Wednesday, November 6, 2013



இப்படியெல்லாம் நிச்சயம் நடக்க வாய்ப்பில்லை?




1. ரஜினிகாந்த தன் வயது ஒத்த பெண்ணை ஹிரோயினாக போட்டு நடிப்பாரா?

2. ஒரு தடவை பார்த்தாலே படம் எல்லோருக்கும் புரியும்படி கமல்ஹாசன் படம் எடுப்பாரா?

3. சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா கலைஞர் ஒன்று சேர்ந்து கலந்து கொள்வார்களா?

4. தமிழக கல்லூரிப் பெண்கள் பொது இடங்களில் தமிழில் பேசுவார்களா?

5.  சினிமா, மற்றும் சினி செய்திகள் ஏதும் இல்லாமல் விஜய் மற்றும் சன் டிவிகளால் நிகழ்ச்சிகள் வழங்க முடியுமா?

6. சிரித்த முகத்துடன் அரசாங்க அதிகாரிகளால் வேலை செய்ய இயலுமா?

7.  கணவர்களுக்கு அர்ச்சனை செய்யாமல் பெண்களால் குடும்பம் நடத்த இயலுமா?

8. தமிழக திரைப்படத் துறையினருக்கு  எதிர்கட்சி தலைவரை வைத்து திரைப்பட விழாக்கள் நடத்த தைரியம் உண்டா?

9. பேஸ்  புக்கில் வேறு நாட்டில் உள்ளவர்களுடன் நட்புறவு கொள்ளும் உங்களுக்கு பக்கத்து வீட்டுகாரர்களுடன் நட்புறவு கொள்ள முடியுமா?

10. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களுக்கு இனிய காலை வணக்கம் சொல்லத தெரிந்த உங்களுக்கு உங்கள் கூட வாழும் வாழ்க்கை துணைக்கு இனிய காலை வணக்கம் சொல்லத் தெரியுமா?

11. பேஸ்புக்கில் முகம் தெரியாதவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு லைக்ஸ் போடத் தெரிந்த உங்களுக்கு, நிஜ வாழ்க்கையில் உங்கள் மாமியார் மாமனார், நாத்தனார் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு லைக்ஸ் சொல்ல மனசு வருமா?

12. சமுக வலைத்தளங்கள் மூலம் கஷ்டப்படும் யாரோ ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுவித்து உதவ முன் வரும் உங்களுக்கு உங்கள் உறவினர்கள் நண்பர்கள் கஷ்டப்படும் போது மற்ற உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் வேண்டுகோள் விடுவித்து அவர்களுக்கு உங்களால் உதவி செய்ய இயலுமா?

இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க...இறுதியாக ஒரு கேள்வி. இப்படியெல்லாம் பதிவு இட்டு உங்களை சிரிக்கவோ அல்லது சிந்திக்கவோ அல்லது தலையில் அடித்து கொள்ள வைக்கும் என்னை அழைத்து தமிழகத்தில் விழா எடுத்து சிலை வைக்கதான் உங்களால் முடியுமா அல்லது என்னைப்பாராட்டி தங்கத்தில் ஒரு பூரிக் கட்டை செய்து எனக்கு பரிசாக அளிக்க உங்களால் முடியுமா?

உங்களால் என்ன செய்யமுடியும் என்று பின்னுட்டம் இட்டுச் செல்லுங்கள்

( ராஜி, சசி, உஷா அன்பரசு, அருணா செல்வம் போன்ற பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்... உங்கள் வீடுகளில் மிஞ்சிய தீபாவளி பலகாரங்க்ளை அனுப்புகிறோம் என்றோ அல்லது உங்கள் மனைவியிடம் சொல்லி பூரிக்கட்டையால் பூஜை செய்ய ஏற்பாடு பண்ணுகிறோம் என்று சொல்ல வேண்டாம் இந்த இரண்டுக்கும் என் உடம்பு தாங்காதுங்கோ!!!! )

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. இம்பாசிபிள்! :)

    சரியான கேள்விகள்!

    ReplyDelete
  2. ஏன் இப்படி ஒரு கொல வெறி?

    ReplyDelete
  3. கீழுள்ள சில உண்மைகள் மறைக்கபட்டுள்ளன...:-)

    > உண்மை தமிழனால் நல்ல உருப்படியான பதிவு போட முடியுமா???

    > மனைவியையும், மற்ற பெண்களையும் கிண்டலடிக்காமல் பதிவு செய்ய முடியுமா???

    > போட்டோ கிராபிக்ஸ் இல்லாமல் பதிவு இருக்குமா?

    சும்மா தமாஷ்...

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் கலாய்க்க வேண்டும் .... எனக்கு வாரிசு இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். உங்களினின் வரவும் கருத்தும் அந்த கவலையை போக்கியது

      Delete
  4. நக்கலா கேட்டாலும் 9,10,11,12 கேள்விகள் உண்மையில சிந்திக்கத்தான் வைக்குது.... அதனால தமிழகத்துக்கு வந்தா உங்களுக்கு விழா என்ன... முதலமைச்சராவே ஆக்கிபுடறோம் வாங்க... தமிழ் மண ஓட்டு மட்டுமில்ல்... தமிழக ஓட்டும் மதுரை தமிழனுக்கு எக்கச்சக்கமா இருக்கிறது என்பதை சங்க சார்பில் தெரிவித்து கொள்கிறேன்... ஹா...ஹா...! உங்கள் சேவை இணையத்துக்கு தேவை என்பதால்... நான் செய்த தீபாவளி பலகாரங்களை உங்களுக்கு அனுப்பமாட்டேன்...! பூரிக்கட்டை பூஜை.... அதான் தெனம் வாங்கி வாங்கி பழகி போச்சே... வேற ஏதாவது யோசிக்கிறேன்...

    ReplyDelete
  5. மதுரைக்காரரே....
    கடைசி வேண்டுகோளைத் தவிர மீதி எதற்கும்
    சான்சே இல்லை.




    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.