1 மில்லியன் பரிசை வென்ற
தமிழ் வலைப்பதிவாளர்
இந்த பரிசை வென்றவர் பிரபலமானவர் அல்ல மிகச் சாதாரண
வலைப்பதிவாளர். இவர் வென்றது 1 மில்லியன்..
இந்த பரிசை இவர் பெற மூன்று வருடங்களுக்கு மேல் காத்து இருந்தார். இவர் எறும்பை
போல சிறியவர். அதனால்தான் இவர் எறும்பை போல
சிறுக சிறுக சேமித்து இறுதியில் இந்த பரிசை வென்றுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல உங்களை
கலாய்த்து கொண்டே உங்கள் இதயம் கவர்ந்த மதுரைத்தமிழந்தான்.
இந்த தமிழனின் வலைத்தளம்தான் மில்லியன் ஹிட்ஸை ( 1 மில்லியன் = 10 லட்சம். )தாண்டிச்
சென்றது. இந்த பரிசை தந்ததது யாருமல்ல நீங்கள்தான். அதற்கு எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்
ஒரு பொழுது போக்குக்காக வேடிக்கையாக
நான் படித்த ரசித்த பார்த்த அனுபவித்த விஷங்களை கிறுக்கி பதிவிட ஆரம்பித்த நான் 832 பதிவு இட்டு 1 மில்லியன் ஹிட்ஸை பெற்று இருக்கிறேன். குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த நான் இப்போதுதான்
நடக்க ஆரம்பித்து இருக்கிறேன் உங்களால் முடிந்தால் என்னுடன் சேர்ந்து கைபிடித்து அழைத்து செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
எனது கிறுக்கல்கள் நீங்கள்
படித்து ரசிக்க மட்டும்தான் . நான் சமுதாயத்தை திருத்தவோ அல்லது புரட்சியை உண்டாக்கவோ அல்லது சங்கம் அமைத்து தமிழை வளர்க்கவோ அல்ல என்பதை
புரிந்து கொள்ளுங்கள்.
இந்த தளத்தின் வளர்ச்சி
என்பது என்னால் ஏற்பட்டது அல்ல இங்கு வருகை தந்தவர்களால் ஏற்பட்டது. அதிலும் முக்கியமாக
"சைலண்ட் ரீடர்களை" இங்கு குறிப்பிட்டு சொல்லாம். அதுமட்டுமல்லாமல் மேலும்
"சிலர்" எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கே தொடர்ந்து வந்து படித்து
தங்களது உள்ளத்து உணர்வுகளை பின்னூட்டம் மூலம் உணர்த்தி தொடர்ந்து ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள்
அனைவரின் பெயரை தனித்தனியாக குறிப்பட்டு எழுதவேண்டுமென்று ஆசை இருந்தாலும் நேரமின்மையால் எழுத இயலவில்லை..இருந்தாலும்..எனக்கு தொடர்ந்து
ஆதரவளிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது இதயம்கனிந்த நன்றியை
சொல்லிக் கொள்கிறேன்.
இவர்கள் தவிர தமிழ்மணத்திற்கும்
இண்டலிக்கும் எனது தனிப்பட்ட நன்றிகள் .அதுமட்டுமல்லாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா,
கலைஞர், விஜயகாந்த்,ராமதாஸ், மோடி,மன்மோகன் சிங் அனைவருக்கும் இதயங்கனிந்த் நன்றிகள்.
இவர்கள் மட்டும் இல்லையென்றால் நான் இவ்வளவு ஹிட்ஸ் பெற்று இருக்க முடியாது.
வலையுலகில் எனக்கென்று
எந்த குழுவையும் அமைத்துக் கொள்ளாமல், வலையுலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல், மதத்தை
விட மனித இதயங்களை நேசித்தும் பல விசயங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்து பலருக்கும் விருப்பமான தளமாக இன்று வரையிலும் இணையத்தில் வலம் வந்துகொண்டிருகிறது
எனது தளம்
எனது பதிவின் தலைப்புக்கள் சில சமயங்களில் ஒரு மார்க்கமாகவே இருந்தாலும் என்றாலும் அதில் உள் இருக்கும் விஷயம் மிக நல்லவையாகதான் இருக்கும் என்பதற்கு எப்போதும்
உத்திரவாதம் அளிக்கிறேன்
யாரு அங்கே....என்ன எனக்கு
விழா எடுக்கப் போறீங்களா? பாராட்டு விழாவா? என் எடைக்கு எடை வெங்காயம் தரப் போறீங்களா?
என்ன சரக்கும் சேர்த்து தரப் போறீங்களா? தமிழ்நாட்டின் தலை நகரத்தில் சிலையும் வைக்கப்
போறீங்களா? தமிழக பெண்கள் சார்பாக தங்கத்தில் பூரிக் கட்டை நினைவுப் பரிசாக தரப் போறீங்களா?
அட உங்க அன்புக்கு நன்றீங்க...
ஆனா அந்த பாராட்டு விழாவில் என்னால் கலந்துக்க இயலாது. நான் ரொம்ப் பிஸிங்க..... அப்ப
நான் வரட்டா......மக்களே மறக்காதீங்க தொடர்ந்து உங்க ஆதரவை எனக்கு தாருங்க. நானும்
நல்ல மொக்கை பதிவா உங்களுக்கு தாரேன்
அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
வாழ்த்துக்கள் மக்கா....
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி மக்கா
Deleteமிக்க சந்தோஷம்
ReplyDeleteநம் மதுரைத் தமிழருக்கு மதுரையில்
நடைபெற இருக்கிற வருகிற பதிவர் திருவிழாவில்
சிறப்பு விருது கொடுப்பதன் மூலம் நாங்களும்
எங்களைக் கௌரவித்துக் கொள்ளலாம்தானே
பகிர்வும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ரமணி சார் பெரிய பெரிய வார்த்தைகளை சொல்லி இந்த சிறுவனை கிண்டல் செய்யாதீங்கோ
Deletetha.ma 1
ReplyDeleteநன்றி நன்றி
Deleteஅட்ராசக்க... அட்ராசக்க...
ReplyDelete
Deleteஅடிச்சா நான் சக்கையாய் போய்விடுவேன் அண்ணே அடிக்காதீங்க
உங்களின் தனிச் சிறப்பே உங்களின் உண்மையான திறமைகளை அப்படியே ஓரமாக ஒதுக்கி வைத்து களம் புகுந்து விளையாடுவது தான். வாழ்த்துகள்.
ReplyDeleteஒதுக்கி வைக்க உண்மையான திறமைகள் யாதும் என்னிடம் இல்லை நண்பா... திறமைகளும் ஞானமும் நிறைய இருப்பது உங்களிடம்தான் நண்பா
DeleteGood!
ReplyDeleteCongrats!
Continue 2 contribute!
No Tamil font in the borrowed cell.for time pass.
எப்படியாவது வாழ்த்த வேண்டுமென்ற உங்கள் எண்ணம் எனக்கு மிகவும் மகிழ்சியை தந்து கொண்டிருக்கிறது.. வாழ்த்துக்கு மன்ப்பூர்வமான நன்றி
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deletemarurha treat kudunya :))
ReplyDeleteஇந்தியா வரும் போது நிச்சயம் ட்ரீட் உண்டு...ஆனா எப்ப வருவீங்க என்று கேட்காதீங்க அது ஆண்டவனுக்கு கூட தெரியாதய்யா
Deleteவாழ்த்துகள்...வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... !
ReplyDeleteமேலும்... மேலும்... மேலும்... சிறக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...!
நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி
Deleteஉங்கள் நகைச்சுவை உணர்வும் வித்தியாசமாக பதிவளிக்கும் விதமும் 10 மில்லியன் ஹிட்களை வழங்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது பதிவைவிட உங்களைப் போல உள்ள நல்லவர்களின் ஆதரவினால் பல மில்லியனை எளிதாக அடைந்துவிட முடியும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
Deleteவாழ்த்துக்கள்... ! உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்களுக்கு கிடைத்த வெற்றி...! நான் வலைப்பக்கம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நானும் சைலண்ட்-ரீடரா உங்க பதிவுகளை படிச்சி வியந்து போயிருக்கேனுங்க... பாராட்டு விழா நடத்தியே ஆகனும்... ! பிஸின்னு சொல்லி எஸ்கேப் ஆனிங்கன்னா... ஒரு லாரி நிறைய ரசிகர் கூட்டம் பூரிக்கட்டையோடு உங்க வீட்டு முன்னாடி போராட்டம் பண்ணுவாங்க... ஆமா!
ReplyDeleteபத்திரிக்கை உலகின் "பிரபலம்" எனது வலைத்தளத்தின் சைலண்ட் ரீடராக இருந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம் .லாரி நிறைய தங்கத்தால் செய்த பூரிக்கட்டையால் போராட்டம் செய்ய வரவும்
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteதொய்வின்றி தொடருங்கள்.
வாஞ்சையுடன் வாஞ்ஜுர்.
வாழ்த்துக்கு நன்றி...இறைவன் பலத்தை கொடுக்கும் வரையில் எனது பதிவுகளும் தொடரும்
Deleteவாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteமேலும் மேலும் உங்கள் தளம் பிரபலமடையவும் வாழ்த்துக்களும், ஆசிகளும்.
வருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
Deleteஇதயம் நிறைந்த இஇனிய நல்வாழ்த்துகள் நண்பா.
ReplyDeleteவருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
Deleteவாழ்த்துக்கள் அன்பரே! விரைவில் இன்னும் உயரங்களை தொட்டு இணைய உலகில் சிறகடிக்க வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteகணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)
ReplyDeleteவருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் "உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் மிகவும் நன்றிகள்
Deleteவாழ்த்துக்கள்... ஆனா இந்த பரபர தலைப்பு வைக்கிற சங்கதி உங்ககிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கணும்.. :-)
ReplyDeleteவருகைக்கும் ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது ஒரு தலைப்பிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டும் பதிவு எழுதி முடித்த பின் அந்த தலைப்பை எப்படி மாற்றி அமைத்தால் அது அனைவரையும் கவரும் என்று யோச்சித்தால் தானாகவே வரும்
Deleteஎன்ன இப்படி சொல்லிட்டீக பாராட்டு விழாவுக்கு அரங்கெல்லாம் தயாராக இருக்கே. .. நினைவுப்பரிசு மட்டும் உங்க மனைவியை கேட்டுவிட்டுத்தான் வாங்க வேண்டும்.ஹஹஹ
ReplyDeleteஎன் மனைவி கூட சேர்ந்தா நினைவுபரிசு என்ன தந்திடப் போறீங்க தர்ம அடிதானே...கொடுங்க கொடுங்க அடி வாங்கி வாங்கி உடம்பு மரத்து போச்சு
Deleteவாழ்த்துக்கள் “உண்மைகள்“
ReplyDeleteட்ரீட் எதுவும் இல்லையா?
ட்ரீட்தானே உங்களுக்கு இல்லாததா....வாங்க நம்ம வீட்டிற்கு நல்லா வடை பாயசத்தோட சாப்பாடு போடுகிறேன்
Deleteஒரு மில்லி கெலிச்சுகினதுக்கு வாத்துக்கள்பா...(வாத்து இல்லபா... இத்து வாழ்த்து)
ReplyDeleteநைனா வாழ்த்துக்கு நன்றி நைனா.....
Deleteஇனிய வாழ்த்துகள்..!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி
Deleteவாழ்த்துக்கள் மதுரை தமிழா !!!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி
Deleteமனமார்ந்த வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி
Deleteவாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteநீங்கள் என் பிளாகிற்கு
ReplyDeleteஎழுதிய 6 பின்னூட்டத்திற்கு கமெண்டுகள் வேறு பதிவர்கள் எழுதியுள்ளார்கள் .
பிரபல பதிவர் என்றால் சும்மாவா என்ன ?
என் பிளாகிற்கு சென்று பார்க்கவும்
வாழ்த்துக்கள் .
super ne ! valthukkal :)
ReplyDelete