்டும் என்று சொல்லித் தந்து நிகழ்ச்சியை நடத்துவது போலத்தான் இருக்கிறது. நிகழ்ச்சியில் வருபவர்கள் அழுதார் ரேட்டிங்க் கூடும் என்று நினைத்து இதை செய்கிறார்கள். சமுக அவலங்களை எடுத்து உரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நிகழ்கால அல்லது கடந்த கால அரசின் செயல்பாடுகளை அல்லது அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றியும் எடுத்து உரைத்து பேச கூட தைரியம் இல்லை இந்த மீடியாவிற்கு...

என் தேசம் என் மக்கள் : கோபிநாத் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று . இது மிகவும் ப்ளாப்பான நிகழ்ச்சியாகி இறுதியில் மறைந்துவிட்டது.. கோபிநாத் கோட்டு சூட்டு போடாமல் அமிர்கான் நடத்திய நிகழ்ச்சி போல நடத்த முற்பட்டு தோல்வியில் முடிந்த நிகழ்ச்சி இது

பாட்டி வைத்தியம் : இந்த காலத்திற்கு சிறிதும் உதவாத வைத்தியம். இதைப் பார்க்கும் போதெல்லாம் டிவி மீது அப்படியே ரிமோட்டை தூக்கி ஏறிந்து உடைக்கலாம் போல உள்ளது. இதில் சொல்லும் மருந்துக்கான பொருட்கள் எளிதில் கிடைப்பதில்லை. ஒரு நாள் சந்தர்ப்ப வசமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க தோன்றியது. அப்போது அந்த அம்மா விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் அதற்கு மேல் ப்லோ பண்ணக் கூடாது சென்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ள நோய்களுக்கு நோய் வந்துவிட்டால் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் அதை நிறுத்தினால் பரலோகம்தான் சீக்கிரம் செல்ல வேண்டும். நல்லவேளை இது இந்திய டிவியில் வந்தது, இது மட்டும் அமெரிக்க டிவியில் வந்து இருந்தால் இவர் மேல் வழ்க்கு தொடர்ந்து நல்ல பணம் கறந்து இருப்பார்கள்

சரவணன் மீனாட்சி : மிகவும் மக்களை கவர்ந்த ஒரு தொடர் ஆனால் அதை சொதப்பி அந்த தொடருக்கு கிடைத்த நல்ல பெயரை கெடுக்க முயற்சிக்க முயல்வதாகவே இருக்கிறது அந்த தொடரில் நடித்தவர்களின் கால்சீட் கிடைக்க வில்லை யென்றால் அந்த தொடரை சுமுகமாக முடித்து வேறு இரு தொடரை ஆரம்பித்து இருக்கலாம்.

7C இதுவும் பரபரப்பாக ஆரம்பித்த தொடர் அதையும் இறுதியில் கெடுத்துவிட்டார்கள்...


ஆபிஸ் : இது ஒரு காமெடி தொடர்போல விளம்பரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கபட்டு அதன் பின் சீரியஸாக சென்று இப்போது வழ வழ கொழ கொழ என்று போய் கொண்டிருக்கிறது.

காபி வித் டிடி : காபி வித் அனு போட்ட காபி போல இந்த காபி சுவையாக இல்லை. ஏதோ சின்ன பிள்ளை போட்டு தந்த சுவையற்ற காபி போலத்தான் இருக்கிறது.




விஜய் டிவியின் தொடர்கள் எல்லாம் நல்லவிதமாக ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் அதை எப்படி தொடர்வது என்று தெரியாமல் குழம்பி போவது போலத்தான் இருக்கிறது

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மொத்த குத்தகைக்கு எடுத்த அடிமைகள் போலத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ இந்த தொகுப்பாளர்களையே கசக்கி பிழிந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளச் செய்கிறார்கள். இது விஜய் டிவிக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம் ஆனால் பார்ப்பவர்களுக்கு இதே தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளில் வருவதை பார்க்கும் போது மிகவும் போரடிக்கிறது என்றுதான் பலரிடம் பேசும் போது கருத்து தெரிவிக்கிறார்கள்.


இந்த பதிவில் இருப்பது என் கருத்து மட்டுமல்ல இங்குள்ளமற்றும் தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களிடம் நான் பேசும் போது பலரின் வாயில் இருந்து வந்ததுதான்

இதை இங்கு பதிவாக போட்டதன் காரணம் இதைபார்த்தாவது விஜய் டிவி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் மேலும் கவனம் செலுத்தியும் சிறிது மாற்றம் ஏற்படுத்தியும் மேலும் தரமான நிகழ்ச்சியை தருவேண்டும் என்ற நோக்கம்தான். அது தவிர வேறு ஏதுமில்லை.

மற்ற சேனல்களை விட விஜய் டிவி நிகழ்ச்சிகள் அனைவராலும் பார்க்கபடுவதால்தான் இந்த விமர்சனம். அதனால் மற்ற டிவி சேனல்களை இங்கு குறிப்பிடவில்லை.


அன்புடன்

மதுரைத்தமிழன்

டிஸ்கி : இதைப்படித்த நீங்கள் விஜய் டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் எது? அதில் என்ன மாற்றம் கொண்டுவரலாம் என்று உங்கள் மனதில் பட்ட கருத்துக்களை இங்கு பின்னுட்டமாக இடலாம். நன்றி

18 comments :

  1. தமிழ் நாட்டிலே குப்ப கொட்டிகிட்டு ஒரு டி.வி புரோகிராம் கூட பக்க நேரமில்லாம
    நாங்க என்னடான்னாக்க செம பிசி .
    உங்கூரிலெ ஆபீஸ் போயிக்கினே நாள் முழுக்க விஜய் டி.வி பாத்து பொழுதை ஒட்டிடலாமா ?
    சூப்பர் வேலை போல?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டுல வேலை பாக்காமா குப்பை கொட்டிக் கொண்டு இருப்பதால்தான் எங்கே சென்றாலும் குப்பையாக காட்சி அளிக்கிறதோ?


      கிச்சனில் வீட்டு வேலை பாரக்கும் நேரத்தில் டிவி பார்த்து கொண்டே வேலை செய்யாலாமே....கிச்சனில் ஒரு சின்ன டிவியை மாட்டுங்க... இது போய் நான் உங்களுக்கு ஏன் சொல்லுறேன். இப்பதான் பொண்ணுங்க கிச்சனுக்குள்ளே போவதே இல்லையே ஹீ.ஹீ.ஹீ

      Delete
    2. மகாபாரதம் விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற விமர்சனங்கள் மிகச்சரியானது.

      Delete
  2. the reason is lack of creativity and wrong prediction about people.

    ReplyDelete
  3. விஜய் டிவி மட்டுமில்லீங்க நமக்கு ஒரு டிவியும் பார்க்க நேரமில்லீங்கோ.. யுடுயுப்பில் நீயா நானா பார்ப்பேன். இந்தி சீரியல் தமிழில் வந்தால், அதில் வரும் பிகருக்காக பார்ப்பேன். என் கணவர் என் தோழனில் வர பெண் பார்க்க நல்லாருக்கும், நல்லா நடிக்கவும் செய்யும். அவ்ளோ தான்யா நம்ம டிவி வாசம்..

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் பொழுது போக்குறதுக்கு பல வழிகள் உள்ளன. ஆனால் வாரநாட்களில் வேலைக்கு போய்விடு நேரா வீட்டுக்கு வந்தா இதுதான் பொழுது போக்கு இங்க

      Delete
  4. நாம டி.வியை போற போக்குல எட்டி பார்க்கிறதோட சரிங்க. நல்ல ஆலோசனைகள்.!.. விஜய் டி.வி க்கு அனுப்பி வைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நீங்க பத்திரிக்கை உலக பிரபலமுங்க உங்களுக்கு இதுகெல்லாம் நேரம் கிடைக்காதுங்க

      Delete
  5. நான் டிவி பார்த்து பல காலமாச்சுய்யா என்னத்த சொல்ல ?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நீங்க உங்க ஹோட்டலுக்கு வர பிகர பாக்குறீங்களே அதுக்கு அப்புறம் உங்களுக்கு எதுக்கு டிவி பார்க்கனும் மக்கா

      Delete
  6. அண்ணே நானும் பார்த்து இருக்கேன் தமிழ் பேச்சுஎங்கள் மூச்சு சுத்தமான தமிழில் அழக பேசுறாங்க மற்ற நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை எல்லாமே காசு பார்ப்பதில் தான் குறியா இருப்பாங்க இதுல சன் என்ன விஜய் என்ன எல்லாம் ஒன்னு தான்

    ReplyDelete
    Replies
    1. விஜய் டிவியில் தமிழை கடித்து கொதறாமல் பேசும் நிகழ்ச்சி இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியை பல பேர் மிகவும் ரசிக்கிறார்கள் என்ற செய்தி விஜய் டிவி நிர்வாகத்திற்கு தெரிகிறதோ இல்லையோ? அதனால்தான் இந்த பதிவு

      Delete
  7. இவ்வளவு நிகழ்ச்சிகளை பார்க்க உங்களுக்கு நேரமிருக்கா!? அடடே!

    ReplyDelete
    Replies

    1. நான் டிவி நிகழ்ழ்சியை பார்பதில்லை அதிக அளவில் கேட்கத்தான் செய்வேன் டிவி என் முன்னால் ஒடிக் கொண்டிருக்கும் நான் என் லேப்டாப்பில் மேய்ந்து கொண்டே இருப்பேன்

      Delete
  8. பரவாயில்லை... உங்கள் பதிவின் மூலம் தான் சிலவற்றை தெரிந்து கொண்டேன்... சில மாதங்களாக எதுவுமே என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை... சொந்த பிரச்சனை : கணினி + துணைவி

    ReplyDelete
  9. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகச்சியை சரியாக நடத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. கற்பனை வரட்சிதான்.காரணம். மீண்டும் புகழைப் பெற மகாபாரதத்தை தொடங்கி இருக்கிறது.பார்க்கலாம்.

    ReplyDelete
  10. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மிக நல்ல நிகழ்ச்சி. அதிகமான மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்ச்சி.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 383 ) அரசியல் ( 247 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 111 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 81 ) ஜெயலலிதா ( 71 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 31 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) தமிழகம் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog