உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 13, 2013

விஸ்வரூபம் 2 பற்றி இதுவரை வெளிவாராத தகவல்கள்விஸ்வரூபம் 2'  பற்றி இதுவரை வெளிவாராத தகவல்கள்

பலத்த எதிர்ப்புகளுடனும் எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த விஸ்பரூம் தனக்கு நஷ்டத்தை கொடுத்து  தெருவில் கொண்டு வந்துவிடுமோ என்று நினைத்த கமலுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது அது மட்டுமல்லாமல்   இந்த படத்தை பார்க்கவைப்பதன்  மூலம் தமிழ் மக்கள் சுயமாக தற்கொலையைத் தேடிச் செல்வார்கள் என்ற கமலின் கனவுகள் பலிக்கவில்லை என்பதால் கமல் விஸ்பரும் கொண்டு  மீண்டும் படத்தை எடுத்து சாக அடிக்கும் முயற்சியின் விளைவே விஸ்பரும் 2 படம்.

இந்த படம் பற்றி இதுவரை வெளிவந்த செய்தி இது
 
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. 'விஸ்வரூபம் 2' வை இந்தாண்டே வெளிக் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார் கமல். செப்டம்பரில் படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தினை ஆஸ்கர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களில்  துவங்க இருக்கிறது. கமல், ஆன்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.சென்னை படப்பிடிப்பு முடிவுற்றால் படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிடும். அதனைத் தொடர்ந்து சில காட்சிகளை டெல்லி, புனேவில் படமாக்க இருக்கிறார்கள்.


இந்த படம் பற்றி இதுவரை வெளிவராத செய்தி இது. இந்த செய்தி முதன்முதலாக அவர்கள்...உண்மைகள் தளத்தில்தான் வெளிவருகிறது

விஸ்பரும் 2 வுக்கும் விஸ்பரும் 1 படத்தின் கதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. விஸ்பரும் 2 படத்தில் கமல் செய்தது எல்லாம் முதல் படத்தில் வரும் ஒலியை அப்படியே எடுத்துவிட்டு அதற்கு பதிலாக அவர் சுத்த தமிழில் அந்த படத்திற்கு விளக்கவுரை தருவது மட்டும்தான். காரணம் அந்த படம் பார்த்தவர்களுக்கும் குழப்பம்தான் மிஞ்சியதால் இந்த முயற்சி என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இரண்டாவதாக கசிந்த தகவல் என்னவென்றால் விஸ்வரூபத்தை பார்த்த  மன்மோகன் சிங்கின் வேண்டுகோளுக்கிணங்க  இந்திய சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி படம் எடுக்க முயற்சியின் விளைவே இந்த விஸ்பரும் 2 படம். இதன்படி தமிழக டிராபிக் கான்ஸ்டபிலாக இருக்கும் கமல் மாறுவேடம் போட்டு மும்பை திவரவாதிகளை கண்டுபிடிக்க இந்திய உளவுத்துறையான ராவுக்கு  உதவுவதாக எடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.முன்றாவதாக இந்த படத்தின் கதை லோக்கல் கதை இதில் கமல் ஜெயலலிதா மாதிரி பெண் வேடம் அணிந்து விஜயகாந்த் கட்சியையும் பாட்டாளி மக்கள் கட்சியையும் அடியோடு ஒழிப்பது போல எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளனஇதில் எந்த செய்தி உண்மை என்பது படம் வெளிவந்தால் எல்லோருக்கும் தெரிந்து விடும். இந்த படத்தை பார்த்தும் தமிழ் மக்கள் சாவாவிட்டால் அவர் இந்தியாவை விட்டே வெளியேறப் போவதாகவும் அறிவித்துள்ளார்

அன்புடன்
மதுரைத்தமிழன்

சினிமாவைபற்றியே பதிவு எழுத மாட்டேங்கிறிங்ளே என்று என் பதிவை படிக்கும் ஒருத்தர் கேட்டதற்கு பதில்தான் இந்த கொலைவெறி பதிவு.

8 comments :

 1. எல்லாரும் நம்மை கொல்லத்தான் பிளான் பன்னுராயிங்க தீவிரவாதிகளை அல்ல...!

  ReplyDelete
  Replies

  1. சரியாச் சொன்னிங்க

   Delete
 2. மதுரை குசும்பு ..... ஏம்பா இப்படி ...

  ReplyDelete
  Replies

  1. அதுதான் நீங்களே சொல்லீட்டிங்களே குசும்புன்னு அதுக்கு மேல என்ன சொல்ல

   Delete
 3. பொருத்தமான கட்டுரை அல்ல.

  ReplyDelete
  Replies
  1. அய்யயயயய நீங்க நம்ம வலைத்தளத்திற்கு புதுசு போல

   Delete
 4. அம்மாவையே கிண்டலா தமிழ் நாட்டுல மட்டும் நீங்க இப்போ இருந்திங்கன களி தான்

  ReplyDelete
  Replies

  1. அம்மாவை எங்க கிண்டல் பண்ணி இருக்கேன்....கிண்டல் பண்ணியது கமலை அல்லவா..... நான் தமிழ்நாட்டுலதான் படிச்சு வளர்ந்தவன் ஆனா இப்ப இந்திய குடிமகன் அல்ல அமெரிக்க குடிமகன் அதனால ஜெயிலுக்கு போனா காலையில் பிரட்டுதானுங்க அப்புறம் எங்க நாட்டுல தீவிரவாதத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் பேச எழுத உரிமை உண்ண்டுங்க

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog