Sunday, November 17, 2013

எங்கே சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி ? சிறு விமர்சனம்




மக்களால் பரவலாக பார்க்கப் படுவது விஜய் டிவி. இது சன் டிவியை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வந்தது. இந்த டிவி நிகழ்ச்சிகளில் இப்போது தடுமாற்றம் வந்து தரம் இழக்க தொடங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை... அதனால்தான் என்னவோ அவர்கள் சினிமா துறையை அதிக அளவு சார்ந்து அதை சார்ந்த நிகழ்ச்சிகளாக வெளியிட்டு இழப்பை சரிகட்ட முயற்சி செய்கிறார்கள் .காரணம் மக்களிடையே காணப்படும் சினிமா துறையின் கவர்ச்சிதான். அதனால் தான் என்னவோ சினிமா துறைக்கு அதிக அளவு முக்கியத்துவம் தந்து மற்ற நிகழ்ச்சிகளில் தரம் இழக்க தொடங்கியுள்ளது.


விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய சிறு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..


தமிழ்பேச்சு எங்கள் மூச்சு : முதலில் இந்த மாதிரியான நல்ல நிகழ்ழ்சியை கொடுத்ததற்கு விஜய் டிவியை பாராட்டுவோம். ஆனால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவியினர் கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் தெரிந்த, தமிழை விரும்பும், ஆனால் தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் கூட தமிழை சுவாசிக்க வைத்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தி இருந்தால் இது நீயா நானா அல்லது சூப்ப்ர் சிங்கரைவிட அதிக பாப்புலர் அடைந்திருக்கும் என்பது உறுதி...

இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்திருக்கலாம் என்பதை பார்க்கலாமா?
இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தை மற்ற நிகழ்ச்சியின் அரங்கத்தை போல பிரமாண்டமாக அமைத்திருக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கும் சினிமா பிரபலங்களையும் மற்ற நடுவர்களோடு உதாரணமாக சூர்யா,தனுஸ், விஜய், கமல் போன்ற நடிகர்களையும் அவ்வப்போது இடை இடையே அமர்த்திருக்கலாம். அது போல இந்த நிகழ்ச்சியை கல்லூரிகளிலும் வைத்து நடத்தி இருக்கலாம் கல்லூரி மாணவ மாணவிகளையும் ஏதாவது ஒரு வகையில் இணைத்து நடத்தி இருக்கலாம் இறுதியாக மற்ற சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தருவது போல இதற்கும் பரிசுத் தொகையை சற்று அதிகமாக தரலாம். தமிழ் பேசுபவர்கள் என்றால் அவர்கள் வேட்டி சர்ட் போட்டுவந்துதான் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமா என்ன? இறுதி போட்டியில் ஜெயித்தவருக்கு பரிசுத் தொகை 1 லட்சம்தான் என்றால் மனதைச் சுடுகிறது. மக்களின் மனதை கெடுக்கும் சினிமா நிகழ்ச்சிகளுக்கு பல லட்ச கணக்கில் பரிசு தரும் போது தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்பவர்களுக்கு லட்சம் என்பது அவர்களின் மூச்சை அப்படியே நிறுத்த தரும் தொகையாகத்தான் இருக்கிறது. ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்துபவரிடம் கேட்டால் கூட அவர் இன்னும் ஒரு 1 லட்ச ரூபாயயை இந்த நிகழ்ச்சிக்கு நங்கொடையாக கொடுத்து இருப்பார்கள்/

இறுதி நிகழ்ச்சியை பார்த்த எனது குழந்தை கேட்டது இதுதான் என்னப்பா இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவன் இறந்து விட்டானா அவனுக்கு பெரிய மாலையை போட்டு இருக்கிறார்களே என்று கேட்டது.( இதை நான் ஏதோ சொல்லவேண்டுமென்பதற்காக சொல்லவில்லை உண்மையில் என் சிறு குழந்தை கேட்டதுதான். ஒரு வேளை அவள் தமிழ் சினிமா பார்ப்பதின் விளைவோ என்னவோ ) இதை கேட்ட எனக்கு மிக மனவருத்தைதான் தந்தது.

ஜோடி நம்பர் 1: டான்ஸ் திறமையை வெளிக் கொணரும் ஒரு நிகழ்ச்சிதான் ஆனால் திறமையை வெளிக்காட்டுவதாக சொன்னாலும் அசிங்கமான அங்க அசைவுகளை வார வாரம் விஜய் டிவி வெளிக் கொணர்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் முதல் 2 இடத்தில் வந்தவர்கள் ஆட்டம் டான்ஸின் திறமையை வெளிக்காட்டுபதாக இருந்தது. இந்தா நிகழ்ச்சிக்கு 3 வது 4 வது இடத்திற்கு வந்தவர்களுக்கு கொடுத்த பரிசு தொகையை தமிழ்பேச்சு எங்கள் மூச்சிற்கு முதலாவது வந்தவர்க்கு கொடுத்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான் அதிகமாக வெளிவந்தது .இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது. இனிமேலாவது இதில் கவனம் செலுத்த முயல்வார்களா என்றுதான் தோன்றியது?

60 நொடி ஆர் யூ ரெடி?
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் 60 நொடி ஆர் யூ சாக ரெடி என்று கேட்பது போல இருக்கிறது. இதை தவிர இதைப் பற்றி சொல்ல வேறு ஏதும் இல்லை


அது இது எது? இது ஒரு சிரிப்பு நிகழ்ச்சியாம். அதில் வரும் நகைச்சுவையை பார்க்கும் போது கண்ணில் இருந்து ரத்தக் கண்ணிர்தான் வருகிறது.


நீயா நானா? இது சமுக அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு சுவாரசியமான அரட்டைக் கச்சேரி நிகழ்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது, இது விஜய்டிவியின் பாப்புலர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது அதிலும் இப்போது மிக தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவே இருக்கிறது. முன்னைப் போல அதில் விருவிருப்பு இல்லை. வர வர இந்த நிகழ்ச்சி முன்பே செட்டப் செய்து சொல்லிவச்சார் போல பேசி வைத்து அதன்படி நடப்பதாகவே இருக்கிறது. சினிமாவில் நடிக்கும் எக்ஸ் ட்ரா ஆக்டர்களை கொண்டு இப்படி அழுக வேண்டும் என்று சொல்லித் தந்து நிகழ்ச்சியை நடத்துவது போலத்தான் இருக்கிறது. நிகழ்ச்சியில் வருபவர்கள் அழுதார் ரேட்டிங்க் கூடும் என்று நினைத்து இதை செய்கிறார்கள். சமுக அவலங்களை எடுத்து உரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நிகழ்கால அல்லது கடந்த கால அரசின் செயல்பாடுகளை அல்லது அரசியல் தலைவர்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் செயல்களைப் பற்றியும் எடுத்து உரைத்து பேச கூட தைரியம் இல்லை இந்த மீடியாவிற்கு...

என் தேசம் என் மக்கள் : கோபிநாத் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று . இது மிகவும் ப்ளாப்பான நிகழ்ச்சியாகி இறுதியில் மறைந்துவிட்டது.. கோபிநாத் கோட்டு சூட்டு போடாமல் அமிர்கான் நடத்திய நிகழ்ச்சி போல நடத்த முற்பட்டு தோல்வியில் முடிந்த நிகழ்ச்சி இது

பாட்டி வைத்தியம் : இந்த காலத்திற்கு சிறிதும் உதவாத வைத்தியம். இதைப் பார்க்கும் போதெல்லாம் டிவி மீது அப்படியே ரிமோட்டை தூக்கி ஏறிந்து உடைக்கலாம் போல உள்ளது. இதில் சொல்லும் மருந்துக்கான பொருட்கள் எளிதில் கிடைப்பதில்லை. ஒரு நாள் சந்தர்ப்ப வசமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க தோன்றியது. அப்போது அந்த அம்மா விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் அதற்கு மேல் ப்லோ பண்ணக் கூடாது சென்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது உள்ள நோய்களுக்கு நோய் வந்துவிட்டால் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் அதை நிறுத்தினால் பரலோகம்தான் சீக்கிரம் செல்ல வேண்டும். நல்லவேளை இது இந்திய டிவியில் வந்தது, இது மட்டும் அமெரிக்க டிவியில் வந்து இருந்தால் இவர் மேல் வழ்க்கு தொடர்ந்து நல்ல பணம் கறந்து இருப்பார்கள்

சரவணன் மீனாட்சி : மிகவும் மக்களை கவர்ந்த ஒரு தொடர் ஆனால் அதை சொதப்பி அந்த தொடருக்கு கிடைத்த நல்ல பெயரை கெடுக்க முயற்சிக்க முயல்வதாகவே இருக்கிறது அந்த தொடரில் நடித்தவர்களின் கால்சீட் கிடைக்க வில்லை யென்றால் அந்த தொடரை சுமுகமாக முடித்து வேறு இரு தொடரை ஆரம்பித்து இருக்கலாம்.

7C இதுவும் பரபரப்பாக ஆரம்பித்த தொடர் அதையும் இறுதியில் கெடுத்துவிட்டார்கள்...


ஆபிஸ் : இது ஒரு காமெடி தொடர்போல விளம்பரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கபட்டு அதன் பின் சீரியஸாக சென்று இப்போது வழ வழ கொழ கொழ என்று போய் கொண்டிருக்கிறது.

காபி வித் டிடி : காபி வித் அனு போட்ட காபி போல இந்த காபி சுவையாக இல்லை. ஏதோ சின்ன பிள்ளை போட்டு தந்த சுவையற்ற காபி போலத்தான் இருக்கிறது.




விஜய் டிவியின் தொடர்கள் எல்லாம் நல்லவிதமாக ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் அதை எப்படி தொடர்வது என்று தெரியாமல் குழம்பி போவது போலத்தான் இருக்கிறது

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மொத்த குத்தகைக்கு எடுத்த அடிமைகள் போலத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ இந்த தொகுப்பாளர்களையே கசக்கி பிழிந்து பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளச் செய்கிறார்கள். இது விஜய் டிவிக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம் ஆனால் பார்ப்பவர்களுக்கு இதே தொகுப்பாளர்கள் பல நிகழ்ச்சிகளில் வருவதை பார்க்கும் போது மிகவும் போரடிக்கிறது என்றுதான் பலரிடம் பேசும் போது கருத்து தெரிவிக்கிறார்கள்.


இந்த பதிவில் இருப்பது என் கருத்து மட்டுமல்ல இங்குள்ளமற்றும் தமிழகத்தில் வசிக்கும் தமிழர்களிடம் நான் பேசும் போது பலரின் வாயில் இருந்து வந்ததுதான்

இதை இங்கு பதிவாக போட்டதன் காரணம் இதைபார்த்தாவது விஜய் டிவி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் மேலும் கவனம் செலுத்தியும் சிறிது மாற்றம் ஏற்படுத்தியும் மேலும் தரமான நிகழ்ச்சியை தருவேண்டும் என்ற நோக்கம்தான். அது தவிர வேறு ஏதுமில்லை.

மற்ற சேனல்களை விட விஜய் டிவி நிகழ்ச்சிகள் அனைவராலும் பார்க்கபடுவதால்தான் இந்த விமர்சனம். அதனால் மற்ற டிவி சேனல்களை இங்கு குறிப்பிடவில்லை.


அன்புடன்

மதுரைத்தமிழன்

டிஸ்கி : இதைப்படித்த நீங்கள் விஜய் டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் எது? அதில் என்ன மாற்றம் கொண்டுவரலாம் என்று உங்கள் மனதில் பட்ட கருத்துக்களை இங்கு பின்னுட்டமாக இடலாம். நன்றி

17 comments:

  1. தமிழ் நாட்டிலே குப்ப கொட்டிகிட்டு ஒரு டி.வி புரோகிராம் கூட பக்க நேரமில்லாம
    நாங்க என்னடான்னாக்க செம பிசி .
    உங்கூரிலெ ஆபீஸ் போயிக்கினே நாள் முழுக்க விஜய் டி.வி பாத்து பொழுதை ஒட்டிடலாமா ?
    சூப்பர் வேலை போல?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டுல வேலை பாக்காமா குப்பை கொட்டிக் கொண்டு இருப்பதால்தான் எங்கே சென்றாலும் குப்பையாக காட்சி அளிக்கிறதோ?


      கிச்சனில் வீட்டு வேலை பாரக்கும் நேரத்தில் டிவி பார்த்து கொண்டே வேலை செய்யாலாமே....கிச்சனில் ஒரு சின்ன டிவியை மாட்டுங்க... இது போய் நான் உங்களுக்கு ஏன் சொல்லுறேன். இப்பதான் பொண்ணுங்க கிச்சனுக்குள்ளே போவதே இல்லையே ஹீ.ஹீ.ஹீ

      Delete
    2. மகாபாரதம் விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற விமர்சனங்கள் மிகச்சரியானது.

      Delete
  2. the reason is lack of creativity and wrong prediction about people.

    ReplyDelete
  3. விஜய் டிவி மட்டுமில்லீங்க நமக்கு ஒரு டிவியும் பார்க்க நேரமில்லீங்கோ.. யுடுயுப்பில் நீயா நானா பார்ப்பேன். இந்தி சீரியல் தமிழில் வந்தால், அதில் வரும் பிகருக்காக பார்ப்பேன். என் கணவர் என் தோழனில் வர பெண் பார்க்க நல்லாருக்கும், நல்லா நடிக்கவும் செய்யும். அவ்ளோ தான்யா நம்ம டிவி வாசம்..

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் பொழுது போக்குறதுக்கு பல வழிகள் உள்ளன. ஆனால் வாரநாட்களில் வேலைக்கு போய்விடு நேரா வீட்டுக்கு வந்தா இதுதான் பொழுது போக்கு இங்க

      Delete
  4. நாம டி.வியை போற போக்குல எட்டி பார்க்கிறதோட சரிங்க. நல்ல ஆலோசனைகள்.!.. விஜய் டி.வி க்கு அனுப்பி வைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நீங்க பத்திரிக்கை உலக பிரபலமுங்க உங்களுக்கு இதுகெல்லாம் நேரம் கிடைக்காதுங்க

      Delete
  5. நான் டிவி பார்த்து பல காலமாச்சுய்யா என்னத்த சொல்ல ?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நீங்க உங்க ஹோட்டலுக்கு வர பிகர பாக்குறீங்களே அதுக்கு அப்புறம் உங்களுக்கு எதுக்கு டிவி பார்க்கனும் மக்கா

      Delete
  6. அண்ணே நானும் பார்த்து இருக்கேன் தமிழ் பேச்சுஎங்கள் மூச்சு சுத்தமான தமிழில் அழக பேசுறாங்க மற்ற நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை எல்லாமே காசு பார்ப்பதில் தான் குறியா இருப்பாங்க இதுல சன் என்ன விஜய் என்ன எல்லாம் ஒன்னு தான்

    ReplyDelete
    Replies
    1. விஜய் டிவியில் தமிழை கடித்து கொதறாமல் பேசும் நிகழ்ச்சி இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த நிகழ்ச்சியை பல பேர் மிகவும் ரசிக்கிறார்கள் என்ற செய்தி விஜய் டிவி நிர்வாகத்திற்கு தெரிகிறதோ இல்லையோ? அதனால்தான் இந்த பதிவு

      Delete
  7. இவ்வளவு நிகழ்ச்சிகளை பார்க்க உங்களுக்கு நேரமிருக்கா!? அடடே!

    ReplyDelete
    Replies

    1. நான் டிவி நிகழ்ழ்சியை பார்பதில்லை அதிக அளவில் கேட்கத்தான் செய்வேன் டிவி என் முன்னால் ஒடிக் கொண்டிருக்கும் நான் என் லேப்டாப்பில் மேய்ந்து கொண்டே இருப்பேன்

      Delete
  8. பரவாயில்லை... உங்கள் பதிவின் மூலம் தான் சிலவற்றை தெரிந்து கொண்டேன்... சில மாதங்களாக எதுவுமே என்னால் சரிவர கவனிக்க முடியவில்லை... சொந்த பிரச்சனை : கணினி + துணைவி

    ReplyDelete
  9. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகச்சியை சரியாக நடத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. கற்பனை வரட்சிதான்.காரணம். மீண்டும் புகழைப் பெற மகாபாரதத்தை தொடங்கி இருக்கிறது.பார்க்கலாம்.

    ReplyDelete
  10. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மிக நல்ல நிகழ்ச்சி. அதிகமான மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்ச்சி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.