Monday, November 25, 2013

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் ஏன் இவர்களின் கண்ணை சாமி குத்துவதில்லை



நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இன்னும் சாகவில்லை. வைகோவின் வடிவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.' என்று சொல்லும் நாஞ்சில் சம்பத் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?


அரசியலில் இருந்து வடிவேலு மறையவில்லை அவர் நாஞ்சில் சம்பத் வடிவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.'


ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் வளர்ச்சி சிறிதும் இல்லை நாங்கள் ஆட்சியில் இருந்த போதுதான் வளர்ச்சி அடைந்தது என்று கலைஞர் சொல்லுகிறாரே அது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

தலைவர் சொல்லுவது அவர் குடும்ப வளர்ச்சியைத்தான். அதையெல்லாம் கண்டுக்காதீங்க

மோடி பிரதமராக வந்தால் அவருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்கும்?

தனது கட்சிகாரர்களோ அல்லது தனது கூட்டணியில் உள்ளவர்களோ என்ன ஊழல் பண்ணப் போகிறார்கள் எந்த அளவிற்கு பண்ணப் போகிறார்கள் என்று சொல்லி முன் அனுமதிப் பெற்று பண்ண வேண்டும் அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என்று அவர் அறிவிக்க வேண்டும்

காங்., துணைத் தலைவர், ராகுல்: மத்திய பிரதேச மாநில, பா.., அரசு, சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?

ஐயா ராகுல், உங்களை பிரதமாராக ஆக்கினால் மட்டும் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா என்ன


தமிழகத்தில் உள்ள விலைவாசி எந்த அளவீற்கு ஏற்காட்டு தேர்தலில் உள்ள வேட்பாளர்களை பாதிக்கும்?

வோட்டுக்கு பணம் கொடுக்கும் போது கொடுக்கும் பணத்தையும் அதிகரிக்கும் அளவிற்கு பாதிக்கும்.


டெல்லி சட்டசபையில் விஜயகாந்த் கட்சி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாகத்தான் இருக்குமோ

இந்தியர்களின் சுதந்திரம் பற்றி சிலவரிகள் ?

இந்தியாவின் சுதந்திரம் குழந்தைகளில் கையில் கட்டி இருக்கும் கடிகாரம் போன்றது அது சுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொய் சொன்னா சாமி கண்ண குத்துமா?

அதெல்லாம் பொய்ங்க...அது மட்டும் உண்மையாக இருந்தா எல்லா அரசியல் தலைவர்களின் கண் அதிக அளவு குத்தப்பட்டு கண் தெரியாமா போயி இருக்குமே


கடவுள் நம்புவது யாரை?
பணக்காரனைத்தான் அவந்தானய்ய அவர் இருக்கும் இடத்திற்கு வந்து பணம் போட்டு போகிறான்.


பிச்சைக்கார்கள் ஏன் கடவுளை நம்புவதில்லை?
அந்த கடவுள்தானே அவனை கோயிலுக்கு வெளியே உட்கார்த்தி வைத்து இருக்கிறார். அப்ப எப்படி நம்புவான்.அவன் நம்புவதெல்லாம் பணம் வைத்துள்ள பக்தனை மட்டுமே



அன்புடன்
மதுரைத்தமிழன்

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்

அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்



8 comments:

  1. கேள்வி பதிலை ரசித்து படித்துக்கொண்டு வந்த நான் கடைசியில் இருக்கும் படத்தையும் அந்த கேள்வியையும் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியும் ஒரு கையாகாலத்தனமும் மனத்தை அழுத்தியது

    ReplyDelete
  2. எல்லா கேள்வி-பதிலும் ' நச்' !
    கடைசி படம் வாசிக்கும் எல்லோரிடமும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டுதான்... போகும்! அதுதான் மதுரை தமிழன்... வெளையாட்டா நிறைய பேசினாலும்... கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்டு யோசிக்க வச்சிடுவார்....

    ReplyDelete
  3. சகோதரருக்கு வணக்கம்
    அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாதங்களை அழகாக கேள்வி பதிலில் கொடுத்து அசத்தி விட்டீர்கள். கலைஞரையும் மிஞ்சி விட்டீர்கள் என்று தான் தோணுகிறது (சிந்திப்பதில்). லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் ரத்தங்களைக் குடித்தும் இன்னும் தாகம் அடங்காது வெறிப்பிடித்து தெரியும் அரசியல் அரிதாரம் பூசித்திரியும் அரக்கர்களைக் காணும் போது ரத்தம் சூடாவதை தவிர்க்க முடியவில்லை சகோதரரே..பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. கேள்விபதில் ஹாஸ்ய சுவை கடைசியில் வந்த படத்தை பார்த்ததும் சோகச்சுவையாகி விட்டது! நன்றி!

    ReplyDelete
  5. கேள்வி பதில் - அருமை.... தொடரட்டும்.!

    ReplyDelete
  6. Super duper comedy.. Two small spelling mistakes
    //கூறை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனத கதையாகத்தான் இருக்குமோ//

    /கூரை/ ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் /போன/கதையாகத்தான் இருக்குமோ

    ReplyDelete
  7. கேள்வி பதில் கற்பனை மாதிரியே தெரியல. கோமாளித் தனங்கள் செய்து நம்மை கோமாளிகள் ஆக்கி விடுகிறார்கள்.
    கடைசி படமும் பஞ்ச்சும் நறுக்.
    த.ம.எப்போதும் உண்டு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.