Monday, July 15, 2013



புதிய பதிவாளர்கள் வெற்றி பெற எனது வலைத்தள அனுபவ டிப்ஸ்





எதை எழுதினாலும் அதை ஆராய்ச்சி கட்டுரை போல எழுதாதீர்கள். நீங்கள் எழுதுவது புத்தகம் அல்ல  ப்ளாக். புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் அதில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் வாசகர்கள் படிப்பார்கள். அதனால் நாம் நன்றாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் இல்லையென்றால் நம் படைப்புக்கள் டீக்கடையில் பஜ்ஜிமடிக்க மட்டும்தான் பயன்படும்.

ஆனால்  ப்ளாக்கில் வரும் செய்திகளை புத்தகத்தை போல யாரும் படிப்பதில்லை அதை எல்லோரும் புத்தகத்தை ஸ்கேன் செய்வது போல மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். ஒவ்வொரு வரியையும் புத்தகத்தை போல படிக்க மாட்டார்கள் அதனால்தான் நாம் சொல்ல வரும் விஷயத்தை சுருக்கமாக அதற்கேற்ற படங்களை போட்டு சொல்ல வேண்டும்.


சில சமயங்களில் பதிவுகள் நீண்டு விட்டால் அதில் உள்ள முக்கிய கருத்துகளை பாய்ண்டுகளை ஹைலைட் பண்ணி காண்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாம் யாரும் மிக ஆழ்ந்து படிப்பதில்லை அவர்கள் வேலைச் சார்ந்த புத்தகங்களை அல்லது ப்ளாக்குகளை தவிர. ஆனால் அவர்கள் பல புதுப்  புது செய்திகளை அறியவிரும்பியே இங்கே வந்து படிக்க விரும்புகின்றனர் என்பதை பரிந்து கொள்ளுங்கள்

கதை கவிதைகள் எழுத விருப்பமா இருந்தால் எழுதுங்கள் ஆனால் அதை மட்டுமே வலைத்தளம் முழுவது எழுதி கொண்டிருக்காதீர்கள். அப்படி எழுதினால் அது போல எழுதுபவர்கள் மட்டுமே வந்து உங்கள் படைப்புகளை படிப்பார்கள். அது மட்டுமல்ல நீங்கள் அவர்கள் தளத்திற்கு கமெண்ட் என்ற மொய் எழுதினால் மட்டுமே அவர்கள் உங்கள் தளத்திற்கு வருவார்கள். அதன் பின் நீங்களும் ஒருவொருக் ஒருவர் அவார்டுகளை பறிமாறிக் கொண்டு ஆஹா நாம்தான் இந்த உலகத்தில் சிறந்த படைப்பாளி என்று எண்ணி கிணற்று தவளை போல சுற்றி வந்து கொண்டிருக்க வேண்டும். நன்றாக உற்று நோக்கி பார்த்தால் கதைகளையும் கவிதைகளையும் யாரும் அதிக அளவில் சர்ச் செய்து கூகுலில் பார்ப்பதில்லை & படிப்பதில்லை என்ற உண்மை தெரியும்


அதுமட்டுமல்லாமல்  தமிழில் உள்ள பழைய நூல்களான சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள்  மற்றும் பல இலக்கியங்களை மேற் கொண்டு பதிவுகள் எழுதாதீர்கள். அப்படி எல்லாம் எழுதினால் மேலே சொன்னதுதான் இதற்கும் பொருந்தும். அது மட்டும் இல்லாமல் அது 40, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வந்து படித்து ஆஹா என்று பாராட்டுவார்கள் அல்லது தமிழில் மிக ஆர்வம் உள்ள ஓரு சில ஆண் பெண்கள் மட்டும் வந்து படிப்பார்கள் நான் சொல்லவதை நம்பாவிட்டால் இப்படி எழுதும் சில பதிவாளர்களின் பதிவுகளை படித்தாலே உங்களுக்கு உண்மை புலப்படும்


அடுத்ததாக பதிவுகள் தலைப்பு இடும் போது அது மற்றவர்களை இழுத்து வந்து படிக்க தூண்டும் வகையில் இருக்கும்படிச் செய்ய வேண்டும் அதுமட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் விஷயங்கள் உருப்படியாக இருக்கும் படி எழுத வேண்டும் இல்லையெனில் வலைத்தலங்களுக்கு வருபவர்களின் மனதில் இங்கு வருவதே வேஸ்ட் என்ற மனநிலையைத் தூண்டிவிடும் அதன் பின் அவர்களின் வருகையே நமது தளம் பக்கம் இருக்காது


மேலும் நீங்கள் மற்ற பதிவாளரின் பதிவுகளை படிக்கும் போது உங்களுக்கு நேரம் இருந்தால் அந்த பதிவுகளை ஒட்டி உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை வித்தியாசமான முறையில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்வதால் அங்கு வரும் மற்ற விசிட்டர்களின் கண்ணில் உங்கள் கருத்துகள் அவர்களின் கண்ணில் படும் போது யார் இவர் என்று எண்ணி உங்கள் பதிவுகள் பக்கம் வர வாய்ப்புக்கள் அதிகம் அது இல்லாமல் அருமை நன்றாக உள்ளது என்று ஒரிரு வார்த்தைகளில் பதில் இட்டால் நானும் உங்கள் பதிவை வாசித்துள்ளேன் என்ற மாதிரியாகத்தான் இருக்கும்

என்ன எழுதுவது என்று தெரியவில்லையா கவலைப்படாதீர்கள். எங்களை போல அமெரிக்காவில் வாழும் எங்களுக்குதான் அந்த கவலை ஆனால் உங்களைப் போல இந்தியாவில் வாழும் மக்களுக்கு அந்த கவலையே வேண்டாம். உங்கள் கண்களையும் காதையும் ஒப்பன் பண்ணி பாருங்கள் எழுதவிஷயங்கள் தெருவிலிருந்து ,பஸ்ஸில், ரயிலில் டீக்கடைகளில் ஹாஸ்பிடலில்,டிவிக்களில் செய்தி பத்திரிக்கைகளில், டாஸ்மாக் கடைகளில் இருந்து அரசியல்வாதிகளின் உளரல்களில், பெண்கள் பேசும் கிசுகிசுக்களில் இருந்தும் புரணிகளில் இருந்து பல விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கும். அதை எப்படி சுவராஸ்யமாக தருவது என்பது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது


நீங்கள் யாருக்காவும் நீங்கள் எழுதும் முறைகளை மாற்றாதீர்கள். உதாரணமாக எனது பதிவை படித்து வரும் சில பெரியவர்களும் ஒரு சில பெண்களும் சில சமயங்களில் உங்களின் தலைப்புகள் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. அதைபடிப்பதனால் எங்கள் வீடுகளில் உள்ளவர்கள்( கணவர்கள்,மனைவிகள், இளம் வயதுடையவர்கள் )எங்களை தவறாக எண்ணக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறது அப்படியெல்லாம் எழுதாதீர்கள் அப்படி எழுதினால் நாங்கள் உங்கள் தளப்பக்கம் வரமாட்டோம் என்று சொன்னார்கள்.அதற்கு நான் அவர்களுக்கு சொன்னது உங்கள் குடும்பதினருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லாவில்லை என்பதுதான் உண்மை அதற்க்காக நான் எனது எழுதும் முறையை மாற்ற இயலாது. அப்படி நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எனது பதிவு முழுவதையும் படித்து காட்டுங்கள் அப்போது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் பார்ப்போம் என்று சொன்னேன்.


அதன் பின் அந்த பெரியவர்களும் பெண்களும் எனது தளப்பக்கத்தில் வந்து கமெண்ட் இடுவதில்லை ஆனாலும் அவர்கள் என்பக்கம் வருவதில்லை என்று மற்ரவர்களிடம் சொன்னாலும் சைலண்டாக வந்து எனது பதிவுகளை படித்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்களது IP அட்ரஸ் மூலம் அறிந்து கொள்கிறேன் அதனால்தான் சொல்லுகிறேன் யாருக்காவும் நீங்கள் உங்கள் எழுதுமுறையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இப்படி சொல்லும் தமிழ் வலையுலக 'பெரிசுகள்' மற்றும் பெண்கள் தங்கள் படைப்புகளை ஆனந்தவிகடன் தினமலர் போன்ற இதழ்களில் எழுதி பெருமைபட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அந்த இதழ்களை தங்கள் வீடுகளில் வாங்கி போட்டு கொள்கிறார்கள். (அந்த இதழ்களில் வரும் செய்திகளையும் கவர்ச்சிபடங்களையும் பார்க்கும் அவர்கள் வீட்டார்கள் தவறாக எடுத்து கொள்ளமாட்டார்களாம். நல்ல இருக்குப்பா அவங்க லாஜிக்...)


இறுதியாக இங்கு வந்து படிப்பவர்களுக்கு நேரம் என்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது அதனால் முடிந்த வரையில் நீண்ட பதிவுகள் எழுதுவதை தவிருங்கள். ஆயிரக்கணக்கான தளங்கள் இருக்கும் போது அவர்கள் நம் தளத்திற்கு நேரம் ஒதுக்கி வருகிறார்கள் என்றால் மிகவும் சந்தோஷப்பட வேண்டும் அதனால்தான் பதிவுகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

நான் எனது அனுபவங்களை சொல்லி வீட்டேன் இதை படிக்கும் பதிவாளர்கள் தங்கள் அனுபவ உண்மைகளை கிழே இட்டுச் சென்றால் அது புதுப் பதிவாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்


அனுபவங்கள் ஒரு தொடர்கதைதான். எனவே எனது அனுபவங்கள் வருங்கால பதிவுகளில் தொடர்ந்து வரும்.

நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

40 comments:

  1. மிக நல்ல ஆலோசனைகள் . பதிவுலகம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை போல் இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இது ஆராய்ச்சி கட்டுரை அல்ல....பதிவுகள் எழுதும் போது பல பதிவுகளை படிக்கும் போதும் என் பார்வையில் பதிந்த அனுபவ உண்மைகளை எழுதி இருக்கிறேன். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு பலவித வேறுபட்ட அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  2. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாணி... நல்ல ஆலோசனைகள்... அனுபவங்களை தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் உங்களுக்கு மிகவும் வேறுபட்ட அனுபவங்கள் இருக்கலாம் அதை நீங்கள் எழுதி வெளியிடலாமே. இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் நம் இருவரின் பதிவுகளும் இரு வேறு துருவங்கள் போன்றது அதனால்தான் கேட்கிறேன். நேரம் இருந்தால் எழுதுங்க:ள்

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  3. நீங்களும் உங்கள் தளத்தை பூட்டு போட்டு வைத்திருப்பீங்க போலிருக்கே. சில வரிகளை குறிப்பிட்டு வைத்து பேச வேண்டும் என்று நினைத்தேன். முடியல

    ReplyDelete
    Replies
    1. பூட்டை உடைப்பது எளிதுதானே

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  4. மனம் திறந்த "உண்மைகளை" சொல்லியிருக்கீங்க..புதிதாக எழுதுபவர்கள் எப்படி எழுதனும் என்ன எழுதலாம் என்பதையும் விவரமா விளக்கியுள்ளீர்கள். நான் இப்படித்தான் எழுதுவேன், படிக்கிறவங்க படிக்கட்டும்ங்கர எண்ணம் உள்ளவங்களையும் யோசிக்கவைத்திருக்கீங்க. உங்கள் கைவண்ணம்(இமேஜ்) மிளிர்கிறது.

    ReplyDelete
    Replies

    1. உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  5. Replies
    1. சங்கவி நீங்கள் எல்லாம் பிரபலபதிவாளர். நான் சொன்னது புதிய பதிவாளர்களுக்கு

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  6. படா டாங்க்ஸ்பா உன்'டிப்ஸ்'க்கு!
    நானும் இப்டிதான் அங்கேயிங்கேன்னு போய் சும்மா மொய் மட்டும் வச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒருநால் நாய் கடிச்சா மாதிரி, எவெனெவெனோ இன்னாவோ எய்தி அத பதிவுன்னு போடுறான்! நாமலும் எத்தயாவது வாந்தி எடுத்து வெக்கலாமேன்னு மைண்ட் வாய்ஸ் சொன்னத கேட்டு ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன். உன் டிப்ப படிச்சபின்னதான் தெரியுது அதுக்குள்ள இவ்ளோ டகால்டி இருக்குன்னு. லெட் மீ ட்ரைபா! மறுவாக்கி டாங்க்ஸ்பா! அப்பாலிக்கா அந்த லிமிடெட் விசயத்த செய்யாதபா. நீதான் அவ்ளோ தெளிவா இர்க்கியேபா. அப்பாலிகா ஏன் இப்படி ரோசிக்கிறே?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு யாரும் மொய் வைக்காவிட்டாலும் நான் புதிய பதிவாளர்களின் தளங்களுக்கு சென்று சில பதிவுகளை படிப்பேன் அவர்கள் வித்தியாசமாகவும் வேறு யாருடைய பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்ணாமல் பதிவுகள் இட்டு இருந்தால் நிச்சயம் அவர்களை தொடர்வேன்

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  7. மிக நல்ல ஆலோசனைகள், எனக்கு இது நிச்சயம் பயன்படும், முக்கியமாக சுருக்கமாய் எழுத வேண்டும் , கண்டிப்பாக அப்படியே செய்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய படியுங்கள் உங்கள் மனதில் தோன்றுவதை உங்கள் வழியில் தாருங்கள்

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  8. நல்ல ஆலோசனைகள்... புது பிளாக்கர்களுக்கு நிச்சயம் பயன்படும்...

    #அமெரிக்காவில் இருக்கீங்கள் என்பதை ஒவ்வொரு பதிவிலும் குரிப்பிடுறீங்களே? இதுவும் அந்த டிரிக்கா???

    ReplyDelete
    Replies
    1. ஹீ.ஹீ நான் டிப்ஸ்தான் தருவேன் ஆனால் சீக்ரெட் எல்லாம் சொல்ல மாட்டேன்

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  9. நல்ல பதிவரா பேரு எடுக்கனும்ன்னா, எங்க ரெண்டு பேர் பிளாக்கையும் நல்லா படிச்சு, புரிஞ்சுக்கிட்டு அஹுப்போல எழுதாம இருந்தா போதும். நல்ல பேர் எடுக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. சகோ நம்முடைய சீக்ரெட் எல்லாம் இப்படி ஃப்ளிக்கா சொல்லக் கூடாது
      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  10. உண்மைதான் நண்பரே நான் வலைப்பதிவு ஆரம்பித்து 8 மாதங்கள் கவிதை கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன் மொத்தமே 30 ஆயிரம் பார்வைகள்..அப்புறம் சினிமா பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் 5 மாதத்தில் 2 லட்சம் தாண்டி பார்வைகள்...இன்னும் தொடர்கிறது...அப்படியே இப்போது கவிதைகளையும் படிப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டது....எல்லாம் சினிமா மாயை ..தங்கள் பதிவு நல்ல அறிவுரை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. ஆனால் நான் சினிமாவை தொடாமலேதான் இந்தளவு வளர்ந்து இருக்கிறேன்.

      நீங்கள் இப்போது செய்ய வேண்டியது எல்லாம் நல்ல சமுக உணர்வு கொண்ட கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதுங்கள்.இதை சொல்ல காரணம் நீங்கள் பலருக்கும் இப்போது நல்ல அறிமுகமாய் இருப்பாதால் நீங்கள் சொல்ல நினைப்பது எல்லாம் எல்லோருக்கும் சென்று அடையும்
      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  11. பரிதி அண்ணன் சொல்வது முற்றிலும் சரி நானும் தேடி பிடிச்சு படிச்சு டைப் பண்ணி அறிவியல் வரலாறுன்னு போட்டாலும் ஒரு பய படிக்க மாட்ரான் அதே சூர்யா பல்லு விளகுனறு அஜித் குளிசாருன்னு போட்ட எல்லாம் வந்து படிக்கிறாங்க என்ன பன்றது மக்களின் ரசனை அந்த மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. அறிவியல் வரலாறை யாரும் படிக்க மாட்டார்கள் என நினைக்க வேண்டாம். அதை தேடி படிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

      அறிவை விருத்தி செய்யவிரும்புவர்கள் உங்கள் பதிவை கண்டிப்பாக வருவார்கள். நான் எழுதுவது பொழுது போக்கிற்காக அறிவை வளர்ப்பதற்காக அல்ல

      அது போல நீங்கள் எதற்காக எழுதுகீறிர்கள் என்று சிறிது சிந்தித்து எழுதுங்கள்....எனது நோக்கம் வேறு உங்களது நோக்கம் வேறு. அதை குழப்பி கொள்ளாதீர்கள்

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  12. நான் கேக்கணும்ன்னு இருந்தேன் இரவின் புன்னகை கேட்டுட்டாரு

    ReplyDelete
    Replies
    1. இரவின் புன்னகைக்கு பதில் சொல்லிவிட்டேன் ஹீ,ஹீ

      உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி

      Delete
  13. நல்ல ஆலோசனைகள்தான். கவிதை கதைகளை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் குட்டிக் கதைகளுக்கு வரவேற்பு இருக்கின்றன.சினிமா விமரசனம் , அரசியல், விவாதத்திற்குரிய சமூகப் பிரச்சனைகள்,கணினி தொழில் நுட்பளுக்கும் வரவேற்பு கிடைக்கின்றன.
    சங்கம் வளர்த்த மதுரையின் தமிழன் நீங்கள் தமிழ் இலக்கியங்கள் பற்றி பதிவுகள் பற்றி எழுதாதீர்கள் என்று சொல்லலாமா?. ஒன்றிரண்டு பேர்தான் இது போன்று எழூதி வருகிறார்கள்.அவர்களை discourage செய்வது சரியல்ல.நம்மைப் போன்றவர்களால் அவற்றை எழுத முடியாது.. ஆங்கிலத்தில் எதைப் பற்றி தேடினாலும் கிடைத்து விடும்.ஆனால் தமிழில் அப்படி அல்ல..நம் இலக்கிய வளங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
    இப்போதெல்லாம் பள்ளிகளில் தமிழுக்குக் கூட ப்ராஜெக்ட் ஒர்க் குகள் வழங்கப் படுகின்றன. நற்றிணை எழுதியவர் பற்றி தகவல்கள் சேகரித்து வர சொன்னால் அதை தேடி எடுக்கும் வகையில் இணையத்தில் தகவல்கள் இருக்க வேண்டும்.தற்கால சமூக நிகழ்வுகளை கொண்டு எழுதப்படும் பதிவுகள் பிற்காலத்தில் தேடிப் பிடித்து யாரும் படிக்க மாட்டார்கள்,. ஒரு வார ஜுனியர் விகடனை அடுத்த வாரம் படித்தால் அபத்தமாக தெரியும்.ஆனால் இலக்கியங்கள் பற்றி ஒரு கூட்டம் எப்போதும் படித்துக் கொண்டிருக்கும். ஆனால் அதையும் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் எழுதலாம்.

    ReplyDelete
    Replies
    1. முரளிதரன் உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி.

      முரளி எனது பதிவின் தலைப்பு எப்படி பதிவாளர்கள் வெற்றி பெறுவது என்பதுதான் அதனால் எப்படி எழுதினால் எதை எழுதினால் வெற்றி பெறலாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன் ஆனால் வெற்றி பெருவது என் நோக்கமல்ல நல்ல பல இலக்கியங்களை தருவதுதான் எனது நோக்கம் என்பவர்கள் எழுதிக் கொண்டே செல்லாம் அதற்கு நான் தடை ஏதும் போடவில்லை. அதை படிப்பதற்கு என்றே மக்கள் உள்ளனர்

      சிவாஜி நடித்த திருவிளையாடல் பாசமலர் போன்ற் படங்கள் நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கின்றன ஆனால் இந்த காலத்தில் படங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அது போல படங்கள் எடுக்காதீர்கள் என்று சொன்னால் தப்பா முரளி


      நெட்டில் பல தளங்களில் பழையை இலக்கியங்கல் கொட்டி கிடக்கின்றன. அதை பொறுமையாக தேடிபார்த்தால் கிடைக்கும். பழைய இலக்கியங்களை மட்டும் படித்து பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பதை விட புதிய இலக்கியங்களை படைக்கலாமே.

      Delete
    2. முரளி இலக்கியங்களை தேடிபடிக்க கூட்டம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை அந்த கூட்டத்தின் அளவு சுருங்கி கொண்டே போகிறது என்பதுதான் உண்மை. கடந்த கால நிகழ்வுகளை சொல்லும் செய்திகளை யாரும் தேடிப் படிப்பது இல்லை. அதை விட நிகழ்கால செய்திகளை தேடிபடிக்கும் கூட்டம்தான் அதிகம் அதன் காரணமாகத்தான் ஜூவி போன்ற பத்திரிக்கைகள் வெளிவந்து சில வாரங்களுக்கு பின் அதில் உள்ள செய்திகள் அபத்தமாக இருக்கின்றன


      திருக்குறள் உலகின் சிறந்த புத்தங்களில் முதன்மையான ஒன்று ஆனால் அதனை எத்தனை பேர் தேடிப் படிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். திருக்குறள் பள்ளி பாடத்திட்டங்களில் இல்லையென்றால் அதனை எத்தனை இளைஞர்கள் தேடிப் படித்திடுவார்கள்.

      திருக்குறளை படித்து திருந்தியவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள்..... இந்த காலத்தில் நல்ல கருத்துகளும் புத்தகங்களும் படித்து ரசித்து ஆஹா என்று பாராட்டமட்டுமே படிக்கிறார்கள் ஆனால் அதனை யாரும் வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை

      Delete
  14. பயனுள்ள அறிவுரைகள்! நீங்கள் சொல்வது யாவையும் உண்மையே! என்னுடைய மூன்றுவருட வலைப்பூ அனுபவத்தில் இன்னும் நிறைய கற்க உள்ளது என்பது உங்கள் இந்த பதிவு மூலம் அறிந்துகொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி.

      நீங்கள் சொந்தமாக எழுத ஆரம்பியுங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்

      Delete
  15. நான் புதிய பதிவர்.

    உங்கள் அறிவுரைகளை மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் மனம்திறந்த கருத்துக்கும் நன்றி.

      Delete
  16. உங்களது சில பதிவுகள் எனக்கு ஒப்பன் ஆகவே இல்லை ஏன்னு பாருங்க மக்கா.

    பதிவுலக ஆராய்ச்சியும் அனுபவமும் ஆலோசனையும் நன்று....!

    ReplyDelete
    Replies

    1. மனோ சில நேரங்களில் டாஷ் போர்டில் தோன்றும் பதிவுகள் எனக்கும் அப்படிபட்ட நிலைமைத்தான் தருகிறது எனது பதிவுகள் மட்டுமல்ல நான் தொடரும் பல பதிவாளர்களின் பதிவுகளும் அது போல ஏற்படுகிறது. இதனாலேயே நான் எனது பதிவுகளை பேஸ்புக்கிலும் கூகுல் ப்ளஸிலும் அப்டேட் செய்கிறேன் அந்த லிங்குகளை க்ளிக் செய்த்தால் பிரச்சனைகள ஏதும் வருவதில்லை

      Delete
  17. சங்க இலக்கியம் பத்திப் போட்டப்ப நம்ம கடையில ஏன் ஈ ஆடிச்சுன்னு இப்பப் புரியிது.... இப்படிபல ரகசியங்கள் தெரியாமயே நானும் பதிவர்னு குப்பை கொட்டிட்டு இருந்திருக்கேன்...! ரொம்ப டாங்ஸுப்பா!

    ReplyDelete
  18. A VERY GOOD DETAILED AND TRICKY TIPS FOR NEW BLOGGERS. TELLING LIKE THIS SHOULD HAVE TALENT KEEP IT UP.

    ReplyDelete
  19. I am on tour and have no access to laptop,hence writing in english. You have given very valuable guidance.Congrats! As you said, there are readers who search for things of their interest and reach the relevant sites. I have two blogs, one for my poems & memoirs, and the other for all other topics.I find that readers are distinctly different for the two sites!
    Then there is the age factor.While in US & Europe even people 60 plus know computers, in India such dispersal of keyboard skills is prevalent only among below 35.This naturally calls for topics like love, sex, cinema & gossip.
    Finally it all depends on why you write, and, why you should write at all.

    ReplyDelete
  20. பதிவர்களுக்கு நீங்கள் கூறிய டிப்ஸ் புதியவர்கள் என்று இல்லை அனைவருக்கும் பொருந்தும்... நான் மனதில் நினைத்திருந்த பல டிப்ஸ்களை நீங்கள் எழுதி இருப்பது சூப்பர்...

    பதிவுலகதிற்கு புதியவரான கனவு மெய்பட ரூபக் ராமிடம் இந்த பதிவை காண்பித்தேன், மிகவும் சந்தோசபட்டான்...

    பின்பு உங்களின் ஒரு வரியை மேற்கோள் காட்டி சொன்னான் "ஒஆருங்க அவரே சின்னதா எழுத சொல்லி இருகாரு, நீங்க ஏன் பெருசா எழுதறீங்கன்னு"

    நான் சொன்னேன் அவரே கீழ சொல்லி இருக்காறு "யாருக்காகவும் உங்க ஸ்டைல மாத்திகாதீங்க"ன்னு... நான் சொன்னது தப்பா மிஸ்டர் தமிழன் :-)

    ReplyDelete
  21. நல்ல வழிகாட்டும் பதிவு .... நிறைய எனக்கு தேவையானது

    ReplyDelete
  22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா ஸ்பெஷல்

    ReplyDelete
  23. சிறந்த வழிகாட்டல்
    வரவேற்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.