கலைஞர் பாணியில்
மதுரைத்தமிழனின் பதில்கள் (மோடி ஏன் பிரதமராக ஆசைப்படுகிறார்?)
மோடி ஏன் பிரமராக
ஆசைப்படுகிறார்?
அப்பதான் அவருடைய
அமெரிக்கா செல்லும் கனவு நனவாகும். ஒரு நாட்டின் பிரதமருக்கு விசா வழங்க முடியாது என
எந்த நாடும் மறுக்காது அல்லவா அதனால்தான்
மோடியால் மட்டுமே
நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சொல்ல முடியும் என்று சொல்லுகிறார்களே சிலர்?
மோடி நினைத்தால்
கூட அது முடியாது. மக்கள் நினைத்தால்தான் அது முடியும். மோடி மாளிகையை அழங்கரிக்கும்
வைரமாக இருக்கலாம். வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம். பார்ப்பவர் கண்ணுக்கு
அது வியப்பையும் அளிக்கலாம். ஆனால், மாளிகையின் அஸ்திவாரமாக அவை ஆக முடியாது. மாளிகையை
நீண்ட காலத்துக்கு நிறுத்திப் பிடிக்க அவற்றால் முடியாது. அஸ்திவாரத்துக்குள் விழுந்து
கிடக்கும் சாதாரணக் கல்லுக்கு உள்ள முக்கியத்துவம் அந்த வைரத்துக்கு இல்லை’
ஜெயலிதா பிரதமராக
வந்தால் கலைஞர் என்ன சொல்லிக் கொண்டு இருப்பார்?
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது என்பதற்கு பதிலாக பிராமணர்கள் வாழ்கிறார்கள் சூத்திரர்கள் தேய்கிறார்கள்
என்று பேசிக் கொண்டிருப்பார்
கலைஞர் அரசியலுக்கு
வராமல் நடிக்க வந்து இருந்தால்?
சூப்பர் ஸ்டார்
பட்டம் ரஜினிக்கு கிடைத்திருக்காது,
கலைஞர் திரைபடத்துறையினரை
அரவணைத்து செல்வதுபோல ஜெயலலிதா அவர்கள் செய்வதில்லையே ஏன்?
கலைஞர் மக்களை
கவர திரைப்படத் துறையினரை பயன்படுத்தி கொள்கிறார் ஆனால் ஜெயலலிதா அவர்ளுக்கு திரைபடத்
துறையினரின் கவர்ச்சி தேவையில்லை மக்களுக்கு தன் மேல் இருக்கும் கவர்ச்சியே போதுமென்று
கருதுகிறார்
ஜெயலலிதா செஸ் எனக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.
அடிக்கடி மந்திரிகளை இடம் மாற்றுவதில் இருந்தே செஸ் உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு என்று
எல்லோருக்கும் தெரியுமே . அதில் என்ன சந்தேகமம்மா?
தேர்தல் வேலைக்கு
அனுப்பப்பட்டுள்ள, தி.மு.க., மாவட்ட செயலர்களின், முணுமுணுப்பு என்னவாக இருக்கும்?
அமைச்சர் பதவிக்கும்,
கட்சி பதவிக்கும் தன் மகன், மகள், பேரன்; ஆனால், போராட்டம், தேர்தல் என்றால் மட்டும்
நாங்களா?' என்பதாகத்தான் இருக்கும்,
அரசியல்வாதிகளின் வீட்டில் மட்டும் ஏன் திருடர்கள் திருடுவதில்லை?
ஒரே தொழிலில் உள்ளவர்களின் வீடுகளில் திருடுவதில்லை என்ற கொள்கைதான் (Professional courtesy )
அன்புடன்
மதுரைத்தமிழன்
11/10/2013
//ஒரே தொழிலில் உள்ளவர்களின் வீடுகளில் திருட முடியாது//
ReplyDeleteமனதின் வெகு ஆழத்தில் பதிந்துவிட்டது.
அருமையான கேள்விகள்
ReplyDeleteசுவாரஸ்யமான பதில்கள்
தொடர வாழ்த்துக்கள்
last- superp...
ReplyDeleteகடைசி பதில் கலக்கல்!
ReplyDeleteமதுரை தமிழனின் நையாண்டி அசத்தல். இரண்டாவது கேள்விக்கும் மூன்றாவது கேள்விக்கும் பதில் உனில் கலைஞர் சொல்வது போலவே உள்ளது
ReplyDeleteஅத்தனையும் அசத்தல் நண்பரே. இது தான் மதுரை குசும்பு என்பதோ.. செஸ் விளையாட்டு, ஓரே தொழில் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteமதுரைக்கு மறு பெயர் என்ன?
ReplyDeleteலொள்ளு , மற்றும் நக்கல், நய்யாண்டி. லந்து என்று வேறு பெயர்களும் உண்டு .
கேள்வி பதில் ! சு வைத்தேன்
ReplyDeleteஅருமையான பதில்கள்! ரசித்தேன்.
ReplyDelete