உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 23, 2013

சென்னையில் நடக்கும் விபரீதங்களும் ஸ்ரீரங்கத்தில் பட்டாச்சாரிகள் மீது ஜெயலலிதா கொண்ட கோபமும்



சென்னையில் நடக்கும்  விபரீதங்களும் ஸ்ரீரங்கத்தில் பட்டாச்சாரிகள் மீது ஜெயலலிதா கொண்ட கோபமும்

பேஸ்புக்கில் நான் ஃப்லோ செய்யும் செங்க்கோட்டை ஸ்ரீராம் எழுதிய கட்டுரை இது. அவரின் அனுமதியுடன் இங்கு பதிவிடப்படுகிறது. அனுமதி அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றி https://www.facebook.com/senkottaisriram இதை நான் வெளியிடக் காரணம்  பிற மதங்களில் நடக்கும் தவறுகளையே சுட்டிகாட்டிக் பதிவுலகில் பேஸ்புக்கில் விவாவதம் நடத்துபவர்கள் மத்தியில் தன் மதத்தில் நடக்கும் வீபரிதத்தை உண்மையாகவும் வெளிப்படையாக சொல்லும் இவரின் மனநிலை எனக்கு பிடித்ததால் தான்



சென்னையில் இப்போதெல்லாம் ஒரு விபரீதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

வர்த்தக நகர்! வர்த்தக வளாகங்கள், கடைகள் அவ்வப்போது புதிதாய் முளைக்கின்றன. அதிகாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் ஹோமத்துக்கான திரவியங்களோடு, சில பல வைதீகர்கள் நாய்களின் குரைத்தலையும் பொருட்படுத்தாமல் அல்லது பயத்தில் உறைந்தபடி.. செல்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே சில ஹோமங்களில் கலந்து கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்துகளையும் பார்த்து வருகிறேன்.

காசு ஆசை யாரை விட்டது!? யாகம் செய்யும் கர்த்தாவை மகிழ்விப்பது ஒன்றே யாகத்தின் பிரதான நோக்கமாம்! அது சாஸ்த்ரமாம். கர்த்தா எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி..! எந்த நிலையில் எந்தக் கோலத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி! (மேற்கொண்டு விவரிக்க இயலவில்லை..!) அந்த கர்த்தாவை ஆசனத்தில் அமர வைத்து, அவர் கையிலேயே தர்ப்பையைக் கொடுத்து, சங்கல்பம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லி, அவர் கையிலேயே பூவைக் கொடுத்து, மஞ்சள் பிள்ளையாருக்கு போடச் சொல்லி, மணி அடிக்கச் சொல்லி, (இதெல்லாம் பரவாயில்லை... ஓரளவுக்கு ஏற்கலாம்) அடுத்து உடனேயே ஹோம குண்டத்தில் கற்பூரத்தைக் கொளுத்திப் போட்டு, நாலு சுள்ளிகளைப் போட்டு, மூல மந்திரத்தை 108 ஆவர்த்தி என்ற பெயரில் நாலு பசங்களைக் கூட வைத்துக் கொண்டு ஆளுக்கு 28 சொல்லுங்கடான்னு கணக்கு வைத்துக் கொண்டு, அவர்கள் மூலமந்திரம் சொல்லச் சொல்ல, இங்கே கர்த்தாவே அக்னியில் ஹோம திரவியத்தை நேரடியாகச் சேர்க்கச் செய்கிறார்கள்...!!!
 
இது அடுத்த சில வருடங்களில் எங்கே போய் முடியுமோ?! சட்டம் படித்தவன் சட்டத்தை மீறுகிறான்! வன்முறையில் இறங்குகிறான். வேதம் படித்தவன் விதி விலக்குகளைத்தான் முதலில் கையாள்கிறான்...!!! சாஸ்திரத்தில் எங்காவது ஓட்டை இருக்கிறதா, பிராயச் சித்தம் இருக்கிறதா என்று தேடுகிறான்.

ஒருமுறை இப்படி ஒரு ஹோமத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது, காலை 5 மணிக்கு வந்து 5.15க்குள் மண்டலம் அமைத்து, 5.40க்குள் கர்த்தாவே நேரடியாக ஹோம குண்டத்தில் சுள்ளிகளைப் போடத் தொடங்கிவிட்டார்.மெதுவாக என்ன ஸ்வாமி ஜயாதி ஹோமம் ஆயிடுத்தான்னு கேட்டேன்! ஒரு முறை முறைத்தார். எல்லாம் ஆயிடுத்துன்னார்! பூர்வ பாகம்னேன்! முடிஞ்சாச்சே! நீர் கவனிக்கலையான்னார்~...வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!


ஸ்ரீரங்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் வந்தார். வழக்கமான இரண்டு பட்டாச்சாரியர்கள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) பூரண கும்ப மரியாதை கொடுத்தார்கள். அவர்களிடம் ஸ்ரீசூக்தம் சொல்லச் சொன்னார் முதல்வர். அவர்கள் விழித்தார்கள். அம்மையாருக்கு கோபம்! உங்களை யார் இங்கே நியமித்தது? என்று! நாங்கள் பரம்பரை ஸ்தானீகர்கள் என்றார்கள் அவர்கள்! அப்படி என்றால் ஸ்ரீசூக்தம் கூட தெரியாமல் உங்களை எப்படி நியமித்தார்கள் என்றார். விஷயம் அங்கிருந்த பெரியவரிடம் போனது. அவர் சொன்னார்.. இவர்கள் பெருமாள் திருவடி கைங்கர்யம் செய்பவர்கள். இவர்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை! அதெல்லாம் சந்நிதிக்கு வெளியே இருக்கும் கோஷ்டியில் சொல்வார்கள், அல்லது அதற்கு தனியாக வேறு சிலர் இருப்பார்கள் என்றார். விஷயம் அத்தோடு முடிந்துபோனது.

இதெல்லாம் எதற்காக என்றால்... எந்தத் தொழிலுக்குப் போனாலும், ஒன்று முழுதாகப் படித்திருக்க வேண்டும், அல்லது அனுபவத்தாலாவது படிக்க வேண்டும், அல்லது அந்தத் தொழிலுக்குப் போன பின்னாவது தன்னை அதற்குத் தகுதியுள்ளவர் ஆக்கிக் கொள்ள வேண்டும்..! இவை எதுவும் இல்லாமல் வைதீகத்துக்கு வந்துவிடுபவர்களால் தர்மம் குலைகிறது! சாஸ்திரக் கலப்பு; சாஸ்திரக் குழப்பம் ஏற்படுகிறது! நோக்கம் போல் எதையாவது சொல்லிவிட்டுச் செல்பவர்களால் சனாதன தர்மத்துக்கு குறைவுதான் ஏற்படுகிறது.

இன்னோர் அதிர்ச்சிச் செய்தியும் அடியேன் காதில் விழுந்தது.
திருவரங்கம் பெரிய கோவிலில் இந்த முறை கடும் தண்ணீர்ப் பஞ்சம். நந்த வனம் தொடங்கி நீர் இன்மையால் நொந்த மனம் அதிகம். கோயிலில் பக்தர்கள் சிலர் கேட்டார்கள். செயலில் ஊக்கம் கொண்டிருக்க வேண்டிய செயல் அதிகாரி உறக்கம் கொண்டு, நன்கொடையாளரைப் பிடித்து வாருங்கள் என அன்புக் கட்டளை இட்டார். இதனை சிரமேற்கொண்ட சிலர், பணம் திரட்டி ஆழ்துளை பம்பு போட்டார்கள்.

ஆச்சு... கோயில் மடப்பள்ளியும் வறட்சி கண்டது. மடப்பள்ளி கிணற்றில் நீர் இல்லை! வற்றிய கிணற்றில் ஆழ்துளைபோட எண்ணினார்கள். பிளாஸ்டிக் பம்பு ஆயிற்றே! பெருமாள் தளிகைக்கு ஏற்க முடியாதே என்று உதடு பிதுக்கினார்கள் சில பௌராணிகர்கள் (பழைமைவாதிகள்).

இந்த நேரத்தில் ஒருவர் மடப்பள்ளி பக்கம் சென்றார். மடப்பள்ளிக்குள் யாரையும் நுழைய விட மாட்டார்களே! வேறு வழியின்றி உள்ளே விட்டார்கள். மடப்பள்ளி சுவர் ஓரங்களில் ஆங்காங்கே பான் மசாலா பாக்கு சுவைத்து துப்பிய கறைகள் தெரிந்துள்ளன. அது இருக்கும் லட்சணம் கண்டு தலைசுற்றி மயக்கம் வராத குறையாக வெளியே வந்தார் அந்த நபர்.இப்படி எல்லாம் மடப்பள்ளியை வைத்திருந்தால், அரங்கன் கோயில் எப்படி தெய்வீகத்துடன், சாந்நியத்துடன் திகழும்.!?அதுதான் வேண்டிக் கொண்டது நடக்கவில்லையோ? ஹே அரங்கநாதா? எப்போது மாறும் இந்நிலைமை?!இப்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது, வடக்கே பீகாரில் இப்படித்தான் சுவர் ஓரங்களில் காறித்துப்புகிறவர், பான் மசாலா பாக்கு போட்டு துப்புகிறவர்கள் சுவர்களை அலங்கோலம் செய்யாமல் இருக்க, டைல்ஸ் பதிக்கப்பட்ட ஹனுமான் உருவத்தை சுவர் ஓரங்களில் பதித்து விட்டிருக்கிறார்கள்!

ஒழுக்கம் பேண வேண்டியவர்கள் இப்படி எல்லாம் இருந்தால், பிறகு இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்வானேன்! அண்மையில்... மயிலையில் ஒரு (அரைகுறை) வைதீகரின் பையனுக்கு பெண் பார்த்தார்கள். அந்தப் பையனுக்கு வைதீகம் தெரியாது என்றாலும், நீண்ட தேடலுக்குப் பின்னர் ஒரு பெண் அமைந்தார். நிச்சயமும் செய்தார்கள். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் நட்பு வட்டாரங்களுடன் அமர்ந்து அசைவம் உண்பதை பையன் பார்த்தான்! அதிர்ச்சி அடைந்தவன், நேராக அம்மாவிடம் சென்று அழுதான். திருமணம் வேண்டாம் என்றான். இப்போது அது தொங்கலில்!

ஏன் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு வைதீகக் குடும்பங்களில்!?
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இருந்தாலும் ஓரிரண்டைப் பதிவு செய்தேன்.
இந்த இடத்தில், படித்த ஒரு சுவையான விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும்.!
வைதிக தர்ம வர்த்தனீ 1965ம் ஆண்டு இதழ் ஒன்றில், ஹாஸ்யம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த சிறிய துணுக்கு இது....
=====
சமயோசித புத்தி
-----
ஆறு பூனை அல்லவா வரவேண்டும்?
ஒருவர் சிராத்தம் செய்து 6 பிண்டங்களை வைத்துப் பிண்ட பூஜை நடந்தது. அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை அடக்கமாகப் பிண்டத்தினருகே அமர்ந்திருந்தது. அது திடீரெனப் பாய்ந்து ஒரு பிண்டத்தைப் புஜித்து விட்டது.கர்த்தா பரம துக்கத்துடன் கேட்டார்... வாத்யாரே என்ன செய்வது? சிராத்தம் நஷ்டமா? மறுபடியும் சிராத்தம் செய்ய வேண்டுமா? என்றார்.

சமயோசித புத்தியுள்ள வாத்தியார் கூறினார்... ஐயா தாங்கள் சிரத்தையுடன் சிராத்தம் செய்யப் பிண்டத்த்ம் வைத்தீர்களல்லவா? அதனால் சந்தோஷமடைந்த பித்ருக்கள் நேரில் வந்து பிண்டத்தை சாப்பிட்டார்கள். ஆதலால் சிராத்தம் நஷ்டமில்லை! மறுபடி செய்ய வேண்டாம்
கர்த்தா: அப்படி சாஸ்திரமிருக்கிறதோ?
வாத்யார்: சாஸ்த்ரமா? வேதமே கூறுகிறதே! சாஸ்த்ரம் வேறு வேண்டுமா?
ஷண்மார்ஜாலீயே ஜுஹோதி ஷட்வாரிதவ:
ரிதவ: கலுவை தேவா: பிதர:|| என்கிறதே வேதம்!
இதைக் கேட்ட கர்த்தா சந்தோஷம் அடைந்தார். வாத்யார் இப்படி வேதம் அறியாத கர்த்தாவை ஏமாற்றியது, பிரும்மாவாக இருந்த சாஸ்திரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர், வாத்யாரே.. ஆனால் ஆறு பிண்டங்களை ஆறு பூனைகள் அல்லவோ வந்து புஜிக்க வேண்டும். ஒரு பிண்டத்தை ஒரு பூனை தானே புஜித்தது?! என்றார்.
வாத்யார்: ஓய். உமக்குத் தெரிந்த லட்சணம் இவ்வளவுதானா? இது அப்பா சிராத்தம் அல்லவா? அவர்தானே முக்கியம் இதில்?!
பிரும்மா: அதுசரி.. மற்றவர் சிராத்தத்தில் இப்படி பூனை வருவதுமில்லையே! புஜிப்பதும் இல்லையே!
வாத்யார்: கர்த்தாவுக்கு பூனையிடமும் பிதாவிடமும் அபரிமிதமான அன்பு. அதனால்தான் பிதா பூனையாக வந்தார்.புஜித்தார். உமக்கு சூட்சும தர்மம் தெரியாது!
இப்படி வாத்யார் கூறியதைக் கேட்டு விஷயம் தெரியாத கர்த்தா படு சந்தோஷப் பட்டார்.

-----
இந்தத் துணுக்கில் சொன்ன ஷண்மார்ஜாலீயே என்றதில், மார்ஜாலம் என்பதன் பொருள் பூனை என்பது. மார்ஜாலீயம் என்பது யாகத்தில் ஒரு இடத்துக்குப் பெயர். இவை இரண்டையும் போட்டுக் குழப்பி வாத்யார் எப்படி ஏமாற்றினார் என்பது தெர்கிறது.
சிராத்த காலத்தில் பூனை வரக்கூடாது. அவ்வளவு ஏன்..? பூனையை வைத்துக் கொண்டு, பூனைக்கு எதிரே அமர்ந்து நாம் உணவு உண்ணக் கூடாது என்கிறது சாஸ்திரம்,
ஆனால், லௌகீகத்துக்கு மாறிவிட்ட பிராமணக் குடும்பங்களில் இன்று பூனையும் நாயும் வளர்ப்பு பிராணிகள். இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதற்கு சாஸ்திரம் தடை விதிக்கிறது. ஆனால், நாம்தான் சட்டத்தை மீறுபவர்களாயிற்றே! உலகாயதப் படிப்பு ஏறிவிட்டால்... சட்டமாவது.. ஒண்ணாவது?!
நாய்க்காக உருகுவது, பூனைக்காக மருகுவது இதை எல்லாம் பிராமணக் குடும்பங்கள் விட்டுவிட்டு, இயல்பான, தர்மசாஸ்திரத்துக்குட்பட்ட நல்ல வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்! அப்போதுதான் இயற்கைப் பேரழிவுகள், சீரழிவுகள், வறட்சி இல்லாமல், சுபிட்ச மழை இருக்கும். லோக க்ஷேமம் வஹாம்யஹம் என்பதற்கு அர்த்தம் இருக்கும்!


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments :

  1. காலம் பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து விடுகிறது. அதில் ஒரு சீர்கேடுதான் வைதீகர்கள் பான் பராக் போடுவதும், ரகசியமாக தம் +மது உபயோகிப்பதும். என்னத்தச் சொல்ல! இவை தவிர மந்திரங்களிலும் கூட ஏமாற்றுதல் நடைபெறுகிறது என்று தெரிந்ததில் மிக அதிர்ச்சி ஏற்பட்டது! நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை தந்தது மட்டும் நான் ஆனால் தனது கட்டுரையை பதிவிட அனுமதி அளித்த ஸ்ரீராமுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்

      Delete
  2. அது சரி. அவர்களை ஶ்ரீசுக்தம் சொல்லச் சொல்ல ஜயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிறது? கூத்தாடிதானெ அவர்?

    செங்கோட்டை ஶ்ரீராம் திருமண்/ஶ்ரீசூர்ணம் போட்டிருந்தால் மட்டும் பிராமணராகி விடுவாரா? அவர் தர்ப்பக் கட்டை எடுத்த்க் கொண்டு போக வேண்டியது தானே?

    ReplyDelete
  3. விதி மீறல் தான் எங்கும்http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 385 ) அரசியல் ( 248 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 112 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 82 ) ஜெயலலிதா ( 73 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தமிழகம் ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog