Friday, November 6, 2020

 

Argument Debate

வாதம் அல்லது விவாதம் செய்யும் முன் கொஞ்சம் யோசித்து பாருங்கள் 


சமுக இணையதளங்கள் பரவாலான பிறகு பல விஷயங்களில் நாம் கருத்துக்கள் என்ற பெயரில் பலருடன் விவாதம் அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றோம்..

அப்படி நாம் மற்றவர்களுடன் விவாதிக்கும் போது ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் அதாவது நமக்குள்ளே நாம் ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும் நாம் விவாதிக்கும் ஆள் மனமுதிர்ச்சி உள்ளவரா நாம் சொல்லும் கருத்தை உடனடியாகக் கிரகித்துக் கொண்டு அந்தக் கருத்தில் உள்ள வேறுபாடுகளைக் கண்ணோட்டத்தை அல்லது பார்வையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த பதில் அளிப்பாரா என்று நாம் அறிந்தால் மட்டுமே அவருடன் நாம் விவாதிக்கலாம் அல்லது வாதம் செய்யலாம். அப்படி இல்லாத ஆட்களாக இருந்தால் நாம் விவாதிப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை
 


நீங்கள் யாருடனாவது வாதத்தில்/விவாவத்தில் ஈடுபடும் சற்று உற்று நோக்கி பாருங்கள்..ஒரு சிலர் தங்கள் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் அந்த நிலைப்பாட்டை எப்பாடு பட்டாவது நிலை நாட்டத்தான் பார்ப்பார். அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவுதான் நாம்  தகவல்களையும் ஆதாரப்பூர்வமான காரணங்களையும் அடிக்கி அவர்கள் முன் வைத்தது மணிக்கணக்காக விவாதம் செய்தாலும் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து கொஞ்சம் கூட மாற மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பேசி என்ன பயன் அவர்கள் தெரியாத மூன்றாம் மனுசர்களாக இருந்தால் ஒதுக்கிவிட்டுப் போகலாம் ஆனால் அப்படி இல்லாதா நிலை இருந்தால் கடைசியில் கசப்பு உணர்வு தான் மிஞ்சும். அப்படி இருக்கும் போது ஏன் இந்த வீண் விவாதம்?

அதுமட்டுமல்ல சிலரின் வாதங்களை நாம் கடுமையாக எதிர்த்துப் பேசினால் அதை அவர்கள் அவர்களை நாம் எதிர்ப்பதாகக் கருதிக் கொள்வார்கள் அவர்களுக்குப் புரிவதில்லை நாம் அவர்களின் வாதத்தைத்தான் எதிர்க்கிறோமே தவிர அவரை அல்லது அவர்களை அல்ல என்பதை அதனால் அவர்கள் மிக உணர்ச்சி வசப்பட்டு அவர்களின் ஆணவம் தூண்டப்பட்டு வாதத்தில் இருக்கும் உண்மைகளைச் சீர் தூக்கிப் பார்க்கும் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களிடம் வாதம் செய்து நம் கருத்துகளை எடுத்துத்தான் சொல்ல முடியுமா என்ன?

எது எப்படியோ என் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் நேரில் யாரிடமும் வாதமோ விவாதமோ பண்ணுவதில்லை எனது மனைவி மற்றும் மகளைத்தவிர....

வாதம் பண்ணுவதால் நமக்கு ஏற்படுவது இழப்பு மட்டுமே வாதத்தில் வெற்றி பெற்றால் நிச்சயம் நல்ல நட்பையோ அல்லது உறவையோ இழப்போம்


இதைத்தான் ஒரு அறிஞர் அழகாக வாதத்தில் வென்றாரே தோற்றார் ஏனெனில் அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண். என்று  சொல்லிச் சென்று இருக்கிறார்



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. கருத்துகள் செம மதுரை.

    அதுவும் போல்ட் லெட்டர்ஸ் அப்படியே ஹைஃபைவ்!

    கீதா

    ReplyDelete
    Replies

    1. எல்லாம் அந்த வோட்கா செய்யும் புண்ணியம்

      Delete
  2. வீண் வாதம் அதிகமானால் பக்கவாதம் அதிகமாகும் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் அமெரிக்க புதிய தல...!

    ReplyDelete
    Replies

    1. பக்கவாதம் வந்தால் என்ன ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே தனபாலன்

      Delete
  3. எல்லோருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் போதும்.   நம் கருத்தைச் சொல்லலாம்.   எதிராளி அதை ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.   முக்கியமாக ஆத்திரத்தால் விளையும் தனி மனிதத் தாக்குதல்கள்.  

    ReplyDelete
    Replies
    1. கருத்து வேறுபாடுகள் எல்லோருக்கும் இருக்க செய்யும் அதை விவாவதித்து ஒரு முடிவிற்கு வரலாம் அது தப்பு இல்லை. ஆனால் முட்டாள்களோடு மட்டும் வாதம் செய்வது கூடாது என்பதுதான் கருத்து


      வாதமோ விவாதமோ ஒரு பாயிண்டுக்கு அப்புறம் ஒரு முடிவிற்கு வர வேண்டும் ஆனால் இன்று பல சேனல்களில் நடக்கு விவாவதம் எடுத்த பொருளுக்கு ஒரு முடிவு சொல்லாமல் வாதம் விவாதமாகி அதன் பின் வீண் வாதமாகி தனபாலன் சொல்வது போல பக்கவாதமாக மாறி செயலிந்து ஒரு முடிவிற்கும் வ்ராமல் போய்விடுகிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.