Tuesday, November 10, 2020

 

சந்தோஷமாக இருப்பது எப்படி?How to be happy?

சந்தோஷமாக இருப்பது எப்படி?

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.


அதனால் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று ஆராயத் தொடங்கும் போது என் கண்ணில் பட்டது சந்தோஷமாக இருப்பது எப்படி? என்ற புத்தகம் அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்ததேன் அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் சந்தோஷமாக வாழ ஒவ்வொரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் போது நீங்கள் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துக் கொண்டே எழுந்தால் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதே.
   
இதைப் படித்த நான் கடந்த வாரம் முழுவதும் அதில் சொன்னவாரே தினமும் நான் நல்ல மூடில் இருப்பதாக நான் நினைத்து வந்தேன் என்ன ஆச்சிரியம் தினமும் நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

இன்று காலையிலும் அது போல நினைத்து எழுந்து காபி சாப்பிட்டவாறே வாசலில் அமர்ந்து காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது எழுந்து சென்று பார்த்தால் ஊருக்குச் சென்ற என் மனைவி சீக்கிரமாகவே தனது வெகேஷனை முடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.

அவளைப் பார்த்ததும் நான் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

இப்ப சொல்லுங்க மக்கா அந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி நடந்ததால் நான் சந்தோஷமாக இருந்தேனா அல்லது என் மனைவி ஊரில் இல்லாததால் நான் சந்தோஷமாக இருந்தேனா?

  



 அன்புடன்
மதுரைத்தமிழன்

படித்து மகிழ இது ஒரு மறுபதிவு
சந்தோஷமாக இருப்பது எப்படி? 

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.