Thursday, November 7, 2013



விஜயகாந்தும் அவரது கூட்டணி திட்டமும்.


லோக் சபா தேர்தல் வருகிறதாம் அதை கண்டு எல்லா கட்சிகளுக்கும் பள்ளியில் ஒழுங்காக படிக்காத மாணவன் மாதிரி மிக பயம் வந்துவிட்டது .. ஒழுங்க படிச்சிறந்தா பரிட்சை வருகிறது என்றதும் பயம் கொள்ள தேவையில்லை அது போல ஒழுங்கா ஆட்சி செய்தா தேர்தல் கண்டு பயம் கொள்ள தேவை இருக்காது.



எல்லாக் கட்சிகளுக்கும் தாங்கள் பாஸ் ஆவோமா என்ற பயம் வந்துவிட்டது. பார்டர் மார்க் எடுத்தாவது பாஸ் ஆகிவிட வேண்டும் அதற்காக எதுவும் செய்ய தயாராகி கொண்டிருக்கின்றன். இப்படி தயாராகி கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களின் கண்கள் பள்ளியில் வேலை செய்யும் ப்யூனின் மேல் கண் விழுகிறது. அவனைப் பிடித்து குறுக்கு வழியிலாவது பாஸ் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இந்த ப்யூன் யூஸ் லஸ் என்று..

நிறை குடத்தில் அதிகம் சவுண்டு வாராது ஆனால் குறை குடம் அதிகம் சத்தம் போடும் என்பது போல இந்த விஜயகாந்தும் அதிகம் சத்தம் இட்டு கொண்டிருக்கிறார்.

இந்த குறை குடத்துடன் கூட்டணி சேர எல்லா மூட்டாள்கட்சிகளும் ஆசைப் படுகின்றன. அதானால் ந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தி எல்லோருடனும் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டார் இந்த விஜயகாந்த்.

இவரது கூட்டணித் திட்டம் இப்படிதான் இருக்கப் போகிறது. தன் கட்சியை மூன்றாக பிரித்து அதில் ஒரு பிரிவுக்கு தானும் மற்று இரு பிரிவுகளுக்கு தனது மைச்சானையும் மனைவியையும் பொறுப்பாக நியமித்து காங்கிரஸ்,திமுக,பிஜேபி கட்சியிடன் கூட்டணி வைக்கப் போகிறார்.

ஒரு வேளை இந்த கூட்டணி சரியாக வரவில்லை என்றால்...இறுதியாக ஒபாமாவுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலில் களம் இறங்கி வெற்றி கொள்ள திட்டம் இட்டு இருக்கிறார். இந்த செய்தியை மதுரைத்தமிழன் விஜயகாந்து சரக்கு அடித்துவிட்டு உளறும் போது கேட்டு அறிந்தார்.

நான் கேட்ட செய்தியை உங்களிடம் பகிரவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது என்பதால் இதை சொல்லிவிட்டு தூங்க போகிறேன்

அன்புடன்
மதுரைதமிழன்

3 comments:

  1. அவருக்கு இப்படியெல்லாம் திட்டம் போட்டு கொடுக்கிறது நீங்கதானாமே?

    ReplyDelete
  2. நல்ல பண்றீங்கப்பா காமெடி!

    ReplyDelete
  3. இந்தியாவில் படிப்பறிவே இல்லையென்றாலும்
    பணம் இருந்தால் பயங்காட்டியே “பாஸ்“ பண்ணி விடுவார்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.