Sunday, November 29, 2020

 

Manypeople  may be thinking like this

இப்படி பலர் நினைத்து இருக்கலாம்


நான் சிறு வயதிலிருந்து அமெரிக்கா வரும் வரை கணக்கில் அடங்கப் புத்தகங்களை(தமிழ்) படித்து இருக்கின்றேன்... என் அளவிற்கு அந்த வயதில் அப்படி யாரும்  படித்து இருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமே... அப்படி வெறி கொண்டு  படித்த எனக்கு ஒரு சில புத்தகங்களைத் தவிர மற்றவைகளை சுத்தமாக மறந்துவிட்டேன்

அப்படி இருக்கும் போது , வாசிப்பின் நோக்கம் என்ன  என்பதே என் மனதில் பல சமயங்களில் எழுந்த கேள்வி அந்த கேள்விக்கு விடை தெரியாததால் என்னவோ இணையத்தில் படிப்பதைத் தவிரப் புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்துவிட்டேன். இப்படித் தவிர்த்துவிட்டேன் என்று நான் சொல்வதால் முற்றிலும் தவிர்த்துவிட்டேன் என்று சொல்லவில்லை முன்பு போல வெறி கொண்டு படிப்பதைத் தவிர்த்துவிட்டேன் அவ்வளவுதான் ஆனால் அவ்வப்போது  சில புத்தகங்களைப் படிக்கத் தவறவில்லை
 
போனவராம் கூட ஒரு புத்தகம்(ஆங்கிலம்)  முந்நூறு பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகத்தை மதியம் 3 மணிக்கும் ஆரம்பித்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.

ஆனாலும் அடிக்கடி என் மனதில்  வாசிப்பதன் நோக்கம் என்ற கேள்விகள்  எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதற்குப் பதில் இன்று வரை எனக்குத் தெரியாமல்தான் இருந்து வந்தது. ஆனால் இன்று இணையத்தில் வேறு சில விஷயங்களைத் தேடிப் படித்துக் கொண்டிருந்த போது என்னுடை கேள்விக்கும் பதில் கிடைத்தது. இப்படி நான் மட்டுமல்ல பலருக்கும் வாசிப்பதன் நோக்கம் பற்றிய கேள்விகள் இருந்து கொண்டிருந்தன என்பதை அறிய முடிந்தது

எனக்குக் கிடைத்த பதில் இங்கே உங்களுக்காகத் தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்து இருக்கின்றேன்


ஊரில்  ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார்.  ஒருமுறை மாணவர்களில் ஒருவர் அவரிடம் வந்து “நான் நிறையப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன், ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை மறந்துவிட்டேன். வாசிப்பின் நோக்கம் என்ன சார் என்று கேட்டார் ? ”.

அந்த நேரத்தில் ஆசிரியர் அவருக்குப் பதில் அளிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஆசிரியர் அந்த மாணவருக்கு ஒரு சல்லடை கொடுத்தார், அது அழுக்காகவும் மற்றும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

இந்த சல்லடையில் அருகிலுள்ள ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவருமாறு சொன்னார். அந்த மாணவருக்கோ என்னடா இவரிடம் போய் ஆலோசனை கேட்டமோ என்று நினைத்துச் சார் இதில் எப்படி தண்ணீர் எடுத்துவர முடியும் என்று கேட்டார்

அதற்கு ஆசிரியர் நான் சொன்னதை மட்டும் செய் எதிர்த்து ஏதும் கேட்காதே என்று சொன்னார்.

மாணவருக்கும் இந்த யோசனை பிடிக்கவில்லை, ஆனால் அவரால் தனது ஆசிரியர் சொன்னதை மறுக்க முடியவில்லை.

அவர் ஆற்றுக்குச் சென்று, ஆற்றில் சல்லடையை வைத்து தண்ணீர்  நிரப்பி, திரும்பும் பயணத்தைத் தொடங்கினார்.

அவர் நடந்து செல்லும்போது சில அடியிலே, சல்லடையில் உள்ள நீர் அனைத்தும் துளைகள் வழியாக வழிந்துவிட்டது

பின்னர் மீண்டும் ஆற்றில் சென்று சல்லடையை நிரப்பினார்.

அவர் இதைப்  பலமுறை செய்தார் . இறுதியில் அவர் சோகமான முகத்துடன் ஆசிரியரிடம் திரும்பி வந்து, “இந்த சல்லடையால் என்னால் தண்ணீர் எடுக்க முடியவில்லை. நான் தோல்வியடைந்தேன்

அவனது ஆசிரியர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

இல்லை! நீ தோல்வியடையவில்லை.

சல்லடையைப் பாரு.

இது புதியது போல் மாறிவிட்டது. நீ தண்ணீரைப் பெற முயற்சிக்கும் போது அது சுத்தமாகிவிட்டது.

பின்னர் ஆசிரியர் இந்த பணியின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை விளக்கினார்.

தம்பி  நீ என்னிடம்  என்ன கேட்டாய் ,  படித்ததை நினைவில் கொள்ளாவிட்டால் வாசிப்பின் நோக்கம் என்னவென்றுதானே . இப்போது சல்லடையின் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்.

சல்லடை = மனம் (Sieve = Mind  )

நீர் = அறிவு( Water = Knowledge )

நதி = புத்தகம் (River = Book )


நீங்கள் அதை நினைவில் கொள்ள முடியாவிட்டாலும் கூட!

ஆனால் வாசிப்பு நிச்சயமாக உங்கள் மனதைக் கூர்மையாக்கும். “

வாசிப்பு நம் மனதில், மூளைக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

இது உங்களை மேன்மை படுத்த உதவுகிறது.

இது  எல்லாம் மனதின் ஆழத்தில் செய்யப்படும் ஒரு ஆழ்நிலை செயல்முறையாக உள்ளது


டாட்

எவ்வளவோ புத்தகங்களைப் படித்து இருக்கின்றேன் ஆனால் அதில் உள்ள  எல்லா விஷயங்களும் எனக்கு நினைவில் இல்லை.ஆனால் அவ்வப்போது படித்த புத்தகங்களால் மனது செதுக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது . நல்ல உடல் வளர்ச்சிக்கு நல்ல உணவு வகைகள் தேவை என்பது போல நல்ல மன வளர்ச்சிக்கு நல்ல புத்தகங்கள் தேவை. மனதிற்கான வாசிப்பு என்பது உடலுக்கான உடல் உடற்பயிற்சியைப் போன்றது.  

அதனால்  நான் தொடர்ந்து படிக்க ஆரம்பித்து இருக்கின்றேன்
 
 


அன்புடன்
மதுரைத்தமிழன்

29 Nov 2020

4 comments:

  1. நல்ல பதிவு.  இதை கொஞ்சம் மாற்றி இதே கதையை வேறு வகைகளில் படித்திருக்கிறேன்.  வழியில் சிந்திய தண்ணீரால் செடிகள் முளைப்பது போல...

    ReplyDelete
    Replies
    1. கருத்துபதிவிற்கு நன்றி ஸ்ரீராம்

      Delete
  2. வாசிப்பு உளநிறைவைத் தருகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.