Tuesday, November 19, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா மட்டும் கொடுத்தால் போதுமா
 வேற என்ன செய்து  மகிழ வைக்கலாம்





சச்சின் என்ற மகான்


கடந்த சில நாட்களாக சச்சின், & பாரத ரத்னா விருது இந்த இரண்டு சொல்லும் இணையத்திலும் இந்திய மக்களிடமும் மிக அதிக அளவு புழங்கின. பல பதிவுகளும் வந்தன. ஆனால் அதையெல்லாம் படிக்க நேரம் கிடைக்கவில்லை. இப்படி மிக அதிக அளவு பேசப் பட்ட ஒருவரைப்பற்றி பதிவு ஏதும் போடவில்லை என்றால் கூகுலும் பதிவுலகமும் என்னை பதிவுலகத்தில் இருந்ததே விலக்கி வைப்பதாக எச்சரிக்கை மெயில் அனுப்பியதால் இந்த அவசரப்பதிவு.



எந்த பதிவு எழுதுவது என்றால் நான் ஆராய்ந்துதான் எழுதுவது வழக்கம் என்பதால் சச்சினைப்பற்றி ஆராய ஆரம்பித்தேன். சச்சின் பெயர் எங்கும் ஒலிப்பதால் அவர் இந்தியாவில் அவதரித்த மகானாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையில் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை. சரி அவர் இந்தியாவின் புகழ் பெற்ற சமுக நலத் தொண்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையில் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை. சரி நிச்சயம் அவர் இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய இந்திய ராணுவ வீரராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையில் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை. சரி இவர் நிச்சயம் விஞ்ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையிலும் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை.





என்னடா இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனையாக இருக்கிறததே என்று நினைத்து ஆராய்ச்சியை தொடர்ந்தேன்..நிச்சயம் சாமியாராக இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையில் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை. இப்பவும் ஆராய்ச்சியை விட மனதில்லாமல் இவர் நிச்சயம் நடிகனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அதன் அடைப்படையில் ஆராய்ந்தேன். ஒன்றும் சிக்கவில்லை.



ஒவ்வொரு தடவையும் நான் சர்ச் பண்ணிய போது சச்சின் என்ற போது விளையாட்டு வீரர் என்று காண்பித்தது இதெற்கெல்லாமா பாரத ரத்னா தருவார்கள் என்று நினைத்து நான் அதை ஒதுக்கி வைத்தேட்டு என் ஆராய்ச்சியை தொடர்ந்தேன். இறுதியில்தான் எனக்கு புரிந்தது விளையாட்டு வீரருக்குதான் பாரத ரத்தனா விருது கிடைத்தது என்று. அதன் பின் அட ராமா என்று நான் தலையில் அடித்து கொண்டேன்.


அதென்னப்பா கிரிகெட் விளையாட்டு வீரருக்கு மட்டும் பாரத ரத்னாவா அது என்ன கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வீளையாட்டா என்ன? செஸ் விளையாட்டில் சாதித்தால் அவருக்கு விருது கிடையாதா?


போங்கடா நீங்களும் உங்க பாரத ரத்னா விளையாட்டும்...



இப்படி செய்து சச்சினை மகிழ வைக்கலாம்


1. சச்சினுக்கு ஒரு கோவில் கட்டலாம்.



2. டில்லியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சச்சின் எக்ஸ்பிரஸ் விடலாம்.



3. ஏர் இந்தியாவை மாற்றி ஏர் சச்சின் என்று அழைக்கலாம்.



4. பாரத ரத்னா என்ற உயர்ந்த விருதை விட பாரத சச்சின் என்ற விருதை உருவாக்கி எதிர்காலத்தில் கொடுக்கலாம்


5. எங்கெல்லாம் காந்திஜி படம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை நீக்கி விட்டு அதற்கு சச்சின் படத்தை மாட்டலாம்.



6. இந்தியா வரும் வெளினாட்டு அதிபர்கள் எல்லாம் முதலில் சச்சினை பார்த்து வணங்கி விட்டுதான் செல்லவேண்டும் என்ற முறையை கொண்டு வரலாம்.



7.இந்திய ஜனாதிபதி & பிரதமரைவிட சச்சினுக்குதான் அதிகபவர் என்று அறிவிக்கலாம்.



8. சச்சின் வரி என்று விதித்து எல்லோரும் தான் சம்பாதிப்பதில் 2 விகிதம் கண்டிப்பாக செலுத்த வேண்டும் அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு சச்சின் குடும்பம் பரம்பரையாக வாழ வசதி செய்து தரப்படும் என அறிவிக்கலாம்.



9. இந்திய தேசம் என்று அழைப்பதற்குபதிலாக சச்சின் தேசம் என்ரு அழைக்கலாம்


10. சச்சின் பிறந்த நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்கலாம்.



11. ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக சச்சின் படத்தை வெளியிடலாம்.





இதோட நான் நிருத்திக்கிறேன்..மீதி இந்த பதிவை படிப்பவர்களிடம் விட்டு விடுறேன்...



அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. நல்லாத்தான் யோசிக்கிறீங்க.... உங்களுக்கு ஒரு விருது கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. பண முடிப்பு இல்லாத விருதுகள் ஏற்றுக் கொள்ளபடமாட்டாது

      Delete
  2. கவலைப் பட்டு உடம்பெக் கெடுத்துக்க வேணாம்.
    அடுத்த வருஷத்திலேருந்துபிரபல பிளாக் கர்க்கெல்லாம்
    பாரத ரத்னா உண்டாம்

    தகுதி :
    1000000 (சைபர் சரியா?)பார்வையாளர்களைத் தாண்டிய பிளாக்கர் பிளேயர்கள்
    மட்டுமே ஆட்டத்துக்கு சேத்துப்பாங்களாம்

    ReplyDelete
  3. சச்சின் கவரிமான் பரம்பரையில் வந்தவர் என்று வரலாற்றை திருத்தி எழுதலாம்.


    இந்த பதிவுக்கு மட்டும் Anonymous comments வைத்து பாருங்களேன்! :) :-)..

    ReplyDelete
  4. உங்க எடைக்கு எடை வெங்காயம் கொடுக்கலாமில்ல!?

    ReplyDelete
  5. உங்களுடைய ஆராய்ச்சியில் குறையைக்கண்டேன் நான்.
    தான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டு வீரர் இல்லை தன்னுடைய தொழில் நடிப்பு என்று பட்டவர்த்தனமாக வருமான வரி அலுவலகத்தில் பதிந்து வரிச்சலுகையை பெற்றுள்ளார்.
    ஸோ, ஹி ஈஸ் யெ ப்ரொஃபெஷனல் ஆக்டர் தேன் யெ ப்ரொஃபெஷனல் கிரிக்கெடர்.
    வாழ்க பாரத் ரத்னா சசின்!
    மேல் விவரங்களுக்கு... http://indiatoday.intoday.in/story/actor-sachin-tendulkar-gets-tax-break/1/139537.html

    ReplyDelete
  6. ஆஹா சூப்பர் நச் இருங்க என் பையன் இருக்கானா இல்லையான்னும் பார்த்துக்குறேன். எதாச்சும் சொன்னா சச்சின் கோவிச்சுக்க மாட்டார்.இந்த மீடியாக்களும் இந்த தலைமுறையும் ரொம்ப தான் படுத்துகிறார்கள்.விளையாடினார்..சம்பாதித்தார்...அதற்கு ஏன் இவ்ளோ அட்டகாசம்....

    ReplyDelete
  7. உங்களின் யோசனை ஏற்கப்பட்டுவிட்டது. இன்றைய மாலைமலர் செய்தியில் கூறியிருப்பதாவது.
    பாட்னா, நவ. 20–

    கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு கண்ணீருடன் விடைபெற்றார்.

    கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு பீகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது. மொனகனா மாவட்டம் அதார்வலியா என்ற கிராமத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கோவில் கட்டப்படுகிறது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    போஜ்பூரி பாடகரான மனோஜ்திவாரி இந்த கோவிலை கட்டுகிறார். 5 அடி 5 அங்குலம் உயரம், 850 கிலோ எடையில் சச்சின் சிலை உருவாக்கப்படுகிறது. பார்க்கவும்
    http://www.maalaimalar.com/2013/11/20114519/temple-for-sachin-in-bihar.html

    நன்றி
    பாலாஜி

    ReplyDelete
  8. நல்லாவே நக்கல் அடிக்கறீங்க! ஜமாயுங்க!

    ReplyDelete
  9. வரிசை எண்.5 யை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கிறேன். வழிமொழிகிறவர்கள் மொழியலாம்.

    ReplyDelete
  10. அது ஒன்றுமில்லை சகோதரரே சச்சின் வெள்ளைக்காரர்கள் பந்தையெல்லாம் அடித்து போட்டியில் போராடி வென்றதை (எப்ப போராடி வென்றார்என்றெல்லாம் கேட்கக் கூடாது.) ர்புரிந்து கொண்டதன் விளைவாக இருக்குமோ பாரதரரத்னா விருது!

    ReplyDelete
  11. ஓ.... அப்படியா...?
    அட ராமா....

    ReplyDelete
  12. நல்ல யோசனைகள் மதுரைத் தமிழன்..... பரிசீலனை செய்வார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. பால்மா குடுக்கலாமே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.