Wednesday, November 20, 2013

பாரதரத்னா விருது யார் யாருக்கெல்லாம் & எதற்காக தரலாம்?





சோனியா காந்தி: இந்தியாவை மேலை நாடுகளுக்கு கூறு போட்டு விற்பதற்காக தரலாம்.

மன்மோகன் சிங் : வாய் பேசாமல் மெளனமாக இருந்து இந்திய பிரதமராக இருந்து வருவதற்காக தரலாம்.

கலைஞர்: காங்கிரஸ் தலைமையிடம் எவ்வளவுதான் அடிவாங்கினாலும் வலிக்கவே இல்லை என்று சொல்லி வலியை பொறுத்து கொள்வதற்காக தரலாம்.

ஜெயலிதா: தன் காலில் அதிகமானவர்களை விழ வைத்தற்காகவும், தன் மீதுள்ள வழக்கிற்காக அதிகமான அளவு வாய்தா வாங்கி ரிக்கார்ட் பிரேக் பண்ணியற்க்காக தரலாம்.

ராமதாஸ்:மரங்களை அதிகம் வெட்டித்தள்ளியதற்காக தரலாம்.

வை.கோ : அதிக நடைபயணம் மேற் கொண்டிருப்பதற்காக தரலாம்.

அப்துல்கலாம் : அணுமின் நிலையத்தால் பாதிப்பு இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்தற்காக இவருக்கு தரலாம்.

ஸ்டாலின் : .நா செயலாளரிடம் இலங்கை தமிழர்களை பாதுக்காக்க கடிதம் கொண்டு சென்ற அரிய சாதனைக்காக கொடுக்கலாம்.

விஜயகாந்த : யாருக்கும் தெரியாமல் தன் மைச்சனன் பெயரில் புதிய கல்யாண மண்டபத்தை கட்டியதற்காக தரலாம்

குஷ்பூ : தளபதிக்கே பயத்தை வரவழைத்தற்கு கொடுக்கலாம்.

ரஜினி : ஹாலிவுட்டு படங்களின் வசூலையும் தூக்கி சாப்பிட்ட எந்திரன் படத்தில் நடித்தற்காக தரலாம்.

கமல்ஹாசன் : ஹாலிவுட்டு படங்களின் டெக்னிக்கை காப்பி அடித்து படம் எடுத்து வெளியிடுவதற்காக தரலாம்.

கோபிநாத் : தனியாக வீட்டில் அழுபவர்களை டிவியில் கொண்டு வந்து அழுக வைப்பதற்காக தரலாம்.

தினமலர் : பொய் & கற்பனை செய்திகளை உண்மையின் உரைகல் என்று சொல்லி போடுவதற்கு தரலாம்.

விகடன் : கவர்ச்சி படங்களை அதிக போட்டு இந்த காலத்துக்கு ஏற்ற குடும்ப இதழாக தொரந்து வருவதற்க்காக விகடனாருக்கு தரலாம்

மதுரைத்தமிழன் : இப்படி மொக்கை பதிவுகள் போடுவதற்க்காக தரலாம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

15 comments:

  1. எல்லாரையும் சொல்லிக்கிட்டே வந்து... கடேசியா அதென்ன ஆச? ஆமா நடுவுல உட்கார்ந்துக்குனு என்ன சொல்லிக்கிட்டிருக்கிங்க... ஸைடில உட்கார்ந்துக்குனு இருக்க அவங்க 'ஆப்' ஆயிட்டாங்க? (சைடில் உட்கார்ந்துக்குனு இருக்க அவுங்க யாருன்னு எனக்கு தெரியும்... ஹா... ஹா.. சொன்னா வம்பா போயிரும் என்பதால் மாட்டேனே.. சொல்ல மாட்டேனே..!)

    ReplyDelete
  2. நடுவுல உட்கார்ந்துக்குற அந்த அழகு ராசாவுக்காக த.ம-1

    ReplyDelete
  3. ஆஹா ! தலைப்பை பார்த்தவுடனே என் மனதில் எழுந்ததை கடைசியில் போட்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே !

    ReplyDelete
  4. ஓ அதுக்குத்தான் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா கொடுத்ததா?

    ReplyDelete
  5. உங்களின் துணிச்சலான பகிர்வுக்கும் தரலாம் சகோ :))

    ReplyDelete
  6. இதை படித்தவர்களுக்கும்.....

    ReplyDelete
  7. கடைசி அவார்டுதான் ரொம்ப பொருத்தம்.

    ReplyDelete
  8. நீங்க மட்டும் விருது வாங்குனா போதுமா!? உங்க ஆசை சகோதரியான எனக்கும் சிபாரிசு பண்ணுங்கோ!

    ReplyDelete
  9. idhai padikara engaluku tharalam

    ReplyDelete
  10. கடைசியில சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சரி. இதோ பிடியுங்க பாரதரத்னா.

    ReplyDelete
  11. மொக்கை காமெண்டு போடும் எங்களுக்கு அப்ப
    பொற்கிழியா?

    ReplyDelete
  12. சகோதரருக்கு வணக்கம்..
    பாரதரத்னா விருது தனது மதிப்பை இழந்து விட்டது வேதனை தான். தனது அரசாங்கத்தில் அங்கம் வகித்து வாய்பேசாமல் மவுனம் காக்கும் தலைவர்களுக்கு இந்தாங்க பிடிங்க இரட்டை பாரதரத்னா (இரட்டை ஆஸ்கார் போல) னு சொல்லும் நிலைமை வந்திடும் போல இருக்கிறதே! இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு பாரதரத்னா விருது இப்ப சொல்லுங்க!!

    ReplyDelete
  13. பாரத ரத்னா தானே..... அது ரொம்ப சீப்பா போயிடுச்சி.
    அதனால எனக்கு வேண்டாம் “உண்மைகள்“

    ReplyDelete
  14. அந்த பாரதரத்னா சீப்போ சீப்புங்கோ! அதைவிட நல்ல ரத்னங்களை காசு கொடுக்காமலேயே நுகர்ந்து, வாசித்து, அனுபவித்து, வாழ்த்தி சச்தோஷம் அடையலாம். நான் சொல்ல வருவது யாரை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்! Yes!. நம்ம வலைப் பதிவாளர்களைத்தான்!! உங்கள் பதிவை ரொம்பவே ரசித்தேன்! த.ம. +1 போட்டாச்சு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.