Wednesday, November 6, 2013



தமிழர்களிடம்  பேஸ்புக்  சிக்கி படும்பாடு


தமிழை வளர்க்க இப்படியும் சில தமிழர்கள் கிளம்பிட்டாங்கய்யா 


'தமிழ்'ங்கிற வார்த்தையை 'டமில்'னு பேசுறது தான் இப்போதைக்கு பேஷன் அப்படி பேசி தமிழ் வளர்க்கும் கூட்டங்கள் பேஸ்புக்கை மட்டும் தமிழ்படுத்த இணையம் மூலம் முயற்சிக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியவில்லையா பேஸ் புக் (FACE BOOK) என்பது பெயர்ச்சொல் என்று. பெயர்ச்சொல்லாய் எந்த மொழியில் ஒரு பெயர் வைக்கப்பட்டாலும் அதை அப்படியே ஒலி தொணிக்கும்படி சொல்லவும் எழுதவும் வேண்டும்  என்பது தமிழ் இலக்கணம் இதையும் தமிழ் படுத்துகிறேன் என்று படித்தவர்கள் தமிழில் எழுதுகையில்.... முகப்புத்தகம் முகநூல்..... முகப் புய்த்தகம்... மூஞ்சிநூல்... மூஞ்சிப்புத்தகம் வதனப்புத்தகம் என்று எழுதுகிறார்கள்!!


இப்படி மொழிபடுத்துபவர்கள் எழுதியதை படித்து பார்த்தால் தமிழில் பல பிழைகள் செய்து இருப்பார்கள் அதுமட்டுமல்லாமல்  ஆட்டோ பஸ் கிச்சன் டிவி போன்ற வார்த்தைகள்  பரவி கிடக்கும். ஆனால் இந்த பேஸ் புக் என்ற பெயர் சொல்லை மட்டும் விடாப்பிடியா தமிழாக்கம் செய்து கொண்டிருப்பார்கள்.

இனிமேல் தயவு செய்து பேஸ்புக் என்றே தமிழிலும் எழுதுங்கள்... சொல்லுங்கள். அதுதான் முறை!

இல்லை இல்லை நாங்க இப்படிதான் மொழி பெயர்ப்போம் என்று சொல்லுபவர்கள்  இண்டியன் எக்ஸ்பிரஸ் ,கூகுல்,யாஹூ, ஆரக்கள். மைக்ரோ சாப்ட், போன்ற பல கம்பெனி பெயர்களையும் மொழி பெயருங்களேன்.

உங்களுக்கு உதவியாக நான் மொழி பெயர்த்த சில பெயர்கள்

oracle - ஆறு கல்
indian express - விரைவான  இந்தியர்
india today - இன்றைய இந்தியா
india times - இந்திய காலம்

சரி எனக்கு தூக்கம் வருதுங்க. மீதியை நீங்களே மொழி பெயர்த்துக்குங்க, வரேணுங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்







12 comments:

  1. தூங்கி எழுந்து மீதியை நீங்களே மொழி பெயர்த்துடுங்க

    ReplyDelete
  2. english ஐஎதுக்கு ஆங்கிலம் னு கொல்லுறாங்க?. மன்னிக்கவும் சொல்லுறாங்க?

    ReplyDelete
  3. இப்படி சில பெரியவர்கள் தூய தமிழ்லதான் பேசுவார்கள்...அவர்களிடம் நான் வழக்கு மொழி கலக்காமல் கவனமாக 5 நிமிடம் பேசுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். கார்- மகிழுந்து, ஆட்டோ - கூட்டு வண்டி என்றெல்லாம் சொல்வார்கள் ... ! அவ்வளவு ஏன் என் வீட்டிலேயே என் மாமனார் மிகுந்த தமிழ் பற்றுள்ளவர்... என் பெயரை உஷா என்று கூப்பிடவே மாட்டார்.. ஷா என்ற வடமொழி நீக்கி எனக்கு உமா என்று வேறு பெயர் வைத்துதான் அழைத்தார்.

    ReplyDelete
  4. இதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் முகநூலை தமிழில் பயன்படுத்தியது இல்லையென்று.

    முகநூல் தமிழ் பதிப்புருவிற்க்கு(Facebook Tamil Version) "முகநூல்" என்றே பெயர் சூட்டியுள்ளனர். தமிழில், உரிமையாளரே "முகநூல்" என பெயர் சூட்டியிருக்கிறார் எனும்போது எதற்க்காக ஆங்கில பெயரைப் பயன்படுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 'Facebook Tamil Version' என்று ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை...!

      ஒரு வேளை இருந்தால் அதன் URL-ஐ தெரியப்படுத்தவும்...!

      Mark Zuckerberg -க்கு 'முகநூல்'-எனும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ, தெரியாதோ...?

      Delete
    2. Just go to facebook.com
      Just under the world map(bottom of the page) there are many language selections. (English (US) Español Português (Brasil) Français (France)Deutsch Italiano العربيةहिन्दी中文(简体)日本語…) There r three dots at last(...). Click it. You can able to find tamil.

      Delete
  5. அப்துல் ஹமீட் எமது பாடசாலைக்கு 2000மாம் ஆண்டு வந்தபோது கூறிய கருத்து ஞாபகம் வருகிறது. Telephone ஐ கண்டுபிடித்தவர் அதற்கு பெயர் வைத்துள்ளார். அதை நாம் மொழிபெயர்த்துள்ளோம். நாம் ஒன்றை கண்டுபிடித்து அதற்கு தமிழில் பெயர் வைத்து அதை மற்றவர் பயன்படுத்த வைத்தால் தமிழ் வளரும்

    ReplyDelete
  6. முகரக்கட்டை புஸ்தகம் என்று நண்பர் சொல்வார்! அது நினைவுக்கு வந்தது! :)

    ReplyDelete
  7. நம்மளமாதிரியே இங்க ஒருவன் சிந்திக்கிறான்யா... #சந்தோஷம்

    ReplyDelete
  8. "மூஞ்சி" ன்னு மட்டும் இருந்தா நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  9. "ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது "முகநூல்" என்று குறிப்பிடுகிறார்கள். Booking (Book) என்பதற்கு பதிவு என்ற பொருளும் உண்டு. ஆகையால் நாம் "முக பதிவு" என்று "Facebook" ஐ கூறலாம் அல்லவா?.
    http://www.sekkaali.blogspot.com/2011/07/blog-post_28.html

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.