Friday, November 6, 2020

A question for Indian Islamist Christians and Hindus?

இந்திய இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்களிடம் ஒரு கேள்வி இதற்கு பதில் சொல்லுங்களேன்

சாமிக்குப் படைத்ததைக் கிறித்தவர்களும் சரி, முஸ்லீம்களும் சரி ,பெரும்பாலும் உண்பதில்லை என்பது நாடறிந்த உண்மையே. இது அவர்களின் மதக்கொள்கைகளில் ஒன்று. இதைத் தவறு என்றோ சரி என்றோ வாதிக்கவில்லை .இது அவரவர் மத நம்பிக்கையைச் சார்ந்தது. அதில் தப்பேதும் இல்லை.



இஸ்லாமியர்களின் மதநம்பிக்கைப் படி இறைவன் ஒருவனே அவர்தாம் அல்லா என்றும், அது போலக் கிறிஸ்துவர்கள் இறைவன் ஒருவனே அவர்தாம் கர்த்தர்  என்றும் கருதுகிறார்கள். இப்படி அவர்கள் நினைக்கையில், நம்புகையில் 'ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவர் இறைவனுக்குப் படைத்த உணவு' என்று கொடுக்கும் போது ,அதை அவர்கள் வாங்க மறுத்தால், இன்னொரு இறைவன் இருக்கிறான் என்று நாம் நம்புவதாகத்தானே தோன்றுகிறது... அப்படி இன்னொரு இறைவன் இல்லையென்றால், இந்து மதத்தவர்கள் பூஜை செய்து தரும் உணவு சாதாரண உணவாகத்தானே இருக்கும் .அதை வாங்கிச் சாப்பிடுவதில் என்ன தப்பு. இதற்கு யாராவது விளக்கம் தரமுடியுமா?

 


அது போல இந்துக்களே உங்களது நண்பர்களுக்கு நீங்கள் பிரசாதம் தரும் போது வாங்கவில்லை என்றால் நீங்கள் மகிழ்ச்சிதானே அடையவேண்டும்.காரணம் நீங்கள் இறைவனுக்குப் படைத்தேன் என்று சொல்லித் தரும் போது , அதை அந்த இறைவன் ஏற்றுக் கொண்டார் என்று நம்பி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதே உங்கள் கடவுள் இருப்பதையும் அவர்கள் recognize அங்கீகரித்து இருப்பதாகத்தானே அர்த்தம்.

 ___________________________________________________________________________________________________________________

 வாதம் அல்லது விவாதம் செய்யும் முன் கொஞ்சம் யோசித்து பாருங்கள்_
__________________________________________________________________________________________________________________


அவர்கள் அப்படி அங்கீகரிப்பதில்  உங்களுக்கு ஏன் வருத்தம். ஒரு வேளை அவர்கள் வாங்கிச் சாப்பிட்டு இருந்தால்தானே வருத்தம் வந்திருக்க வேண்டும்.

அடுத்தாக நாம் அனைவரும் நம் குழந்தைகளுக்கு ,பெற்றோர்களுக்குக் கணவனுக்கு மனைவிக்கு அல்லது உறவினர்களுக்கு எது பிடிக்கிறது பிடிக்காது என்பது அறிந்து அதற்கேற்றவாருதானே நாம் செயல்படுகிறோம். இவர்களுக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்றால் அதை நாம் எப்போது வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லுவதில்லையே .அப்படி இருக்க மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்று இறைவனுக்குப் படைத்ததைச் சாப்பிடமாட்டார்கள் என்று தெரிந்தும் அதை அவர்களுக்குத் தருவது சரிதானா?

___________________________________________________________________________________________________________________

 தினமலர் இணைய வாசகர்களுக்கோர் எச்சரிக்கை வாசகர்களின் பெர்சனல் தகவல்களை  இணையம் மூலம் திருடும் முயற்சியா?

___________________________________________________________________________________________________________________
 

இறுதியாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கோவிலில் கடாவெட்டி 

சாமிக்குப் படைத்ததை இந்த மதத்தைச் சார்ந்த பிராமணர்களுக்குக் கொடுப்பதில்லையே அது ஏன்? இதுவும் இறைவனுக்குப் படைக்கப்பட்டதுதானே அதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? ஆனால் அப்படிஅவர்களை நாம் சொல்லமாட்டோம் காரணம் அவர்களின் ஜாதீய வழக்கப்படி அதைச் சாப்பிடுவது தவறு. அது போலத்தானே மற்ற மதத்தினரின் வழக்கமும். அப்படி இருக்கையில் மற்ற மதத்தினரை மட்டும் சுட்டிக்காட்டிக் குறை சொல்லுவது ஏன்?


இறுதியாக Not that which goeth into the mouth defileth a man; but that which cometh out of the mouth, this defileth a man.” - Jesus - Mathew 15:11 அதாவது வாய்க்குள் போவது மனிதனை தீட்டுப்படுத்தாது ஆகாது ஆனால் வாயிலிருந்து வெளிவருவதே மனிதனை தீட்டுப்படுத்தும் என்ற பைபிள் வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது

அதாவது நாம சாப்பிடும் பொருட்கள் நம்மைத் தீட்டுப்படுத்தாது மாறாக நம் வாயிலிருந்து புறப்படும் கடுஞ்சொற்கள் தான் தீட்டுப்படுத்தும்

பக்தி நம்மிடம் இருப்பது தப்பில்லை ஆனால் பக்தியை விட அன்பு நம்மிடம் இருப்பது முக்கியம்.. நான் அந்தக் காலத்தில் தமிழகத்தில் பிறந்து எல்லா மதத்தினருடன் கலந்து வளர்ந்து வாழ்ந்து வந்ததால் எனக்கு மதபக்தியை விட அனைத்து மக்களின் அன்பே முக்கியமாகப்படுகிறது அதனால் மற்ற மதத்தில் உள்ள சகோதரனோ சகோதரியோ சாமிக்குப் படைத்தது என்று கூறித் தந்தாலும் மதபக்தியை நிறுபிக்க அவர்களைக் காயப்படுத்தி அனுப்புவதில்லை அதற்குப் பதிலாக அதை வாங்கிச் சாப்பிட்டு  இந்த உணவை எனக்குக் கொடுத்தற்கு நன்றி
இறைவா என்று வணங்கிச் செல்கிறேன்


___________________________________________________________________________________________________________________

என் மனம் பேசுகிறது

_______________________________________________________________________________________________________________ அப்படி நான் செய்வது தவறா அல்லது இன்றைய மத வெறியவர்களை போலச் செயல்படுவது சரியா என்றால் தவறு என்றாலும் அதை நான் செய்து கொண்டுதான் இருப்பேன்.. காரணம் தமிழ்மண் நமக்கு  சொல்லி தந்தது  மனிதத்தை நான் ஒரு மனிதநேயம்கொண்ட  மனிதன்   மதவெறியன் அல்ல.

மனிதமும் மதநல்லிணக்கமும் அன்பும்தான் தீர்வு


manitha neeyam

இனமென பிரிந்தது போதும் மதமென பிரிந்தது போதும்  மனிதம் ஒன்றே தீர்வாகும்
உயிர்களை இழந்தது போதும் உறவுகள் அழுதது போதும் அன்பே என்றும் தீர்வாகும்






அன்புடன்
மதுரைத்தமிழன்


10 comments:

  1. குழந்தைக்கு தெரியுமா மதம்...?
    குழந்தை மனமாக வாழ்நாள் முடிந்தால் எதற்கு தேவை மதம்...?

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்எல்லோரும் குழந்தைகளாகவோ அல்லது உங்களைப் போலவோ இருந்துவிட்டால் பிரச்சனை இல்லையே ஆனால் அவர்கள் வளரும் போது உப்போது உள்ளவர்கள் விஷத்தை அல்லவா ஊட்டி வளர்க்கிறார்கள் இந்தியாவிற்கு வந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இந்தியாவை சமுக இணையதளங்கள் மூலமாக பார்க்கின்றேன்..விஷமாகிவிட்டதை போல தோன்றுகிறது .. ஆனால் ஊரில் உள்ளவர்களிடம் பேசும் போது அவ்வளவு மோசமாக இன்னும் மாறவில்லை ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி கொண்டிருப்பதாகத்தான் அவர்களும் சொல்லுகிறார்கள்

      Delete
  2. மதுர..

    என்ன அறிவிற்கு எட்டியவரை கிறிஸ்துவத்தில் இதை சாப்பிட கூடாது அதை சாப்பிடக்கூடாதுன்னு எதுவும் இல்ல.

    மத்தேயு 15:11
    வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

    எனக்கெல்லாம் யாரு என்ன கொடுத்தாலும் ஸ்வாஹா தான். இருந்தாலும் ஒரு உண்மையா சொல்லிடறேன்.

    ஹிந்து நட்ப்புகள் ஏதாவது தந்த சந்தோசமா வாங்கிக்குவேன். இஸ்லாமிய நட்ப்புகள் தந்தா சந்தோசம் இரட்டடிப்பாகும்.

    ஏன் சொல்லு?

    நமக்கு பிரியாணி மேல ரொம்ப பாசம்.

    ReplyDelete
  3. மதுர..

    என் அறிவிற்கு எட்டியவரை கிறிஸ்துவத்தில் இதை சாப்பிட கூடாது அதை சாப்பிடக்கூடாதுன்னு எதுவும் இல்ல.

    மத்தேயு 15:11
    வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

    எனக்கெல்லாம் யாரு என்ன கொடுத்தாலும் ஸ்வாஹா தான். இருந்தாலும் ஒரு உண்மையா சொல்லிடறேன்.

    ஹிந்து நட்ப்புகள் ஏதாவது தந்த சந்தோசமா வாங்கிக்குவேன். இஸ்லாமிய நட்ப்புகள் தந்தா சந்தோசம் இரட்டடிப்பாகும்.

    ஏன் சொல்லு?

    நமக்கு பிரியாணி மேல ரொம்ப பாசம்.

    ReplyDelete
    Replies

    1. எல்லாம் வளர்க்கும் விதத்தில் இருக்கிறது விசு..... எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை பண்ண முடியும் நமக்கு நல்லதை சொல்லி வளர்த்ததால் வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் இருக்கிறோம் அப்படி வளர்க்காதவர்களின் குழந்தைகள் எப்படி இருக்கும்

      Delete
  4. மன்னிக்கவும், சற்று நீண்ட பதில்.
    பிற மதத்தவர்கள் கடவுள் என்று எண்ணி அந்த கடவுளுக்குப்படைத்த (இதனை பைபிள் விக்கிரகம் என்று குறிப்பிடுகிறது) உணவு வகைகளை உண்பது குறித்து பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு 1 கொரிந்தியர் என்ற புத்தகத்தில் 8 வது அத்தியாயத்தில் அதனை எழுதிய பவுல் என்பவர் (இயேசு மரித்து உயிர்த்தெழுந்தபின் தெரிந்துகொள்ளப்பட்ட சீடர். புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதிக்கு ஆசிரியர் இவரே) தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
    முதற்கட்டமாக I கொரிந்தியர் 8:1 வசனத்தில் அவர் அன்பையே பிரதானப்படுத்தி பிறர் மனம் புண்படுமானால் அவர்கள் கொடுத்ததை சாப்பிடுவதில் தவறில்லை எனக்குறிப்பிடுகிறார்.
    I கொரிந்தியர் 8:1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
    ஆனாலும் மேற்கொண்டு அவர் சொல்லியிருப்பதை கவனியுங்கள்.
    I கொரிந்தியர் 8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
    I கொரிந்தியர் 8:10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
    இதன்படி பிற மதத்தவர்கள் கடவுள் என்று எண்ணி அந்த கடவுளுக்குப்படைத்தவைகளை உண்பது எதிர்வினைகளை உருவாக்குமானால் அப்படி உண்பது தவறு என்கிறார்.
    எனவே இத்தகைய அறிவுரையின் படி சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
    I கொரிந்தியர் 10 வது அதிகாரத்தின் கீழ்க்கண்ட வசனங்களை வாசித்துப்பாருங்கள்.
    I கொரிந்தியர் 10:7 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.
    I கொரிந்தியர் 10:14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.
    I கொரிந்தியர் 10:19 இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ?
    I கொரிந்தியர் 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
    இந்த அறிவுரைப்படி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை புசித்தல் கூடாது
    மேலும் பவுலின் அறிவுரைகளைப் பாருங்கள்.
    I கொரிந்தியர் 12:2 நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
    II கொரிந்தியர் 6:16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
    இவைகளை முழு மனதுடன் தியானித்தால் எவருக்கும் தெளிவு பிறக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் நீண்ட கருத்திற்கும் மிக நன்றி திரு.செல்வதுரை

      Delete
  5. ஹாய் ட்ரூத் ..கொஞ்சம் அதிர்ச்சியாயிட்டேன் என்னதிது பைபிள் வசனசம்லாம் சரியா quote பண்ணியிருக்கிங்களே இது நீவிர்தானா என் கண்கள் காண்பது உண்மைதானான்னு ஹஆஹாஆ :)))))))))) எனிவே அதிசயம் ஆனால் உண்மைன்னு நம்பறேன் 
    விசு அண்ணாவின் ரிப்ளை அப்படியே வழிமொழிகிறேன் :))) 
    இந்த உணவு பிரசாதம் படைத்தது இதுபத்தில்லாம் சொல்ல ஒண்ணுமேயில்ல .மனசுக்குள்ள உண்மையான அன்பிருந்தா அது போதும் .நான்லாம் ஒருகாலத்தில் திருப்பதி லட்டுக்காகவும் புளியோதரைக்காகவும்   கிடைக்காதான்னு காத்திருப்பேன் .இப்பொவும்தான் இங்கே பேர்மிங்ஹாம் லட்டு ஒரிஜினல் சுவையிலில்லை :))) எங்கப்பாவுக்கு பிற மத நட்புக்களே அதிகம் இதை சொல்லிக்கரத்தில் பெருமையே எனக்கு .
    இந்தமாதிரி பிரிவினை வேற்றுமை வளர்கிறவங்க அறியாமை கண்டு வேதனையா இருக்கு .இன்னும் நிறைய எழுதலாம் ஆனா ரொம்ப டயர்ட் எச்சூஸ்மீ :))

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் தேடினால் சரியான வசனத்தை எடுத்துவிட முடியும்தானே.....

      வயதானவர்களுக்கு டயர்ட்ன்ஸ் வருவது இயற்கையே... நல்லா ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் உங்க ப்ரென்ட் ஸ்வீட் 66 நலம்தானே அவருக்கும் யர்ட்னாசா?

      Delete
    2. இப்ப உள்ள இந்துக்கள் நல்ல விபரமாக இருக்கிறார்கள் நாம பூஜையில் வைத்ததை சாப்பிடுவோம் என்பதை தெரிந்து வைத்து இருந்தாலும் நாங்க் பூஜையில் வைத்ததை நீங்க சாப்பிடமாட்டீங்க என்று சொல்லி நமக்கு தரமால் ஏமாற்றுகிறார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.