நீயா நானா புகழ்
கோபிநாத் தன் பேஸ்புக்
பக்கத்தில்
அவிழ்த்துவிட்ட
கட்டுக்கதை (வெட்ககேடு)
நீயா நானா கோபிநாத
தனது பேஸ்புக் பக்கத்தில்
ஒரு செய்தியை
பகிர்ந்துள்ளார். அது
ஒரு கட்டுக்கதையாகௌம்.
இது அவரது கட்டுக்கதை
அல்லது இன்னொறு தளத்தில்
வந்த கட்டுக்கதையை இவர்
ஷேர் செய்து இருக்க
வேண்டும் என நினைக்கிறேன்.
இவரைப் போல புகழ்
பெற்றவர்கள் தன்
தளத்த்தில் ஒரு செய்தியை
பகிரும் போது அது உண்மையா
அல்லது சரியான தகவல்தானா
என்று ஆராய்ந்து வெளியிட
அல்லது பகிர வேண்டும்
என்பது எனது கருத்து.
காரணம் இவரைப் போல புகழ்
பெற்றவர்கள் சொல்வதை
மக்கள் பலரால்
கவனிக்கப்படுகிறது. அதிலும்
நம் தமிழ் மக்கள்
ஆட்டுமந்தை கூட்டத்தை போல
உள்ளவர்கள் அதில் எந்த
அளவிற்கு உண்மை இருக்கிறது
என்று சிந்திக்காமல் அதை
ஒரு வேதவாக்காக நினைத்து
அதை நம்ப மட்டுமல்லாமல் அதை
பலரிடமும் உண்மை என்று
கருதி பகிரவும்
செய்கிறார்கள்.
உதாரணமக அந்த
செய்தியை படித்து விட்டு 6095
லைக்கும் 7443 பேர்
ரீஷேரும் 1534 பேர்
கருத்தும் தெரிவித்து
இருக்கிறார்கள். இதில்
ஒரு சிலரை தவிர அனைவரும்
இதை மிக பயனுள்ள தகவல்
பகிர்ந்ததற்கு மிகவும்
நன்றி என்று கருத்தும்
தெரிவித்து
இருக்கிறார்கள். இப்படியும்
பல கூமுட்டைகள் இணையத்தில்
வந்து படித்து
செல்லுகிறார்கள் என்பதை
நினைக்கும் போது அழுவதா
இல்லை சிரிப்பதா என்று
தெரியவில்லை
இந்த
செய்தியை படிக்கும் போது
என் மனதில் எழுந்த
கேள்விகள் இவைகள்:
ஒரு புகழ் பெற்றவர்
செய்தியை பகிரும் போது
இப்படிதான் மொட்டையாக
பகிர்வதா?
பயணம் செய்த டாக்ஸி
நிறுவனம் எது? இந்த
சம்பவம் எந்த ஊரில் இருந்து
எந்த ஊருக்கு செல்லும்
வழியில் நடந்தது? நீங்கள்
டிரைவரிடம் காரை நிறுத்த
சொன்ன போது அவர்
நிறுத்தாமல் ஒட்டும் போது
ஏன் போலீஸுக்கும் போன்
செய்யாமல் கார் ஒனருக்கு
போன் செய்தீர்கள்? இரவு
நேரத்தில் பயணம் செய்யும்
போது நீங்கள் நிறுத்த
சொல்லியும் சம்பவம் நடந்த
இடத்தில் நிறுத்தாமல்
டிரைவர் சென்றார் என்ற
உங்கள் வாதத்தை ஏற்றுக்
கொண்டால் அந்த விபத்தில்
ஒரு பெண்ணும் ஒரு
குழந்தையும் அடிபட்டு
கிடப்பது உங்களுக்கு
எப்படி தெரிந்தது? உங்கள்
டிரைவர் காரை மாப்பிள்ளை
ஊர்வலத்திற்கு ஓட்டிஸ்
செல்லும் வேகத்தில்தான்
சென்றாரா என்ன? நீங்கள்
போலீஸில் புகார் செய்து
இருந்தீர்கள் என்றால் அது
எந்த ஊர் போலீஸ் நிலையம்
எந்த போலீஸ் அதிகாரி என்று
நீங்கள் சொல்லாதது ஏன்?
டிரைவரின் & போலீசாரின்
கூற்றுப்படி இது
அந்தப்பகுதியில் அடிக்கடி
நடக்கும் நிகழ்ச்சி
என்றால் போலீஸார் இது வரை
ஏன் அந்த கும்பல் மிது
நடவடிக்கை எடுக்கவில்லை?
அல்லது ஏன் எந்த வித
தினசரி நாளிதழ்களும் அதௌ
பற்றி செய்திகள்
வெளியிடவில்லை? வாகனத்தின்
லைட்டை அணைத்துவிட்டு இரவு
நேரத்தில் அந்த சாலையில்
எப்படி அந்த டிரைவரால்
வண்டியை ஒட்ட முடிந்தது?
இல்லை சாலை ஒரத்தில்
விளக்குகள் இருந்தால்
காரின் விளக்கை அணைப்பதால்
என்ன பலன்? பகல்
நேரத்தை போலதான் இரவு
நேரங்களில்தான் அநேக
வாகனங்கள் செல்கின்றன
அப்படி இருக்கும் போது வாகன
லைட்டை அணைத்து விட்டு
எப்படி ஒட்டி இருக்க
முடியும்? அப்படி
அவர் ஓட்டி இருந்தால்
நீங்கள் இப்போ இருப்பது
சொர்க்கத்திலோ அல்லது
நரகத்திலோதான்?
நீயா
நானாவில் வாதத்தின் போது
இரு தரப்பாரையும் மடக்கி
மடக்கி கேள்வி கேட்கும்
கோபிநாத் அவர்களே மேலே
எனக்கு எழுந்த கேள்விகள்
நீங்கள் இதை பகிரும் போது
அல்லது சொல்லும் போது
உங்களுக்கு எழவில்லையா
என்ன??
நீங்கள் சொல்லும்
கருத்துக்களை வேதவாக்கா
எடுத்து கொள்ளும்
தமிழகத்தில் வசிக்கும்
கூமுட்டைகளுக்கு நீங்கள்
செய்திகள் பகிர்வது
இப்படிதானா? இது
உங்களுக்கு வெட்கமாக
தோன்றவில்லையா?
Shame on you Mr.Gopinath
அன்புடன்
மதுரைத்தமிழன்
|
இந்த கிழே கண்ட
செய்திதான் கோபிநாத்
அவர்களின்
பேஸ்புக்தளத்தில்
பகிரப்பட்டுள்ளது. Courtesy : Mr.Gopinath
|
Home
»
கோபிநாத்
»
நீயா நானா
»
பேஸ்புக்
»
விஜய் டிவி
» நீயா நானா புகழ் கோபிநாத் தன் பேஸ்புக் பக்கத்தில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை (வெட்ககேடு)
Monday, November 11, 2013
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
ReplyDeleteநீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவைதான். இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ ஆனால் விழிப்புணர்வுக்காக புனையப்பட்டதாக இருக்கலாம். அந்த வகையில் தர்க்கம் பார்க்காமல் வரவேற்கலாம் என்பதே என் தனிப்பட்ட விருப்பம்.
பெண்கள், குழந்தைகளை விபத்து போல நடிக்க வைத்து பணம் பறிப்பது பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, முட்டையில் தண்ணி கலந்து!?
ReplyDeleteகோபிநாத் சொல்லும் சம்பவம் புனைவு போல தோன்றுகிறது! உங்களது கேள்விகள் நியாயமானது! ஆனாலும் இது போன்ற பகிர்வுகளை படிக்கும்போது உடனடியாக கேள்விகள் எழுவதில்லை! நன்றி!
ReplyDeleteI assume you are over-reacting (ask yourself why.). However, thanks for your view.
ReplyDeleteநீயா நானா-வாயிருந்தா கோபிநாத் காதுக்குள்ள வந்து ஆண்டனி கேள்விகள ஓதுவாரு. பேஸ்புக்குன்னா சொந்தமால்ல சிந்திக்கோணும், அப்புறம் கேக்கோணும்? அது *நமக்கு* வருமா?
ReplyDelete