Friday, November 8, 2013



மெயில் பேக் 3 : உங்கள் எதிரி உங்கள் மீது சிறு கல்லை தூக்கி அடித்தால் ? படிக்க .. சிந்திக்க






உங்கள் எதிரி உங்கள் மீது சிறு கல்லை தூக்கி அடித்தால் ?

உங்கள் எதிரி உங்கள் மீது சிறு கல்லை தூக்கி அடித்தால்.... அவரை பார்த்து புன்னகைத்து அவர் மீது பூவை விட்டு எறியுங்கள்( ஏறியும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க  வேண்டியது பூவை எறியும் போது பூத்தொட்டியோடு எறியுங்கள்)

நமது வாழ்க்கை ஒரு சிறந்த சினிமா...எப்படி என்று யோசிக்கிறீங்களா மக்கா?

நீங்கள் சோகமா இருந்த அது டிராமா..... நீங்கள் பயந்து இருந்தால் அது சஸ்பென்ஸ்.... நீங்கள் கோபத்துடன் இருந்தால் அது ஆக்.ஷன்... உங்கள் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்தால் அது ஹரார் (Horror) இதை படிச்சுட்டு நீங்கள் சிரித்தால் அது காமெடி..

உங்கள் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வெற்றி பெறும் போது நீங்கள் யாரு என்று உங்கள் நண்பர்களுக்கு தெரியும், அது போல நீங்கள் தோல்வியை தழுவும் போது உங்களுக்கு தெரியும் உங்கள் நண்பர்கள் யாரென்று....

சிறந்த நண்பன் யார்?.....


உங்கள் நண்பர் சிறந்த மனிதனாக இல்லை என்று குறை கூறுவதைவிட  அவன் சிறந்த மனிதனாக ஆக நீங்கள் உதவலாமே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. அருமையான கருத்துடன் கூடிய பதிவு
    குறிப்பாக இறுதிப் பத்தி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுவைமிகு சிந்தனை முத்துக்கள் கோர்த்த மணிமாலை! அழகு!

    ReplyDelete
  3. பூந்தொட்டியோடு எறிந்து சின்ன சண்டையை பெரிசா ஆக்குவதற்கு அப்படித்தானே...


    நல்லதொரு கேள்வியும பதிலும்

    ReplyDelete
  4. அருமையான சிந்தனைகளுக்கு... அவர்கள் உண்மைகள்..!

    ReplyDelete
  5. பூத்தொட்டியோடு எதிரியை அடிப்பதுலாம் ஓல்ட்.

    ReplyDelete
  6. குடித்த முட்டாளுக்கும் குடிக்காத முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம்....
    அவர்கள் உண்மைகளில் மதுரை தமிழனோடு பதிவை படிப்பது போல.
    தெளிவாக குழம்புவது!

    ReplyDelete
  7. நிறைய கற்கள் நம்மை நோக்கி வந்தால் அவற்றையெல்லாம் catch பிடிச்சி ' வூடு' கட்டி அதுக்குள்ள வச்சியும் அவங்களையும் திருப்பி அடிக்கலாம்... ஹா...ஹா..

    ReplyDelete
  8. கடைசி அறிவுரை அருமை! நன்றி!

    ReplyDelete
  9. உங்களுக்காகவே எழுத பட்ட கவிதை http://rajiyinkanavugal.blogspot.in/2013/11/blog-post_9126.html

    ReplyDelete
  10. பூந்தொட்டி ஐடியா சூப்பரா இருக்கே....

    காதலிக்கு பூ கூட இனி தொட்டியும் குடுக்கனுமோ ?

    ReplyDelete
  11. சிறப்பான செய்திகள் கொண்ட மெயில் பேக்! ரசித்தேன்.

    காதலிக்கு பூத்தொட்டியுடன் கொடுக்கலாம் மனோ!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.