Tuesday, November 10, 2020

 


அமெரிக்காவின் ஆபத்தான நபரில் ட்ரெம்பும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு??





அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் ஆரம்பக்கட்டத்தில் வெளி வரும் நேரத்தில் ட்ரம்ப் தான் தோற்றால் வேறு நாட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.. அவருடைய குண நலனைகளை அறிந்த நான் என் மனைவியிடம் பேசும் போது . ஒரு வேளை, தான் தோற்று வேறு நாட்டிற்குச் சென்றால் அமெரிக்க  ராணுவ மற்றும் பல ரகசியங்களை விற்றக்மாட்டாரா என்ன என்று பேசிக் கொண்டிருந்தேன் .என் வாய்க்கு நானே இப்ப சர்க்கரையை அள்ளிபோடணும்


இன்று தி வாசிங்டன் போஸ்ட் செய்தியைப் பார்க்கும் போது அவர்களும் அதையே எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள்

As an ex-president, Trump could disclose the secrets he learned while in office, current and former officials fear

முன்னாள் ஜனாதிபதியாக, டிரம்ப் பதவியில் இருந்தபோது தான் கற்றுக்கொண்ட ரகசியங்களை வெளியிட முடியும், என்று தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் அஞ்சுகிறார்கள் இதுதான் இன்றை முக்கியச் செய்தி :



ஓடினாள் ஒடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்று பராசக்தியில் சிவாஜி வசனம் பேசியது போல ட்ரெம்பும் தோல்வியின் ஒரத்தைத் தொட்டு விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார். எப்படி ஒரு தனி யானைக்கு மதம் பிடித்தது போல இருக்குமோ அப்படித்தான் ட்ரெம்பின் தற்போதைய நிலமை...
 


இதுநாள் வரை அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த அவர் பல்வேறு ராணுவ ரகசியங்களை எதிர்காலத் திட்டங்களையும் அறிந்தவர்களில் ஒருவராக இருந்து வந்தார்... அப்படிப்பட்ட ரகசியங்களை அவர் மற்ற நாடுகளுடன் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்பதே அமெரிக்காவின் முன் எழும் மிகப் பெரிய கேள்வி

அதன் விளைவாக வரும் நாட்களில் நாட்டை ஆளப் போகும் அதிபருக்கு என்னென்னப் பிரச்சனைகள் ஏற்படும் என்பது புரியாத புதிரே

ஒவ்வொரு அதிபரும் தன் பதிவு முடிந்து போகும் போது அணு ஆயுதங்களை ஏவுவதற்கான நடைமுறைகள், உளவுத்துறை சேகரிக்கும் திறன்கள் - வெளிநாட்டு அரசாங்கங்களுக்குள் ஆழமான சொத்துக்கள் உட்பட - மற்றும் புதிய மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகளின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தும் யூஎஸ்பி டிஸ்கில் சேகரிக்கப்படுவது போல அவர்களது தலையில் சேகரிக்கப்பட்டு(புதைந்து) மதிப்புமிக்க தேசிய ரகசியங்களுடன் அலுவலகத்திலிருந்து வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறும் யாரைப் பற்றியும் இது வரை யாருக்கும் கொஞ்சம் கூடச் சந்தேகம் வரவில்லை ஆனால் இப்போது அது பெரும் பிரச்சனையாகச் சந்தேகமாக விஸ்பருபமாக எழுந்திருக்கிறது


தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் ட்ரம்ப்பிற்கு வெளிப்பாடுகளின் வரலாறு இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர் ஒரு உன்னதமான எதிர் நுண்ணறிவு அபாயத்தின் பெட்டிகளைச் சரிபார்க்கிறார் என்று தெரிவிக்கிறார்கள் அவர் கடன் சுமையில் கடுமையாக உள்ளார் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மீது கோபமாக இருக்கிறார்,

அதிருப்தி, அதிருப்தி அல்லது வேதனைக்குள்ளான எவரும் தற்போதைய அல்லது முன்னாள் அலுவலக உரிமையாளராக இருந்தாலும், இரகசிய தகவல்களை வெளியிடும் ஆபத்து உள்ளது. ட்ரம்ப் நிச்சயமாக அந்தச் சுயவிவரத்திற்குப் பொருந்துகிறார், ”என்று முன்னாள் சிஐஏ அதிகாரியும்“ ஜனாதிபதி புத்தகத்தின் இரகசிய புத்தகத்தின் ”ஆசிரியருமான டேவிட் பிரீஸ் கூறினார்.


ட்ரம்ப்பின் ஆளுமை பண்புகள், சுய ஒழுக்கம் இல்லாதது உள்ளிட்ட அறிவுள்ள மற்றும் தகவலறிந்த ஜனாதிபதி ஒரு பேரழிவாக இருக்கும். ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தில் நீதித்துறையில் சட்ட ஆலோசகர் அலுவலகத்தை நடத்தி வந்த ஜாக் கோல்ட்ஸ்மித், தெரிவிக்கிறார்


மனித நிலை பலவீனமானது. மேலும் மோசமான சூழ்நிலைகளில் உள்ளவர்கள் மோசமான முடிவுகளை எடுப்பார்கள். நம் நாட்டிற்கு எதிராக உளவு பார்த்த பல நபர்கள் நிதி ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள்தான். ”


பாரம்பரியம் டிரம்புடன் முடிவடைகிறது என்று நான் நினைக்கிறேன்," என்று பிரீஸ் கூறினார். "இது மரியாதை மற்றும் ஜனாதிபதிகள் தங்கள் முன்னோடிகளை வெளிப்படையான ஆலோசனைக்கு அழைக்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. சிக்கலான தேசியப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பிரச்சினைகள் பற்றிப் பேச ஜோ பைடன் டிரம்பை அழைப்பார் என்பதை காணமுடியாது. பைடன் அவரை ஒரு தூதராக எங்கும் அனுப்புவார் என்று நான் நினைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்



ஆக மொத்தம் ஒன்று சரியாகப் புரிகிறது நல்ல குணமில்லாத ஒருவரை, நீதி நிலையில் மோசமாகும் இருக்கும் ஒருவரை, நாட்டின் உயர் பதவியில் வைத்தால் அந்த நாட்டிற்கும் மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் மிகக் கேடு என்று வரலாறு நமக்குக் கற்பித்ததை இவர் மீண்டும் நிரூபிப்பார் என்றே தோன்றுகிறது... இது அமெரிக்கர்களுக்கு மிகவும் லேட்டாகப் புரிந்திருக்கிறது என நான் நினைக்கிறேன் ஆனால் இதற்கு அவர்கள் பெரும் நஷ்டத்தை ஈடாகக் கொடுக்க வேண்டி இருக்கும்



இது போல இன்னொரு தலைவரும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை(இந்தியா) ஆண்டு கொண்டு இருக்கிறார். அமெரிக்காவிடம் இருந்து அனுபவத்தை இந்திய  நாட்டு  மக்கள் கற்றுக் கொண்டு தப்பிக்க வழி வகைகளைச் செய்ய வேண்டுமே தவிர அதைவிட்டு விட்டு நாங்களும் அமெரிக்கா போலப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் அவர்களைப் போல முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இப்படி ஒரு சூழ்நிலை  ஏற்படும் என்று நேஷனல் செய்தி நாளிதழில் வந்த பின் அந்தந்த துறை உயர்மட்டத்தைச் சார்ந்தவர்கள் அது குறித்து பாதுகாப்புகளைச் செய்ய ஆரம்பித்து இருப்பார்கள் என நினைக்கின்றேன்... அதுமட்டுமல்ல பொதுவாகவே இந்த மாதிரி விஷயங்களில்  மிக ஆழமாகத் தகவல்களை அறிந்து கொள்ள அவர் அவ்வளவுமாக ஆர்வம் காட்டியதில்லை என்பது போன்ற தகவல்கள்தான் வருகின்றன. அவர் தனக்கு கிடைத்த மேலோட்டமான விஷயங்களை வைத்தே இதுவரை தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல நடந்து சில பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறார்....ஒருவேளை இவர் ரகசியங்களை வெளியிட்டால் அதை வைத்து மற்ற நாடுகள் சில புள்ளிகள் வைத்து கோலம் போடலாம் ஆனால் அது முழுமையான கோலமாக இருக்காது .ஆனால் இந்த தகவல்களே அமெரிக்க பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கலாம். நடப்பதை நாம் பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் அதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை இப்போதைக்கு. டாட்

10 Nov 2020

6 comments:

  1. Replies
    1. அப்படியும் எடுத்துகொள்ளலாம்

      Delete
  2. பதவி ஆசை மனிதனை எதுவும் செய்ய வைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசை எல்லோருக்கும் இருக்கும் ஆனால் அதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்வதுதான் நலம் இவரின் ஆசைகளோ கட்டுப்பாட்டை அறுத்து எறிவது மாதிரி இருக்கிறது

      Delete
  3. அப்படியெல்லாம் நிச்சயமாக நடந்துகொள்ள மாட்டார். அவரைப் பிடிக்காதவர்கள் கிளப்பும் புரளி.

    அவர் அமெரிக்கர்களுக்கு நல்லது என்று விசா சம்பந்தமான சட்டங்கள் போட்டதில் பாதிக்கப்பட்டவங்கதான் அவர் மோசம்னு சொல்றாங்க. கொரோனா விஷயத்தில் விளையாட்டுப்பிள்ளை மாதிரி இருந்துவிட்டார் அவர்.

    ReplyDelete
    Replies
    1. அவர் செய்யும் பல செயல்கள் சிறுபிள்ளைதனமாகவே இருக்கிறது ஒரு தலைவருகான தகுதிகள் பண்புகள் அவரிடம் இல்லை எனலாம்.

      அடுத்தாக அவர் எடுத்த சில நடவடிக்கைகள் சரியாக இருக்கலாம். உண்மையை சொல்லப் போனால் அவரின் ஒரு திட்டத்தினால் பலன் பெற்றவரர்கள் என் குடும்பத்தில் உள்ள ஒருவர்.. ஆனால் அதற்காக அவர் செய்யும் தவறுகளை எல்லாம் ஏற்றக் கொள்ள முடியாது... நான் பெற்ற பலனுக்காக நாட்டின் எதிர்காலத்தை மோசமாக்கும் அவரின் மற்ற திட்டங்களை எல்லாம் ஆதரிக்க முடியாது காரணம் என் குழந்தைகள் போல நாட்டில் உள்ள குழ்ந்தைகளின் எதிர்கால வாழ்க்கைகள் சிரழியும் அப்படி நடக்க எந்த ஒரு நல்ல பெற்றோர்களும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.

      இது இந்தியா அல்ல

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.